*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 12, 2011

விடலைப் பருவத்தினிலே - பகுதி 4

அண்ணன் ஏன் தபால் கூட போடல,ஒரு நாளைக்கு நாம அண்ண வீட்டுக்கு போய் என்ன ஏதுனு விசாரிச்சிட்டு வந்திடுவோங்க என்றாள் ஆர்த்தியின் அம்மா.அடுத்த மாசம் உங்க பெரியப்பா பொண்ணு கல்யாணம் வருதுல,அப்ப மச்சான கலந்துபேசிக்குவோம் என்றார் ஆர்த்தியின் அப்பா.மாமா வீட்டுக்கு நானுந்தானே என்று நூல் விட்டுப் பார்த்தாள் ஆர்த்தி. நீ இப்பொ பெரிய படிப்பு படிக்கிற,அங்க போறது,இங்க போறதுனு இன்னும் சின்னப் பிள்ளையாவே யோசிச்சிட்ருக்காத,இனி  உன் கவனமெல்லாம் படிப்பிலதான் இருக்கனும்,என்றவுடன் அமைதியாக நகர்ந்தாள் ஆர்த்தி.இனி சந்தோஷ் மாமாவ எப்படி,எப்போ பார்ப்பேன்,எப்படி பேசுவேன் மாமா வீட்டுக்கு லெட்டர் போடலாமா,சந்தோஷ் மாமாவத் தவிர வேற யாராவது படிச்சிட்டால் பிரச்சனையாகிடுமே என்ன செய்வதுனு   மனமும்,கண்களும் கலங்கி புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி.அர்த்தியின் நடவடிக்கையில்  சின்ன சின்ன தடுமாற்றங்களை கவனித்த   ஆர்த்தியின் அம்மா மகள் மீது அதிக கவனம் செலுத்தினாள்.


 முன்னலாம் பாடங்களை  ஆர்வமாக கவனிப்ப,என்னுடனும் நிறைய டிஸ்கஸ் செய்வ,இப்போ க்ளாஸ் டெஸ்ட்ல கூட  மார்க் கம்மியா  வாங்கிட்டுருக்கியே , என்னாச்சுனு ஸ்வாதி கேக்கத் தொடங்கினாள்.தன் மனக் குழப்பத்திற்கும்,தடு மாற்றத்திற்கும் காரணம் என்னவென்று ஆர்த்திக்கு நன்றாகத் தெரியுமென்றாலும் ஸ்வாதியிடம் சொல்லத் தயங்கினாள்.படிப்பிலும் முடிந்தவரை கவனம் செலுத்தி வந்தாள்.


.திருமணாத்திற்கு சென்றுவந்த பெற்றோர் சந்தோஷ் மாமா குடும்பத்தைப் பற்றி எதாவது பேசிக்கொள்வார்கள் விபரம் தெரிந்து கொள்ளலாமென ஆர்த்தி ஆவலாக இருந்தாள்.வந்த பெற்றோர் தான் எதிர்பார்த்தபடி எதுவும் பேசிக்கொள்ளாததைக் கண்டு சில நாள் கழித்து ,அம்மா.... அத்த,மாமாலாம் எப்படயிருக்காங்க,என்ன சொன்னாங்க,வேற யாரார கல்யாணத்ல பார்த்தீங்கனு  ஆரம்பித்தால் ஆர்த்தி.ஏன் இத்தனை நாள் கழித்து இப்படி விசாரிக்கிறாளென்ற கேள்வியுடன்,எந்த அத்த மாமாவ கேக்ற என்றாள் ஆர்த்தியின் அம்மா.தைரியமில்லா குரலில் சந்தோஷ் மாமா ,.........என்று ஆரம்பித்து முடிக்கும் முன் ஏம்மா அவங்க பேச்ச எடுக்கிற,நாம ஒன்னு நினைத்தால் கடவுள் ஒன்னு நினைப்பான்,சரி எல்லாம் நல்லதுக்குதான் என்றதில் குழம்பிய ஆர்த்தி, என்னாச்சும்மா என்று மேலும் வினவினாள் .


நீ நல்லா படிக்கனும் ஆர்த்தி,உங்கிட்ட இந்த விசயத்த சொல்லலாமா என்னனு தெரியல,உன் படிப்பு முடிந்த பின்,அண்ணங்கிட்ட பேசி சந்தோசையே நம்ம வீட்டு மருமகப்பிள்ளையா ஆக்கிடலமானு நானும் உன் அப்பாவும் நினைச்சிட்டுருந்தோம். வேல எப்ப கிடைக்குதோ கிடைக்கட்டும்,இந்த வருசம் சந்தோசுக்கு படிப்பு முடிந்த கையோடு எதாவது பொண்ண பாத்து கல்யாணத்த முடிச்சிட்டால் மருமக வந்தால் தனக்கு உதவியா இருக்கும் எதாவது பொண்ணு இருந்தா சொல்லுனு எங்கிட்டயே அண்ணி(சந்தோஷின் அம்மா)சொல்றாங்க,இதுக்கு என்ன அர்த்தம்  நம்மளுடன் சம்பந்தகார சம்பந்தம் வச்சுக்க அண்ணிக்கு விருப்பமில்லனுதான அர்த்தம்,உன்ன மருமகாளாக்கனும்னு நினச்சிருந்தா அவங்க விசாரிச்ச விதமே வேற மாதிரி இருந்திருக்குமே,ஆர்த்திய நம்ம மருமகாளாக்காம போயிட்டோமேனு அண்ணி நினைகிறளவுக்கு நீ படிச்சு முன்னேறனும்.வாழ்க்கையில் பக்குவப்படனும்.என்று போட்டு உடைத்தாள் ஆர்த்தியின் அம்மா.


இதைக் கேட்ட ஆர்த்தி  தலை மேல் பல நூறு இடி விழுந்து,பூமியே தலைகீழ் கவிழ்ந்துவிட்ட உணர்வில் மூச்சு அடங்கிய சடலாமாய் நின்றவளை, ஆர்த்தி...ஆர்த்தி...அங்க புத்தகத்தெல்லாம்  அப்படியே கிடக்கு பாரு,எல்லாத்தையும் எடுத்து வை.தோச சாப்பிடுறியா இல்ல உப்மா செய்யவா என ஆர்த்தியின்    அம்மா,   கேட்டபடி     சென்றதில் மின்னலாய் சுயநினைவிற்கு    வந்தவள்       முட்டிக்         கொண்டு       வந்த          கண்ணீரை
கட்டுப்படுத்த       முடியாமல்,வாய் விட்டு அழ இடம் தெரியாமல் ஓடோடிப் போய் குளியலறையில் நின்று வாயார ,மனமார அழுது தீர்த்தாள்.டைம் ஆகுது இன்னும் என்ன பன்ற என அம்மா கேட்டவுடன்,சிவந்த கண்களுடன் வெளியில் வந்தவளைப் பார்த்து,மனது பொறுக்கவில்லை ஆர்த்தியின் அம்மாவிற்கு.என்னாச்சு ஆர்த்தி என்றதும் ஒன்னுமில்லமா சோப்பு கண்ணுல பட்டுட்டு என்றாள் ஆர்த்தி.நேரம் ஆயிட்டு இனி நீ எப்ப காலேஜ்க்கு கிளம்புவ,வேணும்னா இன்னைக்கு ஒருநாள் லீவு போட்டுடேன்னு சொன்ன மாத்திரத்தில்,சரிம்மா நாளைக்கு காலேஜுக்கு போய்க்கிறேன் என்றாள் ஆர்த்தி.படிப்பிலும்,கல்லூரிக்கு செல்வதிலும் மிகவும் ஆர்வம் கொண்ட மகளின்  இன்றைய முடிவு ஆர்த்தியின் அம்மாவிற்கு வேதனயை அதிகப்படுத்தியது.

இன்னும் ஒரு வாரத்தில் செமஸ்டர் வரப்போகிறது,சொல்லாம கொள்ளாம ஏன் நேத்தி லீவு போட்டுட்ட ஆர்த்தி என்ற ஸ்வாதியிடம்,இன்று மாலை நம்ம பஸ்டாண்டு பக்கத்திலிருக்கும் பார்க்குக்கு போகலாமா என்று ஆர்த்தி கேட்டவுடன்,வாவ் ..ஒரு நாள் லீவுல உன்கிட்ட இப்படியொரு மாற்றமா?எனக்கு ஓகே,ஆமாம் படிப்பு,வீடுனு இருப்ப இப்ப என்ன திடீர் ஞானோதயம்னு ஸ்வாதி கேட்டவுடன்,ஆர்த்தியின் கண்கள் கசிந்ததைக் கண்டு பதறிப்போனாள் ஸ்வாதி.ஆர்த்தியின் கைகளைப் பிடித்து,சரி,சரி நான் எதுவும் கேக்கல கல்லூரி முடிந்ததும் நாம பார்க்கிற்கு போகலாம் என்ற ஸ்வாதி, ஆர்த்தி தன் கைகளை இருக்கமாகப் பிடித்திருந்ததின் வலிமையில் ஆர்த்தியின் எதோ ஒரு பிரச்சனையும் அத்தகைய  வலிமையுடைது என்று உணர்ந்தாள்.


மாலை இருவரும் பார்க்கிற்கு சென்றனர்,என் மனசில இத்தனை நாள் புதைத்து வைத்திருந்ததை உன்கிட்ட சொல்லனும்னு நேத்துதான் முடிவு செய்தேன், என்ற அர்த்தியை இங்கபாரு ஆர்த்தி என்கிட்ட உனக்கு  எந்த தயக்கமும் வேணாம்,நேரா மேட்டருக்கு வா,என்னால் சஸ்பன்ஸ்  தாங்க முடியல என்றாள் ஸ்வாதி.சரி என்று ஆரம்பித்த ஆர்த்தி

காதலை பத்தி என்ன நினைக்கிற, ஸ்வாதி ?என்றாள்  ஆர்த்தி.ஓ காட்!! என்ன கேக்ற ஆர்த்தி?அப்டின்னா நீ காதலில் விழுந்துவிட்டாயா?அல்லது எவனாவது உன்னைய காதலிக்கிறேன்ற பேரில் தொல்லை கொடுக்கிறானா?என்றாள் ஸ்வாதி.இப்ப நீ கேட்ட ரெண்டு கேள்வியும் எனக்கு பொருத்தம்தான்,ஆனா நீ என்ன நினைக்கிறேனு சொல்லு என்றாள் ஆர்த்தி.

காதல் சுகமானதுதான்,என்ன பொறுத்த வரை காதல் ஒரு சைலண்ட் கில்லர்,ஸ்லோ  பாய்சன்,உண்மையா காதலிச்சு கல்யாணம் வரை போய் திருமண வாழ்விலும் வெற்றி பெறுபவங்க மிகக் கம்மி ஆர்த்தி,இன்பமோ துன்பமோ நம்மள பெத்தவங்க பாத்து தேர்வு செய்றவங்களையே காதலிச்சுக்குவோமே, ஏன் முன்னடியே ரிஸ்க் எடுக்கனும்னு  சொன்னபடி தோழியின் மனப்புதையலை  அள்ள ஆர்த்தியை நோக்கினாள் ஸ்வாதி.இந்தளவுக்கெல்லாம் நான் யோசிக்கல ஸ்வாதி என்று ஆரம்பித்த ஆர்த்தி தன் காதல் பற்றியும்,தன் சந்தோஷ் மாமா பற்றியும்,தற்போது சந்தோஷ் மாமாவிற்கு பெண் தேடும் விசியம் கேள்விப்பட்டது வரை  A to Z  சொல்லி முடித்து இதெல்லாம் ஏன், எதற்கு,எப்படினு கேட்டால் ’தெரியல’ என்பதுதான் என் பதில்.

 கல்லூரியின் முதல் தினத்தன்று பஸ்ஸில் கோபுர வாசலிலே பாடலைக் கேட்டுதும் என்னவோ தெரியல, அந்த பாடலின் வரிகளும்,பயணத்தின்  சுகமும் சந்தோஷ் மாமாவை நினைத்து வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.அதற்கு பின் எத்தனையோ சூழல்கள் என்னை இதே நிலையில்,எதோ ஏக்கத்தில் ஆட்டிப்படைத்துள்ளது்.அன்று ஜன்னலோரத்தில் சந்தோஷ் மாமாவைப் பார்த்ததிலிருந்து பஸ்ஸில் ஜன்னலோரம் உக்கார மாட்டேன்,அப்படி ஜன்னலோரத்தில் உக்கார இடம் கிடைத்துவிட்டால் கூட வெளிப்பகுதியில் யாரையும் பாக்கமாட்டேன், நீ கவனிச்சிருக்கியா நம்ம கல்லூரி வளாகத்தின் வெளியே ஸ்டேஸ்னரி திங்ஸ் கிடைத்தாலும்,நான் பஸ்ஸ்டாண்டில் உள்ள ஸ்டேஸ்னரி கடைக்குதான் போவேன்.ஏன்னா பஸ்ஸ்டாண்டு கடை பேரு சந்தோஷ் ஸ்டேஸ்னரி ஸ்டோர்.ஸ்ரீராம ஜெயம் போல  சந்தோஷ் மாமா ,   சந்தோஷ் மாமா னு தான் எழுதுவேன்.எத்தன நோட்ல எழுதி வச்சுருக்கேன் தெரியுமா?அழகா இல்லாதவங்களெல்லாம் தன்னை அழகுப் படுத்திக் கொள்ளும்போது,நீ ஏன் இப்படி வரனு நீ கூட கேட்டிருக்க,என் சந்தோஷ் மாமாவிற்கு மட்டும்தான் நான் அழகாத் தெரியனும்னுதான் எந்த அலங்காரமும் செஞ்சுக்கமாட்டேன்,நான் என்ன செய்தாலும்,பார்த்தாலும் என்றாவது சந்தோஷ் மாமாவிடம் பேச நேரம் கிடைக்கும் போது மறக்காம சொல்லனும்னு ஞாபகம் வச்சுக்குவேன் , என முகம் தேய்ந்து போகுமளவிற்கு வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.

அடப் பைத்தியக்காரி இதெல்லாம் உன் சந்தோஷ் மாமாவிற்குத் தெரியுமா?உன் காதலைப் பாக்கும்போது எனக்கு காதல் மீது காதல் வருகிறது ஆர்த்தி என்றாள் ஸ்வாதி. 
                    
                          
                                                                                                             தொடரும்..........

6 comments:

எல் கே said...

ஹ்ம்ம் திடீர் திருப்பம். காதல் பிரச்சனையால் படிப்பில் கவனம் இல்லை .. தொடருங்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஏன்னா பஸ்ஸ்டாண்டு கடை பேரு சந்தோஷ் ஸ்டேஸ்னரி ஸ்டோர்.ஸ்ரீராம ஜெயம் போல சந்தோஷ் மாமா , சந்தோஷ் மாமா னு தான் எழுதுவேன்.எத்தன நோட்ல எழுதி வச்சுருக்கேன் தெரியுமா?//

ஆஹா! இன்றைக்கு ஸ்ரீராமநவமிக்கு [அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினால் போல]நல்ல உதாரணம் கொடுத்திருக்கீங்க. பாராட்டுக்கள்.

//அடப் பைத்தியக்காரி இதெல்லாம் உன் சந்தோஷ் மாமாவிற்குத் தெரியுமா?//

அதானே, அதுவல்லவா முக்கியம்!
முக்கியமான விஷயம் முக்கியா சம்பந்தப்பட்டவருக்குத் தெரிய வேண்டாமோ; என்ன பொண்ணு இந்த ஆர்த்தி ........


//உன் காதலைப் பாக்கும்போது எனக்கு காதல் மீது காதல் வருகிறது ஆர்த்தி என்றாள் ஸ்வாதி.//

ஸ்வாதி விவரமானவள் போலிருக்கு!

raji said...

ஆர்த்தியின் நிலை மிகவும் பாவமானதுதான்.சந்தோஷோட சேர முடியுமா இல்லையா?

Angel said...

சுவாரஸ்யமா போகுது ,
தொடருங்கள் நானும் வருகிரேன்

வெங்கட் நாகராஜ் said...

அச்சச்சோ - இது ஒரு தலைக்காதலா! காதல்னாலே பிரச்சனைதான் போல இருக்கு!

ஆச்சி ஸ்ரீதர் said...

வருகை தந்து,கதையைப் படித்து கருத்திட்டவர்களுக்கு மிக நன்றி.