*வணக்கம் வருகைக்கு நன்றி*

May 4, 2011

பூமியை காப்பாற்ற இப்படியும் உதவலாமே

ஃபிளாஷ்பேக்கிற்கு பிறகு தலைப்பிற்கு வருகிறேன்.
2006 ல் நாங்கள் தற்போழுது வசிக்கும் பகுதிக்கு குடித்தனம் வந்தோம்.115  வீடுகள் உள்ளது.பெரிய அப்பார்ட்மண்ட்ஸ்னு சொல்ல முடியாது,இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்புப் பகுதி.A,B,C,D ப்ளாக்குகள் என்று பிரிக்கப்பட்டு அதற்கு தகுந்தாற்போல வீட்டின் வசதி அமைப்புகள் இருக்கும். பேச்சுலர்ஸ்க்கும் தனி ப்ளாக் உள்ளது..என் முதல் பதிவிலே குறிப்பிட்டுருப்பேன்,எங்கள் குடித்தனப் பகுதி ஒரு பாரத விலாஸ் போன்றது.ஏனெனில் இந்தியாவின் பல மாநிலத்தவரும் வசிக்கிறோம்.

இங்கு வந்த போது கீழ்தளத்தில் க்ரவுண்ட் ஃப்ளோரில் குடியேறினோம்.,துப்புறவுத் தொழிலாளி தினமும் வந்து குடியிருப்பு பகுதி பாதைகள் முழுவதும் பெருக்குவார்..பின் புற வாசலிலும் பெருக்குவார்.மரங்களிலிருந்து விழும் சறுகுகள் சேறும் குப்பைகளை அவ்வப்போது தீயிட்டு கொளுத்துவதைப் பார்த்திருக்கின்றேன்.முன் புறமும்,பின் புறமும் வாசல் உள்ளதால், வீட்டைப் பெருக்கி அப்படியே பின் புற வாசல் வழியாக பெருக்கி காம்பவுண்ட் வரை  தள்ளிவிடுவேன்.சில நாட்களில் அந்த பணியாளர் என்னிடம் எதொ சொல்வார்.அப்போது எனக்கு சுத்தமாக ஹிந்தி தெரியாது.,எனவே அவர் என்ன சொல்கிறார்னு சுத்தமாகப் புரியாது.

சில நாட்களில் என்னிடம் கோபமாக எதோ சொல்கிறார் என்று பேசும் தொனியை வைத்து புரிந்து கொண்டேன். ஏன் கோபப்படுகிறார்னு  ஒன்றும் புரியவில்லை.கணவரிடமும் தெரிவிப்பேன்.அந்தப் பணியாளரை சந்தித்து விசாரிக்கிறேன் என்று சொல்லியிருந்தார்.முஜே ஹிந்தி நஹி மாலும் /பத்தா நஹி (ஹிந்தி தெரியாது)என்று சொல்ல கற்றுக் கொடுத்தார் கணவர்.பிறகு ஒருநாள் அப்படி சொன்னதில் அந்த பணியாளர் ஒன்றும் சொல்லாமல் முறைத்துக்கொண்டே போனார்.ஒரு நாள் அந்த துப்புறவுப் பணியாளரே  கணவரிடம் கம்ப்ளைண்ட் செய்திருக்கிறார்.

கம்ப்ளைண்ட் என்னவெனில்
உங்கள் மனைவி பின் புற வாசல் வழியாகவே காம்பவுண்ட் அருகில் குப்பைகளை போடுகிறார்.வீட்டுக் குப்பைகளை முன் புற வாசலில் உள்ள குப்பைத் தொட்டியில்தான் போடனும்.நான் சுற்றுப்புற குப்பைகளை மட்டுமே சுத்தம் செய்வேன்,வீட்டு குப்பைகளை தனியே எடுத்துச் செல்வோம் என்பதுதான்.புதிதாக வந்துள்ளதாலும்,மொழி தெரியாததாலும் மனைவி இப்படி நடந்துகொண்டுள்ளார்,இனி குப்பைத் தொட்டியிலே குப்பைகளை போடச் சொல்கிறேனு சொன்னாராம் கணவர்.

என் நிலையை நினைத்து சிரிப்பதா திட்டுவதா எனத் தெரியாமல் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடனுங்கிற சென்சில்லயானு கேட்டார் கணவர்.எனக்கு குப்பைத் தொட்டி எது,எங்கிருக்குனே தெரியாது என்றேன்.வாசலுக்கு அழைச்சிட்டு போய் சிறிது  தூரத்தில் பாழடைந்த குட்டிச்சுவரை காமித்து இதுதான் குப்பைத் தொட்டி என்றார்.அட ஆமா,இதுதான் குப்பத்தொட்டியா இத்தனை நாளும் என்னவோ இடிஞ்சு கிடக்குனு நினைச்சேன் என்றேன்.புதிதாக வந்திருப்பதால் அதிகம் வெளிப்பகுதிக்கு வரமாட்டேன்,இதில் மற்றவர் குப்பைகள் போடுவதை பார்க்கவும் இல்லை.இனி வீட்டு டஸ்ட் பின்னின் குப்பைகளை இதில் கொட்டிவிடுகிறெனு சொன்னேன்.பிறகு அதன்படியே செய்தேன்.ஆனாலும் அந்த துப்புறவுப் பணியாளர்  பணியில் இருந்தவரை  என்னைக் கண்டாலே முறைத்துக் கொண்டே போவார்.    

ஒரு வருடத்திற்கு பிறகு இதே குடியிருப்பு பகுதிக்குள் வேறு பகுதிக்கு இரண்டாம் தளத்திற்கு வந்துவிட்டோம்.வீடு சிறியதுதான்.இ்ங்கு பின்புறம் பால்கனியாகிப் போனது.ஒவ்வொரு பிளாக்கின் முன்னும் சிறிது தூரத்தில் குப்பைத் தொட்டி(பாழடைந்த குட்டிச்சுவர்)இருந்தது.  சே! குப்பை கொட்ட இத்தன படி இறங்கி தினமும் போகனுமேனு மலைப்பு,மேலும் அப்போது என் மகள் நான்கு மாத குழந்தை,குழந்தையை தனியே விட்டுட்டு போகனுமே 3,4 நிமிடத்திற்குள் வந்திடலாம்  என்றாலும் எனக்கு அலுப்பு.எனவே  குப்பைகளை பாலீதீன் கவரில் போட்டு கட்டி   பால்கனியிலிருந்து காம்பவுண்டுக்கு வெளியெ வேகமாக வீசீ எறிவேன்.காம்பவுண்டின் வெளிப்பகுதி கோரைப்புற்கள்தான் மண்டிக்கிடக்கும்.

சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் நான் பாலீதீன் பைகளை வீசியபோது வேகம் பத்தாமல் காம்பவுண்ட் உள்ளேயே விழுந்துவிட்டது.எனக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. ச்சே,இறங்கிப் போய் எடுக்கனுமே,எடுப்போமா,வேண்டாமா,பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்கனு குழம்பி,சரி போய் எடுத்து மீண்டும் தூக்கிப்போட்டுவிடுவோம்னு குழந்தையை பத்திரப் படுத்திவிட்டு  35 படிகளையும் கடந்து கீழே போய் எடுத்தேன்.அப்போது ஹிந்தி ஓரளவு தெரியும். க்ரவுண்ட் ஃப்ளோர் சகோதரி ஒருவர் பார்த்துவிட்டு இனி இப்படி செய்யாதீர்கள் இதோ அங்கிருக்கும் குப்பைத் தொட்டியிலே போடுங்கள் என்று சொன்னதும்  எனக்கு கஷ்டாமாகிவிட்டது.இனி யாரும் சொல்றளவிற்கு நடந்துக்கக் கூடாதுனு குழந்தை தூங்கும் நேரம் அவசரவசரமாக கிரவுண்ட் ஃப்ளோருக்கு வந்து அந்த குட்டிச்சுவர் குப்பைத் தொட்டியில், சேகரித்த வீட்டு குப்பைகளை போட்டுச் செல்வேன்.
-ஃபிளாஷ்பேக் முடிந்துவிட்டது-
இ்னி தலைப்பிற்கு வருகிறேன்.

சில மாதங்களில் அந்த குட்டிச்சுவர் அழகாக கட்டப்பட்டு,வர்ணம் அடிக்கப்பட்டு ஹிந்தியில் வாசகங்கள் எழுதப்பட்டது.பெண்களுக்கு மீட்டிங்னு சர்குளர் வந்தது.மீட்டிங் ஆர்கனைஸ் செய்வதும் ஒரு பெண்மணிதான்.அந்த மீட்டிங்கிற்கு சென்றால் நிச்சயம் அங்கு சொல்லப்படும் கருத்துக்களை ட்ரான்ஸ்லேட் செய்ய எனக்கு ஒரு ஆள் வேணும்.எனக்குத் தெரிந்த சகோதரிகளிடம் அந்த சந்திப்பில் என்ன சொல்லப்பட்டது என்பதை பிறகு கேட்டுத் தெரிந்துகொள்வோம்னு சந்திப்புக்கு போகவில்லை.

ஆனால் ஒன்னுங்க உலகத்துல நடக்குற பாலிடிக்ஸ்களைவிட எந்த கட்சியும் இல்லாம பெண்களுக்கிடையே பாலிடிக்ஸ் நடப்பதை இங்கு வந்து நல்லாவே புரிந்துகொண்டேன்.உதாரணம் சொல்றேன் கேளுங்க

*இவ பிள்ளகுட்டி வெளிநாட்டில் செட்லாகிட்டாங்க,இவளுக்கு வேற வேல இல்லாம இப்படிலாம் திரியுரா

*ஏய்,நம்ம குரூப் சந்திப்புக்கு போகவேணாம்.

*ஹை கிளாஸ்க்கலாம் இது தேவையில்ல,லோகிளாஸ்தான் முக்கியமா கலந்துக்கனும்.

*நாம போகலைனா நம்ள விசாரிப்பாங்களா இல்லையானு செக் பன்னனும்.நமக்காக வெயிட் பன்றாங்களானு பாக்கனும்.

*பேருக்கு ஆசைப்பட்டால் என்ன வேணும்னாலும் செய்வாங்க.

இப்படி பல வெட்டி நியாயங்கள்.

எப்படியோ சந்திப்பில் கலந்து கொண்டவர்களை விசாரித்து விசியத்தை என்னவென்று தெரிந்து கொண்டதில் எனக்கு மறுபடியும் சங்கடம் துவங்கிவிட்டதுனு புரிந்துகிட்டேன்.அதாவது அந்த சந்திப்பு குலோபல் வாமிங்கிற்காகவாம்.

.


எனவே படத்தில் உள்ள  புதுப்பிக்கப்பட்ட அந்த குப்பைத்தொட்டிதான் சந்திப்பின் நாயகியே!  புதுப்பிக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் பச்சை நிறப் பகுதியில்  வீட்டின் மக்கிப்போகும் குப்பைகளான காய்,பழத் தோல்கள்,அழுகிய காய்,பழங்கள் ,சாதரண காகிதங்கள்,மீதமான உணவுகள் மட்டுமே போட வேண்டும் எனவும்
மக்காத குப்பைகளான பாலிதீன் பைகள்,பிளாஸ்டிக்,கண்ணாடி பொருட்கள்,தலை வாறும் போது வரும் முடிகள்,துணிகள்,நப்கின்கள்,ஆணுறை,மாத்திரை கவர்கள் போன்றவைகளை காபி கலர் பகுதியில் போட வேண்டும் எனவும்
சுற்றுப்புறத்தில் அதிகம்   சிறு பிள்ளை முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்,சிப்ஸ் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு அப்படியே  பாக்கெட் கவர்களை காற்றில் பறக்கவிடுகின்றனர்.இனி அவர்களிடமும் சொல்லுங்கள்,சாக்லேட் கவரை கூட காபி கலர் தொட்டியில் தான் போட வேண்டுமெனவும்,இதைப் பின்பற்ற வீட்டிலே அனைவரும்  மக்கும் மற்றும் மக்காத குப்பைக்காக ரெண்டு டஸ்ட் பின்கள் வைத்துக் கொள்ளுங்கள்,வீட்டிலேயே பிரித்து சேகரித்தால் அந்த கலர் குப்பைத் தொட்டியில்  போடுவதற்கு வசதியாக இருக்கும்.அல்லது ரெண்டாவது டஸ்ட் பின் வைக்க விரும்பாதவர்கள் மக்காத குப்பைகளை பாலீதீன் கவரிலே போட்டு அந்த காபி கலர் பகுதியில் போட்டுவிடுங்கள்,துப்புறவுப் பணியாளர்களால் குப்பைத் தொட்டியிலிருந்து மக்கும்/மக்காத குப்பைகள்  தனித்தனியே எடுக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மண்ணில் புதைக்கப்படும் மக்காத குப்பைகள் மீள் சுழற்சி்க்கு அனுப்பப்படும் அல்லது தீயிடப்படும்   எனபதுதான் அந்த சந்திப்பில் சொல்லப்பட்ட விசியமாம். 

இது எல்லோருக்குமே தலைவலியாக இருந்தது,குப்பைகளை கீழே போட்டாலும்,வீட்டு டஸ்ட் பின்னில் போட்டாலும் டபக்,டபக்னு போடும் கைகள், நாம் போடுவது மக்கும்/மக்காத குப்பைகளானு யோசித்து தனித்தனியே போட பலருக்கும் சோம்பேறித்தனம்.நானும் சரியாகப் பிரித்து போடுவதில்லைதான். சின்ன மளிகைக் கடை ஒன்றும் காம்பவுண்டிற்குள் உண்டு. கடைப்பகுதியில் யாரும் குப்பை போடக் கூடாதென கடை முன்பும் இதே போல கலர் தொட்டிகள்  கட்டப்பட்டு மக்கும்/மக்காத குப்பைகளை தனித்தனியாப் போட உத்தரவிட்டனர்.

அனைவர் வீட்டிற்கும் ஒரு நோட்டீஸ் வந்தது.அதில் கடந்த சந்திப்பில் சொல்லப்பட்டபடி யாரும் மக்கும்/மக்காத குப்பைகளை சரியாகப் பிரித்து போடுவதில்லை.மக்காத குப்பைகளால் பூமிக்கு எப்படிபட்ட தீங்குகள் வரும்,நம்மளவில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வோம் .குளிர் பான பாட்டில்கள்,ஷூஸ்,மற்ற பிளாஸ்டிக் பொருட்கள்,பாட்டில்கள்,வேண்டாத உலோகப் பொருட்களை நீங்களே சேகரித்து பழைய பொருட்கள் வாங்குபவரிடம் போட்டு பாக்கெட் மணியாக வைத்துக்கொள்ளுங்கள் என்றும்,இனி அந்தந்த பிளாக்குகளில் சந்திப்பு நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.அதற்கு பின் நானும் மற்ற பலரும் வீட்டிலே ரெண்டு டஸ்ட் பின் வைத்து தனித்தனியாகப் பிரித்து கீழே உள்ள குப்பைத் தொட்டிகளில் போடத் துவங்கினோம்.
சில நாட்களில் ஒவ்வொரு பிளாக்கிற்கும் பின் புறத்தில் நாற்காலிகள் போட்டு வீட்டில் இருக்கும் பெண்களை அழைத்து அரைமணி நேர சந்திப்பும்,கலந்துரையாடலும் நடந்தது.அதற்கு பின் அனைவரும் மக்கும்,மக்காத குப்பைகளை சரியாகப் பிரித்து போடத் துவங்கினர்.பிள்ளைகளுக்கும் வெளியே குப்பை போட்டால் ஆண்ட்டி  திட்டுவாங்க,டஸ்ட் பின்லதான் போடனும்னு பழக்கம் வந்தது.துப்புறவு பணியாளரின் வாக்கின்படி  மாதம் முழுவதும் எந்த பிளாக்கில் சரியாக மக்கும்,மக்காத குப்பைகள் போடப்பட்டதோ அந்த பிளாக்கின் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ஊக்கப் பரிசாக 15ரூபாய் பொருமான பிளாஸ்டிக் காய் வைக்கும் கூடை கொடுக்கப்பட்டது.       
 சில மாதங்களுக்கு பிறகு தீபாவளிக்கு ஊருக்கு போய்விட்டோம்.தீபாவளி முடிந்து மாமியாரையும் அழைத்துக்கொண்டு வந்தோம்.இங்கு வந்த மறுநாள் காலையில் ஏழு மணி இருக்கும்,ஒருவர் வந்து, மேடம் கீழே நிக்கிறாங்க,எல்லோரையும் அழைக்கிறாங்க,உடனே வாங்கனு அனைத்து இல்லத்தரசிகளையும் அழைத்தார்.ச்சே காலங்காத்தால என்னவாம்னு முனுமுனுத்துகிட்டே கிரவுண்ட் ஃப்ளோருக்கு போனேன்,மற்ற பெண்களும்,பிள்ளைகள பள்ளிக்கும்,கணவரை  டுட்டிக்கும் அனுப்பனுமே,இப்ப என்ன அவசரம்னு முனகிக்கொண்டிருந்தார்,சில பெண்கள் வரவே இல்லை. இன்சார்ஜ்  எடுத்த அந்த பெண்மணி எங்க முக பாவனைகளை புரிந்துகொண்டு எனக்கும்தானே வீடு குடும்பம் இருக்கு,நம்ம நல்லதுக்குதான் கூப்பிடேன்.
சுத்திலும் பாருங்க, எவ்வளவு குப்பைகள் கிடக்கு,இதெல்லாம் நாமளும்,பிள்ளைகளும் போட்ட குப்பைகள்தானே,சோ,ப்லீஸ் எல்லோரும் எவ்வளவு முடியுதோ பொறுக்கி குப்பைத் தொட்டியில் போட்டுட்டு போங்கனு சொல்லிட்டாங்க,இது என்னடா சோதனை நேத்தி மாலைதான நான் ஊரிலிருந்து வந்தேன்,என் குப்பை இதுல ஒன்னுகூட இருக்காது நான் எதுக்கு பொறுக்கிப் போடனும்னு கேக்க மனசு நினைக்குது,வாய் பேசமாட்டிது,சரி வழியில்லாம நானும் சேந்து நாளைந்து பேப்பர்களை பொறுக்கிப் போட்டுட்டு நிமிந்து பாக்குறேன்,மேலே மாடியில் என் மாமியார் பாத்துக்கொண்டிருக்கிறார்.ச்சே அவமானமா போச்சு!.பிறகு வீட்டுக்கு போய் மாமியார்கிட்ட விபரங்களை தெரிவித்தேன்.மாமியாரும் புரிந்துகொண்டார்.
இப்படியாக எங்க குடியிருப்பு பகுதியில் அனைவருமே மக்கும்,மக்காத குப்பைகளை அதற்குண்டான குப்பைத் தொட்டிகளில் போடுகிறோம்.குப்பைத் தொட்டியிலிருந்தும் துப்புறவுப் பணியாளர்கள் தனித்தனியே எடுத்து மக்கும் குப்பைகளை பூமியில் புதைக்கிறார்கள்,மக்காத குப்பைகளை மீள்சுழற்சிக்கும் ,தீயிட்டும் சுத்தப்படுத்துகிறார்களாம்.   
இதுமட்டுமல்ல வருடாவருடம் கிரிஸ்மஸ் தினத்திலிருந்து ஆங்கில வருட பிறப்பு வரை குடியிருப்பு பகுதியில்  பெயிண்டிங்,டான்ஸ்,ரங்கோலி,விளாயாட்டு,கைவினைப் பொருட்கள் செய்வது இப்படியான போட்டிகள் அனைத்து வயதினருக்கும்  நடக்கும்.அதில் வீட்டில் உள்ள தேவையில்லாத பொருட்களை மீள்சுழற்சி போல உபயோகப் பொருளாக செய்ய போட்டியும் வைப்பார்கள்.ஒரு முறை பாலிதீன் பையில் தொப்பி செய்து சில மோத்திகளை ஒட்டி எடுத்துச் சென்றேன்,அங்கு போட்டிக்கு வந்ததிலே என் தொப்பிதான் கேவலமா இருந்தது.எனக்கு ஆறுதல் பரிசாக கோல்டு கிரீம் கிடைத்தது.முதல் ,இரண்டு,மூன்றாம் பரிசு பெற்ற பாலிதீன் தொப்பியில் பழைய வீணாபோன  ஆர்ட்டிஃபிசியல் தோடுகள்,பூக்கள்,வளையல்கள் ஆகியவைகளைக் கொண்டு  அழகாக அலங்காரப்படுத்தியிருந்தார்கள்.
இந்த ஆண்டு பழைய ஆடைகளில் பை(bag)செய்ய சொல்லியிருந்தார்கள்,வீட்டிலிருந்து பை செய்து எடுத்துவந்து போட்டிதளத்தில்  கொடுக்கப்படும் அரைமணி நேரத்தில்  உபயோகித்த பொருள்களைக் கொண்டு பையை அலங்காரப்படுத்த வேண்டும் என்பது போட்டி.ஏழு பெண்கள்தான் கலந்து கொண்டோம்,இந்த முறை உல்லன் நூல் பூக்கள்,மற்ற சிலது கொண்டு அலங்காரப்படுத்தினேன். என் பைதான் இருப்பதிலே அழகாக இருந்தது,ஆனால் இந்த முறையும் ஆறுதல் பரிசுதான்.மனசு ரொம்ப கஷ்டமா போச்சு.
ஆப்கி பேக் பஹுத் சுந்தர் ஹே!லேகின் மஜ்பூத் நஹிஹேனு (உங்க பை ரொம்ப அழகா இருக்கு,ஆனால் ஸ்ட்ராங்காக இல்லை)  சொல்லிடாங்க.ஆனால் போட்டிக்கு வந்த அந்த ஏழு பெண்களிடமும் விருப்பமிருந்தால் பையின் அலங்காரப் பொருட்களை நீக்கிவிட்டோ அல்லது அப்படியோ பைகளை அந்த மளிகைக் கடைக்கு கொடுத்துவிடுங்கள்.யாராவது பை இல்லாமல் பொருள் வாங்க வருபவர்களுக்கு இந்த பைகள் உபயோகப்படும் என்றார்கள். நாங்களும் கொடுத்துவிட்டோம். கடைக்காரரிடமும் இந்தப் பைகளை வாங்கிச் செல்பவர்கள் கட்டாயம் மீண்டும் ஒப்படைக்க சொல்லுங்கள் என்றனர்.மற்றவர்களுக்கு உதவியாக இருக்குமே!தற்போழுது எங்கள் குடியிருப்பு பகுதியல்லாமல் மற்ற பகுதியிலும் காய் கடைகளைத் தவிர மற்ற வியாபர  கடைகளில் பரவலாக பாலிதீன் பைகளின் உபயோகமும்  குறைந்துவருகிறது. 
உபயோகித்த ஆடைகளில் பைகள் செய்வது பற்றி இங்கே குறிப்பிட்டிருந்தேன்.



11 comments:

இராஜராஜேஸ்வரி said...

"பூமியை காப்பாற்ற இப்படியும் உதவலாமேஎன்று நிறைய விழிப்புணர்வு குறிப்புகள் கொடுத்தமைக்குப் பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தப்பதிவு படிக்க சூப்பரா இருக்குதுங்க மேடம். கலக்கிட்டீங்க. நல்ல பயனுள்ள பதிவு தான். நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கீங்க. பல குணாதிசயங்களும், பல மொழிகளும், பல கலாச்சாரங்களும் சேர்ந்துள்ள இடத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டு, சட்டதிட்டப்படி நடந்துகொள்வது மிகப்பெரிய விஷயம் தான். தீபாவளிக்கு ஊருக்குப்போன நீங்கள் உடனே திரும்பி வந்து, யார் போட்ட குப்பைகளையோ கூட்ட நேர்ந்தது நல்ல தமாஷ் தான். வாழ்த்துக்கள்.

அன்புடன் vgk
[இரண்டிலும் VOTE போட்டாச்சு]

Angel said...

மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு ஆச்சி .
மொழி பிரச்சினையில் நானும் ஜெர்மனியில்
ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டபட்டிருகேன் .
பகிர்வுக்கு நன்றி .

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.

அமுதா கிருஷ்ணா said...

குப்பைக்கு ஒரு நீளமான பயனுள்ள பதிவு.கலக்கல்.

எல் கே said...

ஆச்சி சென்னையிலும் இப்படி பிரிச்சிக் கொடுக்கணும்னு சொன்னாங்க. ஆனால் யாரு பண்றாங்க இங்க.. ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாவ் ஆச்சி.. கலக்குறீங்க உங்க ஏரியாக்காரங்க.. தொடர்ந்து செய்வதால் அடுத்த ஜெனரேசன் அதை மனசில் அப்படியே பதிஞ்சுப்பாங்க.. குட்..

ஆச்சி ஸ்ரீதர் said...

@இராஜராஜேஸ்வரி

நன்றிங்க


@வை.கோபலகிருஷ்ணன் சார்

//தீபாவளிக்கு ஊருக்குப்போன நீங்கள் உடனே திரும்பி வந்து, யார் போட்ட குப்பைகளையோ கூட்ட நேர்ந்தது நல்ல தமாஷ் தான்//

குப்பைகளை கூட்டல சார்,அங்குமிங்கும் கிடந்த குப்பைகளை பொறுக்கி போட்டோம்.

தமாஷா இருக்கா?.....ஆஆஆஆஆ.....

@ஏஞ்சலின்

நன்றிங்க.

உங்க பதிவு ஒன்றில் ஒரு மொழியில் பின்னூட்டம் வந்ததிற்கு அதே மொழியில் நீங்கள் கொடுத்த பதில் பின்னூட்டத்தை படித்த போதே நினைச்சேன்,இந்த மொழிக்கு ஹிந்தி பரவாயில்ல போலருக்கேனு....

@வெங்கட் நாகராஜ்
நன்றிங்க

@அமுதா கிருஷ்ணன்
நன்றிங்க

@எல்.கே
நன்றி,செயல்படுத்துவது கஷ்டம்தான்,யாராவது பொறுப்பெடுத்துகிட்டு கெடுபிடிகள் கொடுத்தால்தான் மக்களுக்கு பழக்கம் வரும்.

@முத்துலெஷ்மி
நன்றி.ஆமாம்,சிறுவர்களுக்கு விளைவுகள் புரியாவிட்டாலும் திட்டு விழும் அல்லது தப்பா பேசுவாங்கனு அனிச்சயாக மக்கும்,மக்காத குப்பைகளை அதற்கான டஸ்ட் பின்னில் போடுகிறாகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

இண்ட்லியில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய அனைவருக்கும் நன்றிகள்

ADHI VENKAT said...

உபயோகமான பதிவு ஆச்சி. பல மொழி பேசுபவர்களிடமும் பழகுவது வித்தியாசமாகத் தான் இருக்கும். எனக்கும் உண்டே அந்த அனுபவம். தில்லியிலும் பிளாஸ்டிக்கின் உபயோகம் குறைந்து கொண்டே வருகிறது.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஆதி
நன்றி,ஆமாம் வித்தியாசமான அனுபவம்தான்.
ம்..இப்போ பல இடங்களில் பரவலாக குறைந்து வருகிறது.