*வணக்கம் வருகைக்கு நன்றி*

May 1, 2011

வேண்டும்

நோய்களை குணப்படுத்த மருத்துவங்கள் அதி நவீனமாக முன்னேறி வருகிறது.சமமாக புதுப்புது நோய்களும் வருகிறது.போகும் உயிரை நிறுத்தி வைக்க முடியாவிட்டாலும் விபரம் தெரிந்தவர்களும், காசு படைத்தவர்களும் தக்க நேரத்தில்,தகுந்த மருத்துவரை அனுகி நலம் பெறுகிறார்கள்.

தலைவலி,காய்ச்சலென்று வந்துவிட்டால் பாமரனும் மெடிக்கல் கடைக்குச் சென்று கால்பால்,பரசிடமல்,சரிடான் போன்ற மாத்திரைகளை தாமே வாங்கி சாப்பிட்டுவிட்டு குணமடைவதுண்டு.குணமடையாமல் போவதும் உண்டு.

மேலை நாடுகள் சிலவற்றில் எந்த ஒரு மெடிக்கலிலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை பிரிஸ்கிரிப்சன்,மருவரின் கையொப்பம் இருந்தால் மட்டுமே மருந்துகள் வழங்கபடுகிறதாம். 

நம் நாட்டில் பாட்டி வைத்தியத்திற்கும்,பிற வைத்தியஙளுக்கும் நோய் கட்டுப்படாதபோது,ஒரு மருத்துவர் அவசியப்படும் போது மட்டுமே மருத்துவமனையயும்,மருத்துவரையும்  நாடுகிறோம்.

மருத்துவர் எழுதுவது அவர்களுக்கும் மெடிக்கல்காரருக்கும் மட்டுமே புரிந்த ஒன்று.படித்தவனுக்குதான் இந்த குழப்பம்.படிக்கத் தெரியாதவனுக்கு ? 

மருத்துவர் தரும் குறிப்பு சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் மெடிக்கலில் மருந்து வாங்குவதே சிறந்தது.பிற மருந்துக் கடைகளில் அதே மருந்து மாத்திரை பேரில் பிற கம்பெனி தயாரிப்புகள் இருக்கலாம்.அது சிலருக்கு மேலும் பின்விளைவுகளைத் தரலாம்.

நோய்கள் மட்டுமே கூலித் தொழிலாளி முதல் கோடீஸ்வரன் வரை   பாரபட்சம் பாக்காமல் வருகிறது.முதுகு வலி,தலை வலி என்றால் காரணத்தை ஆராய்ந்து மருத்துவம் பாக்க, எம்.ஆர்.ஐ ஸ்கேன்  வரை எடுக்க மருத்துவனும் தயார்,வசதி படைத்தவனும் தயார்.ஆனால் பாமரனின் நிலை?  

தற்பொழுது அனைவரிடமும் தன் உடலை தம்மால் இயன்றவரை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு இருக்கிறது.வியாதி என்று மருத்துவமனை சென்றுவிட்டால் நம் உயிரை அந்த மருத்துவரிடம் ஒப்படைக்க செல்வதாகத்தானே அர்த்தம்.

எனவே நல்ல மருத்துவர்களிடம் சென்று நல்லபடியாக குணமடைய வேண்டும்.

போலி மருத்துவர்களும்,அலட்சியமான மருத்துவங்களும் ஒழிய வேண்டும்.  

மருந்துகள் வாங்கும் போது பெயர்களை படிக்க, உச்சரிக்கத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை கடைக்காரரிடம் நம் சீட்டில் எழுதப்பட்டுள்ள மருந்துகள்தானா என்று ஒருமுறை ஊர்ஜிதப்படுத்திக்க வேண்டும்.

மருந்து எப்போழுது தயாரிக்கப்பட்டுள்ளது,எடுத்துக் கொள்ளும் அளவு,எக்ஸ்பெயரி  காலம் இவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவக் காப்பீடு பற்றி பாமரனுக்கும் விபரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.மருத்துவக் காப்பீடு எடுக்கவும் உபயோகிக்கவும் கடைநிலை குடிமகனுக்கும் வசதி,வழி வகை வேண்டும்.

பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் எடுக்கிறோமோ இல்லையோ மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும். 

10 comments:

சிவகுமாரன் said...

கண்டிப்பாய் மருத்துவக் காப்பீடு மிக அவசியம். நம் இந்தியாவில் மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. செலவு மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் குறைவானது கூட.
பகிர்வுக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

அனைவரையும் சென்று சேரவேண்டிய சிறப்பான பகிவு. பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

தேவையான ஒரு பகிர்வு. வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மருத்துவக்காப்பீடு போன்றே பாதுகாப்பு தரும் அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

ஊரான் said...

”வியாதி என்று மருத்துவமனை சென்றுவிட்டால் நம் உயிரை அந்த மருத்துவரிடம் ஒப்படைக்க செல்வதாகத்தானே அர்த்தம்.”

மருத்துவம் வணிகமயமாகிவிட்ட பிறகு நமது உயிர் மருத்துவர்களுக்கு ஒரு அட்சய பாத்திரம்.

சிறந்த பதிவு. வாழ்த்துகள்!

"மனித உயிர் உலோகத்தைவிட மலிவானதா?"
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_27.html

இந்தப் பதிவை நீங்கள் படித்துவிட்டு கருத்துக் கூறிவிட்டீர்கள். பிற வாசகர்களும் அவசியம் படிக்க வேண்டும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்று வலைச்சரத்தில் [அதுவும் அப்பாவி & நாரதர் மூலம்] அறிமுகம் ஆகியுள்ள அன்பு சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
vgk

ஆச்சி ஸ்ரீதர் said...

வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்.

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அப்பாவி தங்கமணி அவர்களுக்கும்

வாழ்த்து தெரிவித்த கோபாலகிருஷ்ணன் சாருக்கும்

நன்றிகள்

Unknown said...

விழிப்புணர்வைத் தூண்டும் பதிவு.
இப்போது தான் உங்களது வலைப் பக்கத்தை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அனைத்துப் பதிவுகளும் நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

நல்லதோர் பதிவு. வலைச்சரத்தில் அறிமுகமானதற்கு வாழ்த்துக்கள்.

பால கணேஷ் said...

அவசியமான பகிர்வு. பல சந்தர்ப்பங்களில் நம்மவர்கள் மருந்துக்கடைகளில் டேப்ளட் வாங்கி சுய வைத்தியம் செய்து கொண்டு, வியாதி பெரிதானால்தான் மருத்துவரிடம் செல்வார்கள். இதைத் தவிர்த்தல் நலம். மற்றொன்று- மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை மெடிகல் ஷாப்பில் வாங்கினால் அது சரியான மருந்துதானா என்பதை மருத்துவரிடம் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல் நலம். (நான் இப்படித்தான் செய்வேன்) மெடிக்கல் ஷாப்பில் இருப்பவர்கள் பலர் மருந்துகள் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் என்பது கசப்பான நிஜம்! அனைவரின் மீதும் அக்கறை கொண்டு எழுதிய உங்களுக்கு நன்றியும், நல்வாழ்த்துகளும்!