*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 10, 2011

வாக்குப் பதிவு - இப்படியிருந்தால் எப்படி இருக்கும்

வாக்குப் பதிவுக்கு இப்ப என்னவாம்னு என் பதிவிற்குள் வந்தவர்களிடம் சின்ன ஆலோசனை

எதிராளியை எப்படி வேணும்னாலும் பேசி வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்றாங்களே

பிடிச்சவங்களுக்கு ஓட்டு போட்டுத்தானே அரியனையில அமர வைக்க முடியும்.

சற்று மாற்று சிந்தனையாக

அதிக வாக்கு எண்ணிக்கை பெற்றவன் தான் தோல்வியாளன்,குறைவான வாக்கு எண்ணிக்கை பெற்றவன் வெற்றியாளன் என்று ஒரு சட்டம் வந்து விட்டால் என்ன நடக்கும்?


கட்சியாளர்களும்,பிரச்சார வாதிகளும் தங்களுக்குத் தாமே எங்களுக்கு ஓட்டுப் போடாதிங்க,எங்கள ஆதரிச்சு ஓட்டுப் போட்டுடாதீங்க.எதிரணிக்கே உங்கள் பொன்னான ஓட்டைப் போடுங்க,ரேசன் அட்ட வச்சிருக்கவங்களுக்கெல்லாம்   எங்க சொத்தில   கால் பங்கு இலவசம்னு வாக்குறுதி தருவாங்கல்ல..........

தேர்தல் கலத்தில நிக்கிறவங்களெல்லாம் எங்களுக்கு வாக்களிங்கோ கழுத குதிரலாம் செஞ்சோம்,செய்திட்ருகோம்,எங்களை ஆதரிச்சு,நாங்க ஆட்சிக்கு வர ஓட்டு போட்டீங்கனா சிங்கம்,புலிலாம் செய்வோம், ரேசன் அட்ட வச்சிருக்கவங்களுக்கலாம் டையனசர இலவசமா  தருவோம்னு சொல்றது போல கனவு வந்துச்சுங்க.  அனிமல் ப்ளனட் பார்த்ததின் விளைவாக வந்த  கனவோ?

11 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அப்படியே ஏன் யோசனையும் சேர்த்துக்கங்க. அது என்னான்னா?
நல்ல ஓட்டு போட்டா செல்லாது. கள்ள ஓட்டு போட்டா மட்டுமே செல்லும். ஒரு கள்ள ஓட்டு போட்டா ரெண்டு கள்ள ஓட்டு இலவசம். எப்புடி?

வை.கோபாலகிருஷ்ணன் said...

கனவு நல்லா இருக்கு.
பலிக்க வாழ்த்துக்கள்.

Unknown said...

சரிங்க ஆபீசர்...

ஞாஞளஙலாழன் said...

நல்ல மக்களுக்கு நல்ல தலைவன் கிடைப்பான். தலைவன் சரியில்லை என்றால் மக்கள் சரியில்லை என்று தான் அர்த்தம்.

Unknown said...

வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..

இராஜராஜேஸ்வரி said...

Interesting Dream.

வலிப்போக்கன் said...

உங்களுக்கு பிள்ளை தருவோம்னு மத்திய
அமைச்சர் சொல்ராருங்க.-கனவல்ல நிஜமுங்க.

சிவகுமாரன் said...

தேர்தல் ஜுரம் முத்திப் போச்சுங்க . மேடத்த டாக்டர் ராமதாசுக்கிட்டயோ இல்லை டாக்டர் விஜய் கிட்டயோ கூட்டிட்டுப் போங்கப்பா .

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு..

ஆச்சி ஸ்ரீதர் said...

@தமிழ்வாசி
நன்றி

என்ன சகோ நீங்க சின்ன பிள்ளத் தனமா சொல்றீங்க.இவர்கள் சொல்லிட்டு செய்றதும்,சொல்லாமல் செய்றதும் குல தொழிலும் கள்ள ஓட்டு போடுறதும்,போட வைப்பதும்தானே.

@வை.கோபலகிருஷ்ணன் சார்
நன்றி,பலிக்கட்டும்.

@கே.ஆர்.பி செந்தில்

good.

நன்றி

@ஞாஞளஙலாழன்

நன்றி
எதோ நல்லது சொல்றீங்கனு புரியுது.

@பாரத்..பாரதி
வருகைக்கு நன்றி

@வெங்கட் நாகராஜ்
நன்றி

@இராஜராஜேஸ்வரி
நன்றி

@வலிபோக்கன்

நீங்கள் குறிப்பிட்டுள்ளது பலருக்குத் தெரிந்திருக்காது,நல்ல தகவலுக்கு நன்றி.

நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும் என்ற கொள்கையில் ஒன்று அவர் பேசியது.

யாரும் எதிர்ப்பு தெரிவிக்கலையா?
கேட்டு வெட்கித் தலைகுனிந்தேன்.பெண்களை கேவலப்படுத்துவதாகவும் கருதுகிறேன்.

@சிவகுமாரன்

அவங்க ஊசியிலாம் போடுவாங்களா?ஃபீஸ் நீங்கதாம்ப்பா கொடுக்கனும்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வேடந்தாங்கல் - கருண்
நன்றி

ஓகே