*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jan 29, 2011

எதை நினைத்து வேதனைப்பட ?

பணக்கார வீட்டு நாய்கள் கூட
விலையுயர்ந்த உணவு சாப்பிட,
ஒரு வேலை உணவிற்கு
தெரு நாயோடு சேர்ந்து குப்பைத்
தொட்டியை துழாவுவர் பற்றியா?
பொது இடங்களில் குப்பை
போடுபவர் பற்றியா?அல்லது
அந்த குப்பைகளை  பொறுக்கித்தான்
 (பெருக்கித்தான்) சம்பாதிப்பவர் பற்றியா?
உயர் கல்விக்கு சில ஆயிரங்கள் இல்லாமல்
போனதால் திசை மாறியவர் பற்றியா?
பிரிகேஜிக்கே பல ஆயிரங்கள்
கேட்போர் பற்றியா ?
பிள்ளைகள் இல்லாதோர் பற்றியா?
ஊதாரி பிள்ளைகள் பற்றியா?
பெருகி வரும் முதியோர் இல்லம் பற்றியா?
அதிலும் சேர முடியாமல் துன்புருவோர் பற்றியா?
வீடு இல்லாதோர் பற்றியா?
இலவசமாய் கிடைத்த அரசாங்க வீட்டையும்
வாடகைக்கு விட்டுவிட்டு  மீண்டும்
சாலையோர வாசியனவர் பற்றியா?
மாற்றுத் திறனாளிகள்பற்றியா?
அவர்களில் பலருக்கு ஆதரவு
கிடைக்காமல் போனது பற்றியா?
அவர்களில் சிலர் அந்த குறை
ஒன்றையே வைத்து தானம்
கேட்பது பற்றியா?
வர வேண்டிய தண்ணீர்
வராமளிருந்தாலும் அடித்து
பிடித்து விவசாயம் செய்பவன் பற்றியா?
அவன் அனுமதியின்றி அதிக லாபத்துக்கு
பங்கில்லாமல் விற்பவர்  பற்றியா?
தெய்வ தரிசனமாக வருகிற குடிநீர் 
லாரி முன் பல அவதாரமெடுத்து
கொண்டு போய் குடிப்போர் பற்றியா?
உணவகத்தில்  சாப்பிடும் போது
மினரல் குடிநீர் வாங்கிக் குடிப்பவர்
சாதா நீரைக் குடிக்கும் பக்கத்திலிருப்பவரை
ஏளனப் பார்வை பார்ப்பது பற்றியா?அல்லது
அடுத்துள்ளவர் சாப்பிட்ட எதோ ஒன்று
பல்லில் மாட்ட இடது கையால் மாட்டியதை
பிடுங்கி சரி செய்துவிட்டு உணவக நீரை
சப்  சப்னு பருகுவது பற்றியா?அல்லது
பன்னிரண்டு ரூபாய் தண்ணீரை 
இஷ்டப்பட்ட விலைக்கு விற்பவர் பற்றியா?
ஆசையாய் இனிப்பு வாங்கும்போது
இனிதான அலங்கரிப்பு அடுக்கல்  முன்
நிற்பவர் ஹச்சுனு தும்மிவிட்டது பற்றியா?
அல்லது இனி அதை வாங்கப் போகிறவர் பற்றியா?
நான் வாங்குவது சுத்தமானதா என்பது பற்றியா?
தன் வேலையை செய்ய லஞ்சம் கேட்பவர் பற்றியா?
வேலை ஆனால் சரினு ஒத்துக் கொள்பவர் பற்றியா?
நம்பிக்கை துரோகம் பற்றியா?துரோகத்துக்குள்ளானவர் பற்றியா?
புகழ் பெற்றோர் பற்றியா?கேலி செய்வோர் பற்றியா? 
உதவி செய்யாட்டாலும் உபத்திரம் செய்பவர் பற்றியா?
சரி இப்ப இது போதும்{ஒவ்வொரு வரி பற்றியும் ஒரு பதிவு போடலாம் போல இருக்கே}
வாழ்க்கை என்னவென்று வாழ கற்றுக்கொள்வதற்குள் வாழ்க்கையே முடிந்து விடும் என்று யாரோ சொன்னது சரிதான்.

Jan 25, 2011

இந்திய எல்லைக்கு போகலாம் வாங்க

                           அனைவரும் அருகில் நடக்கும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள முடியலைனாலும் இன்று நம் இந்தியா குடியரசு பெற்ற நாள்னு ஒரு நிமிடம் நினைத்தால் கூட போதும்.மாணவர்கள் பள்ளியிலும்,கல்லூரியிலும், அலுவலகத்தார்கள் தங்கள் அலுவலகத்திலும்,கட்சிகள் சார்ந்தவர்கள் அங்கங்கே மற்ற  சில இடங்களிலும்,குறிப்பாக மாநில தலைமையகம்,மாவட்ட ஆட்சியர் இப்படி பல இடங்களில் குடியரசு தினமோ,சுதந்திர தினமோ தேசியக் கொடி ஏற்றி கொண்டாடுவோம்.நேரில் பார்ப்போம் அல்லது தொலைக்காட்சியில் பார்த்திருப்போம்.சில இடங்களில் தினமும் தேசியக்கொடி பறப்பதை பார்த்திருப்போம்.


                            தினமும்             தேசியக்கொடி       ஏற்றி  இறக்கி  நம்ம  நாட்டுக்  கொடி  மட்டுமில்லங்க  நம்ம நண்பர் பாக்கிஸ்தான் நாட்டுக் கொடியோடு  ஏற்றி இறக்கி தோழமை  பரிமாறிக்கொள்வது எங்க தெரியுமா? நம்ம இந்திய எல்லையிலதாங்க.நம்ம இந்தியா பாகிஸ்தான் எல்லை வாகா  பார்டரில்தான், நம்ம பஞ்சாப் மாநிலத்திலங்க,
எனக்கு ஒரு முறை அந்த காட்சிகளை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது.நம் நாட்டுக்கான  சுதந்திர போராட்டங்களை நேரில் பாக்காட்டாலும்,கலந்து கொள்ளாவிட்டாலும்,   (பல தலைவர்கள் பாடு பட்டு வாங்கி கொடுத்துட்டு நம்மள
 அனுபவிக்க வச்சுட்டு போய்ட்டாங்க,அந்த குடியரசையும்,சுதந்தரத்தையும் நாம எப்படி உபோயோகிக்கிறோம்ங்கிறது வேற  விசியம்)    அந்த வாகா பார்டரில் நான் பார்த்த காட்சிகள் நாட்டுப்பற்று இல்லாத எந்த மனிதனையும் ஒரு நிமிடம் இது நமது இந்தியா,நான் இந்தியன் என்று உணர்ச்சிப்பூர்வமா நினைக்க வைத்துவிடும்.

பரைடு நடக்கிறது,இரு நாட்டு கொடிகள் பெருக்கல் குறிகள் போல வர செய்து பரிமாறிக்கொள்வதும்,இரு நாட்டு முக்கிய கமாண்டர்கள்  (மன்னிக்கவும் அவருக்கு பேர் என்னனு தெரியல)ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி எல்லை மாறுவதும் அப்பப்பா!அந்த நிமிடங்களை என்னனு சொல்லுவது.

இந்த காட்சிகளை காண தினமும் எங்கெங்கிருந்தோ மக்கள் கூட்டம் அலை மோதிக்கொண்டு வந்தாலும் அந்த நேரத்திற்கு மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர்.நாமும் சுற்றுலா செல்வது போலத்தானே இவ்ளோ தூரத்துக்கு  போய் பாக்க முடிகிறது,வட இந்தியா சுற்றுலா வருபவர்கள் பலர் இங்கும் வருகின்றனர்.பல பள்ளிக்கூட பேருந்துகள் மாணவர்களுடன் வந்திருந்ததையும்,பள்ளி மாணவர்கள் பொது மக்களுடனில்லாமல் தனியாக உக்கார வைக்கப் படுவதை கவனித்தேன்,விருப்பப் படுபவர்களுக்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நமது தேசியக் கொடியை கையில் பிடித்துக் கொண்டு நம் எல்லை வரை போக அனுமதி வழங்கப் படுகிறது.அங்கு நின்று டான்ஸ் ஆடுபவர்களை  பாக்கும் போது  மட்டும் இந்த இடத்தில் இது அவசியம்தானா என்ற கேள்வி எழுந்தாலும் சரி போகட்டும் இந்திய எல்லையில் ஆடுகிறோம்னு சந்தொஷப்படுரவங்களை என்ன செய்ய முடியும்.


நம்ம இந்த பக்கம் இருப்பது போல எல்லைக்கு அந்த பக்கம் பாகிஸ்தான் மக்கள்.அந்த நேரம்(நிகழ்ச்சி) முடிந்தவுடன் அந்த இடத்தை விட்டு வர மனசில்ல, அதுக்கு மேல அங்கிருக்க அனுமதி இல்ல,வெளியில் வரும்போது சில தமிழ் முகங்களையும் பார்த்தேன்,கிட்ட போய் எங்கிருந்து வறீங்கன்னு விசாரிச்சேன்.காஞ்சிபுரம்,விருத்தாச்சலம்நும்,எதோ ஒரு கம்பெனி பேரு சொன்னாங்க,எம்ப்ளாயிஸ்  டூர் வந்துருக்கொம்னாங்க,அத்தனை முகமிருந்தாலும் நம்மூரு முகத்தை கண்டுபிடித்ததிலும்,தமிழில் பேசிக் கொண்டதிலும் தனி சந்தோஷம்தான்.

ஒரு முறையாவது பார்க்கனும்.இப்போ இந்த வீடியோ க்ளிப்பை பாருங்க.










நம்மூர் பக்கம் பள்ளிகளில் சுதந்திர,குடியரசு தினத்தன்றுதான் கொடியேற்றி இனிப்பு வழங்கி ஞாபக விழாவாக கொண்டாடுவோம்.தலை நகர் தில்லியில் செங்கோட்டையில் அந்த தினத்தன்று தான் கொடி ஏற்றும் விழா நடந்தாலும்,எங்கள் சுற்று வட்டார பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் முதல் நாளே கொடி ஏற்றம் நடை பெற்று சுதந்திர,குடியரசு தினத்தன்று முழு விடுமுறை விடப்படுகிறது .(பிள்ளைகளை கடத்திடுவாங்களோ,பாம் போற்றுவாங்கலோனு தற்காப்பு விடுமுறையோ)மற்ற பகுதிகளில் எப்படின்னு தெரியல.



வந்தே   மாதரம். 

Jan 20, 2011

64 கலைகள்

  1. எழுத்தியல் புகலை
  2. லிகதக் கலை           
  3.  கணிதக் கலை    
  4. வேதம்  (முதல் நூல் )
  5. புராண இதிகாசம் (பூர்வ கதை)
  6. வியாகரணம்(இலக்கணம்)
  7. ஜோதிடக் கலை (வான நூல்)
  8. தரும சாஸ்திரம் 
  9. நீதி சாஸ்திரம்
  10. யோக சாஸ்திரம்
  11. மந்திர சாஸ்திரம்
  12. சகுண சாஸ்திரம்
  13. சிற்ப சாஸ்திரம்
  14. வைத்திய சாஸ்திரம்
  15. உருவ சாஸ்திரம்(உடல் கூறு)
  16. சப்தப் பிரம்மம் (ஒலிக்குறி நூல்)
  17. காவியம் (காப்பியம்)
  18. அலங்காரம்(அணி இலக்கணம்)
  19. மதுர பாஷணம்(சொல்வன்மை)
  20. நாடகம் (கூத்து)
  21. நிருத்தம் (நடன நூல்)
  22. வீணை (மதுர காண நூல்)
  23. வேணுகானம் (புல்லாங்குழல் நூல்)
  24. மிருதங்கம்
  25. தாளம்(உப இசை நூல்)
  26. அஸ்திர பயிற்சி(வில் வித்தை )
  27. கனக பரீட்சை (பொன் மற்று காணும் நூல்)
  28. ரத பரீட்சை (மகரத-அதிரத சாஸ்திரம்)
  29. கஜ பரீட்சை  (யானை தேர்வு நூல் )
  30. அஸ்வ பரீட்சை (குதிரை தேர்வு நூல்)
  31. ரத்ன பரீட்சை (நவரத்ன தேர்வு)
  32. பூமி பரீட்சை (மண்வள தேர்வு)
  33. சங்கிராம இலக்கணம்  (போர்முறை நூல்)
  34. மல்யுத்தி (மர்பிடி)
  35. ஆகர்ஷணம்(அணுகுதல்)
  36. உச்சாடணம்(அகற்றல்)
  37. வித்வேஷணம் (பகை மூட்டல்)
  38. மதன சாஸ்திரம்(கொக்கோகம்)
  39. மோஹனம்(மயங்குதல்)
  40. வசீகரணம் (வசியம் )
  41. இரசவாதம் (உலோகத்தை தங்கமாக்குதல்)
  42. காந்தருவ வாதம் (கந்தர்வர்களைப் பற்றி ரகசியம்)
  43. பைபீல வாதம்(விலங்கு மொழி அறிவு)
  44. கவுத்து வாதம்(துயரத்தை இன்பமாக்குதல்)
  45. தாது வாதம் (நாடி நூல்)
  46. காரூடம் (மந்திரத்தினால் விஷமாற்றுதல்)
  47. நஷ்டப் பிரசனம் (ஜோதிடத்தினால் இழப்பு சொல்லுதல்)
  48. முஷ்ட சாஸ்திரம் (ஜோதிடத்தினால் மறைந்து சொல்லுதல்)
  49. ஆகாய பிரவேசம் (விண்ணில் பறத்தல்)
  50. அதிருசியம் (தன்னை மறைத்தல்)
  51. இந்திர ஜாலம் (ஜால வித்தை )
  52. பரகாய பிரவேசம் (கூடு விட்டுக் கூடு பாயுதல்)
  53. ஆகாய கமனம்(வானில் மறைந்து உலாவுதல்)
  54. மகேந்திர ஜாலம் 
  55. அக்கினிசதம்பனம்(நெருப்பைக் கட்டுதல்)
  56. ஜலஸ்தம்பனம் (நீர் மேல் நடத்தல்)
  57. வாயு ஸ்தம்பனம் (காற்று பிடித்தல்)
  58. திருஷ்டி ஸ்தம்பணம்(கண்  கட்டுதல்)
  59. வாக்கு  ஸ்தம்பணம்(வாயை கட்டுதல்)
  60. சுக்கில ஸ்தம்பலம் (இந்திரியம் கட்டுதல்)
  61. கன்னஸ்தம்பணம் (மறைந்ததை மறைத்தல்)
  62. கட்கஸ்தம்பலம் (வாள் சுழற்சி)
  63. அவஸ்தைப் பிரயோகம் (ஆன்மாவை அடக்குதல்)
  64. கீதம் (இசைக்கலை) 


இந்த    64 கலைகளும் இந்த நூலில் உள்ளதென்று சொல்ல என்னிடம் ஆதாரமில்லை.சிறு வயதில் எதோ ஒரு  புத்தகத்தை பார்த்து  லக்ஸ்மி நரசிம்மர் ஸ்தோத்திரம்  எழுதும்போது ,அதில் இந்த 64 கலைகள் பதினெட்டு வகை சித்தர்களின் பெயர்கள் இப்படியாக இருந்தது. ஆர்வத்தில்  ஒரு டைரியில் எழுதி வைத்தேன்.தற்பொழுது அந்த டைரி கிடைத்ததில் பக்கங்களை  படித்தபோது சற்றே கலையவிருக்கும்  மையில் தென்பட்டதை அழியாமல் பாதுகாக்க பதிவு செய்துள்ளேன்.(டைரியின்  வருடமோ 1997). அந்த  புத்தகத்தின் பெயர் விபரம் ஞாபகமில்லை,புத்தகமும் இல்லை.

Jan 18, 2011

2020 ல் வல்லரசு ஆகுமா ?ம்ஹூம்

         
இவங்கசொல்றாங்க :                                                                      
  
  மேல் தட்டு மக்களில் பல பெண்கள் வேற எங்க போறாங்களோ இல்லையோ மகப்பேரு மருத்துவர்கிட்ட  போகாதவங்கள விரல் விட்டு எண்ணிடலாம்.அந்த சின்ன   கற்பப்பை  ஆயிரம் வகையில் மக்கர் பண்ணுது.அதுக்கலாம் செலவு பன்றதுக்கு எங்கள வசதியோட படைக்கலனோ என்னவோ  எங்களுக்கு   அந்த பையில் குறையில்லாம படைச்சுட்டான்.வாழ் நாட்களை முட்டி மோதி போராடி வாழ்க்கை நடத்தி பிள்ளைகளையும் வாடவிட்டு,அரவயிரும்,கால் வயிறும் நிரப்பி,அதுவும் பத்தலனா  பிள்ளைகளையும் வேலைக்கு அனுப்புறோம்.(எங்க பிள்ளைங்கதான் எங்களுக்கு எல்லாம்.) இது  1947 ல் இல்லை.இப்போதும் சில கிராமங்களிலும் ஊருக்கு உள்ளடங்கிய கிராம பகுதிகளிலும்,சில சாலையோரங்களிலும்  இவங்கள நாம பாக்கலாம்.

இவங்களில் சற்று முன்னேறியவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசாங்க    பள்ளிகூடத்துக்கு அனுப்புறாங்க,தங்கள் சக்திக்கு மேற்பட்ட காசு கேக்காத பள்ளிக்கூடத்துக்கு  மட்டுமல்ல,சோறு கட்டி கொடுக்க அவசியமில்லாத பள்ளிக்கூடத்துக்கும்,வகுப்பு வரைக்கும்தான்.
      
                             
இதுல ஒரு பிள்ள சொல்லுது எங்க வீட்ல ஆறு மாசத்துக்கு ஒரு நாளாவது ஒரு வேலைக்காவது எங்க அப்பாம்மா சொந்த சம்பாரிப்புல குடும்பத்தோடு உக்காந்து தனித் தனி இலை போட்டு சந்தோஷமா இத்தனையும் சமைச்சு சாப்பிடனம்னு ஆசையா இருக்குனு.

கிழே எல்லோரும் என்ன பாக்கறாங்கனு பாருங்க,இந்த கொடுமைய எங்க போய் சொல்றது?நாங்க இருக்கிற நாட்லதான் இவங்க எங்களைவிட புண்ணியம் செஞ்சு பிறந்திருக்காங்க போல

Heads of private schools scan the notice board for the room numbers where they can collect letters on the revised
fee structure from School Education Department officials, in Chennai on Tuesday. —
CHENNAI
இவங்க பிள்ளைங்க இப்படி படிக்குதுங்க,கொடுத்து வச்சவங்கதான்(பள்ளிக்கூடம்  நடத்துறவங்க)
இந்த பொங்கலுக்கு பட்டிமன்றம் கூட கல்வி சூழலில் பெரிதும்  சிரமப்படுவது பிள்ளைகளா,பெற்றோர்களானு மேல்தட்டு மக்களை பத்தியே பேசி பெற்றோர்களுக்கு ஆதரவா தீர்ப்பு சொன்னாங்களே தவிர எங்கள பத்தி யாரும் பேசலைங்க.எங்களுக்கு ஒரு பட்டிமன்றம் நடத்த சொல்லுங்கன்னு நல்ல உடை ஐந்தாவது வரை கூட படிக்க வைக்க வசதி இல்லாத ஏழை பெற்றோர் சொல்றாங்க. 

ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்குற ஊர்ல கூட ரெண்டு ரூபாய்   ,மூன்று ரூபாய்க்கு  கட்டண கழிப்பறைகளில் வசூலிக்கிறாங்கங்றது எல்லோருக்கும் தெரியும்.கோதுமையே  உணவாக கொண்ட ஊர்ல பல முக்கிய நகரங்களில்  ஐந்து ரூபாய்  வசூலிக்கிறாங்க. 

2020  ல் வல்லரசாகனும்,வல்லரசாயிடும் கனவு காணுங்கள்னு  சொன்ன மதிப்பிற்குரியவரின் வாக்கு மேலே உள்ள ஏழைகளின் அடிப்படைத் தேவைகள் முக்கியமா கல்வி முன்னேற்றம்  ஒன்றுக்கொன்று   தொடர்புடைய தேவைகள் அதற்குண்டான அடிப்படை வசதிகள் அடித்தட்டு மக்களுக்கும் திட்டங்கள் போடுவதோடு இல்லாமல் செயல் படுத்தினால்தான அந்த பெரியவர் சொன்ன வாக்கு பலிக்கும்.கொள்ளையடிச்ச கோடிகள் திரும்ப இந்தியாவுக்கு கிடைச்சு ஆளுக்கு ஆயிர ரூபா தராங்களாம்.  அது 2020 லோ  அல்லது  20200 லோ அந்த பணம் எனக்கு வேணாம்னு  இவன்   ஓடுகிறான் போல...... 

   

இவங்கலாம் 2020 குள் நடுத்தர வகுப்பு அங்கத்தினராவது ஆனால்தான் வல்லரசு இல்லைனா ???................



Jan 14, 2011

பொங்கலோ பொங்கல்

                                                                   பாலுடன் பொங்கல் எங்கும் பொங்குக!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

பச்சரிசிப் பொங்கல் எங்கும் பொங்குக!
அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

நெய்மணக்கும் பொங்கல் எங்கும் பொங்குக!
மெய்மணக்கச் செய்யும் அன்பே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

மனங்கள் தோறும் என்றும் மகிழ்வே பொங்குக!
கணங்கள் தோறும் அங்கு கனிவே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

நாளும் பொழுதும் எங்கும் நலமே பொங்குக!
இல்லந் தோறும் என்றும் இன்பம் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

இது நான் எழுதினது அல்ல.காப்பி அடித்தது.சரி நான் சொல்வதாவது வட இந்தியாவில் நம்மூர் பொங்கலின் ஆனந்தத்தை துளியும் காண முடியாது.திருமணமாகி இங்க வந்த போது பொங்கலுக்கு ஊருக்கு போக இயலாததால் இங்கயே இருந்து நொந்துபோனதை மறக்க முடியாது.நம்மூரில் தீபாவளி கொண்டாடாதவர்கள் கூட பொங்கலை விடமாட்டார்கள்.இனிமையான தமிழ் பண்டிகை.ஊரே பரபரப்பான ஆனந்தத்தில் இருக்கும்.போகியிலேர்ந்து கன்னிப் பொங்கல் வரை அமர்க்களமாக இருக்குமனு எல்லோருக்கும் தெரியும்.



அப்பா அம்மாவுடன் கொண்டாடியதை மறக்க முடியாது.வட இந்தியா  வந்த முதல் பொங்கலன்று குக்கரில் எங்க வீட்டு பொங்கல் விசிலாக வருவதற்கு முன் நான் பொங்கி பொங்கி அழுது இப்படியொரு ஊருக்கு அழைச்சிட்டு வந்த கணவருக்கும் பொங்கலிட்டு,பிறகு கணவரின் சமாதானத்திலும் பெற்றோரின் மொபைல் வழி சமாதானத்திலும் முதல் பொங்கல் குக்கரில் வைத்ததை மறக்க  முடியாது.இங்கு மகர சங்கராந்தினு பெண்கள் ஸ்நானனம் செய்துட்டு இருக்கும் அணிகலன்களை அணிந்து கொண்டு சூர்ய பகவானுக்கு பூஜை செய்வதோடு சரி.பஞ்சாபியர் லோஹ்ரின்னு  மகர் சங்கராந்திக்கு முதல் நாள் கொண்டாடுறாங்க.


போன வருடம் இடை இடையே  விடுமுறையில் வராமல் அடுத்த பொங்கலுக்கு கட்டாயம் நம்ம வீட்டுக்கு வந்திடும்மானு  சொன்ன அம்மா  இந்த வருடம்  இல்லாமல் போனதால் குக்கரில் பொங்கலிட கூட மனம் வலிக்கிறது.(ஆனாலும்  பொங்கல் செய்துதானே ஆகனும்) மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தாலும் கொண்டாடுபவர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லவே இந்த பதிவு. தமிழ்நாட்டிலிருந்து பொங்கல் கொண்டாடுபவர்கள்  புண்யம் செய்தவர்கள்.எல்லோருக்கும்  பொங்கல் வாழ்த்துக்கள்.














Jan 11, 2011

தில்லி முருகன் (மலை மந்திர்)


                                                
இந்த கோவில்  தமிழகத்தில்  அமைந்துள்ள எதோ ஒரு  கோவில் அல்ல.தலை நகர் தில்லியில் ராமகிருஷ்ண  புரத்தில் அமைந்துள்ள தமிழ் கடவுள் முருகன் கோவில்.மெயின் ரோட்டில் மலை(குன்றென சொல்லலாம்) மீது  கோவில் அமைந்துள்ளதால் மலை மந்திர் என்கிறார்கள்.ஹிந்தியில் மந்திர் என்றால் கோவில் என்று அர்த்தம்.அழகான கோவில்,கோவிலுக்குள் வந்தால் நாம் வட இந்தியாவில்தான் இருக்கிறோம்னு நம்பவே முடியாது.தமிழகத்தில் நம்மூர் கோவிலுக்குள் வந்துவிட்டதாகவே திருப்தி இருக்கும்.தமிழ் எழுத்துக்கள்,அர்ச்சனை கடை,மல்லிகை கனகாம்பரம் பூக்கள்,நம்மூர் குங்குமம்,கற்பூரம்,விபூதி,கோவிலை சார்ந்தவர் அனைவரும் தமிழ் பேசுபவர்கள்(தமிழகத்தை சார்ந்தவர்கள்).அர்ச்சகரும் நம்மிடம் தமிழில் பேசுவதும் கூடுதல் திருப்தி. 

 நம்மூர் கோவில் அமைப்பை போலவே லிங்க வடிவில் சிவ பெருமான்,அம்பாள்,கணபதி,நவ கிரகம்,கார்த்திகை மண்டபம்  உள்ளது.முருகன் மலை மீது ஆள் உயரத்திற்கு தனித்து நின்ற நிலையில்(வள்ளி தெய்வானை சமேதமாக இல்லை)  காட்சி தருகிறார்.முருகனை தரிசிக்க மலை மீது செல்ல படிக்கட்டு வசதி உள்ளது.முருகர் சன்னதிக்கு பிரகார அமைப்பும் உள்ளதால் பிரகாரத்தில் முருகனை சுற்றி வரும்போது துர்க்கை அம்மனையும் சண்டிகேசுவரரையும் தரிசிக்கலாம்.அந்த மலையின்  மீதிருந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை தில்லியின் அழகை (கட்டிடங்களையும்,லைட்டிங்களையும்,போக்குவரத்து நெரிசலையும்)ரசிக்கலாம். நம்மூர் போலவே கார்த்திகை,சஷ்டி,பிரோதஷம்,மற்ற சில முக்கிய நாட்களிலும் பூஜை,அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகிறது.தினமும் கால பூஜைகளும் நடை பெறுகிறது.வேத வகுப்புகளும் நடைபெறுவதாக சொன்னார்கள்.கோவிலுக்குள் மயிலும் சுற்றிக் கொண்டுள்ளது.கோவிலின் தல வரலாறு தமிழில் சுவற்றில்  எழுதப்பட்டுள்ளது.(கல்வெட்டாக).

தில்லி isbt யிலேர்ந்து ராம கிருஷ்ண புரத்திற்கு பஸ் வசதி உள்ளது.வசதியை பொறுத்து எதில் வந்தாலும் மலை மந்திறேன்று விசாரித்தால் வழி கிடைக்கும்.வட இந்தியாவில் உள்ள தமிழர்கள் மட்டுமில்லாமல்,வட இந்தியர்களும் கார்த்திக் பகவானை (முருகனை)தரிசிக்க வருகிறார்கள்.மூளைக்கு மூளை வித்தியாசமான பூக்கள்  கிடைத்தாலும்,நம்மூர் போல மல்லிகைப் பூ கிடைப்பது அரிது. நம்மூரில் தொடுப்பது போல இங்கு மட்டும்தான் பூ மாலைகளை பாக்கலாம்.வட இந்திய பெண்கள்   தலையில் பூ வைப்பதில் ஆர்வமில்லாதவர்கள் ,இங்கு வரும் தென்னகப் பெண்கள் விரும்பியும் /அர்ச்சகர் அர்ச்சித்து கொடுக்கும் பூவை  தலையில் வைத்திருப்பதை வட இந்தியர்கள் வித்தியாசமாக பார்ப்பதையும்  உணரலாம். 

தில்லியில்   நம்மூர் கோவில்களை காணுவது அரிது,வட இந்தியர்களின் கோவில் மற்றும் கடவுள் சிலை அமைப்புகளை பார்க்கும்போது நம்ம மனதில் பக்தி தோன்றாது,வேடிக்கை பார்க்கத்தான் தோன்றும்,விபூதி,குங்குமம் கிடையாது,குங்குமம் கூட ஏதாவது காளி மாதா, துர்க்கா தேவி  கோவிலில் கிடைக்கும். செந்தூரம்தான்  கொடுக்கப்படும்.அர்ச்சனை  கிடையாது.அபிசேகம் சில கோவில்களில் செய்தாலும் நம்மூர் அபிசேகம் மாதிரிலாம் பாக்க முடியாது.தேங்காயை உடைத்து வழிபடமாட்டார்கள்.முழு தேங்காயை வைத்து சிலர் தேங்காயின் மீது சின்ன  அழகான அலங்கரிக்கப்பட்ட ,கடவுளின் பெயர் எழுதப்பட்ட சிவப்பு நிற வஸ்த்திரத்தை தேங்காயின் மீது  சுற்றி   வைத்து வழிபடுவார்கள். கோவில் அமைப்புகளும்,வழிபாட்டு முறைகளும் முற்றிலும் மாறுபட்டாலும் கடவுள் இருக்கிறார்னு நம்புபவர்கள் அவரவர்க்கு தெரிந்த வழியில் வழிபடுவது வேற்றுமையில் ஒற்றுமைதான். 

மூன்று கி மீ தொலைவில் முனிர்கா என்ற இடம் உள்ளது.இங்கு தமிழில் பெயர் பலகை கொண்ட பிரபல மளிகை கடை உள்ளது.தென்னக பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.அருகே தென்னக உணவகம், தென்னக குறுந்ததகடு கடையும் உள்ளது.அருகே நம்மூரில் எளிதாக கிடைக்கும் முருங்கைக் கீரை ,முருங்கைக் காய்,வாழைத்தண்டு,மணத்தக்காளி கீரை,கருவப்பிள்ளை போன்றவைகள் சீசனுக்கு தகுந்தார் போல தில்லி விலைக்கு விற்கப்படும் .

Jan 9, 2011

மனித மலர்கள்












இத்தனை விதங்களா?
இத்தனை நிறங்களா ?
இத்தனை  குணங்களா?
     அட!       பேசுகிறதே !
     அட!       சிரிக்கிறதே !
பூக்களை பூக்களே அழ
      வைக்கிறதே !
  மலருக்கு         மலரே
குணப்படுத்துகிறதே !
  ஒரே   நாளில்
வதங்கவில்லையா?
மணமில்லாத மலருக்கு
         மனமா ?
ஒ !  மனித மலர்களா?

Jan 5, 2011

தேசிய மொழி

எனக்கு தாய் மொழி தமிழ்.நம் தாய் மொழி பெயரை சொல்லும் போதே வேறு மொழியில் இல்லாத சிறப்பம்சமான 'ழ்',அமைந்துருப்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது இருப்பது ' ஹிந்தி' என்று எல்லோருக்கும் தெரியும். நான் எந்த மொழியிலும் புலமை பெற்றவள் இல்லைனும், தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்திலும்,தமிழ் ஆர்வம் கொண்டவர்களும் ஹிந்தி மொழியை எதிர்ப்பவர்களும்,பள்ளி கல்லூரி பாடங்கள்,கடைகள்,திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் தான் வைக்கனும்னு தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களே கெஞ்சி கூத்தாடுவதையும்,என்னென்னவோ கேள்விப்பட்டிருப்போம் தமிழை பாதுகாக்க.தமிழ் மொழியில்தான் ப்ளாக் எழுதனம்னு எந்த சட்டமும் இல்லை,அப்படியிருந்தும் இத்ததனை பிளாக்குகளும், பிளாக்கரகளும் உருவானது கூட சத்தமில்லா தமிழ் மொழி பராமரிப்புதான்.

இதெல்லாம் ஒருபக்கமிருக்கட்டும்,நம்மில் பலர் ழ்,ல்,ள்,ர்,ற் மற்றும் சில எழுத்தக்களை சரியாக உச்சரிப்பது கிடையாது,அதாவது பரவாயில்லை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதையாக,செந்தமிழ்,அந்தந்த மாவட்ட தமிழெல்லாம் சற்றே காணாமல் போகுதுன்னு சொன்னால் எத்தனை பேர் அடிக்க வருவாங்கன்னு தெரியல,சென்னையில் பரவியிருக்கும் 'இன்னா வீட்டாண்ட பாத்துகினு போனியா? ,எப்டி கீரனு,', ஒரு பாசை உருவானதற்கு எந்த சங்கம் காரணம்னு தெரியல.இத்தனை மட்டும் தெரிந்தவராய் கணவரின் வேலை வாய்ப்பில் வ.இந்தியாவிற்கு வந்து ஹிந்தி கத்துக்க வேண்டிய சூழ்நிலையில் தான் மேலும் என் தாய் மொழியான தமிழ் மொழியைப் பற்றி யோசிக்க வைத்தது. எனக்குத் தெரிந்த வித்தியாசங்களை சொல்லவே இந்த பதிவு.

நாங்க குடியிருக்கும் பகுதி ஒரு பாரத விலாஸ் போல,ஒவ்வொரு மாநிலத்தவரும் இருக்கிறார்கள்.ஒற்றுமை உண்டானுலாம் கேக்க கூடாது.இங்கு தென்பகுதியான தமிழ்,ஆந்திரா,கேரளா,கன்னட மாநிலத்தவரும்,வட பகுதியில் மராட்டி, குஜராத், காஷ்மீர்,உத்த்திர பிரதேசம்,மத்திய பிரதேசம்,ஒரிசா,பஞ்சாப்,பீகார்,ராஜஸ்த்தான் மாநிலத்தவரும் வாழ்கிறோம். நாமும் வட இந்தியர்களும் ஒரே நூற்றாண்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது நாம் தமிழ் பேசும்போது எத்தனை ஆங்கில வார்த்தைகளை தமிழாகவே நினைத்து உபயோகிக்கிறோம்,இவர்கள் எப்படி தன் தாய் மொழியை உபயோகிக்கிறாங்கனு.

ஆரம்பத்தில் ஹிந்தி கொஞ்சம் கூட புரியாத போது,மற்றவர்கள் பேசுவதை என்னால் கவனிக்க கூட முடியாது,அவர்கள் பேசினாலே என் காதில் கட,முட,பட,டட.னு சத்தம் கேட்டு தலை வலியே வந்திடும்.இத்தனை ஆண்டுகள் ஆகியும் மொபைல் கஸ்டமர் கேரிடம் பேசினால் கூட அவர் என்ன சொல்கிறார்னு புரிந்து கொள்ள முடியாதளவுக்குத்தான் எனக்கு ஹிந்தி தெரியும்.ஆங்கிலம் என்னைப் போன்றவருக்கு டிரன்சலடிங் மொழியாக பயன்படத்தான் செய்கிறது.இங்கு நான் தெரிந்து கொண்டது

பஞ்சாப்பினர் - பஞ்சாபி
ஹர்யனாவில்    -  ஹர்யான்வி
மகாராஷ்ட்டினர் -   மாராட்டி
குஜராத்தினர்  - குஜராத்தி
பீகாரில்      -   பீகாரி
ஒரிசாவில் - ஒரிய
ராஜஸ்த்தானில்    - ராஜஸ்த்தானி
காஷ்மீர்        -   காஷ்மீரி 
மேற்கு வங்கத்தில் -  பெங்காலி


மொழிகள் பேசப்பட்டாலும்,பொது மொழியாக ஆங்கிலம் இருந்தால் கூட இவர்களுக்கு இரண்டாம் மொழியாக ஹிந்தி தான் இருக்கிறது.சமஸ்கிருதமும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பிலேர்ந்து தொடங்கி,பத்தாம் வகுப்பில் ஆப்சனல் மொழியாக உள்ளது.தமிழர்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழி பொதுவாக உள்ளதானு கேட்டால் ஆங்கிலத்தை சொல்லுவோம். மேலும் தமிழகத்தில் கன்யாகுமரி தமிழ்,கோயமுத்த்தூர் தமிழ்,மதுரை தமிழ்,திருநெல்வேலி தமிழ்,தஞ்சாவூர் தமிழ் போல அந்தந்த மொழியினர் ஹிந்தி பேசும்போது ஸ்லங் வேறுபடுகிறது.அவரவர் மொழியினர்,மாநிலத்தவர்,ஊர்க்காரர் என்றால் ஒரு பாசம் வரத்தான் செய்யும்,அதைத்தவிர இங்கு யாரும் மொழிக்காக போராட்டங்கள் நிகழ்த்துவதாக தெரியவில்லை. இங்கு ஆங்கிலத்தை ஆங்கிறேசுனு சொல்றாங்க,மேலும் ஆங்கிலத்தில் பேசுவதை வெறுப்பார்கள்னு சொல்வதை விட மற்ற மொழியை கலந்து பேசுவதில் விருப்பமில்லாதவர்கள் .புரபசனலாக பேசும்போதும்,புரிய வைக்க அவசியப்படும்போதும்,சில பீட்டர் பார்ட்டிகளும்தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.
            நாம் எத்தனை ஆங்கில வார்த்தைகளை தமிழாகவே உபயோகிக்கிறோம் பாருங்கள் , லாக் செய்,டோர்,சேரில் (நாற்காலி )உக்கார்,டைம் என்ன,வாட்ச் கட்டிவிட்டியா,பஸ்,பஸ்டான்ட்,சிக்னல்,ட்ராபிக்,டேட்,டே(சண்டே,மண்டே.......),நைட்,கலர்ஸ்,கூல்ட்ரிங்க்ஸ்,ஸ்பூன்,ரவுன்ட்,புக்,பேப்பர்,இன்க்,பாட்டில்,ஷு,சாக்ஸ்,சைடு(அந்த பக்கம்,இந்த பக்கம்),ஸ்க்ரு ட்ரைவர்,கட்டிங் ப்ளேயர்,கேரி பேக்,மார்கெட்,கேரட்,காலி ப்ளவர்,வெயிட்டா இருக்கு,  கரக்டா சொல்லு ,டைரெக்டா போ,ஓகே ,தேங்க்ஸ்,ஸ்சூர் இப்படி பல வார்த்தைகளை படித்தவர் முதல் படிக்காதவர் கூட உபயோகப்படுத்துகிறோம்,ஆனால் நான் மேல் சொன்ன எல்லா வார்த்தைகளையும் தங்கள் மொழியான ஹிந்தியில்தான் பேசுகிறார்கள்.எத்தனை பெரிய பதவியிலிருப்போரும்,பெரிய படிப்பு படித்தோரும் தங்கள் மொழியை சுத்தமாகவும்,ஆங்கிலம் கலக்காமலும் பேசுகிறார்கள் இதை ஹிந்தி தெரிந்தவர்கள் சரின்னு ஒத்துப்பாங்கன்னு நினைக்கிறேன்.
                மேலும் தமிழில் உள்ள உச்சரிப்புகளை விட ஹிந்தியில் உச்சரிப்புக்கு தகுந்தவாறு க,க்க,கஹ, க்கஹ என்பதும் அது போல ச வரிசையில் நான்கு விதம் ,ட வரிசையில் நான்கு விதம் , த வரிசையில் நான்கு விதம் ,ப வரிசையில் நான்கு விதம் மற்ற சில உச்சரிப்புகளுக்கு எழுத்துக்களும்,அந்தந்த உயிர்மெய்யெழுத்துக்களுக்கு குறில்,நெடிலுமாக உச்சரிப்புக்கு தகுந்த அர்த்தங்களும் மாறுபடுகிறது.எனவே இவர்கள் நம்மை விட சரியாகவே உச்சரித்து பேசுகிறார்கள்னு நான் நினைக்கிறேன்.
                  நம் தமிழை கற்றுக்கொள்பவர் கைகளுக்கும் கை என்று எழுதுவார்,உச்சரிப்பார்.தங்க நகை,,ஆன்மிம்,வுள்,கட்டிம் , வண்டி என்று எழுத சொல்லி உச்சரிக்க சொன்னால் எப்படி உச்சரிப்பார்,எழுதுவது ஒன்று உச்சரிப்பது ஒன்றாகத்தானிருக்கும்.எனவே நம் தேசிய மொழி சிறந்ததானு வாதிடவில்லை, கற்றுக்கொள்வதில் தவறில்லை.புலமை பெற்றவர்கள்,தமிழ் ஆர்வலர்கள் சண்டைக்கு வந்துவிட வேண்டாம்.
                                                                                        மேலும் அக்கம் பக்கத்தில் பழகுபவர்கள்,விற்பனையாளர்கள்,போக்குவரத்தில் சிலர் சில சந்தர்ப்பங்களில் சிலர் ஹிந்தியில் தீதி (அக்கா),பையா(அண்ணன்,தம்பி) என்பதில்லாமல் பாயீ(சகோதரன்), பெஹன் ஜி (சகோதரி ) னு சொல்லும்போதும்,தன் மகனை/மகளை ஒத்த வயதுள்ளோரையோ/பாசத்தில் அழைக்கும்போதோ bhetti (மகள்),bhettaa மகன் என்றழைக்கும் போது நம்ம தமிழிலும் சகோதரி ,மகனே,மகளேன்னு கூப்பிட்டால் நல்லாயிருக்குமே,பழைய திரைப்படங்களில்தான் இப்படி பேசுவதை கேட்டிருக்கிறோம்,இப்போ மவனே உன்னைய கவனிச்சுக்கிறேன்,மகளே உனக்கு இருக்குடின்னு மட்டுமே புழக்கத்தில் உள்ளது.வணக்கத்திற்கு பதிலாக குட் மானிங் ,ஹாய் சொல்வதும்தான் இப்போ பெருகியுள்ளது.ஆனால் இங்கு இப்போதும் குட் மானிங் ,ஹாய் களை விட நமஸ்த்தே,நமஸ்த்தே ஜி னு சொல்லுவதைத்தான் அதிகம் காண முடிகிறது, குழந்தைகள் கூட நமஸ்த்தே சொல்லும்போது ஆசையாக இருக்கும்.குழந்தைகள் தங்கள் பெற்றோரை அம்மா ஜி,பாப்பா(அப்பா) ஜி னு கூப்பிடும்போது எவ்ளோ நல்லாயிருக்கும் தெரியுமா?

ஹிந்தி பேசும்போது அப்படியே தமிழில் மொழி பெயர்த்தால் பழைய திரைப்படங்களில் பேசும் சுத்த தமிழே கிடைக்கும்.அவர்கள் பேசும்போது ஜி,ஜி னு சொல்லுவது தமிழில் "அவர்களே" , "ங்க"என்பதாகும் { மரியாதை நிமித்தமாக அதாவது சரிங்க,வாங்க,ஆமாங்க,மற்றும் உதாரணமாக அம்மா அவர்களே ,ஆசிரியர் அவர்களே }அப்படிப் பார்த்தால் எனக்குத் தெரிந்து கோயமுத்தூர் பாசையில்தான் வார்த்தைக்கு வார்த்தை மரியாதையாக ஆமானுங்க,ஏனுங்க,சொல்லி போட்டனுங்க,செஞ்சிடுவேனுங்கனு பேசுவதாக கேள்விப்பட்டிருக்கேன். ஒருவேளை ஹிந்திக்காரர்களில் யாராவது இப்போ இருக்கும் ஹிந்தி சுத்த ஹிந்தியல்ல,இதற்கு முன் இன்னும் சுந்தர ஹிந்தியாக இருந்ததுன்னு சொல்றாங்களோனு எனக்குத் தெரியாது.அவரவர் மொழியை சுத்தமாக பேசினால் நல்லது.