*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 6, 2011

விடலைப் பருவத்தினிலே - பகுதி 1

சகஜமாக அனைவரிடமும் பழகும் ஆர்த்தி, பள்ளிக்கோ மற்ற இடங்களுக்கோ செல்லும்போது வழிப்போக்கில் பத்துபேர் சென்றால் அந்த பத்துபேரும் தன் அழகை சில வினாடி ரசித்துவிட்டுதான் போகிறார்கள் என்பது ஆர்த்தியின் கணிப்பு,அது உண்மைதான்,இது ஆர்த்தியை கடந்து செல்லும் மற்ற பெண்களுக்கும் பொருந்தும், ஆனால் ஆர்த்தியை அசால்ட்டாக பார்ப்பவர்கள் இருந்தால் அவர்கள் தன் அப்பா வயதினர் அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருக்கலாம்,அல்லது எதோ சிந்தனையில் ஆர்த்தியை கடந்து செல்பவர்களாக இருக்கலாம், அல்லது தன் அப்பா அம்மாவிற்கு நல்ல பரீட்சயமுள்ளவர்களாக இருக்கலாம் அல்லது இந்த பள்ளிப் பருவத்திலேயே வயதுக்கோளாரில் ஆர்த்தியிடம் லவ் லெட்டர் கொடுத்து ஆர்த்தியின் மனதை கரைக்க முடியாமல் பிரச்சனையாகிப் போனவனாக இருக்கலாம்.ஆர்த்திக்கு தன் அழகில் பெருமை உண்டு,பிதற்றல் கிடையாது,அகம்பாவம் கிடையாது.


அரசாங்கப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஆர்த்தி   வகுப்பின் உயரமான ஐந்து பேரில் ஆர்த்தியும் ஒருத்தி, கோதுமை நிறமுடையவளாய்,பருமனாகவோ,மெலிதாகவோ இல்லாத உடல் வாகு, குடும்பப் பாங்கான முகம் , மிரட்சியான கண்களுடன்,பளிச்சென்று சிரித்து பேசும் இயல்புடையவளான ஆர்த்தி நிமிர்ந்த நடை  நடந்து வருவதைப் பார்த்தால் பார்ப்பவருக்கு உடனே கண் இமைக்கத் தோன்றாது.


ஆர்த்தி;;.....,ஆர்த்தி.... இங்கே வாடா,என்று இதமாக அழைக்கும் அப்பாவின் குரல் கேட்டவுடன் எதோ சிந்தித்துக் கொண்டிருந்த ஆர்த்தி அந்த சிந்தனை கலைந்து என்ன யோசித்தோம் என்பதை மறந்து அன்பு நிறைந்த அப்பாவை நோக்கி இதோ வறேம்ப்பா என்று வேகமாக நடந்து வந்து என்னப்பா என்றாள்,

என்னடா  பொதுத்தேர்வு வரப்போகுதுனு பயந்துடாதடா,அதுவும் சாதரணத் தேர்வுதான்,நீ நல்ல மார்க் வாங்குவனு எனக்கு நம்பிக்கை இருக்கு,உன்னோட ஆசிரியர்களும் உம்மேல நிறைய நம்பிக்கை வச்சுருக்காங்க,நீ எப்போதும் போல படிச்சு  பரீச்சை எழுதனும்.பொதுத்தேர்வுனு பூதாகரமா நினைச்சு மனசுல பயம் வச்சுகாதடா என்றார் ஆர்த்தியின் அப்பா.

சரிப்பா,நான் நல்ல படியா பரீட்சை எழுதுவேன்,இன்ஜினியரிங் கல்லூரியில் ஃபிரி சீட்டிலே படிக்கிறளவுக்கு மார்க் வாஙிறேனா இல்லையானு பாருங்கப்பா என்றாள் ஆர்த்தி,அதுக்காக சொல்லடா  ஆர்த்தி  ,அடுத்து நீ என்ன பாடம் எடுத்து  படிக்கனும்,எது நல்லது,முக்கியமா படிச்சவுடன் வேலை  கிடைக்கனுன்டா அந்த மாதிரி நீ நாலு பேர விசாரிச்சு தெரிஞ்சுகிட்டு உனக்கு என்ன விருப்பமோ அத முடிவு செய்து சொல்லுடா,எனக்கோ உன் அம்மாவுக்கோ உனக்கு தெரிஞ்சளவுக்கு உலகம் தெரியாது,நானும் எனக்குத் தெரிந்தவரை விசாரிக்கிறேன்,உன்னோட வருங்கால வாழ்க்கை நீ எடுக்க போகும் மார்க்கிலும், தேர்வு செய்யப்போகும் பாடப்பிரிவிலும்,படிப்பிலுந்தான்டா இருக்கு் என்றார் ஆர்த்தியின் அப்பா.

அ..ப்.பா..என்று அழுத்து சினுங்கியவள் நான் ஆயிரத்துக்கு மேல மார்க் வாங்கி உங்களைவிட்டு பிரியாம நம்ம மாவட்டத்துல உள்ள இன்ஜினியரிங் காலேஜ்லதாம்ப்பா படிப்பேன்,அங்கும் நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போய் நிறைய சம்பளம் வாங்குவேம்ப்பா,நான் விவசாயி, என் ஒரே பொண்ணு இன்ஜினேயர்னு சொல்லி பெருமை படத்தான் போறீங்க   என்றவளுக்கு  உள்ளுக்குள்ளே நிச்சியம் ஆயிரத்துக்கு மேல மார்க் வாங்கிடுவோம் ஆனால் முதல் மதிப்பெண்தான் வாங்கனும்னு வைராக்கியம் வலுத்தது.

பாசமிகு பெற்றோரைப் பெற்ற ஆர்த்திக்கு  மறுபக்கம் ஒன்றுள்ளது .அது அவளின் பெற்றோருக்கும் தெரியாது.அந்த மறுபக்க ஆர்த்திக்கு வேண்டியது இதுவரை இத்தனை சகஜமாகப் பழகியும் தனெக்கென்று உண்மையான நட்புள்ளம் கொண்ட நட்பு கிடைக்கவில்லை.மற்றொன்று,ஆர்த்தி தன் மாமன் மகனுக்குதான் மனைவியாகப் போகிறாளென்று  உறவினர்களால்  கேளிக்கைக்குள்ளானவள் நாளடைவில்  ஒரு தலைபட்சமாய் மாமா மகன் சந்தோஷை மானசீகமாக விரும்பவும் ஆரம்பித்துவிட்டாள்.பொதுத்தேர்வும் நெருங்கிவிட்டது.



                                                                                                                         தொடரும்....

11 comments:

எல் கே said...

முதல் கதையா ? நடை நன்றாக இயல்பாக உள்ளது. ஒரு வித எதிர்பார்ப்பில் நிறுத்தி உள்ளீர்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, அருமையான ஆரம்பம். முதல் கதையிலேயே தூள் கிளப்பிட்டீங்க!

வாழ்த்துக்கள்.

”விடலைப் பருவத்தினிலே” தலைப்பும் அருமை.

தொடருங்கள். அன்புடன் vgk

ஆச்சி ஸ்ரீதர் said...

@எல்.கே நன்றி

உங்கள் பின்னூட்டம் எனக்கு உற்சாகமளிக்கிறது,(கொஞ்சம் பயமும் உள்ளது)

@வை.கோபலகிருஷ்ணன் சார்,நன்றி

வாழ்த்துகளுக்கு நன்றி,தன்னம்பிக்கையூட்டும் பின்னூட்டம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிரத்யேகமாக மெயில் மூலம் நிறைய தன்னம்பிக்கை டானிக் பாட்டில்கள் அனுப்பியுள்ளேன். பயன் படுத்திக்கொள்ளவும,

உங்கள் எண்ணம், உங்கள் கற்பனை, உங்கள் சொந்த நடை, உங்கள் விரல்கள், உங்கள் பதிவு, ஆர்வமுடன் படித்து உற்சாகப்படுத்த நாங்கள், பின் என்ன கவலை. பின்னி எடுத்து விடுங்கள் வலைப்பூவை.

வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள். அன்புடன் vgk

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபலகிருஷ்ணன் சார்

மிக நன்றி

வெங்கட் நாகராஜ் said...

முதல் கதையா? நல்ல ஆரம்பம். தொடருங்கள்…. தொடர்கிறேன்.

raji said...

வாவ்!கதையா? இன்ட்ரெஸ்ட்டிங். ஆஹா!ஆர்த்திக்கு படிப்புக்கு படிப்பு, காதலுக்கு காதலா?
காதல் வந்தாலே....

சீக்கிரம் தொடருங்க.சஸ்பென்சா இருக்கு

சாந்தி மாரியப்பன் said...

அருமையான ஆரம்பம்.. தலைப்பே எதிர்பார்ப்பை தூண்டுது :-)

ஆச்சி ஸ்ரீதர் said...

வாங்க வெங்கட் நாகராஜ்

வாங்க ராஜி.

வாங்க அமைதிச்சாரல்

வருகைக்கு நன்றி,தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

Angel said...

ஆரம்பமே அசத்தலா இருக்கு .
தொடர்ந்து வருகிறோம்

ADHI VENKAT said...

ஆஹா! கதை ஆரம்பித்து இருக்கிறீர்களா ஆச்சி! வாழ்த்துக்கள். தொடரட்டும்.