பெண் குழந்தை பிறந்தால் முத்தரசி என்று பெயர் வைக்க ஆசைப்பட்ட அம்மாவிற்கு , விவசாயத்தை மூச்சாகக் கொண்ட தன் பெற்றோருடன் மதுரை மண் வாசனையில் தை பொங்கல் கொண்டாடி பொங்கல் சுவைத்த அம்மாவிற்கு அன்றைய தினத்தைக் கூட முழுமையான மகிழ்ச்சியில் நெகிழவைக்காமல்,இக்கரைக்கு அக்கரை பச்சை என கருவறையின் சுகம் அறியாமால் கல்லறைக்கு போகும் நாட்களை எண்ணுவதற்கு அன்றே முயற்சித்த என்னை பிரசவிக்க வாடிப்பட்டி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அம்மாவிற்கு மகளாய் வெள்ளிக் கிழமை உழவர் தினத்தன்று(மட்டுப் பொங்கலன்று) உத்திர நட்சத்திரத்தில் பிறந்தேன்.
‘ப’ வரிசையில் பெயர் வைக்க ஜோசியர் சொல்லிவிட்டதால் மகள்தான் தன் உயிர்,தன் மகள்தான் வாழ்க்கை என்றிருக்க,’முத்தரசி ‘ என்ற பெயர் அம்மாவின் ஆசையிலிருந்து நீக்கப்படப் போவதில் துளி வருத்தமும் அடையாமால் அம்மாவும் அப்பாவும் ‘ப’ வரிசையில் பெயர் தேட துவங்கியதில் ஒருமனதாக குலதெய்வத்தின் பெயாரான “பரமேஸ்வரி” என்ற பெயர் வைக்கப்பட்டது.
நாகையில் என் பெற்றோர் வசித்த பகுதியில் அனைவரும் செட்டியார்கள் (ஜாதிப் பெயரைக் குறிப்பிடுவதற்கு மன்னிக்கவும்).என் பெற்றோர் மூன்று வருடம் குழந்தை இல்லாமல் சொந்தங்களால் பல துன்பங்களுக்கு ஆளான போதிலும்,நண்பர்களாய்,உறவினர்களாய் என் பெற்றோருக்கு ஆதரவாக இருந்தவர்கள் தங்கள் பிரிவிற்கே உரித்தான ‘ஆச்சி’ என்றழைக்க என் பெற்றோருக்கும் இந்த பெயர் வித்தியாசமாக தெரியவில்லை.அன்று முதல் ஆச்சிதான். பள்ளியிலும் கல்லூரியிலும்தான் பரமேஸ்வரி, இன்றுவரை ஆச்சி என்று சொன்னால்தான் என் உறவினர் அனைவருக்கும் தெரியும்.தாத்தா விவசாயி,அப்பாவிற்கு மின் வாரியத்தில் பணி.இருவரும் தன் உழைப்பில் உயர்ந்தாலும் ஆச்சி உயர உயர தம் வாழ்க்கை உயர்வும்,பணி உயர்வும் அடைவதாக நம்பிக்கை.
மூன்று வருடம் கழித்து நாகையிலேயே அப்பாவின் வேலை மாற்றம்.வசிப்பிடமும் மாற்றியாகிவிட்டது.அங்கு ஒரு அன்பு உள்ளம் கொண்டவர் bhamme என பெயரிட்டு அழைக்கத் தொடங்கினார்,அருகருகே சிலர் bhamme என்று அழைத்தாலும் ஆச்சியை அசைக்க முடியவில்லை.
பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை எனது வகுப்பில் முதல் மதிப்பெண்தான்.பரமேஸ்வரி என்றால் எல்லோருக்கும் தெரியும்.
ஒன்பதாம் வகுப்பிலிருந்து முதல் ரேன்க் வளர்ந்து ரெண்டாம்
ரேன்க்காகிவிட்டது,......ஹா,ஹா....கல்லூரியில்
ஆவரேஜ் ஸ்டுடன்ட்டுதான் அதே சமயத்தில் எனது பெயரைக் கேட்டால் எனக்கே அலர்ஜி ஆகும் அளவிற்கு சில வேதனையான சம்பவங்களும் நடந்ததுண்டு.
கல்லூரியில் படிக்கும் போது சக தோழிகளுடன் சில தோழிகள் சவால் விட்டுக் கொண்டோம்.என்னவெனில் திருமணம் ஆனாலும் இத்தனை நாள் இருந்த அப்பாவின் இனிசியலைத்தான் வைத்திருப்போம்,தற்செயலாக வருங்கால கணவர் பெயரும் அப்பாவின் பெயரும் முதல் ஆங்கில எழுத்து ஒன்றாக அமைந்து விட்டால் அவரவர் அதிர்ஷ்டம்.ஆட்டோகிராப் டைரியில் கூட அப்படியே வாக்குறிதி எழுதினோம்.வெவ்வேறு இனிசியல் அமைந்தாலும் அப்பாவின் இனிசியல்தான் வைத்துக் கொள்வோம் என்றோம்.சிலர் அப்பாவிற்கு பின் கணவர்தான்.எனவே கணவர் இனிசியல் வைத்துக் கொள்வதுதான் சரி என்றனர்.
என அப்பா பெயர் செல்வராஜ்.என் கணவர் பெயர் (அனைவரும் அறிந்ததே) ஸ்ரீதர்.எனவே இனிசியலில் மாற்றமில்லை,மற்றொரு தோழிக்கும் அப்பாவின் இன்சியல் மாற்றத் தேவை இல்லாமல் கணவர் பெயர் அமைந்து விட்டது,ஆனால் மீதி சவால் விட்ட தோழிகள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை.
திருமணமாகி வசிப்பிடம் பெற்ற போது எங்கள் பகுதியில் மூன்று ஸ்ரீதர்.
சில சூழ்நிலையில் பலருக்கும் குழப்பம்.எனவே இவர்களுக்கு இனிசியளிலும்,வீட்டின் வகை பிரிவை சொல்லியும் அடையாளம் சொல்ல வேண்டிய சூழ்நிலை.
வலைப்பதிவிற்கு வந்த போது பரமேஸ்வரி என்ற பெயரை தெரியப் படுத்த விரும்பாததால் மிஸ்சஸ் bs ஸ்ரீதர் என்ற பெயரை திருமதி bs ஸ்ரீதர் என்று வைத்துக்கொண்டேன்.
பெயர்க் காரணம் பதிவிட அழைத்த தோழி,சகோதரி ராஜி அவர்களுக்கு நன்றி.
19 comments:
எனக்கு இந்த திருமதி ஸ்ரீதரைவிட ஆச்சி தான் பிடிச்சு இருக்கு. இனி நீங்கள் வலையுலக ஆச்சி..
பெயர்க் காரணம் நல்லாவே இருக்கு
//சிலர் அப்பாவிற்கு பின் கணவர்தான்.எனவே கணவர் இனிசியல் வைத்துக் கொள்வதுதான் சரி என்றனர்.//
இளம் வயதிலேயே கணவரை இழந்தவர்கள் யார் பேரை வைப்பார்கள் மகன் /மகள் பேரையா..? எவன்யா கண்டுபிடிச்சான் இதை..?
எத்தனை சொன்னாலும் அப்பா அப்பாதான் , அம்மா அம்மாதான். இதில் மிசஸ் போட்டு வேண்டுமானால் சொல்லலாம் . ஆனா எப்போதுமே இனிஷியல் அப்பாதான் அது மாறக்கூடாது. :-)
ஆச்சி பேர் நால்லாதானே இருக்கு :-)
//நால்லாதா//
ஆச்சி ஒரே ஒரு பெயர்தானே ?? நாலு பெயர் எங்க வந்துச்சி ???
பெயர்க் காரண விளக்கங்கள் மிகவும் அருமையாகவே உள்ளன.
சிறு குழந்தையிலிருந்து, சிலரால் பழக்கி விடப்பட்ட சில பெயர்களை, என்ன செய்தாலும் நம்மால் மாற்றவே முடியாது. அதற்காக நாம் வருந்தவும் வேண்டியதில்லை.
எழுத்துலகில் ஆட்சி செய்ய விரும்பும் தங்களுக்கு அந்த அவர்கள் சூட்டிய பெயரும் பொருத்தம் தானே !
கவலையை விடுங்கள், எழுதித் தள்ளுங்கள், என் அன்பான வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.!
உங்களுக்கு எத்தனை பெயர்கள்
இருந்தாலும் எனக்கு நீங்கள் ஆச்சி தான்
பரமேஸ்வரி என்ற பெயரை நீங்கள் தெரியப் படுத்த
விரும்பாத பட்சத்தில் உங்களை நான் தெரியப்
படுத்த வேண்டிய சந்தர்ப்பத்திற்கு தள்ளி விட்டேனோ?
அவ்வாறு ஏதேனும் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் தோழி
என் அழைப்பை ஏற்று பெயர்க்காரணம் வெளியிட்டமைக்கு நன்றி ஆச்சி
ரிலேவிற்கு நீங்கள் யாரையும் அழைக்கவில்லையா?
நல்ல விளக்கம் - பெயர்க்காரணம்.
எல்.கே அவர்களுக்கு நன்றி,
என்னை பலருக்கும் அறிமுகப் படுத்திய நீங்கள் // இனி நீங்கள் வலையுலக ஆச்சி..// என்றதில் மகிழ்கிறேன். திருமதி ஸ்ரீதரும் இருக்கட்டும்,கணவரின் மீதான அன்பை இவ்விதமாக தெரிவிக்கிறோம்ல, (கணவருக்கு ..ஐஸ்,ஐசு)
ஜெய்லானி அவர்களுக்கு நன்றி
சில பெண்கள் தான் கணவரின் இனிசியலை போட்டுக் கொள்வதில் பெரிய சந்தோஷம் அடைகிறார்கள்.ரேராக சில பெண்கள் திருமணம் ஆனாலும் ஆகாத மாதிரி சில நேரங்களில் காமித்துக் கொள்வதில் சந்தோஷப்படுகிறார்கள்.பெண்கள் பல விதம் விருப்பங்களும் பல விதம்.நீங்க கேட்டிருப்பதும் சரியான கேள்வி.
வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றி,
எல்லாமே எதார்த்தமாக நடந்து வருகிறது சார்,ஜாம்பவான்கள் நிறைந்த வலையுலகில் எனக்கு எத்தனை நாள் பயணம்னு எனக்கேத் தெரியாது,தொடர முயற்சிக்கிறேன்.
ராஜி அவர்களுக்கு நன்றி,
என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்?உங்கள் மனது யாருக்கு வரும்?நான் ஏற்கனவே சொன்னபடி அம்மாவின் வலைதளத்தில் என் பெயரை தெரிவித்துறிக்கிறேன்.பெரிய வார்த்தைகள் வேண்டாம்.
//ரிலேவிற்கு நீங்கள் யாரையும் அழைக்கவில்லையா?//
பதிவாளர்கள் அனைவருமே பெயர்க் காரணம் எழுதினால் நன்றாக இருக்கும்தான்,
அனைவரையும் பதிவுலகிற்கு எப்படி,ஏன் வந்த காரணம் பற்றி எழுதுங்கள் என்று சொன்னால் அந்த கதை சில நாள் ஓடும்,நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேம்ப்பா,நீங்கதான் சொல்லனும்.
வெங்கட் நாகராஜ் அவர்ககுக்கு நன்றி.
ஆச்சி "எனக்கும்
இந்த பெயர் தான் மிகவும் பிடிச்சிருக்கு
பரமேஸ்வரி, முத்தரசி, ஆச்சி எல்லாமே நல்ல பெயர்கள்.
ஆமாங்க ஆச்சி நல்லாத் தானே இருக்கிறது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.
@ஏஞ்சலின்
அப்படியா ?ஓகே,ஓகே நன்றி.
@கோபி ராமமூர்த்தி
முதல் வருகைக்கு நன்றி.தொடர் வருகையை எதிர்பார்க்கிறேன்.
@ம.தி.சுதா
அப்படியா,நன்றிங்க.
பெயர்க்காரணம் நல்லாயிருக்கு பரமேஸ்வரி. நீங்க என்னைக்கும் ஆச்சி தான்.
நானும் அப்பா பெயரை இனிஷியலா போடறதை மாற்ற விரும்பவில்லை.
ஆச்சி
பெயர்க்காரணம் அருமை.
எங்கள் வீட்டுப் பெண்களை பிறர் இப்படித் தான் அழைப்பார்கள். இந்த தலைமுறையில் அதெல்லாம் மாறிவிட்டது.
பகிர்வுக்கு நன்றி
@ஆதி நன்றிங்க
@சிவகுமாரன் நன்றிங்க
ஆச்சியே அருமையாக இருக்கிறது.
வாங்க இராஜராஜேஸ்வரி.தங்கள் கருத்தில் மகிழ்கிறேன்.வருகைக்கும், நட்பு வட்டத்தில் இ்ணைந்தமைக்கும் நன்றி.
aatchi, Bhammi , Parameshwari. But u r always parami for us. :D
@ bobby shankar
அடடே,
வா பாபி,உன் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.,என் மற்ற பதிவுகளையும் நேரமிருக்கும்போது படிக்கவும். நன்றி.
நினைச்சேன்.. இப்படிதான் இருக்கும்னு... சரியா போச்சு... அருமையாக இருக்கிறது...
Post a Comment