சில வருடங்களுக்கு முன் உடைகள் வாங்கும் போது கூடவே அந்த கடையின் விளம்பரத்தோடு ஒரு மஞ்சள் பை கிடைக்கும்.அதிகமானோர் வீட்டில் உயர் கூடை சில அளவுகளில் டிசைன்களில் இருக்கும்.இப்போ இது இரண்டுமே உபயோகத்தில் குறைந்து விட்டது.வருடங்கள் அதிகரிக்க அதிகரிக்க,நாகரீகமும் அதிகரித்து மக்களின் தேவைகளிலும்,உபயோகத்திலும் மாற்றங்கள்,முன்னேற்றங்கள். உபயோகிக்கும் பைகளிலும் மாற்றங்கள். பல வண்ணங்களிலும்,வடிவங்களிலும்,பைகள் வரத்தொடங்கி மக்களால் உபயோகிக்கப்படுகின்றன.தற்போது சாமானியர்கள் அதிகம் உபயோகிப்பது இரண்டு மரப்பிடிகள் கொண்ட’ கட்ட பை’ என பேச்சு வழக்கில் சொல்லப்படும் பைகள்.இந்த பைகள் தனியாக விற்கப்படுவதல்லாமல்,மஞ்சள் பை கொடுத்த துணிக் கடைகள்,மளிகை சாமான் மற்றும் சில கடைகளில் பொருட்கள் வாங்கும்போதும் தரப்படுபவது அனைவருக்கும் தெரிந்ததே.
வீட்டில் அன்றாடத் தேவைகளுக்கு பைகள் தேவைப்படின் தையல் கலையில் ஆர்வம் உள்ளவர்கள்,பொறுமை உள்ளவர்கள் நாம் உபயோகித்த ஆடைகள் சேலை,சுடிதார்,குறிப்பாக பேண்ட் இவற்றைக் கொண்டு வீட்டிலே பைகள் தயார் செய்யலாம்.புதிய துணிகள் கொண்டும் பைகள் செய்யலாம்.சிலருக்கு பை தைக்கும் முறைகள் தெரிந்திருக்கலாம்.
சில டிப்ஸ் பாருங்கள்
ஜீன்ஸ் பேண்ட் இல்லாத வீடுகள் இருக்காது, பழைய/பத்தாமல் போன ஜீன்ஸ் பேண்ட்டை எடுத்து தையலை
ஒரு கால் பகுதியைப் படத்தில் உள்ளவாறு பிரித்து மடித்துக் கொள்ளவும்.
பிரித்த கால் பகுதியை சரி சமமாக கத்தரித்துக் கொள்ளவும்.
பிறகு படத்தில் உள்ளவாறு துணியை பின் புறமாக திருப்பி இரு பக்க திறப்பு பகுதிகளை தைத்துக் கொள்ளவும்.குறிப்பாக நீங்கள் பைகள் தைப்பதற்கு ஜீன்ஸ்,சாதாரண பேண்ட் துணி,சேலை,சுடிதார், ஸ்க்ரீன் துணி இப்படி எந்த விதத் துணிகளாக இருந்தாலும் உடைகள் தைப்பது போல பையின் வெளிப்புறப் பிடிகள் வெளிப்புற பாக்கெட் தவிர ,உள் பாக்கெட் வைப்பது எல்லாம் துணியின் பின் புறத்தில்தான் செய்தாக வேண்டும்.அப்போதுதான் வெளிப் பக்கம் நல்லத் தோற்றம் கிடைக்கும்.
படத்தின் படி இரு பக்க வட்டிலும் தைத்த பிறகு இப்போது உங்களுக்கு
ஒரு பக்கம்(பையின் வாய்ப் பகுதி/மேல் பகுதி) திறப்பாகவும்,இதற்கு கீழ்ப் பகுதி பையின் அடிப் பகுதியாகவும் கிடைக்கும். அடிப் பகுதியின் இரு மூலையிலும் சிறிய இரு கிராஸ் தையல் போட்டுக் கொள்ளவும்
சில டிசைன்களைப் பாருங்கள்:.
ஜீன்ஸ் துணியாக இருப்பதால் பையின் வலுவிற்கு இந்த ஒரு துணியே போதும்,மற்ற துணிகளாயின் வலுவிற்காக எந்த வடிவத்தில் பை தேவையோ அதே வடிவத்திற்கு இரண்டு அல்லது மூன்று துணிகளை அதே வடிவில் கத்தரித்து ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து தையல் இடவும்.
இல்லையெனில் கடைகளில் மீட்டர் கணக்கில் போம்கள் விற்கப்படும் அதை பை வடிவத்திற்கு கட் செய்து பைத்துணி வெளியில்,நடுவில் போம்,இதற்கு மேல் ஒரு சதா துணி வைத்து தைத்து விட்டால் பையின் உள்புறம் போம் தெரியாது.
இல்லையெனில் எங்கள் பகுதி பெண்கள் சிலர் கோதுமை மாவு வாங்கும் பாலியஸ்டர் சாக்குப் பைகளை போம்கு பதிலாக கட் செய்து உள்ளே வைத்து தைத்து விடுகிறார்கள்.
பைக்கு பிடி செய்வதற்காக பிரித்த பேன்ட்டின் மீதித் துணியிலிருந்து படத்தில் உள்ளவாறு கத்தரித்து அழகாக இரு பக்கங்களிலும் மடித்து தைத்துக் கொள்ளவும்.பிடியின் நீல அகலம் நமது விருப்பம்.
பையின் மேல்பகுதி/வாய்ப்பகுதிக்கு ஜிப் வைப்பதாக இருந்தால் உள்புறமாகவே வைத்து தைத்து விடவும் ,ஜிப்களும் சில டிசைன்&கலரில் கடைகளில் கிடைக்கிறது,பிடிகளும் அப்படியே மீட்டர் கணக்கில் கடையில் கிடைக்கும்.
ஒரு பாக்கெட்டையும் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.அதை வெளிப்புறமாக தைத்துக் கொள்வோம்.
இப்போது அழகான சிறிய பை தயார்.
இதே பை பெரிய அளவில் வேண்டுமெனில் இது ஒரு கால் பகுதி ஒரு பக்கமும்,மற்றொரு கால் பகுதி மறு பக்கத்திற்கும் சம அளவாக வெட்டிக் கொண்டால் பெரிய பை கிடைத்து விடும்.
எங்கள் பகுதியில் இந்த மாதிரியான பைகள் தைக்க சில கடைகள் உள்ளன,சாதாரண நூலே போதும்,நைலான் நூல்களும் உபயோகிக்கலாம்.
சில டிசைன்களைப் பாருங்கள்:.
. முதல் மூன்று பைகளின் முறையே மூன்று சதா பேண்ட்டுகள்,கடையில் டிசைனுக்கு ஏற்றவாறு பணம் கொடுத்து தைக்கப்பட்டது. நான்காவது எனக்கு பத்தாமல் போன சுடிதாரில் நான் தைத்த முதல் பை(மாதிரி).வலுவிற்கு துணிகள் கொடுத்து தைத்துள்ளேன்.ப்ளைன் துணியில் தைக்கும் போது மேலே பென்சிலில் படம் வரைந்து அதன் மேலே தையல் விடலாம். முதல் மூன்று பையின் மேல் பாருங்கள்,பேப்ரிக் பெயிண்டிங்,செமிக்கி வேலைப்பாடுகள் செய்யலாம் .நமது விருப்பம் . வருடக் கணக்கில் உழைக்கும்.
இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட பைகள்.முதல் இரண்டு படங்களிலிருந்து பேண்ட்டின் சைடு பக்கெட்டுகள் கத்தரிக்கப்பட்டு தனியே எடுத்து உள்புறமாக தைக்கப்படுள்ளது,இதை சுவற்றில் ஆணியில் மாற்றிவிடலாம்,எதாவது வைத்துக்கொள்ள,அல்லது மேலே பிடி தைத்து சிறு பையாக வைத்துக்கொள்ளலாம்.குழந்தைகளுக்கு விளையாட்டுப் பையாக வைத்துக் கொள்ளலாம்.
அடுத்த பிங்க் கலர் பையை பார்த்தவுடனே தெரியும் இது பேண்டின் மேல் பகுதி,அலங்காரத்தை பாருங்கள்,பிடியாக இருப்பது பெல்ட்.கற்பனைக்கு ஏது எல்லை.உபயோகிக்க மனம்தான் வேண்டும்.
எங்கள் பகுதிக்கு வந்தபோது அனைவரும் இது போன்ற பைகளை உபயோகிப்பதைப் பார்த்து சில கடைகளில் விசாரித்த போது சரியான பதில் இல்லை.பிறகுதான் ஒருவரிடம் தெரிந்து கொண்டேன்.இவைகள் உபயோகப் படுத்தப்பட்ட துணிகளால் தைக்கப்படுகிறது,இதற்கென தனிக் கடைகள் உள்ளன என்று,பிறகு அந்த கடைகளுக்கு சென்று பார்த்தால் ( புதுத் துணிகளும் கொடுக்கலாம்) அம்மாடி எத்தனை டிசைன்கள், சூட்கேஸ்கள் வடிவிலும் தைக்கிறார்கள். அக்கம் பக்கத்து பெண்மணிகள் சிலர் வைத்திருப்பது தன் வீட்டு மெசினில் தானே தைக்கிறார்களேன்று பிறகுதான் தெரியவந்தது. பிறகு நானும் பார்த்து கேட்டு கற்றுக் கொண்டேன்.ஆனால் அவர்கள் அளவிற்கு கச்சிதமாக தைப்பது சிரமம்தான்.
தற்போது பரவலாக பாலித்தீன் பைகள் உபயோகிக்கக் கூடாது என்பதை பலரும் அறிவோம்.இந்த மாதிரி பைகள் எல்லோரும் பயன்படுத்தினால் நல்லது.
16 comments:
படிக்கும் போது புரியறாப்பல இருக்கு.எனக்கு செஞ்சு பாக்கும்போதுதான்
சந்தேகம்லாம் வரும்.பைகளை கண்ணைக் கவருகிறாப்ல இருக்கு,
ஆனா எனக்கு நேர்ல கத்துக்காம வராது போல.ஒரு தடவை ஹரியானா
வந்து எல்லாத்தையும் மொத்தமா கத்துகிட்டு வரணும் போல.
அருமையனதி திட்டமுங்க.. அழகாகவும் சிக்கனமாகவும் இருக்கிறது.. நன்றி நன்றி..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..
சூப்பர் ஆச்சி. பேசாம சுய தொழில் தொடங்கலாமே ?? நெறயப் பேருக்கு கத்து கொடுக்கலாம்
thanks for the useful info
பயனுள்ள தகவல்கள்... நன்றி..
அருமையான தகவல்கள், நல்ல காலத்துலேயே வீட்டுல ஜீன்ஸ் போட விடமாட்டாங்க, இதையும் சொல்லி கொடுத்தமுனா அவ்வளவுதான், நான் எஸ்கேப் :-)))))))0
அருமையானதொரு பதிவு. மிகவும் பயனுள்ளது. பாராட்டுக்கள்.
தயவுசெய்து திருமதி ராஜி அவர்களை உங்கள் ஹரியானாவுக்கு வரவழைத்து எல்லாம் கற்றுக்கொடுத்து விடுங்கள்.
அவர்கள் இங்கு தமிழ்நாட்டிலுள்ள எங்கள் எல்லோருக்கும் கற்றுத்தந்து விடுவார்கள்.
இது சம்பந்தமான செலவுகள் யாவும் நான் ஏற்றுக்கொள்ளத் தயார்.
ரொம்ப அழகா இருக்கு ஆச்சி..
ராஜி அவர்களுக்கு நன்றி,
பை என்ன பிரமாதம்?மூன்று பக்கங்கள் க்ளோஸ் ஒரு பக்கம் ஓபன்,எல்லாம் நம்ம இஷ்டம்தான்,நாம ஹரியானாவில் சந்திக்கும் நாள் வரட்டும்,வரட்டும்.குளிர் காலத்தில் இவங்க விதம் விதமா பின்னும் ச்வட்டர்களை பார்த்தால் இன்னும் உங்களுக்கு பிடிக்கும்,ஆனால் நல்லதிலும்,கெட்டதிலும் ஒரு படி நமக்கு மேல்தான் இங்குள்ளவர்கள்,யார்கிட்டயும் சொல்லிடாதிங்க.
ம.தி.சுதா அவர்களுக்கு நன்றி,
தங்கள் தமிழில் மகிழ்கிறேன்,பெண்கள்தான் தைக்கனும்னு கிடையாது,ஆண்களும் இதை வீட்டில் முயற்சிக்கலாம்.
எல்.கே .அவர்களுக்கு நன்றி.
ஆசைக்கு இதிலோன்னு அதிலோன்னு என கத்துக்கிட்டேன்,சுய தொழில் நல்ல பிள்ளைகள் செய்ற வேலை.,ஆனால் கேட்பவர்களுக்கு கத்துக் கொடுப்பேன் நிச்சியம்.
சமுத்ரா அவர்களுக்கு நன்றி.
வேடந்தாங்கல்-கருன் அவர்களுக்கு
முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி
சுரேஷ் அவர்களுக்கு நன்றி,
புடவை ,சுடிதாரிலும் பைகள் ரெடி செய்யலாம்
வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றி.
ஓகோ,திருச்சியிலிருந்து செலவு செய்பவர்கள்,ராஜி கூடவே வந்தால்தான் கற்றுத் தரப்படும்.இல்லையெனில் ரொட்டி சப்ஜி தாம்ப்பா
முத்து லெட்சுமி அவர்களுக்கு நன்றிங்க,எல்லோரும் செய்து பாக்கனும்.
ஜீன்ஸ் பேக் அருமை
அட்டகாசமா இருக்கு ஜீன்ஸ் bag.
பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் இவை. நல்லது தான்.
குப்பை என்று எதுவுமே இல்லை! ஒவ்வொரு பொருளுக்கும் அதனுடைய உபயோகம் முடிந்து விட்டால், அதை வைத்து வேறு ஒரு பொருள் தயாரிக்கப்பட்டால் எவ்வளவு நல்லது. ஜீன்ஸ் பை நல்ல முயற்சி! தொடருங்கள் உங்கள் பயனுள்ள பதிவுகளை!
நல்ல விஷயம்.
நன்றி.
அமுதா கிருஷ்ணன்,
வெங்கட் நாகராஜ்,
ஏஞ்சலின் ,
முதல் வருகை தந்திருக்கும்
அமைதி அப்பா
ஆகியோருக்கு
எனது நன்றிகள்
நல்ல பகிர்வு ஆச்சி. ஹரியானாவுக்கு ஒரு முறை வந்தால் கற்றுக் கொண்டு விடலாம் என நினைக்கிறேன்.
பைகள் எல்லாமே அற்புதம் ! பழைய துணில செஞ்சதுன்னு நம்பவே முடியல !
அப்புறம் ஒரு விஷயம், இத கத்துகிட்டா எல்லா வீட்லயும் ரங்க்ஸ் ங்களோட பண்ட்ஸ் எல்லாம் காலி.... :))))
Post a Comment