*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 15, 2011

விடலைப் பருவத்தினிலே - பகுதி 6


தாயும் மகளும் மறுநாள் காலை புறப்பட்டனர், அம்மாவின் நடவடிக்கையால்ஆர்த்திக்கு சந்தோஷ் மாமாவை பாக்கப் போகிறோமென்ற சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.ஆர்த்திக்கு மனதில் பல சந்தேகங்கள்,கேள்விகள் தோன்றினாலும் அம்மா நேத்திக்கடனை செலுத்திவிட்டு  நாளையே புறப்பட்டுவிடுவோம்னுதான் கூட்டிட்டுப் போறாங்க ,எனவே நாளைக்குள் சந்தோஷ் மாமாவிடம் எப்படியாவது மனமார பேசிடனும்,ஸ்வாதி சொன்னது போல சந்தோஷ் மாமா மனதில் நான் இருக்கிறேனா என்பதை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டுமென்ற உறுதியுடன்,நிச்சயமா சந்தோஷ் மாமாவும் தன்னை  விரும்பிக் கொண்டிதானிருப்பார் என்ற நம்பிக்கையுடன் பயணித்தாள் ஆர்த்தி.
பயணம் முடிந்து பேருந்தை விட்டு இறங்கி இருவரும் சந்தோஷ் வீடு நோக்கி நடந்தனர்.தேடினால் தேடியது கிடைக்கும் என்பது போல ஆர்த்தியின் கண்களுக்கு தன்னைச் சுற்றி இருப்பது எதுவும்  தெரியவில்லை, சந்தோஷ் தன் வீட்டு வாசலில் யாரோ ஒரு பெரியவருடன் பேசிக்கொண்டிருந்ததுதான் ஆர்த்தியின் கண்களுக்குத் தெரிந்தது.தூரத்திலிருந்து பார்த்த ஆர்த்தி, நறுமணம் மிகுந்த தோட்டத்தில் சிறகு விரித்து பறந்து செல்ல இயலாத பட்டாம்பூச்சியாய் பூரித்த முகத்துடன் அம்மாவிற்கு தன்னிலை தெரிந்துவிடக் கூடாதென்று பவ்யமாய் நடந்து சென்றாள் ஆர்த்தி.சந்தோஷ் வீட்டின்  அருகே இருவரும் சென்றதும்,சற்றும் எதிர்பார்க்காத சந்தோஷ் ஆச்சரியத்துடன் வந்தவர்களை  வாய் நிறைய ” வாங்கத்த,வா ஆர்த்தி “ என்றதும் ஆர்த்திக்கு இதயத் துடிப்பு நின்றே போனது.

சந்தோஷின் அழைப்பிற்கு புன்னகையுடன் தலையசைத்த ஆர்த்தியின் அம்மா, சிலையாய் நிற்க முயலுகிற தன் மகளின் தோல்பட்டையை அசைத்து  போமா என்று வீட்டினுள் அழைத்துச் சென்றாள் ஆர்த்தியின் அம்மா.உள்ளே சென்றதும் வரவேற்த்த அத்தை,மாமா முன் தன்னை சாதரணமானவளாகக் கஷ்டப்ட்டுக் காட்டிக்கொண்டாள் ஆர்த்தி.அவள் கண்கள் சந்தோஷ் மாமாவை பார்த்தும் பார்க்காதது போல அவன் இருக்கும் இடத்தையே வட்டமிட்டுக் கொண்டிருந்தாலும்,மனமெல்லாம் சந்தோஷ் மாமாவிடம் எப்படி,எங்கு,என்ன பேசுவது,வாய்ப்பு கிடைக்கனுமேனு படபடத்துக் கொண்டிருந்தது.மனதுக்குள் வேண்டாத சாமிகளையெல்லாம் வேண்டிக் கொண்டாள்,எந்த மாரியம்மனுக்கு நேத்திகடன் செலுத்துவதற்காக வந்திருக்கிறாளோ அந்த மாரியம்மனிடமும் சந்தோஷ் மாமாகிட்ட பேசி,எல்லாம் நல்லபடியா நடந்து சந்தோஷ் மாமாவின் மனைவியாகிட்டா தினமும் உன்னை தரிச்சு வழிபடுவேன்னு மனதிற்குள் வேண்டிக்கொண்டாள்.  
கடுதாசி போட்டுருந்தீனா பஸ்ஸ்டாண்டுக்கு வந்து அழச்சுட்டு வந்திருப்பேனே,வந்ததில் சந்தோசம்,திடீர்னு வந்திருக்க,எதாவது முக்கியமான விசியமா நாங்க தெரிஞ்சுக்கலாமா ? என்று ஆர்த்தியின் அம்மாவிடம் விசாரித்தார்,சந்தோஷின் அப்பா.ஒண்ணுமில்லண்ண போனதட இங்க வந்திருந்த போது பக்கத்துல உள்ள மாரியம்மன் கோவிலில் ஆர்த்திக்கு இன்ஜினியரிங் படிக்க சீட் கிடைக்கனும்,கிடைச்சிட்டால் மனங்குளிர அபிஷேக ஆராதனை செய்கிறேனு வேண்டிக்கிட்டேண்ண,இன்ஜினியரிங் சீட் கிடைத்து  இப்ப ஆர்த்தியும் ரெண்டாவது  வருஷமும் படிக்கப்போறா,நாளைக்கு வெள்ளிக்கிழமையே அபிஷேகத்த செய்துட்டு நாளை மதியமே கிளம்பிடலாம்னு இருக்கோம்  என்றாள் ஆர்த்தியின் அம்மா.அப்படினா இன்னைக்கு சாய்ங்காலமே கோவிலுக்கு போய் அய்யர்கிட்ட சொன்னாதான் ஏற்பாடு செய்வார்,என்னென்ன வேணும்னு சொல்வார்,நாம சாய்ங்காலம் போய் சொல்லிட்டு வந்திடுவோம் என்றாள் சந்தோஷின் அம்மா.கடவுளே 24மணி நேரம் கூட நமக்கில்லயேனு 
தவித்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.

கலந்துரையாடல்கள் ,உணவு முடிந்து.நான் எதிர் வீட்டு சாந்திய பாத்துட்டு வர்றேனு ஆர்த்தியின் அம்மா கிளம்பினாள்.சந்தோஷ் தன்னை  பொருட்டாக மதிப்பது போல  ஆர்த்தி உணரவில்லை என்றாலும் மீனுக்காக் காத்திருக்கும் கொக்கு போல சந்தோஷிடம் மனம்விட்டு பேச
காத்துக் கொண்டிருந்தாள்.சந்தோஷ் அலமாறியில் எதோ தேடிக் கொண்டிருந்தான்,தைரியத்தை வரவழைத்து அருகே சென்ற ஆர்த்திக்கு  சந்தோஷை மாமானு கூப்பிட்டு பேச்சை ஆரம்பிக்க ஆசை. சந்தோஷ் தன்னை பார்த்தவுடன்   ஆர்த்திக்கு  குரலே இல்லாமல் போய்விட்டது.உடனே   அங்கிருந்து போகிற சந்தோஷை நில்லுங்க மாமானு கூட  அவளால் சொல்ல இயலவில்லை.சந்தோஷை நேரில் பாக்கும் பாக்கியம் கிடைத்தாலும் இந்த ரண வேதனைக்கு நம்ம ஊர்லையே இருந்திருக்கலாம் போலருக்கேனு நொந்துகொண்டிருந்தாள் ஆர்த்தி.சாந்தி அக்கா வீட்டுக்கு போன அம்மாவும் திரும்பி வந்துவிட்டாள்.பிறகு சந்தோஷ் எங்கிருக்கிறானு ஆர்த்தியால் கண்டுபிடிக்க முடியவில்லை.பெரியோர்களுக்குள் அந்த கதை,இந்த கதையெல்லாம்  நடைபெற்றது.பொழுது போகப்போகுது வாங்க அய்யர்ட்ட போய் விபரம் சொல்லிட்டு வந்திடலாம்னு கூப்பிட்ட சந்தோஷ் அம்மாவுடன் புறப்பட்டாள் ஆர்த்தியின் அம்மா.

இதைவிட்டால் வேற சந்தர்ப்பம் அமையாது,எப்படியாவது சந்தோஷ் மாமவிடம் பேசிட வேண்டும்னு சந்தோஷைத் தேடினாள் ஆர்த்தி. சந்தோஷின் அப்பா எதோ எழுதிக் கொண்டிருந்தார்,ஆர்த்தி அங்குமிங்கும் உலாவது கண்டு,என்னம்மா அம்மாவ பாக்குறியா,அவங்க வர பதினஞ்சு நிமிசமாவது ஆகும்,எதாவது புக்கு படிக்கிறியா,உள்ள அலமாறியில புக்ஸ்லாம் இருக்கு,இல்ல டீவீ பாறேன் என்றார்.பரவாயில்லனு ஆர்த்தி சொல்லி முடிப்பதற்குள்  யாரோ ஒருவர் வந்து சந்தோஷ் அப்பாவிடம் பேசத்தொடங்கினார்.சில விநாடியில் ஆர்த்தி வீட்லயே இரும்மா,நான் இவர் வீடு வர போய்ட்டு வந்துடுறேன்,கொஞ்சம் வேலயிருக்கு,சந்தோஷ் சாந்தி வீட்டுக்குதான் போயிருக்கான்,வந்துடுவான்,அம்மா,அத்தயும் இப்ப வந்திடுவாங்க,சரி நான் போயிட்டு வந்திடுறேம்மானு கிளம்பினார் சந்தோஷின் அப்பா.

சாந்தி அக்கா வீட்டுக்கு போய்டுவோமானு நினைத்தாள் ஆர்த்தி.அதற்குள் சந்தோஷ் வீட்டிற்குள் நுழைந்து தோட்டப்பக்கம் சென்றான்,வழி தவறிய  
ஆட்டுக் குட்டி தன் தாயைப் பார்த்ததும் பின்னடியே செல்வது போல ஆர்த்தியும் சந்தோஷ் பின்னே சென்றாள்.ஆர்த்தி வந்து நிற்பது தெரிந்தும் நிமிர்ந்து பாக்காமல் கை கால்களை கழுவிக் கொண்டிருந்தான் சந்தோஷ்.முக்கி முனகி,கஷ்டப்பட்டு ஏன் என்னை அலட்சியப்படுத்றீங்கனு ஆரமித்தாள் ஆர்த்தி,நிமிர்ந்து பார்த்த சந்தோஷ் புன்னகைத்தது, பேருக்கு புன்னகைக்கப்பட்டதாகத் தெரிந்தது, நாளைக்கு நான் ஊருக்கு போய்டுவேன் மறுபடியும் உங்கள எப்ப பாப்பேனு தெரியலனு ஒரு பக்க முகத்தை சுவற்றில் சாய்த்து கண் கலங்கத் துவங்கினாள் ஆர்த்தி.

உம் மனசுல என்ன நினப்புல இருக்க ஆர்த்தி என்றான் சந்தோஷ்.மாமானு உரிமையா கூப்பிட்டு பேசவோ,நான் உங்கள விரும்புறேன் மாமானு சொல்லவோ ஆர்த்திக்கு வாய் வரவில்லை.அழுகை கலந்த அமைதி காத்தவள் என்னை ஏமாத்திடாதிங்க,பதில் சொல்லுங்க என்றாள்.முதல்ல அழுகுறத நிறுத்து,நான் என்ன ஏமாத்தப் போறேன்,உங்கிட்ட பண விசியம்மா எதாவது ஏமாத்தினேனா,இல்ல எதாவது ஆசகாட்டி ஏமத்திட்டேனா என்றான்,நீங்க இப்படிலாம் பேசுறத என்னால தாங்க முடியல,உங்க மனசுல நான் இருக்கேனா இல்லயா? பதில் சொல்லுங்க என கண்ணீர் மல்க கேட்டாள்.நீ தப்பான நினைப்போட இருக்கேனு புரியுது ஆர்த்தி,உன்ன விரும்புறேனு உன்கிட்ட எப்பயாவது சொல்லியிருக்கேனா?நீ என்னய நினச்சிட்டுருனு எப்பாவது சொல்லியிருக்கேனா என சந்தோஷ் கேட்டதும் ஆர்த்தி வெடித்து சிதறாததுதான் பாக்கி,அப்படியே மண்ணில் புதைந்து போக முடியாமல் துன்பத்தில் உழன்றாள் ஆர்த்தி.தனது இரு கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டு குரலையும் வந்த கண்ணீரையும் அடக்கி அழுதாள்.அதற்கு மேல் சந்தோஷிடம் தன் காதலை பேரம் பேச அவளுக்கு மனம் வரவில்லை.

நான் இப்போ சாந்தி அக்கா வீட்ல உன்ன பத்திதான் பேசிட்டு வறேன் என்றான் சந்தோஷ்.விமோட்சம் கிடைத்தது போல கைகளால் மூடிய முகத்தை   விளக்கி சந்தோஷை பார்த்தாள் ஆர்த்தி.இதோ பார் ஆர்த்தி,நீ நினைப்பது போல நான் உன்ன நினைக்கல,உன் படிப்பு வேற, என் படிப்பு வேற.என் படிப்பு சம்மந்தமா படிச்ச பொண்ணுதான் அம்மாவும் தேடிட்டுருக்காங்க.என் அப்பா அம்மாவுக்கு இதுவர எந்த சந்தோசமும் நான் கொடுக்கலனு நினைக்கிறேன்,அவங்க பாத்து ஏற்பாடு செய்ற பொண்ணயே கல்யாணம் செய்தாவது பெத்தவங்கள சந்தோசப்படுத்துறேனே என்று சந்தோஷ் சொன்னதைக் கேட்டு தூக்கி வீசி எறிந்த கண்ணாடியாய் நொறுங்கிப் போனாள்.

நாம சொந்தம்தானே அந்த பொண்ணு நானா இருக்கக் கூடாதா?என கெஞ்சாத குறையாக மன்றாடினாள் ஆர்த்தி.என்ன பெத்தவங்களுக்கோ உன்ன பெத்தவங்களுக்கோ இந்த எண்ணமில்ல என சந்தோஷ் சொன்னதும்,இல்ல எங்க அம்மா என்னப்பத்தி எதோ கண்டுபிடிச்சிடாங்கனு நினைக்கிறேன்,அவங்க முயற்சி இல்லனா,இப்போ நான் இங்க உங்க முன்னாடி நின்னேருந்திருக்க முடியாதுனு வெதும்பினாள்.

நான் போனதட வந்தபோது நீங்க பிகேவ் பன்னது நடிப்பா?இல்ல இப்ப நீங்க பிகேவ் பன்றது நடிப்பா என்றாள் ஆர்த்தி.நான் எப்போதும் ஒரே மாதிரிதானிருக்கேன்,உனக்குதான் புத்தி பேதலிச்சிட்டு,அழுகையை நிறுத்து,போ  முகத்தை கழுவு,நல்லா படி,படிக்கிற வேலய பாரு என்றான் சந்தோஷ்.நான் நம்ப மாட்டேன்.நீங்க ஏமாத்றீங்க.நான் போனதட இங்கு வந்துட்டு ஊருக்கு போனபோது கூட என்னய பாக்கதான பஸ்ஸ்டாண்டுக்கு வந்தீங்க,பஸ் ஏறியபோது ஜன்னல் பக்கமா பாத்தபோது போய்ட்டுவானு  தலையசச்சீங்களே,ஸ்மைல் செய்தீங்களேனு கண்ணீரீல் அடுக்கினாள்      ஆர்த்தி.நினைவுப்படுத்திப் பார்த்தவனாய் ஆமாம் அப்போ என் ஃப்ரண்டும் நானும் பஸ்ஸ்டாண்டில் பேசிட்டுருந்தோம்,அப்ப உங்கள பாத்தேன்,உள்ள போயும் நீ என்ன பாத்ததால் அதற்கு ரஸ்பாண்ட் பன்னேன் அவ்ளவுதான்,அதுக்கு நீ என்ன பேரு வச்சுகிட்டனு சந்தோஷ் கேட்டதும் இத்தனை நாள் தான் சுமந்த காதல் கொச்சைப்படுத்தப்படுவதாக உணர்ந்த ஆர்த்தி பட்ட துன்பத்திற்கு அளவேயில்லை.இப்போ உன்னோட பேச்சைப் பாக்கும்போது நீ  என்னய காதலிக்கிறனு சொல்ற,பதிலுக்கு நான் உன்னய காதலிக்கனும்னு எதிர்பாக்குற அப்படிதானே என்றான் சந்தோஷ்.இதே வார்த்தயை காதல் உணர்வுடன் சொல்லியிருந்தால் ஆர்த்தியின் ஆனந்தமே வேறு.ஆனால் அதற்குமேல் காதல் பிச்சை எடுக்க விரும்பாத ஆர்த்தி,ஓடிப்போய் சாமிபடத்துக்கு முன் கவிழ்ந்து அழத் தொடங்கினாள்.பின் வந்த சந்தோஷ்,முகத்தை கழுவு,அப்பா,அம்மா வந்து கேட்டால் என்ன பதில் சொல்றது உன் நினைப்பை மாத்திக்கோ,எனக்காக விதிக்கப்பட்டவள் நீயில்லை.என் வாழ்க்கைத் துணைவியாக  உன்னை நினைத்துப் பார்த்ததில்லை,நீயா எதொ கற்பனை செய்து கொண்டதற்கு
நான் பொறுப்பில்லை என தான் விரும்பியவனே சொன்னதும்  விரக்தியின் உச்சத்துக்கே சென்ற ஆர்த்தியின் உணர்வு முழுதும் செத்தேபோனது,மரத்துப் போனவளின் கண்ணீரும் நின்று விட்டது. 






சிறிது நேரத்தில் அய்யரை சந்திக்க சென்றஆர்த்தியின் அம்மாவும் சந்தோஷின் அம்மாவும் வீடு வந்தனர்.சந்தோஷின் அப்பாவும் வந்தாகிவிட்டது.இறந்து போயும் உயிரோடுள்ள ஆர்த்தி தன்னை சகஜமாக வெளிக்காட்டும் நடிப்பை ஏற்றாள்.
10.30 லிருந்து 12.00மணிக்குள் இராவுகாலம் என்பதால் நாளை காலை ஆறரை மணிக்கெல்லாம் அபிஷேக ஆராதணைக்கு வரச்சொன்னதாகவும்,தேவையான பொருட்களுக்கு பணம் கொடுத்தாச்சு,காலையில கோவிலுக்கு கிளம்பனும்,அப்படியே ஊருக்கு கிளம்புறோம் என்றாள் ஆர்த்தியின் அம்மா.வீட்டுக்கு வந்துட்டு தான் போகனும்னு சந்தோஷின் அப்பா கட்டளையிட்டார்.சரினு சம்மதம் தெரிவித்து உறங்கச் சென்ற ஆர்த்தியின் அம்மா தன்னிலை மறந்து அமர்ந்திருந்த ஆர்த்தியைக் கண்டு படும்மா காலயில கிளம்பனும் என்றாள். படுத்த ஆர்த்தி மறந்து கூட கண் அயரவில்லை.
மறுநாள் நேத்திக்கடன் நிறைவேற்றப்பட்டது,அம்மனைப் பார்த்து ம்..ஹு..ம் …னு உதடு அசையாமல் புன்னகைத்தாள் ஆர்த்தி.கோவிலில் இருந்து சந்தோஷ் வீட்டுக்கு சென்று பைகளை எடுத்துக்கொண்டு ஊர் புறப்படும்போது இனி எப்ப சந்திப்போம்னு தெரியாது,இன்னும் மூனு வருஷ படிப்பு முடிந்தவுடன் ஆர்த்திக்கும் மாப்ள தேடனும்னு ஆர்த்தியின் அம்மா சொல்ல,பக்கத்தூர்ல ரெங்கராஜ் தன் மகனுக்கு ஆர்த்திய தருவாங்களானு என்னிடம் கேட்டார்.ஆர்த்தி பெரிய படிப்பு படிக்கிறா,இன்னும் மூனு வருஷமிருக்கு,டவுனுகார மாப்ளையா பாப்பாங்களோ என்னவோ தெரியலனு சொல்லிவச்சேன் என்றாள் சந்தோஷின் அம்மா.உயிருள்ள பிணமான.ஆர்த்திகு இதைக் கேட்டதில் எந்த ஆச்ச்சர்யமும் இல்லை.அண்ணியின் மனநிலையை தெரிந்து கொண்ட ஆர்த்தியின் அம்மா நல்ல குடும்பமும்,ஆர்த்திய நல்லா பாத்துக்கிற குணமும் உள்ள மாப்பிள மூனு வருஷத்துக்குப் பிறகு கிடைத்தால் போதும் கிராமம்,டவுனுனு வித்தியாசம் வேண்டாம்னு சொல்லி நடைபிண ஆர்த்தியுடன் புறப்பட்டாள் ஆர்த்தியின் அம்மா .சந்தோஷும் நேற்றைய விவாத்திற்கு பின் ஆர்த்தியின் கண்ணில் படவேயில்லை,ஆர்த்தியும் சந்தோஷை தேடவேயில்லை.
பாதி தூர பயணத்தில் மகளிடம் சந்தோஷிடம் பேசினாயா,என்ன முடிவு செய்திருக்கனு அம்மா கேட்டதில்  ஆர்த்தியின் சடலத்திற்கு உயிர் வந்து அ.ம்.மா..னு கதற ஆரம்பித்த ஆர்த்தியை மற்றவர்களுக்குத் தெரியாமல் ஆசுவாசப்படுத்துவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது.
என் மகளைப் பற்றி எனக்குத் தெறியாதா ஆர்த்தி,கடந்த முறை சந்தோஷ் வீட்டுக்கு வந்து ஊர் திரும்ப நீ பஸ்ஸில் ஏறியதிலிருந்து உன்னை கவனிக்கத் தொடங்கினேன், சந்தோஷ் மாமா சந்தோஷ் மாமா னு  நீ எழுதி வைத்திருந்தது உன் தடுமாற்றத்திற்கான காரணத்தை உணர்த்தியது.நல்ல வழியில் வளர்த்தும் படிக்கும் வயதில் நீ திசைமாறுவதைப் பார்த்து இதுதான் விடலைப்பருவமானு பதறிப்போனேன்.படிப்பு முடிந்து சந்தோஷுக்கும் உன் மீது விருப்பமிருந்தால் அப்பாவிடம் ஆலோசித்து மேற்கொண்டு செய்யவேண்டியதை செய்யலாமென்று இருந்தேன் ஆர்த்தி.
சந்தோசுக்கு பொண்ணு பாக்கும் விசயத்தை கேள்விப்பட்டபோது உன்னைவிட நான்தான் ஆர்த்தி அதிகம் வேதனைப்பட்டேன்.சந்தோசிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாத போதே நீ மனதில் நினைத்துள்ளது தவறானதுனு  புரிந்துகொண்டுதான் உண்மையை தெரிந்துகொள்ளனும்னு உனக்கும் சொன்னேன். அதற்கு பின் நீ உனக்குள் படும் அவஸ்தைகளை என்னால் சகிக்க முடியல ஆர்த்தி,என் நேத்திக்கடன் உண்மைதான்,எப்பாவாது செய்யவிருந்த்தை உனக்காக உன்னுடன் உடனே செய்ய முயற்சி செய்தேன்.நீயும் எப்படியாவது சந்தோசை சந்திச்சு உண்மயை புரிந்து கொள்வேனு நம்பினேன்.
அண்ணனிடம் நேராக கேக்க எனக்கும் தயக்கம்தான். சந்தோஷ் வீட்டு எல்லா விசயமும் சாந்திக்கு தெரியும்னுதான் சாந்திய விசாரிக்கப் போனேன்.சின்ன வயசிலிருந்து ஆர்த்திதான் சந்தோசுக்குனு பேசிட்டு இப்ப வேறபக்கம் பொண்ணு தேடுறீங்களேனு சாந்தியும் கேட்டுதாம்.பெரிய படிப்பு படிக்கிறா,டவுன்ல இருக்கா என்னதான் சொந்தமானாலும் எங்க குடும்பத்துக்கு ஒத்துவரமாட்டானு சந்தோசின் அப்பாவும் அம்மாவும் சொல்லியிருக்காங்க.என் அத்த பொண்ணு ஆர்த்தி அவ்வளவுதான்,அதுக்கு மேல எனக்கு எந்த அவிப்பிராயமும் இல்ல,என் அப்பா அம்மா தேர்வு செய்து தரும் பொண்ணுதான் என் துணைவியாகமுடியும்னு சந்தோசும் சொன்னாப்ளயாம்.
உன் நிலைபற்றியும் ,படிப்பு,குறிக்கோள் பற்றியும் சாந்தியிடம் சொன்னேன்.சாந்தியும் சந்தோசிடம் விபரம் சொன்னதற்கு சந்தோஷ் தன் கருத்தில் உறுதியாக இருக்கானு நான் வரும்போது சாந்தி சொல்லியனுப்பினாள்.யாசிச்சு பெற்றாள் அதுக்கு பேர் அன்பில்லை,காதலை வலுக்கட்டாயப்படுத்தி பிறக்க வைக்க முடியாது ஆர்த்தி.ஒருவேளை சந்தோசிடம் நீ மனம் விட்டு பேசலைனா நான் இப்ப சொன்னது உன் மனதை தெளிவுப் படுத்தியிருக்கும்னு நம்புறேனு சொன்ன அம்மா ஆர்த்தியின் கண்களுக்கு தெய்வமாகத் தெரிந்தாள்.
வீடு திரும்பிய ஆர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக தன் வேதனையிலிருந்து விடுபட்டு படிப்பை நல்லபடியாக முடித்து,நல்ல சம்பாத்யம் மிக்க பணியில் அமர்ந்து ,அப்பா அம்மா தேர்வு செய்துகொடுக்கும் மணாளன்   தன் விடலைப் பருவ காயத்தை  ஏற்றுக்கொண்டால் மட்டுமே திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க காத்திருந்தாள்.
ஆர்த்தியின் நல்ல மனதிற்கு ஆர்த்தியின் விடலைப்பருவக் காயம் ஒன்றுமில்லை, பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.எனக்கு இப்ப இருக்குற ஆர்த்தி என் வாழ்க்கை முழுதும் வந்தாலே என் வாழ்க்கை முழுமை பெறும்னு பெருந்தன்மையான  மனம் கொண்ட மணாளனை  மணந்து  இன்று ஆர்த்தி சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.    
 குழந்தை பிறந்ததிலிருந்து தன் பிள்ளைக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்து,சின்னச் சின்ன தியாகங்கள் செய்து வளர்த்து,கண்ணுக்குள் வைத்து உயிராய் பாதுகாத்தாலும். விடலைப் பருவம் வரும்போது அந்த குழந்தை தடுமாறுவதைக் காணும்போதும்,நல்வழிப்படுத்த முயற்சிக்கும்போதும்,அந்த குழந்தையும் பெற்றோரும் மீண்டும் பிறந்து பலவற்றை கற்று   புதிய அனுபவங்களைப் பெற வேண்டியதாக உள்ளது.எந்தப் பருவத்திலும் பெற்றோர்க்குத் தெரியாமல்  என்ன செய்தாலும் ஏமாற்றம் பெற்றோர்க்கு அல்ல,அந்த பிள்ளைக்குத்தான்.
                                                                                                                     சுபம்.

19 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, அருமையான ஒரு கருத்தை அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள்.

//என் மகளைப் பற்றி எனக்குத் தெறியாதா ஆர்த்தி,கடந்த முறை சந்தோஷ் வீட்டுக்கு வந்து ஊர் திரும்ப நீ பஸ்ஸில் ஏறியதிலிருந்து உன்னை கவனிக்கத் தொடங்கினேன், சந்தோஷ் மாமா சந்தோஷ் மாமா னு நீ எழுதி வைத்திருந்தது உன் தடுமாற்றத்திற்கான காரணத்தை உணர்த்தியது.நல்ல வழியில் வளர்த்தும் படிக்கும் வயதில் நீ திசைமாறுவதைப் பார்த்து இதுதான் விடலைப்பருவமானு பதறிப்போனேன்.//

அந்தத் தாயின் உள்ளம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.

கதை “முற்றும்” அல்லது “தொடரும்”
ஏன் போடவில்லை?

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன் vgk

எல் கே said...

இதுக்குதான் சின்ன வயசில் மாமன்/அத்தை மகளை/மகனை உனக்குத்தான் என்று சொல்லி வளர்த்தக்கூடாதுன்னு சொல்லுவாங்க.

முதல் கதை என்று என்று தெரியாதவண்ணம் உங்கள் நடை இருந்தது

எல் கே said...

@வைகோ சார்

சுபம்னு கீழ போட்டு இருக்காங்க

raji said...

//விடலைப் பருவம் வரும்போது அந்த குழந்தை தடுமாறுவதைக் காணும்போதும்,நல்வழிப்படுத்த முயற்சிக்கும்போதும்,அந்த குழந்தையும் பெற்றோரும் மீண்டும் பிறந்து பலவற்றை கற்று புதிய அனுபவங்களைப் பெற வேண்டியதாக உள்ளது.எந்தப் பருவத்திலும் பெற்றோர்க்குத் தெரியாமல் என்ன செய்தாலும் ஏமாற்றம் பெற்றோர்க்கு அல்ல,அந்த பிள்ளைக்குத்தான்.//

அருமையான கருத்து ஆச்சி.கதை தெளிந்த நீரோடை போல்
மிக அழகாக சென்றது.6 பகுதிகளாக சரியாக பிரித்து
நல்ல தொடர் ஒன்றை வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்.இன்னும் இது போல்
பல படைப்புகளை பதிவுகளாகத் தந்து எங்களுடன் பகிர
வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபலகிருஷ்ணன் சார்

நான் பதிவை வெளியிட்ட நடு இரவே படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி.அப்போதே சுபம் என முடித்திருந்தேன்.

கதை சொல்லுவதை விட எழுதுவது எவ்வளவு பெரிய விசயம்னு நல்லாவே புரியுது.பல கதைகளை எளிமையாக படைக்கும் தாங்கள் எனக்கு ஊக்கமளித்து,ஆதரவளித்தமைக்கு நன்றிகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@எல்.கே சார்

பொதுவான தலைப்புகளில் எப்பாவாதுதான் புத்தகம் படித்துருக்கிறேன்.பதிவுலகுக்கு வந்துதான் பலருடைய படைப்புகளையும் படிக்கும் போது நான் தெரிந்துகொள்ள வேண்டியதும்,தற்கால மனிதர்களின் எழுத்தாற்றாலும் வியக்க வைத்தது.

தங்களின் ஆதரவிற்கும்,ஊக்கத்திற்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ராஜி
//இது போல்
பல படைப்புகளை பதிவுகளாகத் தந்து எங்களுடன் பகிர
வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.//

முயற்சி செய்கிறேன்.ஒரு பக்க கதையில் கூட ஒரு நல்ல/பெரிய விசியத்தை அழகாக ஆரம்பித்து முடித்து விடுவீர்கள்.

எனக்கு ஊக்கமும் ஆதரவும் தரும் தங்களைப் போன்ற பதிவர்களின் பதிவுகள்தான் எனக்கு ரோல் மாடலாக எடுத்துக்கொள்கிறேன்.நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நீங்கள் இந்தக்கதையை வெளியிட்ட அடுதத நிமிடமே படிக்க ஆரம்பித்து படித்து முடித்து, நான் பின்னூட்டம் இடும்போது அந்த “சுபம்” என்ற வார்த்தை அங்கு இல்லை.

ஒரு வேளை பிறகு போட்டிருப்பீர்களோ என்னவோ; அல்லது தூக்கக்கலக்கத்தில் இருந்த எனக்கு அது என் கண்களுக்குத் தெரியாமல் போய் இருக்குமோ என்னவோ;

எது எப்படியிருந்தாலும் “சுபம்” ஆகவே முடித்து விட்டீர்கள். என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கதை சொல்லுவது ஈஸி, எழுதுவது கஷ்டம் என்று தாங்கள் சொல்வதும் சரிதான்.

எழுதுவதும் எனக்கு ஈஸி தான் என்று நிரூபித்து விட்டீர்களே!

எதுவுமே ஆரம்பத்தில் கஷ்டம் தான்; பழகப்பழக சுலபமாக வந்துவிடும்.

அடுத்த கதையை சிறியதோ, பெரியதோ உடனே, இன்றே, இப்போதே சிந்திக்கவும், எழுதவும் ஆரம்பித்து விடுங்கள். விரைவில் வெளியிடுங்கள்.

தாங்கள் எழுத்துலகில் வெற்றிபெற என் அன்பான வாழ்த்துக்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபலகிருஷ்ணன் சார்

கடந்த முறை ’தொடரும்’னு போட மறந்ததை நீங்கள் சுட்டிக் காட்டியதால் இறுதிப் பகுதி முடித்த கையோடு சுபம்னு போட்டுவிட்டேன்.

என் மகள் கதை கேட்டால் கூட பாட்டி வடை சுட்ட கதையும்,ஆமை முயல் கதை மட்டும்தான் சொல்லுவேன்.வேற கதை சொல்லுனு கேட்டால் 1,2,3.....100 வரை சொல்ல ஆரம்பிச்சு எப்ப தூங்குறோம்னே தெறியாது.

இப்ப நானும் ஒரு கதை எழுதிட்டேனு நம்ப முடியல.

Unknown said...

எல்லா பகுதிகளையும் படிச்சிட்டு கமெண்ட் போடரேன்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கருத்துடன் கூடிய கதை. முதல் கதையே நல்ல கதையாய் அமைந்துள்ளது. வாழ்த்துகள் ஆச்சி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@சுரேஷ்
ஓகே
நன்றி

@வெங்கட் நாகராஜ்
தொடர்ந்து படித்து ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றிங்க.

Angel said...

.யாசிச்சு பெற்றா அதுக்கு பேர் அன்பில்லை,காதலை வலுக்கட்டாயப்படுத்தி பிறக்க வைக்க முடியாது "
அருமையான கருத்துள்ள கதை .நிறைய பெற்றோருக்கும்,இது ஒரு பாடம் .
காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை அழகா எழுதி இருக்கீங்க
.எப்ப அடுத்த கதை ..ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஏஞ்சலின்

தொடர்ந்து படித்து ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றிங்க.

ADHI VENKAT said...

விடலைப்பருவத்தில் தோன்றிய தடுமாற்றம் தெளிந்து கதை சுபமாய் முடிந்ததில் மகிழ்ச்சி ஆச்சி.

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கதை.. நல்ல எழுத்தோட்டம். தொடர்ந்து எழுதுங்க.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஆதி

கதை படித்து கருத்திட்டமைக்கு நன்றி

@அமைதிச்சாரல்

மிக நன்றி,தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

Porkodi (பொற்கொடி) said...

adade! wonderful! :-)

ஆச்சி ஸ்ரீதர் said...

@பொற்கொடி

வாங்க,வாங்க

மிக நன்றி.