*வணக்கம் வருகைக்கு நன்றி*

May 20, 2011

வாழ்வியல் கதைகள் 20/5/2011

(1)   ஒரு சாது முப்பது வருடங்களாக இமாலயத்தில் தியானத்தில் இருந்தார்.முப்பது வருடங்களில் தன் ஆன்மாவின் அகங்காரம் முற்றிலும் அழிந்து அமைதியாகிவிட்டதாக,முக்தியடைந்து விட்டதாகத் தோன்றியது.அவரை சந்திக்க வந்த சீடர்களில் ஒருவன் மலை அடிவாரத்தில் திருவிழா நடைபெறுவதால் பங்குபெற அழைத்தான்.
அழைப்பை ஏற்று திருவிழாவிற்கு சென்ற சாதுவின் காலை கூட்ட      நெரிசலில் மனிதன் ஒருவன் மிதித்துவிட்டான்.மிதித்த வேகத்திற்கு அந்த சாதுவிற்கு சுல்லென்று கோபம்,வலி தலைக்கேறியது.சாது தன் நிலை கண்டு வியப்படைந்தார்.முப்பது வருட இமாலய வாழ்நாளில் காண முடியாதது,இன்று ஒரு மனிதன் கால் பட்டதால்  நிதர்சனம் ஆயிற்று.
(2)
சிறப்பாக ஆட்சி செய்துகொண்டிருந்த அரசனுக்கு வெகுநாட்களாக தமது எல்லையில் வாழும் சந்நியாசி ஒருவரை தனது அரண்மனைக்கு அழைத்து விருந்து உபசரிக்க ஆசைப்பட்டார்.சந்நியாசி ஒருவரை தரிசித்து,வணங்கிதாங்கள் இங்கு வெகுநாட்களாக வாழ்கிறீர்கள்,தியானம்,தவம் செய்கிறீர்கள் என்பதை அறிவேன்.தாங்கள் எனது அரண்மனையில்  தங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்என்றார்.அதற்கு சந்நியாசி மறுப்பேதும் இல்லாமல் சரி வா போகலாம்,உன் விருப்பம்படியே தங்குகிறேன் என உடனே சம்மதம் தெரிவித்தார்.

அரசனுக்கு ஆச்சர்யம்.இவர் என்ன சந்நியாசி?கேட்டவுடன் சம்மதித்துவிட்டாரே!இவர் உண்மையான சந்நியாசிதானா என்ற சந்தேகம் எழுந்தது.பற்றற்றவனுக்கு அரண்மனை தேவயில்லையென சந்நியாசி வாதிடவில்லையே என்ற குழப்பத்துடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.
அரண்மனையில் சந்நியாசிக்கு அரசனுக்கு நிகரான மரியாதை,ஆடை ,அலங்காரம்,உணவு ,உபச்சாரம் வழங்கப்பட்டது.சந்நியாசி அனைத்தையும் எற்றுக் கொண்டார்.வயிர் நிரம்ப உண்டார்,அரச ஆடைகள்,அணிகலன்களை அணிந்துகொண்டார்,ஆடம்பர படுக்கையில் உறங்கினார்.பல நாட்கள் சென்றது.அரசனுக்கு சந்தேகம் அதிகரித்தது.இத்தனை நாள் அரண்மனையிலே இருக்கிறாரே,மீண்டும் தனது பழைய நிலைக்கு,இடத்திற்கு செல்ல சந்நியாசிக்கு விருப்பமில்லையா?அரண்மனை வாசியாகிவிட்டாரே?என தன் சந்தேகத்தை சந்நியாசியிடமே கேட்டுவிட முடிவு செய்தான் அரசன்.

சந்நியாசியிடம் சென்றுஐயா எனக்கு ஒரு சந்தேகம்என்றான் அரசன்.என்னை அழைத்த முதல் நாளே உனக்கு சந்தேகம்  வந்துவிட்டது. ஆயினும் கேள்  என்றார் சந்நியாசி.நீங்கள் எப்படிப்பட்ட சந்நியாசி? என்பதே என் சந்தேகம் என்றான் அரசன்.பதில் வேண்டுமாயின் என்னுடன் வா என்று அரசனை அழைத்துச் சென்றார் சந்நியாசி.அரண்மனையிலிருந்து வெகுதூரம் சென்றும் சந்நியாசி பதில் சொல்லவில்லை.ஊர் எல்லை வந்தவுடன் எங்கு அழைத்துச் செல்கிறீகள் என்றான் அரசன்.உன் கேள்விக்கு பதில் சொல்லத்தான்,மேலும் என்னுடன் நட என்று வெகு தூரம் அழைத்துச் சென்றுவிட்டார் சந்நியாசி.பொழுதும் போய்விட்டது.

அரசன் மீண்டும் சந்நியாசியை நிறுத்தி பொழுதே போய்விட்டது,எங்கே போகிறீர்கள்,என் கேள்விக்கு பதிலும் சொல்லவில்லயே என்றான்.இனி நான் திரும்ப போவதில்லை என்பதே என் பதில்,தொடர்ந்து செல்லப் போகிறேன் விரும்பினால் என்னுடன் வா, என்றார் சந்நியாசி.அரசன் அதிர்ச்சியடைந்து,என்னால் வர முடியாது,என் நாடு,மக்கள்,என் குடும்பம்,அரசாட்சி உள்ளது.அனைத்தையும் விட்டு என்னால் எப்படி வர இயலும் என்றார்.
உன் கேள்விக்கு பதில் கண்டுகொள்ள முடிந்தால் உணர்ந்துகொள்,நான் தொடர்ந்து செல்லப் போகிறேன்,எனக்கு என்னுடையது என்று எதுவும் இல்லை,எனக்கு சொந்தமானது எதுவும் இல்லை.இத்தனை நாள் உன் அரண்மனையில் நான் இருந்தேனே தவிர எனக்குள் உன் அரண்மனை  இல்லை என்றார் சந்நியாசி.

சந்நியாசியின் காலில் விழுந்து, என் பிரேமை விலகியது,என் வாழ்நாள் முழுவதும் பச்சாதாபம் ஏற்படும்,எனவே என்னுடன் வந்து அருள்புரியுங்கள் என்றான் அரசன்.மீண்டும் வர தயார்,ஆனால் மீண்டும் உனக்கு சந்தேகம் தோன்றும்.எனக்கு ஒரு பேதமும் இல்லை.உன்னிடம் கருணை கொண்ட அனுதாபம் என்னை நேராகச் செல்லப் பணிக்கிறது என்று பதிலளித்து சந்நியாசி தன் வழியில் சென்றார்.
*********************************************************************************************************************

14 comments:

ஆச்சி ஸ்ரீதர் said...

இந்த வலைதளத்திற்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.அநேகம் ஆகஸ்ட் மாதம் பதிவுகள் தொடரலாம்.

இந்த வருட ஜனவரியில் இந்த வலைதளம் துவங்கினேன். இதுவரை என் பதிவுகளை சகித்து ஆதரித்த அனைவருக்கும் நன்றிகள்.

ஊக்கமும்,அன்புமாக, நிறை,குறைகளை தெரிவித்தும்,பின்னூட்டங்கள்,வாக்குகளுடன் ஆதரவளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ADHI VENKAT said...

நல்ல அறிவுகரைகளை போதிக்கும் வாழ்வியல் கதைகள். பகிர்வுக்கு நன்றி ஆச்சி.

கோடை விடுமுறையை இன்பமாக கழித்து விட்டு வாருங்கள். ஆகஸ்டில் சந்திப்போம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, இரு கதைகளும் வெகு அருமை.

வருத்தம் என்னவென்றால் எங்களுடன் அரண்மனை போன்ற வலைப்பூவினில் இருந்த நீங்கள் கதையில் வரும் சந்நியாசி போல எங்கோ கோடை விடுமுறை என்று கிளம்புகிறீர்களே என்பது தான்.

கதையில் வரும் அரசனைப்போல என்னால் உங்களைப் பின்தொடர்ந்து வரமுடியாமல் உள்ளது. சீக்கரமாக திரும்பி வாருங்கள். நடுவில் எங்களையெல்லாம் மறந்து விடாதீர்கள். வாழ்த்துக்கள்.

இன்ட்லி & தமிழ்மணத்தில் வோட்டுப் போட்டுவிட்டேன்.

அன்புடன் vgk

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்வில் கதைகள் படிப்பவர்ளை கண்டிப்பாக பண்படுத்தும் என நம்புறேன் வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்...
வந்துப்பாருங்கள்..

புதுசு புதுசா சொல்றாங்கயா..

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_20.html

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்...
வந்துப்பாருங்கள்..

புதுசு புதுசா சொல்றாங்கயா..

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_20.html

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பிரபலமாகி மீண்டும் மீண்டும் வலைச்சரத்தில் நீங்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், உங்கள் பயணத்தை மறு பரிசீலனை செய்து விட்டு, தொடர்ந்து பதிவுகள் தரலாமே என்ற வேண்டுகோளை வாசகர்கள் சார்பாக உங்கள் முன் வைக்கிறேன்.

இன்று மீண்டும் அறிமுகமாகியுள்ளதற்கு மீண்டும் வாழ்த்துக்கள், மீண்டும் பாராட்டுக்கள். அன்புடன் vgk

Unknown said...

ரொம்ப நாள் ஆச்சேன்னு இன்னைக்குதான் பிளாக் பக்கம் வந்தேன், முதல் நியூசே உங்க லீவா இருக்கு, சரி சரி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க ஆச்சி

Chitra said...

நல்ல செய்தியுடன் அருமையான பகிர்வு.

Angel said...

happy holidays ,enjoy .
come back soon .take care.{i am in a hurry thats why english)

ஆச்சி ஸ்ரீதர் said...

வருகை தந்து தெரிவித்த கருத்திலும்,அன்பிலும் மகிழ்கிறேன்.
அனைவருக்கும் நன்றிகள்.

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ள கவிதை வீதி செளந்தர் அவர்களுக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு வாழ்வியல் கதைகளும் அருமை. விடுமுறையை நல்லவிதமாய் கழித்து மீண்டும் வலையுலகில் அடியெடுத்து வைக்க வாழ்த்துகள்.

Sadhu said...

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

Angel said...

ஆச்சி .விடுமுறை முடிந்ததும் மூன்று முடிச்சு தொடர் பதிவு எழுத உங்களை அழைக்கிறேன் .நீங்கள் தொடரும்போது நான் விடுமுறையில் இருப்பேன்