*வணக்கம் வருகைக்கு நன்றி*

Sep 22, 2011

வடமாநிலங்களில் இவைகளும் நடைபெறுகின்றது

கலாச்சாரம்,உணவு,பழகும் முறை இன்னும் பல்வேறு வகையிலும் வேறுபாடுடைய வட மாநிலங்களில் போக்குவரத்துகளின்போது வித்தியாசமாக தென்பட்ட காட்சிகளில் சாலையோர சலூன்பார்களும்   ஒன்று.
சாதாரண மற்றும் ஆடம்பரம்மிக்க சலூன்பார்கள்,ஆண்கள்,பெண்களுக்கு அழகு நிலையங்களை எங்கும் பார்த்திருப்போம்.குறைந்தபட்சம் ஒரு வாசல்,இருபக்க சுவர்,மேற்கூரையாவது இருக்கும். ஒரு அறை போன்ற அமைப்பாவது இருக்குமல்லவா?

சாலையோர வியாபாரிகள் போல மரத்தடியிலும்,பாலங்களுக்கு அடியிலும்,சில தெருவோரங்களிலும்,மக்கள் புலக்கம் அதிகமாக இருக்கும் கடைவீதிகளிலும் திறந்தவெளிகளில் சவரம்,முடிதிருத்தம்,மொட்டையடித்தல் வரை நடைபெறுகிறது .
எந்தளவுக்கு இது சுகாதாரம் என்று தெரியவில்லை.ஆனால் இந்த தொழிலாளிகள் எப்போதும் பிஸிதான்.அதே சமயத்தில் அதிகநேரம் காத்திருக்கவும் அவசியமில்லை.சில காட்சிகளைப் பாருங்கள்.


  

இந்த படத்தை பாருங்கள்.என்ன நடைபெறுகிறதென்று புரிகிறதா?மஞ்சள் நிற பேனருக்கு கீழே குட்டிச்சுவரில் வரிசையாயாக அமர்ந்திருப்பவர்களில் ஒருவரின் தலையப்பிடித்தவாறு ஒருவர் நிற்கின்றாரே,அவர் என்ன செய்கிறார் தெரியுமா?அமர்ந்திருப்பவர் காதில் அழுக்கு எடுத்து காதுகளை சுத்தம் செய்கிறார்.        நம்ம ஊர்பக்கம் கிளிஜோசியக்காரர்கள் ஒரு பெட்டியுடன் வலம் வருவது போல சில இடங்களில் காது சுத்தம் செய்பவர்கள் வலம் வருவார்கள்.விரும்பியவர்கள் தங்கள் காதுகளை அந்த ஆசாமியிடம் கட்டணம்  கொடுத்து சுத்தப்படுத்திக்கலாம்.அவர்களின் காதுகள் பிறகு சரியாகத்தான் வேலை செய்யுமா என்பது தெரியவில்லை.போக்குவரத்தில் பார்த்த காட்சிதான் .

இணையத்தில் எடுத்த படம்.
இதுபோல மாலிஸ்வாலாக்களும் வலம் வருகின்றனர்.மசாஜ் என்பதுதான் ஹிந்தியில் மாலிஸ் ஆகும்.மாலிஸ் செய்பவர்கள் மாலிஸ்வாலாக்கள்.இந்த மாலிஸ்வாலாக்கள் கையில் பெட்டி அல்லது பைகளில் மூலிகை எண்ணெய்களை பாட்டிலில் வைத்திருக்கின்றனர்.போலி எண்ணெய்களா என்னவென்று தெரியவில்லை.விரும்புவர்கள் சாலையோரத்திலோ அல்லது வீட்டிற்கு அழைத்தோ  மசாஜ் செய்துகொள்கின்றனர்.இதுவும் எந்தளவுக்கு பயனுள்ளது,கட்டணம் பற்றி விபரம் தெரியவில்லை.ஹிமாச்சல பிரதேசத்தில் இந்த மாலிஸ்வாலாக்களை அதிகம் காணமுடியும்.பலரும் நம்பிக்கையுடன் கை,கால்,தலைக்கு மசாஜ் செய்துகொள்வதை சாலையோரத்தில் பார்த்திருக்கின்றேன்.மக்கள் உடல் நலத்தை கெடுத்துவிடாமலும்,ஏமாற்றாமலும் இருந்தால் நல்லது.

14 comments:

காந்தி பனங்கூர் said...

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் மக்கள் இது போன்ற பழைய முறைகளை பின்பற்றாமல் விட்டு விடுகின்றனர்.

இப்போது ஏசி அறையில் தான் முடி வெட்டனும்னு நினைக்கிறாங்க. இன்னும் இந்த மாதிரி வெளி இடங்களில் முடி திருத்துகிறார்கள் என்றால் அவர்களை பாராட்டப்பட வேண்டியது தான்.

படங்கள் அனைத்தும் அருமை.

சாந்தி மாரியப்பன் said...

தெருவோர ஸ்பெஷலிஸ்டுகள் எங்க பக்கம் கூடுதல்தாங்க
:-)))

சக்தி கல்வி மையம் said...

அட வித்தியாசமான செய்தியா இருக்கே?!

அமுதா கிருஷ்ணா said...

தெருவோர மெகந்திக்காரர்கள் இப்ப சென்னையில் வந்துவிட்ட மாதிரி இவர்களும் வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Voted Tamilmanam 2to3 & Indli 3to4

தலையாய பிரச்சனைகளை நல்ல படங்கள் மூலம் பதிவாகத் தந்துள்ளீர்கள்.

தலைமுடி நீக்குதல் முதல் உடல்வலி போக்குதல் வரை அனைத்தையும், சமூகக் கண்ணோட்டத்துடன் பார்த்து, விழிப்புணர்வைத் தர எண்ணியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

இதைப்படித்ததும் எனக்கும் உடம்பெல்லாம் வலிப்பது போல இருக்குதுங்க. மாலீஷ் செய்து கொள்ள உங்கள் ஊர் பக்கம் வரலாமான்னு யோசிக்கிறேன். vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
ADHI VENKAT said...

நல்ல பகிர்வு ஆச்சி. வட இந்தியர்கள் சொகுசுவாசிகள். எதற்கும் அலட்டிக் கொள்ளவும் மாட்டார்கள். ”சலேகா” தான் எல்லாவற்றிற்கும்..

இதை பற்றி என் கணவர் அவருடைய தலைநகரத் தொடரில் முன்பே எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

http://venkatnagaraj.blogspot.com/2010/02/blog-post_10.html

Angel said...

நல்ல பகிர்வு ஆச்சி .முடி திருத்துதல் ,மசாஜ் எவ்ளவோ மேல் ஒரு முறை டிவியில் பார்த்தேன் சாலையோர பல் மருத்துவர்கள் ,ஜெய்ப்பூரில் http://www.reddit.com/r/india/comments/h6744/roadside_dentists/
நேரம் கிடைச்சா பாருங்க

siva said...

"கலாச்சாரம்,பழகும் முறை" இது எல்லாம் அவங்களுக்கு இருக்கா?

raji said...

அட! இப்பிடிக் கூட நடக்குதா?

வெங்கட் நாகராஜ் said...

:) தில்லிக்கென்ற சில விஷயங்களில் இவையும் இருக்கின்றன. நிறைய இது போன்ற ஆசாமிகளை நீங்கள் வடமாநிலங்களில் பார்க்கலாம்.....

ஆச்சி ஸ்ரீதர் said...

@காந்தி பனங்கூர் நன்றி
சுகாதாரமாக இருக்குமெனில் வரவேற்கலாம்.

@அமைதிச்சாரல்
நன்றி.
மக்களும் விரும்புறாங்களே

@வேடந்தாங்கல் கருண்
நன்றி.
இங்கே சர்வ சாதாரணமா நடைபெறுகிறது .

@அமுதா கிருஷ்ணா
நன்றி.
வந்துடுவாங்க

@வை.கோபாலகிருஷ்ணன் சார்

வாங்க.வாங்க..நன்றி

@ஆதி

நன்றி
ஆமாங்க,சலேகாவேதான்.

@ஏஞ்சலின்
ஆஹா!பல்லுக்கா?ரொம்ப கஷ்டம்.லிங்க் இன்னும் பார்க்கல,பார்க்கிறேன்.நன்றி.

@சிவா
இங்கும் சொற்பமானவர்கள் இருக்கிறார்கள்தான்.யாராவது சண்டைக்கு வந்துடப் போறாங்க.நன்றி.



@ராஜி

இப்ப இன்னும் அதிகமாத்தான் தென்படுகிறார்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்
ஆமாங்க.வருகைக்கு நன்றி.

Avainayagan said...

முடி வெட்டுதல், காது சுத்தம் பண்ணுவது, மாலிஷ் செய்வது என எல்லா வேலைகளையும் சாலை ஓரத்திலேயே செய்கிறார்கள் அதுவும் டெல்லியில் என்பது ஆச்சர்யமானதுதானே