*வணக்கம் வருகைக்கு நன்றி*

May 16, 2011

பிரகதி மைதானம் - தில்லி


தலைநகர் தில்லியின் முக்கிய இடங்களில் பிரகதி மைதானமும் ஒன்று.72,000 சதுர பரப்பளவு கொண்டது.வருடம் முழுவதும் உலகலாவிய மற்றும் தேசிய கண்காட்சி நடக்கும் இடம் இந்த பிரகதி மைதானம்.இந்திய ட்ரேட் ப்ரோமசன் ஆர்கனைசேசன்(ITPO) இதனை செயல்படுத்தி வருகிறது.

இந்த மைதானத்தில் 18 முக்கிய ஹால்கள் உள்ளன.கன்ஃபிரன்ஸ் ஹால் வசதி,உணவகம்,தியேட்டர் உள்ளது.கல்வி,புத்தகம்,மருத்துவம்,விவசாயம்,தொழில் துறைகள்,மின்னணுவியல்,வாகனங்கள்,வாகனங்களின் உதிரிப் பாகங்கள்,அனைத்து வித இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள்,டைல்ஸ்,பொம்மைகள்,நகைகள் போன்ற 70 வகையான கண்காட்சிகள் வருடத்தில் நடைபெறுகிறது.மெட்ரோ வசதியும் உண்டு.கண்காட்சி நேரத்தில் சிறப்பு இரயில் வசதிகளும் உண்டு.பாதுகாப்பு படைகளுக்கான கண்காட்சி ஹாலுக்கு வருடம் முழுவதும் பார்வைக்கு அனுமதி உண்டு.. இதில் குறிப்பிடத்தக்கது இண்டர்நேஸ்னல் ட்ரேட் ஃபேர்.இந்த ட்ரேட் ஃபேரில் மட்டுமே அனைத்து மக்களுக்கும் நுழைவு வசதி உண்டு.


இண்டர்நேஸ்னல் ட்ரெட் ஃபேர் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது.2006ஆம் ஆண்டு ட்ரெட் ஃபேர் பார்க்க பிரகதி மைதானத்திற்கு சென்றிருந்தோம் .மக்கள் கூட்டம் அலை மோதியது.ஆனாலும் அனைவரையும் கண்காணித்து,வரிசைப்படுத்தி நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது.நுழைவுச் சீட்டின் விலை அப்போது ஐம்பது ரூபாய்.
மாநிலங்களுக்கு தனித்தனியே ஹால்கள் இருந்தன
.
உள்ளே அந்தந்த மாநிலத்தின் கலாச்சாரம், பாரம்பரியம், இசை,விவசாயம்,கல்வி,தொழில்,உணவு போன்றவைகளின் சிறப்பம்சங்கள் காட்சிக்கு உள்ளது.அந்தந்த மாநிலத்தின்,விளை பொருட்கள்,ஆடைகள் மற்ற சிலவும் விற்பனைக்கும் இருந்தது.அந்தந்த மாநிலங்களின் பாரம்பரிய ஆடைகளை உடுத்திய ஆண்களும் பெண்களும் வரும் மக்களுக்கு விளக்கங்கள் கொடுத்தும்,மற்ற பகுதிகளுக்கு செல்ல வழிகாட்டியாகவும் இருந்தனர்.அங்காங்கே வழிகாட்டும் வரைபடங்களும் இருந்தன.

    ஒவ்வொரு                            மாநிலங்கள்      உள்ள             ஹாலுக்கு செல்லும் போதும், சுற்றிப் பார்த்து விட்டு
வெளிவரும்போது உண்மையிலே
அந்த மாநிலத்திற்கு நேரில் சென்று பார்த்துவிட்டு வருவது போலவே இருந்தது.
கேரளா, ராஜஸ்தான், நாகலாந்து, ஹிமாச்சல் பிரதேஷ்,ஒரிசா போன்ற மாநிலங்களை பார்க்க கண்கள் கோடி வேண்டும் என்பது போல இருந்தது.இந்த மாநிலங்களின் இயற்கை வளங்களும்,கலை நுணுக்கங்களும் அங்கிருந்து வர மனம் வரவேயில்லை.அந்தந்த மாநிலங்களின் நுழைவாயிலில் அந்த மாநிலத்தின் பாரம்பரிய இசையும்,நடனமும் பார்க்க முடிந்தது.கூடவே வெளியேறும் வாசலில் ஒரு நோட்டும் இருந்தது.அதில் நாம் எங்கிருந்து வருகிறோம்,உள்ளே சென்று பார்த்ததில் பிடித்தவைகள் என்ன?,பார்த்ததில் திருப்தி அடைந்தோமா?,என பின்னூட்டம் இடலாம்.

எதோ கண்காட்சி என்று பார்க்கச் சென்றோம்.தனித்தனி மாநிலங்களாக இடம் பெற்றுள்ளதை அறிந்து தமிழ்நாடு எங்கிருக்கிறது என்று ஆவலாக தேடினோம்.தமிழ்நாட்டை கண்டுபிடித்ததில் தமிழ்நாட்டிற்கே செல்வது போன்ற சந்தோசத்தில் சென்றோம்.நுழைவாயிலில் மேள நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார்கள்..மற்ற மாநிலங்களில் மக்கள் கூட்டம் இருந்தது போல தமிழ்நாட்டிற்குள் இல்லை.அரசியல் தலைவர்களின் படங்களும்,சிறு குறிப்புகளும் இருந்தது.மெரினா கடற்கரையின் விர்சுவல் காட்சி இருந்தது.விவசாயம்,நெசவு,மின் உற்பத்தி பற்றி இருந்தாலும் மற்ற மாநிலங்களை விட மிக எளிமையாகாவே இருந்தது. 
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><>       தமிழ்நாடு
மகளிர் குழுக்களால் சுய வேலை வாய்ப்பாக செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு இருந்தன.கோவில்கள்,காட்டன்,பட்டு புடவைகள் முக்கிய பங்கு வகித்தது.தமிழக உணவு கிடைக்கும் இடத்தில்தான் கூட்டம் இருந்தது.

அடுத்ததாக பாண்டிச்சேரி மாநிலமும் இருந்தது.இங்கு தமிழ்நாட்டை விட அதிக கூட்டம் இருந்தது.கைவினைப் பொருட்களும் அதிகம் இருந்தது.
சைனா பசாரும் இருந்தது.பல தொழில் நிறுவனங்கள் பற்றிய விபரங்களும் காட்சிக்கு இருந்தது.அறுவடை இயந்திரங்கள்,எம்ப்ராய்டரி இயந்திரங்கள்,பிஸ்கட் எப்படி தயாரிக்கிறார்கள், இப்படி பல வகைப்பட்ட இயந்திரங்களும் அதற்கான செய்முறை விளக்கங்களும் இருந்தன.தற்பொழுது புதிதாக சந்தைக்கு வந்துள்ள அனைத்து துறையிலும் எலக்ட்ரிகல்,எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பொருட்களும் இடம் பெற்றிருந்தது.
மொத்தத்தில் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால் கூட இத்தனையும் ஒரே இடத்தில் பார்த்திருக்க இயலாது என்ற எண்ணத்துடன் வீடு திரும்பினோம்.
காலை பத்து மணிக்கு உள்ளே சென்றதிலிருந்து இரவு ஏழு மணி வரை சாப்பிட்ட நேரம் தவிர உக்காராமல் சுற்றிப் பார்த்துக் கொண்டே இருந்ததில் மனம் நிறைந்தாலும் பார்க்காமல் விடுபட்ட இடஙகளும் இருந்தது.நேரம் போனதே தெரியவில்லை.கால் வலியும் எடுத்துக் கொண்டது.
                                                                                                                                                                                                                                                                    கடந்த 13 ஆம் தேதி      வெளியிட்ட       இந்த பதிவும்,வந்த    பின்னூட்டங்களும் காணாமல் போனதால் மீண்டும் வெளியிட்டுள்ளேன்.

11 comments:

எல் கே said...

ஹ்ம்ம் பிரகதி மைதானம் கேள்வி பட்டிருக்கிறேன். ரொம்ப பேமஸ் . டெல்லி சுத்தி பார்ப்பதற்கு தனியா வரணும். ஒவ்வொரு முறையும் அலுவலக வேலைக்காக வந்துவிட்டு அடிச்சு பிடிச்சு திரும்பவேண்டியாதா போகுது

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்துப்படங்களும் விளக்கங்களும் அருமையாக உள்ளன. பிரகதி மைதானத்திற்கு நானும் உங்களுடன் சுற்றிப்பார்த்து வந்தது போல திருப்தியாக இருந்தது. கால் வலியை நானும் உணர்கிறேன். பதிவுக்கு நன்றிகள்.
அன்புடன் vgk


இதோ என் வோட்டுக்கள்:
தமிழ்மணம் 1/1 to 2/2

இன்ட்லியில் தற்சமயம் போடமுடியாதபடி உள்ளதே?
பிறகு போட்டு விடுகிறேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@எல்.கே
நன்றி

ம்.தில்லிக்கு வாங்க.நவம்பர் to அக்டோபர் மாதங்கள் சுற்றிப் பார்க்க நல்ல கிளைமேட் உள்ள காலமாக இருக்கும்.

@வை.கோபலகிருஷ்ணன் சார்
நன்றி.
யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக.
(ஓவரா சொல்லிட்டனோ)

Angel said...

இப்ப சரி ஆகிவிட்டது .முதலில் என்னால் கமென்ட் போட முடியல
அதனால் .,இதற்கு முந்தைய பதிவில் பின்னூட்டம் இட்டேன் .
அருமையான பகிர்வுக்கு நன்றி

சாகம்பரி said...

ஒருமுறை பிரகதி மைதானத்து எக்ஸ்போவிற்கு சென்றிருக்கிறேன், as a tourist. புதிய தொழில் நுட்பங்களுக்கான அறிமுக கண்காட்சி. மிகப் பெரிய மைதானம். பிரமிக்க வைத்தது.

ADHI VENKAT said...

இந்த ட்ரேட் ஃபேர்க்கு மூன்று நான்கு முறை சென்றுள்ளேன். ஒரு நாள் முழுவதும் சுற்றினாலும் முடிக்க முடியாது. சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் மகாபலிபுரம் மாடல் வைத்திருந்தனர். கூட்டமே இல்லை.

எப்போதும் ஏதாவது கண்காட்சி நடைபெறும் இடம் இந்த பிரகதி மைதானம்.

Chitra said...

அருமையான படங்களுடன் நல்ல பகிர்வு. நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஏஞ்சலின்

பிரகதி மைதானுக்கு பல முறை ஆர்வமுடன் வருகை தந்து பின்னூட்டமளித்து உற்சாகப்படுத்திய ஏஞ்சலின் அவர்களுக்கு நன்றிகள்.

@சாகம்பரி
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

@ஆதி
நன்றி
ஆமாம்.நாங்க அடுத்த முறை போனபோது தமிழ்நாடு கண்காட்சி ஹாலின் வாசலில் இருந்த நாதஸ்வர மேள வாத்தியத்தை காணும்.நாங்கள் போன அன்று மட்டும் இசை இடம்பெறலையானு தெரியல.

@சித்ரா
மீண்டும் வருகை தந்து பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி.

எல் கே said...

//தில்லிக்கு வாங்க.நவம்பர் to அக்டோபர் மாதங்கள் சுற்றிப் பார்க்க நல்ல கிளைமேட் உள்ள காலமாக இருக்கும். //

எங்க வரத்து ? அதான் ஆபிஸ் ஒன்னு இருக்கே. சொந்த ஊருக்கு கூட போகமுடியாமல் இருக்கேன் :(

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு ஆச்சி! புகைப்படங்களும் அழகு.

ஆச்சி ஸ்ரீதர் said...

@எல்.கே

மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி.விரும்பியது நிறைவேறும்.தில்லிக்கு சுற்றுலா வர வாழ்த்துகள்.

@வெங்கட் நாகராஜ்

வாங்க,நன்றிங்க.