*வணக்கம் வருகைக்கு நன்றி*

Sep 1, 2011

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு ரூபங்களில் என் வலைதளத்தில் விநாயகர் காட்சி தருகிறார்.நடைபெறும் பூஜையிலும் அனைவரும் பங்குபெற அன்புடன் அழைக்கிறேன்.

வாருங்கள் !மேள தாள,இசை வாத்தியங்களுடன் தங்களை விநாயகர்கள்  வரவேற்கின்றார்கள்
இங்கிருக்கும் இருக்கையில் அமருங்கள்.இனிப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.  தரிசனங்களைக்  காணுங்கள்.

















இதுவரை  கண்டுகளித்தமைக்கு நன்றி.அபிசேக ஆராதனையிலும் பங்குபெறுங்கள்
தீபாராதனை முடிந்து அலங்கரிக்கப்பட்டுள்ள பெருமானுக்கு படையலும் நடைபெறுகிறது.பிரசாதங்களை எடுத்துக்கொள்ளவும்.மறக்காமல் தாம்பூலமும் எடுத்துக்கொள்ளுங்கள்.
பல்வேறு ரூபங்களில் இவ்வளவு நேரம் நமக்காக தரிசனம் தந்த விநாயகர் கொழுக்கட்டை சாப்பிட்ட அசதியில் உறங்கிக்கொண்டுள்ளார்.சற்று இளைப்பாரட்டும்.உறக்கத்திலும் நம்மை கவனித்துக்கொண்டிருப்பார்.விநாயகரின் அருள் அனைவருக்கும் உரித்தாகட்டும்.
போற்றி,போற்றி
******வாழ்க வளமுடன்.******

அனைத்து படங்களும் இணையதளத்திலிருந்து  எடுக்கப்பட்டவைகள்.

14 comments:

KParthasarathi said...

கண் கொள்ளா காட்சி.உங்கள் கருணையால் நானும் பூஜையில் பங்கு கொண்டேன்.மிக்க மகிழ்ச்சி.
எல்லாம் வல்ல விநாயகரின் அருள் உங்களுக்கு உரித்தாகுக

எல் கே said...

அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

))))))))))) வாழ்த்துக்கள்.
Voted 2 to 3 in Tamilmanam
Voted 2 to 3 in Indli also.
vgk

Unknown said...

தெய்ச தரிசனம் அது திவ்ய தரிசனம் பாட்டுதான் ஞாபகம் வருது, உங்களுக்கும் வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அக்கா..!

இராஜராஜேஸ்வரி said...

மேள தாள,இசை வாத்தியங்களுடன் தங்களை விநாயகர்கள் வரவேற்கின்றார்கள்//

அருமையான அழைப்பு, வரவேற்பு, தரிசனம், பூஜை ,பிரசாதங்கள், தாம்பூலம் ! என்ன ஒரு நிறைவு!!

மகிழ்ச்சி. சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அடேங்கப்பா! எவ்வளவு பிள்ளையார்கள்! பார்த்து அசந்து போய் விட்டேன்!! மிகவும் சிரமப்பட்டு சேகரித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள். vgk

Angel said...

எல்லா படங்களும் அழகாக இருக்கு ஆச்சி .பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் .

ஆச்சி ஸ்ரீதர் said...

என் அழைப்பை ஏற்று வருகைதந்த அனைவருக்கும் நன்றிகள்.
விநாயகரின் அருள் ஆசியுடன் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை வடிவங்களில் பிள்ளையார்... காணக் கொடுத்தமைக்கு உங்களுக்கு நன்றி..

அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்...

சாகம்பரி said...

பிள்ளையாரப்பா எல்லோரையும் காப்பாத்து.

கீதமஞ்சரி said...

அற்புதம். பாலகன் முதல் பஞ்சமுகன் வரை, மாவுக்கல் முதல் மாங்கனி வரை அத்தனை வடிவங்களிலும் அசத்துகிறார் பிள்ளையார். பகிர்வுக்கு நன்றி ஆச்சி.

ADHI VENKAT said...

அத்தனை பிள்ளையாரும் அசத்துகிறார்கள்.

நல்ல பகிர்வு.

சாந்தி மாரியப்பன் said...

அசத்தலான படங்கள்..

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்
@ சாகம்பரி
@கீதா
@ஆதி
@அமைதிச்சாரல்

வருக,வருக..
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்