*வணக்கம் வருகைக்கு நன்றி*

Dec 28, 2011

விடைபெறுகிறது : 2011,வரவேற்புகள் : 2012

குடும்ப உறுப்பினர்களாய்
நொடிகள்,நிமிடங்கள்,மணித்துளிகள்,
நாட்கள்,வாரங்கள்,மாதங்களை  
சுமந்து வரும்
வருடமே!

எங்களுடன் பயணிப்பதில்
உனக்கு சுகமோ,சுமையோ?
நீ சுகமாவதும்,சுமையாவதும்
பகுத்தறியும் உயிர்களுக்கு
மட்டுமே!

தான் பிறந்த வருடமே
பெற்றவரோ,மற்றவரோ
சொன்னால்தான் அறிந்துகொள்ளும்
மனிதனே!

சோகமாய் வழியனுப்பாவிடினும், 
புத்தாண்டை வரவேற்ப்போர்களை
அவ்வளவு பாரமாகிப் போனேனா?
கேட்கிறது, இந்த வருடம்!

வருடக் கடைசி நொடியில்  
எங்களைவிட்டுச் செல்கிறாயே
என்று நினைத்தாலும் உன் நன்றியை
பாராட்டி விடைபெறும் இந்த வருடம்!

நிதர்சணங்களை உணர்த்தவே
வரவேற்பையும் வழியனுப்புதலையும்
எதிர்பார்க்காமல்,எதற்காகவும் காத்திராமல்
வந்து செல்கின்றது வருடங்கள்!

அன்றாட பிழைப்பிற்கு விழிபிதுங்கும்
மனிதனும் இருக்கிறான்.வருட வரவேற்பு
கொண்டாட்டங்கள் சக உயிர்களை
பாதிக்காமல் இருக்கட்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

13 comments:

பால கணேஷ் said...

சரியாச் சொன்னீங்க மேடம்! மது அருந்துதல் தவறான கண்ணோட்டத்தில பார்க்கப்படாம புது வருடத்தை வரவேற்கும் சம்பிரதாயங்களில் ஒண்ணாவே ஆயிட்ட இந்த காலகட்டத்துல சரியான அட்வைஸ் பண்ணியிருக்கீங்க... உங்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சசிகலா said...

அன்றாட பிழைப்பிற்கு விழிபிதுங்கும்
மனிதனும் இருக்கிறான்.வருட வரவேற்பு
கொண்டாட்டங்கள் சக உயிர்களை
பாதிக்காமல் இருக்கட்டும்.
உண்மைதான் அருமை நன்றி .

ஆச்சி ஸ்ரீதர் said...

@கணேஷ்
வருகைக்கும்,கருத்திற்கும்,வாழ்த்திற்கும் நன்றி சார்.

@சசிகலா
தங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கருத்தினைச் சொல்லும் கவிதை.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....

Angel said...

எங்களுடன் பயணிப்பதில்
உனக்கு சுகமோ,சுமையோ?
நீ சுகமாவதும்,சுமையாவதும்
பகுத்தறியும் உயிர்களுக்கு
மட்டுமே!//

எனக்கு பிடித்த வரிகள்.
..........
//.வருட வரவேற்பு
கொண்டாட்டங்கள் சக உயிர்களை
பாதிக்காமல் இருக்கட்டும்.//

உண்மைதான் ஆச்சி .சிலரின் சந்தோசம் பலருக்கு மீளா துயரமாகிவிடக்கூடாது .


அருமையான கவிதை .உங்களுக்கும் உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

வை.கோபாலகிருஷ்ணன் said...

////அன்றாட பிழைப்பிற்கு விழிபிதுங்கும்
மனிதனும் இருக்கிறான்.வருட வரவேற்பு
கொண்டாட்டங்கள் சக உயிர்களை
பாதிக்காமல் இருக்கட்டும்.//

அருமையாக எழுதியிருக்கிறீர்களே! ;))))

பாராட்டுக்கள், வாழ்த்துகள்,
பகிவுக்கு நன்றிகள்.

தமிழ்மணம்: 3
யூடான்ஸ்: 2
இண்ட்லி: 2

vgk

கீதமஞ்சரி said...

வழியனுப்பும் வருடத்துக்குப் பிரியாவிடையும், வரவிருக்கும் வருடத்துக்கு பிரியவரவேற்பும் நல்கி, கவிதைக்குள்ளே நிதர்சனம் சொல்லி, நியாயத்தையும், நிதானத்தையும் அழகாய் எடுத்துரைத்துள்ளீர்கள். பாராட்டுகள்.

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்
@ஏஞ்சலின்
@வை.கோபாலகிருஷ்ணன் சார்
@கீதா
@ரெத்னவேல் சார்
தங்களின் அன்பான வருகைக்கும் நல்லதொரு கருத்திற்கும் மிக்க நன்றிகள்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துகள்.

kaialavuman said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Unknown said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம், கவிதையிலும் கருத்து சொல்ல முயன்றதுக்கு வாழ்த்துக்கள்..!

ஆச்சி ஸ்ரீதர் said...

@வேங்கட ஸ்ரீனிவாசன்
@இரவு வானம்

வருகை தந்து கருத்தும் வாழ்த்தும் தெரிவித்தமைக்கு வாழ்த்துகள்.தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிதான புத்தாண்டு வாழ்த்துகள்.

ADHI VENKAT said...

புத்தாண்டு வாழ்த்துகள்.
நல்லதொரு கவிதை.