புதிய சேலைகள் சேர்ந்து விட்டால் உபயோகத்தில் இருந்த ஏதாவது ஒரு சேலை நம் கண்ணுக்கு பழசாகத் தெரியும்.வேண்டாமென்று ஒதுக்கி வைப்போம்.அணியும் சேலை ஒரு நாள் பழசாகத்தான் போகும்.அப்படி பழைய சேலைகள் அல்லது எதிலாவது மாட்டி கிழிந்து விட்ட சேலைகள்,எந்த விதத்திலோ அணிய விரும்பாத/முடியாமல் அல்லது பழைய சேலைகளை என்ன செய்வோம்?
குப்பையில் போட மனசில்லாமல் வைத்திருந்து ,வைத்திருந்து ஒரு நாள் குப்பையோடு போட மனம் வந்து விடலாம் .
யாரிடமாவது தர்மத்திற்கு கொடுத்து விடலாம்.
பழைய புடவை போட்டு பிளாஸ்டிக் பாத்திரம் வாங்கலாம்.
காட்டன் புடவையானால் வீட்டில் தூசி துடைக்க,சமையலறையில் பாத்திரப் பிடி துணியாக வைத்துக் கொள்ளலாம்.
சேலையின் தன்மையை பொறுத்து தலையணை உறை,பெண் குழந்தைகளுக்கான உடை,சுடிதார் கூட தைக்கலாம்.
அவரவர் விருப்பம்,கற்பனைக்குத் தகுந்தது போல அணிய விரும்பாத/முடியாத அல்லது பழைய சேலைகளை உபயோகிப்பார்கள் .
எங்க பகுதியில் அந்த மாதிரியான சேலைகளை இப்படியும் உபயோகப் படுத்துகிறார்கள், எப்படியெனில் மிதியடியாக அல்லது தரை விரிப்பானாக,தடுக்காக. படத்தில் காணப்படுவது,சேலையால் செய்யப்பட்ட தடுக்கு.
இதற்கு தேவையான பொருட்கள்:
இதற்கு தேவையான பொருட்கள்:
வேண்டாத சேலை ,
கத்தரிக்கோல்,
குரோசியா ஊசி அல்லது ஸ்வெட்டர் பின்ன பயன்படும் ரெட்டை ஊசிகள்.
ஆனால் இங்கு உள்ள படங்கள் அனைத்தும் ஸ்வெட்டர் பின்ன பயன்படும் ரெட்டை ஊசிகளால் செய்யப்பட்டது.குரோஷியாவில் பின்னும்போது வேற வடிவத்தில் பின்னல்கள் அமையும்.
சேலையை நீளவாக்கில் ஒரு இன்ச் அகலத்திற்கு கத்தரித்து (கிழித்து) கொள்ளவேண்டும்.அடுத்த ஒரு இன்ச் அகலம் கிழிக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக சிறு சிறு முடிச்சிட்டு இணைத்து கிழே படத்தில் உள்ளவாறு வைத்துக் கொண்டால் பின்னுவதற்கு சுலபமாக இருக்கும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட சேலைகள் இருந்தால் தனித்தனியாக கத்தரித்து, எடுத்து வைத்துக்கொண்டோ அல்லது அந்தந்த சேலைகளின் டிசைனுகேற்பவும்,நமது கற்பனைத் திறனுக்கேற்பவும் செய்து கொள்ளலாம்.தரை விரிப்பா ன்,தடுக்கு,மிதியடியாகவும் வைத்துக் கொள்ளலாம்,வட்ட வடிவம்,செவ்வக வடிவத்திலும் செய்யலாம்.
செய்முறை (பின்னும் முறை)நேரில் வருபவர்களுக்கு கற்றுத்தரப்படும்.(பதிவில் சொல்லித் தருமளவிற்கு திறமை பத்தாதுங்க )
நானும் இந்த கை வண்ணத்தைக் கற்றுக்கொண்டேன்.அம்மா வீட்டுக்கு ஒன்று ,மாமியார் வீட்டுக்கு ஒன்று செய்து கொடுத்ததில் அக்கம் பக்கத்தினர் உட்பட எல்லோரும் ஆச்சரியமும்,சந்தோசமும் அடைந்தார்கள்.கடைகளில் பல டிசைனிலும்,பல மெட்டீரியளிலும் தரத்திற்கேற்ப விலைகளில் கிடைத்தாலும் நம் கைகளால் செய்யப்படும் போது(பின்னப்படும்) இந்த மாதிரி கலை வண்ணங்கள், மனதிற்கும் சந்தோஷம்,நமது சேலையும் பல வருடம் நம்முடன் வேறு வடிவத்தில்,உபயோகத்தில் இருக்கும்.
23 comments:
அட வித்யாசமா இருக்கே ??
//செய்முறை (பின்னும் முறை)நேரில் வருபவர்களுக்கு கற்றுத்தரப்படும்.//
அங்கே வந்து சந்தேகம் கேட்டா ஊசியால குத்திட மாட்டீங்கதானே :-))
அழகா இருக்கு ஐடியாவும் சூப்பர்
மை டியர் ஆச்சி
ராஜி பேர்ல ஹரியானாவுக்கு ஒரு டிக்கெட் போடுங்க.
நான் வந்தா என் பொண்ணு வேற இலவசம். ஓக்கேயா?
எனது பதிவில் தங்களை " பெயர்க்காரணம் "
தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்துள்ளேன்
படித்து பார்க்கவும்
அழைப்பிற்கிணங்கி பதிவை தொடரவும்
http://suharaji.blogspot.com/2011/03/blog-post_03.html
அப்ப நேரில் வந்துடவேண்டியது தான்..:)
நல்லாயிருக்குங்க.. என் பக்கத்துவீட்டு பாட்டி அவங்க உயிரோட இருந்தவரைக்கும், இதை பொழுதுபோக்கா வெச்சிக்கிட்டிருந்தாங்க. அவங்க க்ரோஷாவிலும் செய்வாங்க..
புது பிசினஸ் பண்ண ஐடியா குடுத்திட்டீங்க போல :-)
நல்லாயிரக்கங்க... அனா நம்மளுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல...
இதை கற்றுக்கொள்ள டெல்லிக்கு வ்ரனுமா?
ஐ, இது நல்லா இருக்கே.
எல்.கே அவர்களுக்கு நன்றி,
நானும் முதல் முறை பார்த்தபோது ரொம்ப ஆச்சர்யப்பட்டேன்.
@ஜெய்லானி
பயப்படாமல் வரலாம்.நான் முதலில் கத்துக்கிட்ட போது, ரெட்டை ஊசியால் பிடிக்கவும் பின்னவும் மிக சிரமப்பட்டேன், அப்போ எனக்கு சொல்லிக் கொடுத்த பெண் டென்சனாகி அந்த சிலாயாலே(ஊசியாலே)தன் தலையிலே (லேசாக )அடித்துக் கொண்ட ஞாபஹம் வருகிறது.
ஓகே.ராஜி.இருவருக்கும் டிக்கெட் புக் செய்துடுறேன்,நன்றி.
முத்துலெட்சுமி அவர்களுக்கு நன்றி
வாங்க,வாங்க,நேரில் கற்றுக்கொடுத்தால்தான் முழுமை பெரும்.
@அமைதிச்சாரல்
விரைவாகவும்,பல டிசைன்களில் இங்கு செய்கிறார்கள்.
@சரேஷ் ,நன்றி
பிசினஸ் செய்யலாம்தான்,மூலதனம் என்னவோ பழைய புடவைதான் ,பின்ன மிக பொருமை வேணும் (யாரு வாங்குவா?)
ம.தி.சுதா அவர்களுக்கு நன்றி. பரவாயில்லை.
வாங்க நிலவு.நன்றி.
@கே.ஆர் .பி.செந்தில்.
என்ன இப்படி கேட்டுபுட்டிங்க ?அடுத்த பதிவில் ஒன்னு சொல்லுவேன்,அதையும் சேர்த்து கத்துக்க வந்திடுங்க.
நன்றி லக்ஷ்மி அம்மா முதல் வருகைக்கு நன்றி .
இது பிறருக்குப் பயன்படக் கூடிய நல்லதொரு பதிவு. கலை ஆர்வம் உள்ளவர்களுக்கு இதன்படி ஏதாவ்து புதுமையாகச் செய்யத் தொன்றும்.
கலையார்வமோ, பொறுமையோ இல்லாதவர்கள், பிறருக்கு, அதுவும் தேவைப்படும் (deserving) தர்ம ஸ்தாபனங்களுக்கு உடனடியாக்க் கொடுத்து விடுவதே நல்லது.
மிதியடிகள் 10 ரூபாய்க்கே எங்கும் இப்போது விற்கப்படுவதால், மாதம் ஒரு முறை, புதிதாக ஆறு வாங்கி, பழையவற்றை எல்லாம் தூக்கியெறிந்து விடுவதே எங்கள் வீட்டு வழக்கம். அது தான் மிகவும் எளிது. புதியதை வாங்கிவரவும், பழசைத் தூக்கி எறிவதும் கூட நாங்கள் இல்லை. அதற்கும் ஆள் வைத்துள்ளோம். அவ்வளவு Busy யானவர்கள் நாங்கள் (சோம்பேறிகள்)
நல்ல சாப்பாடு+AC Room இல் தூக்கம்+TV+COMPUTER இதற்குத்தான் நேரம் உண்டு. என்ன செய்ய?
" டென்சனாகி அந்த சிலாயாலே(ஊசியாலே)தன் தலையிலே (லேசாக )அடித்துக் கொண்ட ஞாபஹம் வருகிறது."
அவசரப்பட்டு "தன்" அப்படிங்கறத" என்" என்று படிச்சு பயந்துட்டேன் .
its a fantastic way to reuse things
ரொம்ப அழகா இருக்குங்க
வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றி
இது கலை ஆர்வம் & டைம் பாஸ் ஆகாதவர்கள் செய்யக்கூடியதுதான்
நன்றி ஏஞ்சலின்,
என்ன பண்றது,போனா போவுது பாவம்னு என்னை அடிக்காம விட்ருக்கலாம்.
ஆனால் இங்குள்ள பெண்கள் ரெண்டு நாளில் செய்ததை (பின்னியதை)நான் ஒரு மாசத்துக்கு மேல பின்னுனேன், பின்னுனேன்,பின்னுகிட்டே இருந்தேன்.
5 அல்லது 6 சேலைகளை வைத்து சேலை மெத்தை தைப்போம். சாஃப்ட்டாக இருக்கும்.
இது மிகவும் அருமையாக கலர்ஃபுல்லாய் இருக்கிறது. செய்முறை தெரிந்தால் நாங்களும் செய்வோமே.அரைகுறையாய் பின்னிக் கொண்டு உள்ளதை 2 அல்லது 3 ஃபோட்டா எடுத்து போடுங்கள். அதை பார்த்தாலே கொஞ்சம் புரியுமே.
@அமுதா கிருஷ்ணன்
வருகைக்கு நன்றி தங்கள் ஆர்வத்தின் பேரில் :
ஸ்வெட்டர் பின்னும் ரெட்டை ஊசிகள் கொண்டு பின்னும் அடிப்படை முறையை பதிவில் சொல்வது எனக்கு கஷ்டம்தான்.
எனவே நீங்கள் அதை முதலில் கற்றுக்கொண்டீர்கள் எனில்
இந்த ரெட்டை ஊசியில் ஆரமிப்பதும் குரோஷியாவில் அரமிப்பது போல செயின் (சடை பின்னல்) போல 30/40/50 என்று இரட்டைப்படை எண்களில் துவங்கவும்.
ex : 30 செயின் பின்னல்கள் எனில் அடுத்த வரிசையில் இரண்டு எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுங்கள்(28,26,24,22,20.....2,1). இப்படியே நிறுத்தி கடைசியில் வரும் இரண்டு செயினை ஒன்றாக்கிவிடுங்கள்.இப்போ உங்களுக்கு ஒரு நீள் முக்கோணம் கிடைத்திருக்கும்.முடிவிலும் எண்ணிக்கை 30 இருக்க வேண்டும் அப்படி ஆரம்பத்திலும்,முடிவிலும் ஒரே எண்ணிக்கை வந்தால்தான் உங்களுக்கு வட்ட வடிவம் கிடைக்கும்.
இதே மெத்தடை ஊசியை வெளியே எடுக்காமல் வந்திருக்கும் நீள் முக்கோணத்தில் மீண்டும் தொடரவும்.(வட்ட வடிவம்)விரிந்து வந்து கொண்டே இருக்கும். முழு வட்டம் கிடைக்கும் வரை பின்னிய பிறகு துணிகள் தைக்கும் சாதா ஊசியை(நூலுடன்)கொண்டு இணைத்துவிட வேண்டும் அவ்ளவுதான்.
செவ்வக வடிவம் எனில் நம்ம இஷ்டம்தான் நீள,அகலங்களின் எண்ணிக்கை நம்ம இஷ்டம்.எவ்வளவு உயரம வேண்டுமோ அதுவும் நம்ம இஷ்டம்.
தெளிவாக குழப்பியிருக்கிறேனா ?
சூப்பர் ஐடியா1
ஆச்சி நல்ல பகிர்வு. இங்கயும் சேலை மெத்தை தைத்து தருவாங்க. பத்திரிக்கையில் படித்து நானும் நீங்க சொல்லியிருக்கும் இந்த மிதியடியை பின்ன ஆரம்பித்தேன். ஆனா கை வலி பயங்கரமா ஆயிடுச்சு. ஸ்வெட்டர் ஊசியால் தான் பின்னினேன். நேரில் பார்க்கும் போது சொல்லித் தாங்க. சேலையை நீளவாக்கில் மூன்றாக் கிழித்து தலையில் போடும் பின்னல் போல் ஒரு புத்தகத்தில் படித்து இரண்டு மிதியடி போட்டேன் நன்றாக இருந்தது.
@அன்புடன் அருணா, நன்றி.
நன்றி ஆதி.
நிச்சயம் கற்றுத்தருகிறேன்,மேலும் உங்களை சுற்றியுள்ள வட இந்தியர்களுக்கு இந்த மெத்தட் நிச்சயம் தெரிந்திருக்கும்,விசாரித்துப் பாருங்கள்,இவர்கள் உல்லன் நூலால் இதே மெத்தடில் பின்னி, பூஜைப் பொருட்களை தட்டில் வைத்து எடுத்துச்செல்லும் போது மூடி எடுத்துக்கொண்டு போவார்கள்,பார்த்துருப்பீர்கள் என்று நினைக்கிறன்,அந்த உல்லனால் பின்னப்படும் மூடி(கவர்) பல மெத்தடில் இதுவும் ஒன்று ,
//சேலையை நீளவாக்கில் மூன்றாக் கிழித்து தலையில் போடும் பின்னல் போல் ஒரு புத்தகத்தில் படித்து இரண்டு மிதியடி போட்டேன் நன்றாக இருந்தது.//
இது புதுசாக இருக்கே,இதை ஒரு பதிவிடுங்கள்,தெரிந்து கொள்வோம்.
அழகா இருக்கு சூப்பர் ஐடியா1
@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க
@சித்ரா
வாங்கப்பா,முதல் வருகைக்கும்,ஃபாலோயர்சில் இணைந்துள்ளமைக்கும் நன்றி.
Post a Comment