மணி ஏழாயிடுச்சு,இன்னும் மசமசனு நிக்கிறியே,நீ காலேஜுக்கு போறதுக்கு நான் பாடாபட வேண்டியதாருக்கு....
ம்.....எல்லாத்தையும் எடுத்து வச்சுடேன்,ரெடி ஆயிட்டேன்,செப்பல போட்டுட்டு கிளம்ப வேண்டியதுதாம்மா.எருமமாடு மாதிரி உக்காந்திருந்துட்டு பஸ் வர நேரத்துக்கு அங்கயும் இங்கயும் ஓடி,ஓடி கிளம்புறதே வழக்கமாயிட்டு பானு உனக்கு..அய்யோ அம்மா காலையிலே ராகத்த ஆரமிச்சிடாத,சரி போய்ட்டு வர்றேம்மா..
பாத்து போம்மா,பத்ரமா ரோட க்ராஸ் பன்னு....சரிம்மா போயிட்றம்மா..
ஹாய் பானு ஏழரைக்குலாம் வந்துட்ட,
உனக்கு தெரியாதா உஷா, டிரைவர் நாளைக்கு நீ ஏழரைமணிக்கு வந்தா நான் ஏழு நாப்பதுக்குலாம் வந்துடுவேனு சொன்னாரு
ஹி..ஹி.. பானு டிரைவர் எங்க உக்காந்திருக்கார்னு கண்டுபிடிச்சு நீ பேசினியா..
ஆமாம் உஷா நேத்து நீ பாக்கலையா?ஹி,,ஹி...
பானு டிரைவர் உனக்கு கொடுத்த வாக்க காப்பாத்தலடி,மணி ஏழு ஐம்பாதாயிட்டு பாருடி..
இன்னைக்கு டிரைவர் மாத்திருப்பாங்களோ ..
ஹா..ஹா...
டி-18 வந்திடுச்சு,வந்திடுச்சு..அந்த டிரைவர்தானா பாரு பானு,அட போடி முதல்ல பஸ்ல ஏர்றதுக்கு படி எங்கருக்குனு பாரு...
இன்னைக்கும் ஸ்டண்டிங்தானா
பானு கடைசி சீட்டு காலியாருக்குடி.
ஆமா இங்கிருந்து போறதுக்குள்ள யாராவது உக்காந்துருவாங்க உஷா.
அடுத்த ரெண்டு ஸ்டாப்பிங்கிற்கப்புறம் ஃபிரியாகிடும்,அப்ப இடம் கிடைக்கும் பாத்துக்கலாம் விடு.
பானு பின்சீட்டு காலியாருந்தும் இவன்கல்லாம் இப்படி படிக்கட்ல தொங்கிட்டு வர்றான்களே இவன்க திருந்தவேமாட்டான்களா?
நம்மளால செய்ய முடியாததை அவன்க செய்றான்கனு சந்தோசப்படு உஷா,
ஆமாண்டி எனக்கு ரொம்ப பொறாமையா இருக்குபாரு...
மதுகடிலாம் இறங்கு
இந்தாம்மா துப்பட்டாவ பிடி,இதுங்கல்லாம் படிக்க போதுங்களா என்னானே தெரியல
இல்லக்கா தேங்ஸ்க்கா
உஷாவின் மைண்ட் வாய்ஸ்------நாமெல்லாம் மானத்த கூறுபோடதான் இந்த பஸ்ல வர்ற மாதிரி,இவங்கல்லாம் அடுத்தவங்கள காவுந்து பன்னதான் பஸ்ல ஏறுன மாதிரி,இந்தக் கூட்டத்துல நசுங்கி போறதுக்குள்ள....
அரசாங்கமே இந்த நேரத்ல இன்னும் நாலு பஸ்ஸ விடக் கூடாதா?
பானுவின் மைண்ட் வாய்ஸ்....எப்படா காலேஜு வருமோன்னு நிக்கிறோம்,இவன்க பாரு ஹாயா அரட்டை அடிச்சிட்டு வர்றானுங்க,தொங்கிட்டு வர்றானுங்க,பசங்க லைஃபே லைஃப்தான்.
அங்கொருத்தன் நல்லவனா வாய தொரக்காம நிக்கிறானே
அவன் நிஜாமாவே நல்லவனா,அம்மாஞ்சியா,இல்ல நல்லவன் மாதிரி நடிக்கிறானா?அய்யயோய்யா! பாக்றான்
பாக்கதவள் போல திரும்பிக்கொண்டாள் பானு.
என்னம்மா எப்ப டிக்கெட் எடுக்கப்போறிங்க?என்ற கண்டெக்டரிடம் ரெண்டு எ.வி.டி காலேஜ் கொடுங்க என்றாள் உஷா
உஷாவின் மைண்ட் வாய்ஸ்...டிக்கெட் வாங்காமா இந்த நாலு வீல் கொண்ட ரதத்திற்குள் நடக்கும் உலகப்போரை விட்டு தப்பிச்சா போய்டுவோம்.
நான் இப்பொ இறங்கிடுவேன்,நீ உக்காரும்மா
தேங்ஸ்க்கா
பானுவின் மைண்டு வாய்ஸ்---இந்த அக்கா ரொம்ப நல்லவங்க
உஷா நீ உக்காந்துக்கிறியா,பரவாயில்ல பானு நீ உக்காந்துக்கோ
விசில் சத்தம் ,பிரேக்,இந்த நிருத்தத்தில் மக்கள் ஏறி இறங்க, பஸ் புறப்பட்டது.
கிடைத்த சீட்டில் உக்காந்திருந்த பானுவிடம் ஒரு கல்லூரி மாணவன் ஒரு புக்கயும்,டிஃபன் பாக்சையும் வச்சுகுகங்கனு கொடுத்திட்டு நின்னுட்டுருந்தான்.
பானுவின் மைண்ட் வாய்ஸ்---நான் எப்ப உக்காருவேனு பாத்துகிட்டேருந்தான் போலருக்கு.நெட்ட கொக்கு இது ஒரு வெயிட்டாடா,இத உன்னால கயில வச்சுக்க முடியாது.
பானுவின் முக மானிடரை புரிந்து கொண்டவன்,வச்சுக்க முடியலனா கொடுங்க என்றான்
பரவாயில்ல...இறங்கும்போது கொடுகுறேன் என்றாள். (வழிசலுடன்)
பஸ்ஸின் நடுப்பகுதியில் நின்று பிதற்றிக் கொண்டிருக்கும் சில இளைங்கிகளைப் பார்த்து
உஷாவின் மைண்ட் வாய்ஸ்---- இவளுங்கள எல்லோரும் பாக்கனுமா என்னென்ன பேசி அரட்டையடிக்கிறாளுங்க பாரு,இப்படியும் பொண்ணுங்க இருக்கிறாளுங்க,
ப்ராக்கு பாத்துக்கொண்டிருந்த உஷாவை பக்கத்திலிருந்தவர் உரசுவது போல உணர்ந்தாள்.கூட்டத்தில் சகஜம் என்றிருந்தவள் மீண்டும் ஒருமுறை வேணும்னே உரசுரார்னு உணர்ந்து திரும்பிப் பார்த்தவள் தன் அப்பா வயது மதிக்கத் தக்கவராய் இருக்கிறார்,வேணும்னு செய்திருக்கமாட்டார்னு,முடிந்தவரை சற்று தள்ளி நின்றாள் கூட்டத்திற்குள்.
மீண்டும் அதே ஆள் உரச கோபம் தலைக்கு ஏறியது உஷாவிற்கு,என்ன சார் இப்படி பிஹேவ் பன்றிங்கனு கேட்க,என்னமா யார கேக்றனு புரியாதவன் போல கேட்டார் அந்த உரசாளி.
பக்கத்தில் அதே வயது மதிக்கத் தக்க மற்றொருவர் இந்த மாதிரி ஆளுங்ககிட்டலாம் கேக்கக கூடாதும்மா,பளார்னு அரைஞ்சிடனும் என்றார்.அந்த உரசாளி என்னய்யா நீ சப்போர்ட்டா,அவ்ளோ கஷ்டாமாயிருந்தா கார்ல போவேண்டியதுதான என்றார்.அதற்குள் சக பயணிகளின் சமரசம் முடிந்து,கல்லூரி மாணவன்களும் சாரு அந்த பொண்ண ஒரசுனாராண்டா என்று ஒருவன் சொல்ல,சாரு எந்த ஊருனு கேளுடா என்று ஒருவன் குரல் கொடுக்க,சார நம்ள கொஞ்சம் ஒரச சொலுடா என்று ஒருவன் சொல்ல,அந்த உரசாளி கண்டபடி திட்டிவிட்டு அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கிப் போனார். படபடப்பில் உஷா, பானு அருகில் சென்று நின்றுகொண்டாள்
படிக்கிற பசங்கள கூட நம்பிடலாம் இந்த பெரியவங்கள நம்ப முடியாதுடி என்றாள் உஷா.ஏய்,உனக்கு சப்போர்ட் செய்த முதல் ஆளும் அதே வயதுடையவராதானிருக்கும்.எல்லோரையும் ஒரே மாதிரி எடை போடாதடி என்றாள் பானு.
சாலையோரம் தெரிந்த அம்மன் கோவிலைப் பார்த்து பானு மனதுக்குள் கும்பிட்டுக் கொண்டாள்.
கோவில் வாசலில் அதிக கூட்டத்தை இன்று காணோமேனு யோசித்துக் கொண்டிருந்தாள் உஷா.
வந்த ஸ்டாப்பிங்கில் குழந்தையுடன் ஏறிய அன்னையை அழைத்து தான் எழுந்துகொண்டு தன் இடத்தை உக்கார கொடுத்தாள் பானு.
வயசானவங்க,பிள்ள வச்சுருக்கவங்க,கர்ப்பஸ்திரிகளுக்கெல்லாம் நாம இடம் கொடுப்போம்,நமக்கு உக்கார இடம் கொடுக்க யாருக்காவது மனசு வருதானு கேட்டபடி கல்லூரி ஸ்டாப்பிங்கில் இறங்கி பேசிக்கொண்டே போனார்கள் பானுவும்,உஷாவும்.
*முற்று*
11 comments:
Nice write up...
எதார்த்த எழுத்து நடை. நல்லா எழுதி இருக்கீங்க.
அருமையாக, வெகு யதார்த்தமாக, அன்றாட பேருந்து அனுபவங்களை, தொங்கியும் தொங்காமலும், ஏறியும் ஏறாமலும், அமர்ந்தும் அமராமலும், நன்கு உரசியும் உரசாமலும், கசங்கியும் கசங்காமலும் ஒருவழியாக எழுதி முடித்துள்ளீர்கள்.
இதில் தங்களின் தனித்திறமையும், அனுபவங்களும் பளிச்சிடுகின்றன.
இதுபோல ஏதாவது எழுதித்தள்ளிக்கொண்டே இருங்கள்.
வாழ்த்துக்கள். அன்புடன் vgk
மிக மிக சரளமாக ஒரு வேளை பயணத்தில் நடப்பதை எழுதி இருக்கீங்க
@அப்பாவி தங்கமணி
நன்றிங்க
@சித்ரா
நன்றிங்க
@வை.கோபலகிருஷ்ணன் சார் அனுபவம்தான் சார்
நன்றி
பேருந்து பயண அனுபவம் எல்லோர் வாழ்க்கையிலும் தனி அனுபவமாக இருக்குமே.
@எல்.கே
நன்றிங்க
நம்ம மைன்ட் வாய்ஸ் மத்தவங்களுக்கு கேக்க ஆரம்பிச்சிட்டா
அம்மாடியோவ் நினைத்து பார்க்கவே முடியல .
அழகா எழுதி இருக்கீங்க .
நல்ல கதையமைப்பு. பயணத்தின் கசங்கலை உணர முடிந்தது.
@ஏஞ்சலின்
@சாகம்பரி
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
nice wring.
என்னால் பிரகதி மைதானம் பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லை
கூகிள் அக்கா சதி செய்கிறது
@ஏஞ்சலின்
நன்றிங்க.
யாரோ சொன்னது போல என் வலைதளத்திற்கும்,இணையதளத்திற்கும் சூன்யம் வச்சுடாங்க போல.
இந்த பதிவில் சாகம்பரி பின்னூட்டம் தந்திருந்தாங்க.அதையும் காணும்.
too bad.
@இரஜராஜேஸ்வரி
நன்றிங்க
Post a Comment