*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 27, 2011

பஹாய் சமயமும் லோட்டஸ் டெம்பிளும்


பல சமயங்கள் பற்றி அறிந்திருப்போம்.அவற்றுள் பஹாய் சமயம் ஒன்று உள்ளதை அனைவருக்கும்  தெரியப்படுத்தவே இந்த பதிவு.
புது தில்லியில் நேரு ப்லேஸ் என்ற இடத்தில் லோட்டஸ் டெம்பிள் என்ற வழிபாட்டு இல்லம்,அனைத்து பிரிவினருக்கான தியான ஸ்தலம் ஒன்று உள்ளது.இதன் வடிவம் தாமரை மலர் போன்றது.இந்த வழிபாட்டு இல்லம் ஒன்பது பெரிய நீர் குளங்களால்


                      சூழப்பட்டுள்ளது,இது வழிபாட்டு இல்லத்திற்கு அழகை உயர்த்துவதோடு பிரார்த்தனை அறைக்கு இயற்கையான குளிர்ச்சியைத்  தருகிறது.அருகே அலுவலகம்,கருத்தரங்கு அறைகள்,நூலகம் மற்றும் ஒலி,ஒளி அறைகள் உள்ளது.ஏற்பாடு செய்கிற நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப பிரார்த்தனை அறையில் பஹாய் சமயம் மற்றும் முன்புவந்த வெளிப்பாடுகளின் புனித  நூல்களிலிருந்து பிரார்த்தனைகள் மற்றும் வாசகங்கள் வாசிக்கப்படும் அல்லது சொல்லப்படும்.மற்ற நேரங்களில் அமைதியான முறையில் தியானம் செய்ய அனைவரும் வரவேற்க படுகிறார்கள்.சொற்பொழிவுகள்,சமயச் சடங்குகள் பிரார்த்தனை அறையில் செய்வதற்கு அனுமதிக்கப் படுவதில்லை.

பஹாய் சமயம் :
பஹாய் சமயம் 1948 ஆம்  ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகத்தில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும்  அதிகாரம் பெற்ற அரசு சார்பற்ற NGO ஸ்தாபனமாக அங்கத்துவம் வகிக்கின்றது.சமூக பொருளாதார சபையிலும்(ECOSOC), ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியகத்திலும்(UNICEF),ஆலோசனை கோரும் அந்தஸ்த்தை பெற்றுள்ளதோடு ஐக்கிய நாடுகள் தகவல் தொடர்பு மையத்தின் அலுவலகத்துடன் பல தேசிய சபைகளின் பதிவுகள் அதிகாரப் பூர்வமாகப் பதியப்பட்டுள்ளன.இந்த சமயம் 360 நாடுகள்,ராஜ்யங்கள்,தீவுகள்,என்பவற்றில் 2112 க்கும் அதிகமான பிரிவுகளைக் கொண்டுள்ளது.
லோட்டஸ் டெம்பிள் :
·         1953 ல் கட்டுமான பணிக்காக நிலம் வாங்கப்பட்டது.
·         26.6 ஏக்கர்
·         34.27 மீட்டர் உயரம்
·         1300 பேர் ஒரே சமயத்தில் அமரலாம்
·         27 (தாமரை) இதழ்கள் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது .
·         9  குளங்கள்
·         70 மீட்டர் விட்டம்
·         திரு பர்பூர்ஷ் சபா என்பவர் கட்டிடத்தை வடிவமைத்துள்ளார்.
·         ஏப்ரல 21,1980 ல் தொடங்கப்பட்டது.
·     டிசம்பர் 24,1986 ஆம் ஆண்டு கடவுள்,மதங்கள்,மற்றும் மனித குலத்தின் ஒற்றுமைக்காக  இந்த வழிபாட்டு இல்லம் துவங்கப்பட்டுள்ளது.
·    இதழ்கள் வெள்ளை சிமென்ட் கலவையால் செய்யப்பட்டு,மேல்பகுதி வெள்ளை நிற கிரேக்க சலவை கற்களால் பதிக்கப்பட்டுள்ளது.
·     இந்தியாவிலும் உலகத்தின் மற்ற பகுதியில் உள்ள பஹாய் சமுதாய மக்கள் தாங்களாக முன்வந்து கொடுத்த நன்கொடையின் மூலம் இந்த வழிபாட்டு இல்லம் கட்டப்பட்டுள்ளது.
·    இந்த லோட்டஸ் டெம்பிள் இந்தியாவின் சுற்றுலாத்    தளமாக      உள்ளது.
·   மேற்கு சமோவா,ஆஸ்திரேலியாஉகாண்டா,பனாமா,ஜெர்மெனி,இலி நியாஸ் போன்ற நாடுகளில் பஹாய் சமயத்திற்கான நினைவு மற்றும் வழிபாட்டு இல்லம் வெவ்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

பஹாய் கொள்கைகள்

·         மனித ஒற்றுமை
·         உண்மையை  சுயேட்சையாக ஆராய்தல்
·         அடிப்படியில் சமயங்களெல்லாம் ஒன்று.
·         சமயமும் விஞ்ஞானமும் ஒத்து இயங்க வேண்டும்
·         ஆண் பெண் சமத்துவம்
·         எல்லாவித துவேசங்களையும் நீக்குதல்
·         சர்வதேச கட்டாயக் கல்வி
·         உலக அமைதி

இங்கு சென்று வந்த அனுபவம்.
தில்லி வந்த புதிதில் ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு இடங்களுக்கு சுற்றிப் பார்க்க சென்றதில் லோட்டஸ் டெம்பிளும் ஒன்று.  உள் நுழைந்த போது அழகான அமைதியான சுத்தமான நீண்ட தோட்டத்தின் தொலைவில் தாமரை வடிவத்தில் கட்டிட அமைப்பு தெரிந்தது.நடந்து போகவே ஆசையாக இருந்தது.கொஞ்சம் தாழ்வான பகுதி வந்தது,எதோ நீண்ட அறை போல இருந்தது,அது காலணிகளை பாதுகாக்கும் இடம்.கட்டணம் இல்லை.மக்கள் கூட்டம் அதிகம் என்றாலும் காலணிகளை வாங்குபவரும் கொடுப்பவரும் காலணிகளை ஒப்படைக்கும் பொது மக்களிடம் கனிவாக நடந்து கொண்டதை அங்குதான் முதன் முதலில் பார்த்தேன்.அது மட்டுமல்ல.பக்கத்திலே சாக்குப் பைகள் கிடந்தது,இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் காலணிகளை ஒப்படைப்பதாக இருந்தால் அந்த சாக்குப் பையில் போட்டு தர வேண்டும்.இந்த முறையை இங்குதான் முதலில் பார்த்தேன்.
சிறிது தூரத்தில் உயரமான பகுதி வந்தது,அதில் தாமரை வடிவ கட்டிடத்திற்குள் ஒரு இதழின் உள் செல்வதற்கான வழி சிவப்பு கம்பள விரிப்புடன் இருந்தது.  சுற்றிலும் (நீச்சல் குளம்) போல வருபவர்களை  வரிசையாக,அமைதியாக வரவேற்க,  வரிசையாக ஆண் பெண்கள் நின்றனர்.அவர்கள் வருபவர்களின் புறத் தோற்றத்தை வைத்து      எந்த  மொழியினர்    என்று  கண்டுபிடித்து         விடுகின்றனர்,          எங்களை     "வணக்கம் வாருங்கள்" என்று வரவேற்த்தது ஆச்சர்யமாக இருந்தது.உள் நுழைந்தோம், அமைதியையும் சுத்தத்தையும் பார்த்து பிரமிப்பாக இருந்தது.தியான நிலையில் சிலர்,வேடிக்கை பார்த்த வண்ணம் சிலர்.வெள்ளை நிற ஆடையில் இருவர் வந்தனர் .சில மொழிகளில் எதோ படிக்கப் பட்டதாக உணர்ந்தோம்.மீண்டும் அமைதி,சற்று நேரத்தில் அங்கிருந்து வெளியில் வர வேறு இதழின் வழியாக வந்தோம்.வரும் வழியில் முக மலர்ச்சியுடன் துண்டு பிரசுரங்களும்,வழிபாட்டு இல்லம் பற்றிய  வரலாற்று பிரசுரங்களும் வழங்கப்பட்டது.பக்கத்தில் அலுவலகம்,சிறிய நூலகம்.இருந்தது.பல இன,மொழி,மாநிலத்தவரும்,வெளிநாட்டினரும் வந்து போவதை பார்க்க முடிந்தது.
அந்த பிரசுரங்கள் அப்போதே படிக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் போட்டாகி விட்டது.சென்ற வாரத்தில் நண்பர் ஒருவர் இங்கு சென்று வந்து அதே பிரசுரங்களை கொடுத்தார்.சரி பதிவாகப் பதிவோமென்று அதைப் பார்த்துதான் பஹாய் சமயம் மற்றும் லோட்டஸ் டெம்பிளின் விபரங்களை தெரிவித்துள்ளேன். இந்த பிரசுரங்கள் பல மொழிகளிலும் வழங்கப்பட்டது.          அதில்   தமிழ் மொழியிலும் இடம் பெற்றுள்ளது,   மேலும்                விபரங்களுக்கு    என  சென்னை        தி.நகரின்   விலாசம்    ஒன்றும்,  தொலைபேசி   எண், மெயில்   ஐடி   கொடுக்கப்பட்டுள்ளது.   அப்படியெனில்     இந்த                             சமயத்தினர் / சமந்தமானவர்கள்         சென்னையிலும்   இருக்கிறார்கள். .படங்கள்      இணைய தளத்திலிருந்து பெற்றுள்ளேன்.

22 comments:

எல் கே said...

எல்லாம் எனக்கு புதுசு தெரிந்துக் கொள்ள வேண்டியது நெறைய இருக்கு

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

இந்த இடத்திற்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். அழகான அமைதியான இடம். இந்த பஹாய் சமயத்திற்கென்று உருவ வழிபாடு கிடையாது என்று நினைக்கிறேன். இங்கு அவரவர் கடவுளை நினைத்து தியானம் செய்யலாம். இரவில் குளங்களில் விளக்குகளிட்டு அழகாக இருக்கும். ஆனால் இரவில் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. சென்ற முறை மார்ச் மாதத்தில் பூக்களுடனும், அடர்ந்து கிடந்த சைனீஸ் ஆரஞ்சு மரங்களுடனும் சூப்பர்!

ஜெய்லானி said...

புதுசா தான் தெரியுது....!! :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

புதுப்புது விஷயங்களைப் புதுமையாகத் தந்துள்ளீர்கள். இதே இடத்தின் வாசல் கேட் வரையில் நான் சென்று வந்தேன். [2006 இல்]. ஆனால் அன்று அவர்கள் ஏனோ யாரையுமே உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் உள்ளே சென்று பார்க்க முடியாமல் போனது.
அந்தக் குறை உங்கள் பதிவைப் படித்ததில், இப்போது நீங்கியது.

Angel said...

நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .நன்றி

ம.தி.சுதா said...

அருமையான படங்களுடன் மிக விளக்கமாக பகிர்ந்துள்ளீர்கள் நன்றி...

இரவில் மிக மிக அருமையாக இருக்குமே...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆச்சி, எனக்கும் பஹாய் டெம்பிள் ரொம்ப பிடிக்கும். அந்தமதம் கூட ரொம்ப சுதந்திரமான ஒன்றாகத் தெரிகிறது இல்லையா? :) எதுக்கும் ஒரு ரூல் கொண்டுவந்துட்டா பின்ன கஷ்டம்தான்..

Unknown said...

புள்ளி விபரங்களுடன் விளக்கியிருக்கிறீர்கள்..
நேரில் கண்ட உணர்வு தருகிறது உங்கள் பதிவு.

GKP Pillay said...

I had been to BAHAAI's temple at the time of Pongal-2003.but i didn't know most of these information provided by u.It's very interesting & useful ....
********GKP Pillay.

Unknown said...

சிற்ப்பான பதிவு.. பாராட்டுக்கள் சகோதரி...

ஆச்சி ஸ்ரீதர் said...

*எல்.கே அவர்களுக்கு நன்றி
நீங்களே இப்படி சொல்லிவிட்டால்,நானெல்லாம் ?


*ரத்னவேல் அவர்களுக்கு நன்றி.மகிழ்கிறேன்.*ஆதி அவர்களுக்கு நன்றி,

ஆம்! இது தியான ஸ்தலம் & எல்லா இன,மொழி ,சமய பிரிவினர்களை ஒன்றிணைக்க உருவான சமயம்.

ஜெய்லானிஅவர்களுக்கு நன்றி. தங்களுக்குமா?சரி,சரி,இனி தில்லி வரும்போது இங்கும் ஒரு விசிட் அடிச்சுடுங்க.

*வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு

இங்கு திங்கள் கிழமை விடுமுறை,தாங்கள் செல்லும்போது அனுமதிக்காததான் காரணம் என்னவோ தெரியல,தங்கள் கருத்தில் மகிழ்கிறேன்.

*ஏஞ்சலின் அவர்களுக்கு நன்றி.

பார்த்து அழகை மட்டும்தான் ரசிக்க முடிந்தது,படித்த விபரங்களைதான் தெரிவித்துள்ளேன்.

*ம.தி.சுதா அவர்களுக்கு நன்றி.ஆமாம் சகோதரரே!
அழகான அமைதியான இடம்.

*முத்துலெட்சுமி அவர்களுக்கு நன்றி.
உங்க ஐடி (எம்பலம்) இந்த லோட்டஸ் டெம்பிள்தானே.
அழகான இடத்தின் படம்.

*பாரத்..பாரதி அவர்களுக்கு
//நேரில் கண்ட உணர்வு தருகிறது //
மிக நன்றி.

*GKP PILLAY:THANKAS FOR UR COMMENT

*கே.ஆர்.பி.செந்தில் நன்றி.
தங்கள் பாராட்டில் மகிழ்கிறேன்

வடுவூர் குமார் said...

இதை கட்டி எல் அண்ட் டி - ECC நிருவனம் இழந்தது சுமார் 1 கோடி ஆனால் அதன் மூலம் பெற்ற பெயர் இன்றுவரை அவர்கள் திறமைக்கு எடுத்துக்காட்டு.
இங்கு வேலை செய்தவர்களுக்கு கிடைத்த அனுபவம் காலாகாலத்துக்கும் இருக்கும்.தரக்கட்டுப்பாடு அப்போது இந்தியாவில் கேள்விப்படாத அளவுக்கு இருந்தது.

raji said...

முற்றிலும் புதுமையான தகவல்கள்.
இவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டு எங்களுக்கு
தெரிவித்தமைக்கு நன்றி.மேலும் இது போல் பல
புதிய தவல்களை எங்களுக்கு வழங்குமாறு வேண்டுகிறேன்

*************

கணிணி பழுது காரணமாக தாமதமான பின்னூட்டம்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்

raji said...

எனது பதிவில் தங்களை " பெயர்க்காரணம் "
தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்துள்ளேன்

படித்து பார்க்கவும்

அழைப்பிற்கிணங்கி பதிவை தொடரவும்

http://suharaji.blogspot.com/2011/03/blog-post_03.html

துளசி கோபால் said...

அழகான கட்டிடம்.

ஒருமுறை கடுங்கோடையில் போய், (சிவப்புக் கம்பளத்தின் மேல் ஓடிவரும் நீர் வெந்நீராக வழிஞ்ச நிலை) பார்க்கும்படியா ஆச்சு:(

ஒரு வேண்டுகோள்.

உங்கள் பதிவு வாசிக்கஎன் வயசான கண்களுக்குக் கஷ்டமா இருக்கு, ஃபாண்ட் கலரை மாற்றினால் நலம்.

RVS said...

இன்று புதியதாய் ஒன்று தெரிந்துகொண்டேன்... நன்றி. ;-)

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றி வடுவூர் குமரன் ,தெரியாத விபரத்தை தெரிவித்தமைக்கு நன்றி .

ராஜி அவர்களுக்கு நன்றி.

தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன்.

உங்க பதிவில் புராணம் (உண்மை)பாடியிருக்கேன் அது போதுமென நினைக்கிறேன்.தனி பதிவுமா போடனும்.பதில் தேவை

வாங்க துளசி கோபால்,வருகையில் மகிழ்கிறேன்.அடுத்த பதிவில் நீங்கள் சொன்னபடி செய்தாகிவிட்டது.நன்றி.

வாங்க சார்,தங்கள் முதல் வருகையில் மகிழ்கிறேன்,நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

முத்துலெட்சுமியின் ப்ரொஃபைல் போட்டோவை பாக்கும்போதெல்லாம் பார்க்கணும்ன்னு நினைச்சுப்பேன்.. ஆயுசு இருந்தா ஒரு நடை வந்து பார்க்கணும். எப்போ கொடுத்துவெச்சிருக்கோ..

புதிய தகவல்களையும் நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள்.

PRSamy said...

பஹாய் சமூகத்தின் வழிபாட்டு இல்லமான "Lotus Templல" பற்றிய தகவல்களுக்கு நன்றி. 1986ல் இ்க்கோவிலின் திறப்பு விழாவிற்கு சென்றவர்களில் நானும் ஒருவன். மறக்க முடியாத அனுபவம். உலகம் முழுவதும் உள்ள பஹாய்களின் "community development" நடவடிக்கைளில் இதுவும் ஒன்று. வருங்காலத்தில் இக்கோவிலைச் சுற்றி அனாதைகள் இல்லம், மருத்துவமனை, முதியாோ் இல்லம் போன்ற பல அமைக்கப்படும்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@PRsamy

வருகைக்கும்,தகவல்களுக்கும் நன்றிகள்