இன்று ஆசிரியர் தினம்.
என் பள்ளி,கல்லூரி ஆசிரியர்களை நினைவில் கொண்டும்,மற்ற பிற அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர் பதிவு எழுத அழைத்த சகோதரி ஏஞ்சலின் அவர்களுக்கு நிறைந்த நன்றிகளை தெரிவித்து தொடங்குகிறேன்.
1. நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
* என் குடும்பம்
* உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் வாழ வேண்டும்.
* எதிர்பார்ப்பில்லாத நட்பு
2. நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
* ஏமாற்றுதல்
* குத்தல் பேச்சுகள்
* அவதூறு பேசுதல்
3. பயப்படும் மூன்று விஷயங்கள்?
சிறுபிள்ளையில் இரவில் நாய் அழுவதைக் கேட்டால் அதிகம் பயப்படுவேன்.எதுவாக இருந்தாலும் சகித்துக்கொள்ளும் மனநிலை வந்துவிட்டதால் தற்போழுது எதற்கும் பயம் என்று தோன்றுவதில்லை.
4. உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
* மரணமும், மரணத்திற்கு பின் ஆன்மா என்னாகிறதென்று ஆளுக்கொரு கதை சொல்றாங்களே!(இறந்துதான் தெரிஞ்சுக்கனும் போல)
* எதுவாக இருந்தாலும் நிறையபேருக்கு உடனே புரிந்துடுதே?
* அரசியல்
5. உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
* மடிக்கணினி மற்றும் கணினி சம்மந்தப்பட்டவைகள் மட்டும்.
6. உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
* ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள்
* என் மகளின் குறும்புகளும் மழலைப் பேச்சுகளும்.
* முதன் முதல் எதற்காக சிரித்திருப்பேன் என்பது
நினைவில்லை.ஆனால் துன்பம் ஒன்று நிகழ்ந்ததில் சிரிப்பு என்பதையே மறந்திருந்த காலத்தில் சிரிக்கும் சூழ்நிலை வந்தாலும் உதட்டளவில் சிரித்த காலத்தில் பதிவர் ஒருவரின் பதிவை எதார்த்தமாக படித்த போது மனதார சிரித்தேன்.உண்மையில் எனது வேதனையின் கனம் குறைந்ததாய் உணர்ந்தேன். துன்பத்திலிருந்த என்னை சிரிக்க வைத்த அந்த பதிவை
நேரமிருப்பின் நீங்களும் படித்து பாருங்களேன்
7. தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
* என் குடும்பத்தின் பொறுப்பாளர்
* தையற்கலையை ஒழுங்காக செய்வதற்கான முயற்சிகள்
* இலக்கியம்,கதை,கவிதை,பொதுநலம்,சமூகசிந்தனை,நகைச்சுவை மற்றும் பல பிரிவுகளிலும் பதிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பதிவுலகில் நானும் பதிவு எழுதுகிறேன்,மறுமொழியிடுகிறேனென்று வலம் வந்துகொண்டிருக்கிறேன்.
8.வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
* எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்ய வேண்டும்.(நான் அவ்வளோ மந்தம்)
மற்றபடி என் வலைதளத்தின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளது போல் “நல்லபடியாக விடிந்த இன்றைய பொழுதில்,நல்ல எண்ணங்களுடன்,நல்ல வழியில் சென்றால் நாளையும் நல்லபடியாகவே விடியும்”என்பதுதான்
9. உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயஙகள்?
* என்னை வேதனைக்கு உள்ளாக்கியவர்களிடமும் இன்முகத்துடன் பழகுவேன்.
* என்னை சார்ந்தவர்களுக்கும் நட்புகளுக்கும் தொல்லை கொடுக்காதிருப்பது(பிறகு ஏன் பதிவு எழுத வந்தனு யாரோ முனுமுனுக்கிறாங்கப்பா…)
* எளிமையான கைவினைப் பொருட்கள்
10. கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?.
* பொய்கள்
* புறம் பேசுதல்
* தெரிந்தே செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது
11. கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
* உள்நோக்கங்களை புரிந்துகொள்வது எப்படி?
* கணினி &
இது போன்ற பல வேலைப்பாடுகள் கற்றுகொள்ள விரும்புகிறேன்
12. பிடிச்ச மூன்று உணவு வகை?
* அம்மா சமைத்து தந்த உணவுகள் அனைத்தும்
* ருசியான,சுத்தமான அனைத்து சைவ உணவுகளும்,இனிப்புகளும்
13. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
* தற்சமயம் விக்ரம் நடித்த தெய்வத் திருமகன் பாடல்கள்
* மெலடியான பாடல்கள்.(எந்த பாடலானாலும் ரெண்டுவரிக்கு மேல் ராகம் வராது)
14. பிடித்த மூன்று படங்கள்?
* காதலர் தினம்(தோழிகளுடன் முதன் முதலாக பார்த்த படம்)
* அலைபாயுதே
* மொழி
15. இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
* தேவையான உணவு,உடை,தங்குமிடம்,பணம்,
* ஆரோக்கியமான உடல்
* நல்ல உள்ளம்
16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?

வண்ணமற்ற தலையணி உறையின் பூக்கள்,இலைகளில் ஃபேப்ரிக் பெயிண்டிங் கொண்டு வண்ணமிட்டுள்ளேன் |
இதில் உள்ள பச்சை நிற கொடிகளும்,முக்கோணங்களும்,29 சிறிய பொம்மைகளும் நான் வரைந்தது |
இது போன்ற பல வேலைப்பாடுகள் கற்றுகொள்ள விரும்புகிறேன்
12. பிடிச்ச மூன்று உணவு வகை?
* அம்மா சமைத்து தந்த உணவுகள் அனைத்தும்
* ருசியான,சுத்தமான அனைத்து சைவ உணவுகளும்,இனிப்புகளும்
13. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
* தற்சமயம் விக்ரம் நடித்த தெய்வத் திருமகன் பாடல்கள்
* மெலடியான பாடல்கள்.(எந்த பாடலானாலும் ரெண்டுவரிக்கு மேல் ராகம் வராது)
14. பிடித்த மூன்று படங்கள்?
* காதலர் தினம்(தோழிகளுடன் முதன் முதலாக பார்த்த படம்)
* அலைபாயுதே
* மொழி
15. இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
* தேவையான உணவு,உடை,தங்குமிடம்,பணம்,
* ஆரோக்கியமான உடல்
* நல்ல உள்ளம்
16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
* எனக்கு பதிவுலகில் நட்புகள் மிகக் குறைவு.எனக்கு தெரிந்த நட்புகள் அனைவரும் இந்த தொடர் பதிவினை முடித்துவிட்டார்கள்.பிறரை அழைக்கலாம் என்றால் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா அல்லது கட்டாயத்தினால் தொடர்வார்களா அல்லது மறுத்துவிடுவார்களா என யோசிக்கவேண்டியுள்ளதால் நமக்கான நேர்காணல் போன்ற இந்த மூன்று முத்துக்கள் தொடர் பதிவை விருப்பமிருக்கும் பதிவர்கள் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
20 comments:
அருமை. தங்களூடைய ஃபேப்ரிக் வேலைகள் மிக அழகாக உள்ளன. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்...
கைவசம் அழகான கைத்தொழிலும், அதில் ஆர்வமும் உள்ள உங்களுக்கு, என்றுமே கவலையில்லை. அதிலேயே ஆத்ம திருப்தி கிடைத்து விடும்.
தாங்களும் ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டவர் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.
// * மரணமும், மரணத்திற்கு பின் ஆன்மா என்னாகிறதென்று ஆளுக்கொரு கதை சொல்றாங்களே!(இறந்துதான் தெரிஞ்சுக்கனும் போல) //
நல்ல நகைச்சுவை - மிகவும் ரசித்துச் சிரித்தேன்.
உங்களுக்கு தங்கமான குழந்தை மனது என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அதை ஆங்காங்கு இந்தப்பதிவினிலும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
Voted 2 to 3 in Tamilmanam
3 to 4 in Indli
vgk
ம்ம்ம் மூன்று மூன்றாக நன்றாக தொகுத்து உள்ளீர்கள், உங்களது கைவேலைப்பாடுகள் மிக அழகாக உள்ளன, என்னுடைய பதிவை பார்த்து சிரித்தேன் என்று சொல்லுகிறீர்கள், நான் சிரிப்பாக எதையுமே எழுதியதாக ஞாபகமே இல்லை, ஹா ஹா ஒருவேளை நான் எழுதுவதே சிரிப்பாக இருக்கிறதோ என்னமோ, எப்படியோ உங்களது சிரிப்புக்கு நானும் ஒரு காரணம் ஆனதில் மகிழ்ச்சி
நன்றி அக்கா
அழகான தெளிவான பதில்கள். சுய ஆய்விலும் சுகம் உண்டு போலும். பகிர்ந்துகொண்ட வேலைப்பாடுகள் அனைத்தும் அருமை. கைவசப்பட்ட கலையைக் கைவிடாது தொடருங்கள்.
தெளிவான பதில்கள். பாராட்டுகள்..
என்னுடைய அழைப்பை ஏற்று தொடர்ந்ததற்கு மிக்க நன்றி ஆச்சி .
.உங்கள் ஒவொரு பதில்களும் இன்னும் உங்களை பற்றி நன்கு தெரிந்து கொள்ள உதவியது .
நிறைய பேர் வெளியில் சிரித்து உள்ளே அழுது கொண்டிரிப்பவர்கள் தான் ஆச்சி .ஒருவர் இன்னொருவருக்கு ஆறுதல் அந்த மட்டில் சந்தோஷமே .
.உங்கள் fabric art மிகவும் அழகா இருக்கு .
அழகான முத்துக்கள்...வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன்..
டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு--வாங்க எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com
அனைத்து பதில்களுமே அருமை. ஃபேப்ரிக் பெயிண்டிங், மற்றும் ஓவியம் வரைவதிலும், தையல் பழகுவதிலும் நமக்குள் ஒற்றுமை இருக்கிறது என்று மகிழ்ச்சி.
நானும் பிளவுஸ் மற்றும் கைக்குட்டைகளில் பெயிண்டிங் செய்திருக்கிறேன்.
உங்கள் ஆர்வம் மேலும் வளர வாழ்த்துக்கள் ஆச்சி.
@சாகம்பரி
மிக்க நன்றி
@கவிதை வீதிசெளந்தர்
வாங்க,நன்றி
@வை.கோபாலகிருஷ்ணன் சார்
உங்களை சிரிக்க வைத்ததில் மகிழ்கிறேன்.
மிக்க நன்றி.
@சுரேஷ்
நன்றி.உங்களின் அந்த பதி்வின் விசியங்களை பேசும்போது சொல்லியிருந்தால் கூட நான் சிரித்திருப்பேனா என்று தெரியவில்லை.ஆனால் எழுத்து நடையில் படித்தபோது துக்கம் மறந்து சிரித்தேன்.பிறருக்கோ உங்களுக்கோ சாதரணமாகவே இருக்கலாம்.ஆனால் என்னால் மறக்க முடியாத பதிவு.இன்று படிக்கும்போதும் அதே உணர்வு.நன்றி.
@கீதா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
@வேடந்தாங்கல் கருண்
வாங்க,நன்றிங்க.
@ஏஞ்சலின்
நீங்கள் சொல்வதை ஏற்கிறேன்.வாய்ப்பு தந்தமைக்கும் நன்றி.
@டி.கே.தீரன்சாமி
முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
@ஆதி
அப்படியா?..வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
@ரெத்னவேல் சார்
மிக்க நன்றி சார்.
நல்ல பதில்கள்.
முத்தான மூன்று முத்துகள்....
பகிர்வுக்கு நன்றி.
முத்தான முத்தல்லவோ!
உங்கள் பதில்கள் சுவையாகவும், சில இடங்களில் சாமர்த்தியமாகவும் இருந்தது.இந்த பதிவை மிகவும் ரசித்தேன்.நன்றி
@வெங்கட் நாகராஜ்
தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
@சென்னை பித்தன்
வாங்க சார்,தங்கள் முதல் வருகையிலும்,கருத்திலும் மகிழ்கிறேன்.
@கே.பார்த்தசாரதி
நன்றி.என்னவோ சொல்றீங்க..சரி..சரி.
ஒரு வழியா எனக்கு உங்க ப்லாக் ஓப்பன் ஆயிடுத்து.
உங்கள் கை வேலைகள் நன்றாக உள்ளன.
முத்தான மூன்றையும் ரசித்தேன்
@ராஜி
வாங்க,வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.உங்கள் வருகையை நானும்,என் வலைப்பதிவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
ஃபேப்ரிக் வேலைகள் அருமையா இருக்குங்க :-)
@ஜெய்லானி
வாங்க,நன்றிங்க
Post a Comment