*வணக்கம் வருகைக்கு நன்றி*

Dec 14, 2011

இந்த திறமை எங்கிருந்து உதித்திருக்கும்

நூறு  சதவீத  நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை.தன்னை  மற்றவர்  மனதில்  நல்லவிதமாக  பதிய  வைக்க, நட்புடன் ,மதிப்புடன்  வாழ  பல்வேறு வழிகள் இருந்தாலும் அவரவர் குணநலன்களும் முக்கிய காரணிகளில்   ஒன்றாகும்.குணநலன்கள் மரபணுக்களிலும்,வளர்ப்பிலும் துளிர்த்தாலும்,  அமையும் சமுதாய சூழ்நிலையிலும், சந்தர்ப்பங்களிலும், வாழ்நாள் முழுதும் குணநலன்கள் என்பது ஆலமர விழுதுகள் போல ஒரு மனிதனுக்கு பல்வேறு வடிவங்களுடன் துளிர்த்து அந்த மனிதனை தாங்கிப்பிடிப்பது போலான  காட்சியாகிறது. அது தனியொரு மனிதனின் அடையாளமாகிறது.

நமது சுபாவங்களை மற்றவருக்கு அடையாளம் காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது நமது வாய்தான்,அதாவது நாம் பேசுவது.பேசும் விதங்கள்தான்  மற்றவரிடம் எப்படி பழகுகிறார்கள்,தனக்கான அடையாளத்தை,மதிப்பை பெறுகிறார்கள் என்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.இதில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.

இனி இந்த பதிவில் ஒவ்வொரு பத்தி முடியும்போதும் பதிவின் தலைப்பை ஒருமுறை நினைவில்கொள்ளுங்கள்.

 சிறுவயதில் என் குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன்.பள்ளி படித்துக்கொண்டிருந்த எனக்கு ஆலசனையோ,முடிவோ சொல்லத் தெரியாத அந்த காலகட்டத்தில் வீட்டில் நடப்பதை அப்படியே என் வகுப்புத் தோழிகளிடம் சொல்வேன்(ஒப்பிப்பேன்).அவர்களிடமிருந்து எந்த கருத்தையும் நான் எதிர்பார்த்து சொன்னதில்லை.அவர்களிடமிருந்து ம்...,அப்படியா என்பதில் மட்டும் ஏற்ற இரக்கங்கள்,பரிதாபங்கள் வெளிப்படும்.சக வயதினர் என்ன ஆலோசனை சொல்லிவிட முடியும்.

ஒரு சமயத்தில் ம்...அப்படியா என்றவர்களில் யாரோ ஒருத்தி நான் சொல்வதை வைத்து என்னையே ஏளனப்படுத்தியபோது,ஒருவன் என் வீட்டினரை கேளிக்குள்ளாக்கியபோது பலமுறை ”ம்” மட்டும் போட்டவர்களின் குணநலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணரமுடியவில்லை.ஆனால் அவர்களின் மாற்றம்/வளர்ச்சி , இத்தனை நாள் நாம் ஏன் இவர்களிடம் நம் வீட்டு பிரச்சனைகளை சொல்லிக்கொண்டிருந்தோம்,இதனால் என்ன பலன்?இப்போது கிடைத்திருப்பது என்ன?என்ற யோசனை வந்தது.

அதிலிருந்து என்ன நடந்தாலும் யாரிடமும் எதுவும் சொல்வதில்லை.எதை சொல்ல வேண்டும்,எதை  சொல்லக்கூடாது என்பதனை கற்க வைத்தது இந்நிகழ்வு.ஆனால் காலமும் மனமும் பழகி வடிகட்டி நமக்கு ஏற்ற குணநலமுடையோரை நமக்கு அடையாளம் காட்டும்.அவர்களிடமும் நூறு சதவீத ஏற்பு இருப்பதில்லை.நட்போ,உறவோ வேண்டுமெனில் அனுசரிப்பு கட்டாயம் வேண்டும்,குற்றம் பார்க்கும் குணம் குறைய வேண்டும்,விட்டுக் கொடுத்தல்,மன்னித்தல் நம் தன்மானம் குறையாதவரை வேண்டும் என்பதையும் அதற்கு பிறகான காலங்களும்,மனிதர்களும் கற்றுத்தந்தனர்..

ஒன்றுமே இல்லாத அதாவது உப்பு சப்பு பொறாத ஒருவரி செய்தியை அரைமணி நேரம் பேசும் அல்டாப்பு ராணிகளை பிறகான காலத்தில் பார்த்து வியத்தும் போயிருக்கிறேன்,வியர்த்தும் போயிருக்கிறேன்.தனக்குள்ள சந்தோசங்களை,நல்ல விசியங்களை சொல்லாமல் பிரச்சனைகளை,கஷ்டங்களை மட்டுமே பகிர்ந்துகொள்ளும் மகாப் பிறவிகளிடமும் மாட்டியதுண்டு.இவர்களை விட்டு விலக வழி தெரியாமல் விழித்ததுண்டு.


சிலர் நம்மிடம் பேசுவதை வைத்தே விளையப்போவதை யோசிக்காமல் எல்லாத்தையும் உலருவோம், அவர்கள் கேட்பதை விட அதிகம் பகிர்ந்துகொள்வோம்.நன்மை விளையும்வரை ஒன்றும் தெரியாது.அவர்களால் துன்பம் வரும்போதுதான் அவர்களைப்பற்றி சிந்திப்போம்.இதிலும் சிலரை விட்டு எளிதில் விலகிட முடியாது.அதிலும் சில கில்லாடிகள்,நான் நல்லதுக்குதான்,செய்தேன்/சொன்னேன் இப்படியாகும்னு எனக்குத் தெரியாது,என்னை தப்பா நினச்சிக்காதன்னு சொல்வாங்க பாருங்க........

என்னை பேசவிடாமல் தனது விசியங்களை மட்டுமே பேசி அல்லது புலம்பிக்கொண்டிருப்போரிடமிருந்து நாம் ஒருவரிடம் பேசும்போது நாம் மட்டுமே பேசாமல் மற்றவருக்கும் பேச வாய்ப்பு தர வேண்டும் என்பதை உணர்ந்தேன்.பிறருக்கு வாய்ப்பு தரும்போது நான் சொல்ல வந்ததை சொல்ல மறப்பதும் உண்டு.சில சமயம் அரைகுறையாக விசியங்களை பகிர்ந்து குழப்பத்திற்குள்ளானதும் உண்டு.


நாம் என்ன விசியங்கள் சொன்னாலும் இதைவிட நல்லதா/சிறந்ததா நான் செய்வேன்,சொன்னேன்,பாத்திருக்கேன் அதாவது தற்பெருமை பேசுபவர்களிடம் முகம் சுழிக்க முடியாமல் கேட்கவேண்டிய தருணங்கள் கொஞ்சம் வேதனைதான்.இவர்களுக்கு மேல்  மோசமான ஆசாமிகள் யார் தெரியுமா என்ன சொன்னாலும் மட்டம் தட்டி பேசுபவர்கள். தாழ்மையுணர்ச்சியைத் தூண்டுவார்கள்.

மற்றொரு மோசமான ரகம் நாம் சொல்வதை வழிமொழிந்துவிட்டு நாம் சென்றபின் நாம் சொன்னதை வைத்து கிண்டலடிப்பது.குத்திகாமிச்சு/சொல்லிக்காமித்து பேசுபவர்களிடம் எதிர்த்தும் பேசமுடியாமல்,விவாதிக்கவும் முடியாமல் தவித்ததுண்டு.இவர்களிடம் முன்னடி போனாலும் முட்டும்,பின்னாடி போனாலும் உதைக்கும் என்ற பழமொழிதான்.இப்படிபட்டவர்கள் என்னிடம் பேசினாலே இவங்க சாதாரணமாதான் பேசுறாங்களா அல்லது எதாவது உள்குத்துடன் பேசுறாங்களான்னு மைண்ட் வாய்ஸ் கேக்கும்.

நல்லாதான   பழகினாங்க,நான் என்ன தப்பு செய்தேன்னு திடீர்னு இப்படி குத்தலாவே பேசுறாங்க,அல்லது இவங்க எப்போதுமே இப்படித்தானா, நாந்தான் தாமதமா புரிஞ்சுட்ருக்கேனா?நான் சரியாதான் பேசிட்ருக்கேனா?அதிக உரிமை எடுத்துக்கிட்டேனா?இத்தனை யோசனைகளுடன் இந்த நட்பு அவசியமா என்று சிந்திப்பது மட்டுமல்ல,மனநிலை குழம்பியேபோயிடும்.என் தவற்றை திருத்திக்கொள்ள இவங்களிடம் என் குற்றம் என்னனு கேட்டுத் தெரிந்தாகனும்னு நான் எதாவது தவறாக சொல்லியிருந்தால் வெளிப்படையா சொல்லிடுங்கனும் கேட்டும்விட்டேன்.பதில் இல்லை.சில நாட்களுக்கு பின் பிரிவுதான் ஏற்பட்டது.

சிலர் நாம் என்னதான் பழகினாலும்,மனம்விட்டு பேசினாலும் நம்முடன் ஒட்டமாட்டார்கள்.மேற்சொன்ன விதங்களை சந்திப்பதைவிட இப்படி தாமரை இலை தண்ணீர்போல யாருக்கும் பிரச்சனை இல்லாமல் இருப்பது மிகவும் சிறந்தது.முடியாதபட்சத்தில் மட்டுமே மற்றவர்களின் உதவியை நாடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் எனக்கு சில மனமொத்த நட்புகளும் உண்டு.நட்பானாலும் எந்த உறவானாலும் இருவருக்கான அனைத்து குணங்களும் ஒன்றிவிடுவதில்லை.சில பண்புகள் இயற்கையாக ஒன்றிவிடும்,சில பண்புகளை ஒன்றவைக்க முயற்சித்து வெற்றியோ தோல்வியோ பெறலாம்.அல்லது இருவரின் தன்(ம)மானம் பாதிக்காத வரை அவரவர் போக்கிலே அன்பை பகிர்ந்துகொள்ளலாம்.
***********************************************************************முற்று.

15 வருடங்களாக பொதுநலப்பணியில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவர் வலைப்பூ எழுதி வருகிறார்.சில விசியங்களை  ஊடகங்களிலிருந்தும்  பகிர்ந்துகொள்கிறார்.பின்னூட்டங்கள்,பின் தொடர்வோர் இல்லாமலே 233 பதிவுகள் வெளியிட்டுள்ளார்.இவர் செயல்படும் பொதுநலப்பணிகள் சம்மந்தமான வலைதளங்களின் முகவரிகளும் அந்த வலைப்பூவில் உள்ளது.இரண்டு நாட்களுக்கு முன் அவரின் அனுமதி பெற்று அவரின் வலைப்பூவை அறிமுகம் செய்கிறேன்.விருப்பமும்,நேரமும் இருப்பின் இங்கே கிளிக் செய்து அவர் தளம் செல்லலாம்.


34 comments:

ahmngo said...

Thanks for your help. You have wonderful skill. I think sridhar is Lucky

thirumathi bs sridhar said...

@ahmngo

வாங்க,நன்றி.உங்கள் பணிகளையும்,பதிவுகளையும் தொடருங்கள்.

ஆனாலும் எங்க ஊரில் ஏற்கனவே குளிர் தாங்கமுடியலங்க..

கணேஷ் said...

பேசுவது ஒரு அரிய கலைதான். சில சமயம் எதார்த்தமாகப் பேசும் வார்த்தைகள்கூட எதிராளியை காயப்படுத்திவிடக் கூடும். வெளியிட்டபின் திரும்பப் பெற முடியாதது நாம் பேசும் பேச்சுத்தானே... அருமையாச் சொல்லியிருக்கீங்க... நீங்க சொன்ன தளத்துக்கும் சென்று பார்க்கிறேன். நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

""இந்த திறமை எங்கிருந்து உதித்திருக்கும்" ?

Good & Useful Post.
Good Introduction too.
vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

Tamilmanam: 2
Udanz : 3
Indli: 2
vgk

angelin said...

நாம் பேசும் சிறு வார்த்தைகள் மட்டுமல்ல சிறு அசைவு கூட மனதை புண்படுத்திவிடும். பதிவு மிக அருமை .மீண்டும் விரிவா பின்னூட்டமிட வருவேன் .பள்ளி சென்று மகளை அழைத்து வரணும்

முனைவர்.இரா.குணசீலன் said...

அனுபவமும், அறிமுகமும் அருமை..

RAMVI said...

ஆம் ஆச்சி.சூழ்நிலையும் நமக்கு நிறைய விஷயங்கள் கற்றுத்தருகிறது.
அருமையான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

angelin said...

//இனி இந்த பதிவில் ஒவ்வொரு பத்தி முடியும்போதும் பதிவின் தலைப்பை ஒருமுறை நினைவில்கொள்ளுங்கள்.//

ஒவ்வொரு வரியின் முடிவிலும் நினைவுபடுத்திக்கொண்டேன்

angelin said...

//நட்போ,உறவோ வேண்டுமெனில் அனுசரிப்பு கட்டாயம் வேண்டும்,குற்றம் பார்க்கும் குணம் குறைய வேண்டும்,//

ஒரு நட்பை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளும்மனப்பக்குவம் எல்லாருக்கும் வரணும் .அப்படி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் குறைகளெல்லாம் நிறைகளாகும் .
//தாழ்மையுணர்ச்சியைத் தூண்டுவார்கள்.//இவர்களிடம் மட்டும் நூறடி தள்ளி நிற்கணும் .
///நூறு சதவீத நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை.///

நூற்றுக்கு நூறு உண்மை

இராஜராஜேஸ்வரி said...

அதிலும் சில கில்லாடிகள்,நான் நல்லதுக்குதான்,செய்தேன்/சொன்னேன் இப்படியாகும்னு எனக்குத் தெரியாது,என்னை தப்பா நினச்சிக்காதன்னு சொல்வாங்க பாருங்க...."இந்த திறமை எங்கிருந்து உதித்திருக்கும்"

இரவு வானம் said...

சொல்ல ஒன்றுமில்லை, நீங்களே அனைத்தை பற்றியும் விரிவாக பேசிவிட்டதால், ஆனால் ஒன்று சொல்ல விருப்பபடுகிறேன், வாழ்க்கையில் தொடக்கம் முதலே கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தங்களுடைய கஷ்டத்தினை யாரிடமாவது சொல்ல துடிப்பதும் மனித இயல்பே, அப்படி உண்மையிலேயே கஷ்டப்படுபவர்கள் என தெரிந்தால் நாம் பேசாவிட்டாலும் அவர்களை பேச விட்டு கேட்கலாம், ஆறுதல் கூறலாம் என்பது என் எண்ணம், மற்றபடி தங்களை பற்றியே பேசிக் கொண்டு மற்றவர்களை பொருட்படுத்தாதவர்களை நாமும் பொருட்படுத்த வேண்டாம், சமீப காலத்தில் நீங்களும் எங்கோ மனக்காயம் பட்டு இருக்கிறீர்கள் என எண்ணுகிறேன், நானும் சமீபத்தில் பாதிக்கப்பட்டு இது போல ஒரு பதிவினை எழுதினேன், விட்டுவிடுங்கள் சகோதரி காலம் எல்லாவற்றையும் மாற்றும், சரியில்லாத நூறு பேர்களை விட சரியான ஒருவரே போதும்.

Avargal Unmaigal said...

அருமையான பதிவு...பகிர்வுக்கு மிக நன்றி. நீங்கள் அறிமுகபடுத்திய பதிவாளரையும் நான் தொடர்கிறேன் நீங்கள் அறிமுகபடுத்திய காரணத்தால் உங்கள் அறிமுகம் நன்றாக இருக்கும் என்று நினைப்பதால் மட்டுமே

கோவி said...

நல்லா சொல்லிருகீங்க ஆச்சி..

கீதா said...

மனிதர்களின் வித்தியாசமான மனவியல்புகளை மிகவும் அழகாகத் தொகுத்தளித்திருக்கிறீர்கள். வருடக் கணக்காய் பழகினாலும் கூட சில மனிதர்களின் குணாதிசயங்களை நம்மால் கணிக்கமுடிவதில்லையே. நாம்தான் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். மிகவும் நல்ல பதிவு.

நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைத்தளம் சென்று பார்த்தேன். பல விழிப்புணர்வுப் பதிவுகள் உள்ளன. ஒவ்வொன்றாகத் தான் படிக்கவேண்டும். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆச்சி.

வேங்கட ஸ்ரீனிவாசன் said...

பேசுபவர் பேசிக் கொண்டே தான் இருப்பர். கவிஞர் கா.மு.செரிஃப் இதை,
“வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் எசும் வையகம்”
என்று பாடியிருக்கிறார்.

நல்ல பதிவு.

thirumathi bs sridhar said...

@கணேஷ்
//திரும்பப் பெற முடியாதது நாம் பேசும் பேச்சுத்தானே... //

ஆமாம்.எள்ளைக்கூட பொறுக்கிடலாம்,சொல்லை பொறுக்கிட முடியாதுனு சொல்வாங்களே!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்.

@வை.கோபாலகிருஷ்ணன் சார்

வாங்க,வருகைக்கும்,கருத்திற்கும்,
வாக்கிற்கும் நன்றிகள்.

thirumathi bs sridhar said...

@ஏஞ்சலின்
இந்திய நேரத்திற்கும் ஜெர்மெனி நேரத்திற்கும் எத்தனை மணி நேர வித்தியாசம்.?.

//ஒவ்வொரு வரியின் முடிவிலும் நினைவுபடுத்திக்கொண்டேன்//

இதுவும் பொருத்தாமாகதானிருக்கும்.
உள்ளபடியே இருக்கும் குணத்தை ஏற்கும் மனம் இருபக்கமும் அமைந்துவிட்டால் சுமுகமாகிடும்.
தங்களின் பின்னூட்டங்களுக்கும்,வருகைக்கும் மிக்க நன்றிங்க.

thirumathi bs sridhar said...

@முனைவர்.இரா.குணசீலன்

வாங்க,வருகைக்கும்,கருத்திற்கும்,ஃபாளோயர்சில் இணைந்துள்ளமைக்கும் நன்றிகள்.

@ramvi
ஆம்,அமையும் சூழ்நிலைகள் நிறையவே கற்றுத்தருகிறது.
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்.

thirumathi bs sridhar said...

@இராஜராஜேஸ்வரி

//நான் நல்லதுக்குதான்,செய்தேன்/சொன்னேன் இப்படியாகும்னு எனக்குத் தெரியாது,என்னை தப்பா நினச்சிக்காதன்னு சொல்வாங்க பாருங்க...."//

இது எதார்த்தமாக நடந்துவிடும்போது மன்னிக்கலாம்.வேணும்னே நடத்தப்படும்போது நம்மை ஒரு முடிவெடுக்க வைத்துவிடுகிறார்கள்.
நன்றி மேடம்.

thirumathi bs sridhar said...

@இரவு வானம்

//சமீப காலத்தில் நீங்களும் எங்கோ மனக்காயம் பட்டு இருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்//

சமீபத்தில் இல்லைங்க.யாருடன் பழகினாலும் நான் பெரிய சைக்காலஜி டெஸ்ட்டிற்கு படிப்பது போலாகிவிடுகிறது.நெருக்கமானவர்கள்னு நம்பிவிட்டாலே மனக்காயத்திற்கு ரெடியாகிக்கனும்னு கத்துக்கிட்டேன்.

//சரியில்லாத நூறு பேர்களை விட சரியான ஒருவரே போதும்.//

இதுவும் சரிதாங்க.மிக்க நன்றி.

thirumathi bs sridhar said...

@அவர்கள் உண்மைகள்

வாங்க,தங்கள் வருகையிலும் கருத்திலும் மகிழ்கிறேன்.உங்கள் நம்பிக்கை வீண்போகாதுனு நானும் நம்புகிறேன்.மிக்க நன்றி.


@கோவி
வாங்க,வாங்க ஈரடிக் கவிஞரே.மிகவும் நன்றி.

thirumathi bs sridhar said...

@கீதா
மிக்க நன்றி.இது ஒரு சிலதான்,இன்னும் எனக்கு கிடைத்த அனுபவங்கள் பல உண்டு.மனம் வரும்போது மீதி குணாதிசியங்களை எப்போதாவது சொல்கிறேன்.


ஆனால் நீங்களாகருந்தால் இந்தக் கருத்துக்களை மிக அழகான கவிதையில் சுருக்கமாக நறுக்குனு சொல்லியிருப்பீர்கள்.

thirumathi bs sridhar said...

@வேங்கட சீனிவாசன்

//வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் எசும் வையகம்”//

இந்த கருத்தை சொன்னவர் யார் என்று தெரியப்படுத்தியதற்கே முதல் நன்றிகள்.

angelin said...

இப்ப இருப்பது இங்கிலாந்து
ஐந்தரை மணி நேரம் வித்தியாசம் .
சில நேரம் வாழ்க்கை நம்மக்கு பல பாடங்களை கற்றுகொடுக்கும் .அதுபோன்றுதான் இதுவும் ..சில காயங்கள் ஆற நாளாகும் வடுக்களும் நினைவுபடுதிகொண்டிருக்கும்.just ignore them .
நீங்க குறிப்பிட்ட தளத்திற்கு சென்றேன் .அருமை

ராஜி said...

"இந்த திறமை எங்கிருந்து உதித்திருக்கும்" ?
>>
மில்லியன் டாலர் கேள்வி சகோ

♔ம.தி.சுதா♔ said...

//// ம்...அப்படியா என்றவர்களில் யாரோ ஒருத்தி நான் சொல்வதை வைத்து என்னையே ஏளனப்படுத்தியபோது////

ஒவ்வொரு எழுத்திலும் தங்கள் உறுதி தெரிகிறது...

நன்றீங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வு. வாயால் தான் சில நேரம் பிரச்சனைகளே வருகிறது.

thirumathi bs sridhar said...

@ஏஞ்சலின்
மீண்டும் வருகை தந்து பதில்& கருத்திட்டமைக்கு நன்றிங்க.புதிய தளம் சென்றமைக்கும் நன்றி.

@ராஜி

வாங்க,இன்னும் புருவம் உயர்த்த வச்சீட்டீங்க.நன்றி.

thirumathi bs sridhar said...

@ம.தி.சுதா

வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்.

@ஆதி
ஆமாம்,நீ சும்மா இருந்தாலும் உன் வாய் சும்மா இருக்காது,உன் வாய் சும்மா இருந்தாலும் ஊரு உன்னை சும்மா விடாது என்ற வசன்ம்தான் நினைவிற்கு வருது.

அறிவன்#11802717200764379909 said...

உங்களுக்கு இரு விதயங்கள் சொல்ல விழைவு.

எழுதும் எதையும் பிழையின்றி எழுத முயற்சியுங்கள்..பல பிழைகள் இந்தப் பதிவின் வாக்கியங்களில் இருக்கின்றன.

உங்களது கருத்துக்களைச் சொல்வதற்குக் கூட உங்களது கணவரின் முகமூடியாக இருக்காதீர்கள்.பெண்கள் சுயத்தை இழப்பது என்பதற்கான ஆதர்ச எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள்.

thirumathi bs sridhar said...

@அறிவன்

வாங்க

//பல பிழைகள் இந்தப் பதிவின் வாக்கியங்களில் இருக்கின்றன//


எங்கே என்னவென்று சொல்லுங்கள்.நிச்சயம் ஏற்று திருத்திக்கொள்கிறேன்.


//உங்களது கருத்துக்களைச் சொல்வதற்குக் கூட உங்களது கணவரின் முகமூடியாக இருக்காதீர்கள்//


இந்த பதிவில் என் கணவர் சம்மந்தப்பட்டிருந்தால் மறைமுகமாக சொல்லுமளவிற்கு கோழை அல்ல நான்



உங்கள் புரிதல் என்னவென்று தெரியப்படுத்தாமல்

//
//பெண்கள் சுயத்தை இழப்பது என்பதற்கான ஆதர்ச எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள்.//


இப்படி தெரிவித்துள்ளமைக்கு எனது எதிர்ப்பை தெரிவிக்கிறேன்.

மாலதி said...

அருமையாச் சொல்லியிருக்கீங்க... அருமையான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

thirumathi bs sridhar said...

@மாலதி
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிங்க.