*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 16, 2011

உருவமும்,மொழியும் அற்றவர் ?


ஹிந்தி அலைவரிசை ஒன்றில் திவ்ய சக்தி என்ற திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கையில் தெலுங்கு திரைப்படம் ஹிந்தி மொழிமாற்றம் செய்துள்ளது தெரிய வந்தது,தெலுங்கு திரையுலக முகங்களுக்கிடையே தமிழக கோவில் அமைப்பில் அமைந்துள்ள சந்நிதியில்  கே.ஆர்.விஜயா அம்மன் வடிவத்தில் பேசிக்கொண்டிருக்க, திரைப்படம்   பார்த்துக் கொண்டிருந்த,ஹிந்தி நன்றாக தெரிந்த என்  நான்கு வயது மகள் “ அம்மா, கோயில்ல நின்னு சாமி ஹிந்தி பேசுது பாரும்மான்னு “தமிழில் என்னிடம் சொல்லியபோது குழந்தையின் அறியாமையை நினைத்து ஒரு நொடி நகைத்து விட்டாலும்,எதோ பெரிய விசயத்தை உணர்த்திவிட்டாள் என்பது போல உணர்ந்து சாமிக்கு எல்லா மொழியும் தெரியும்,உனக்கு ஹிந்தி தெரிவது போல என்று சொல்லி அமர்த்தினேன்.
அதே கனத்தில் எனது சிறு வயது நினைவும் வந்தது.சிறு வயதில் தொலைக்காட்சியில் மகாபாரதம் மற்றும் சில புராண கதைகள் நாடகங்களாக ஒளிபரப்பான போது அப்பாவிடம் “என்னப்பா கடவுள் ஒன்று வாயசைக்கிறார்,அதற்கு முன்னோ,பின்னோதான் பேசுவது கேட்கிறது “ என்று நான் கேட்டதும்,ஹிந்தி மொழியில்,எடுக்கப்பட்ட கதை தமிழில் ஒளிபரப்பாகிறது என்று என் அப்பா விளக்கமளித்தாலும்,தமிழும் ஆங்கிலமும் அல்லாத மற்றொரு  மொழி  ஹிந்தி எனவும் அது கடவுள் மட்டுமே பேசக்கூடியது என்று  வெகு நாட்கள் நினைத்ததுண்டு.வீட்டில் கேலிக்கும் ஆளானதுண்டு.  பிறகு காலப் போக்கில் விபரம் தெரிந்து கொண்டேன்.
இப்போ என் மகள் கேட்டதில் கதை பல்ட்டி என புரிந்து கொண்டேன்.
                     
                                                     கடவுள்  இல்லை.   போகட்டும் !
கடவுள் இருக்கிறார்.ஆகட்டும் !
கடவுள் நான்தான்.   ஒழியட்டும் !
ஒவ்வொரு உயிரும் கடவுளாய்
வாழட்டும்!
உருவமும்,மொழியும் அற்றவர்
 !!கடவுள்.!!
       
                     

14 comments:

ஜெய்லானி said...

இதுக்குதான் சிலர் சொன்னது கடவுளும் ,குழந்தையும் ஒன்னுன்னு இப்போ புரியுதா :-))

raji said...

//தமிழும் ஆங்கிலமும் அல்லாத மற்றொரு மொழி ஹிந்தி எனவும் அது கடவுள் மட்டுமே பேசக்கூடியது என்று வெகு நாட்கள் நினைத்ததுண்டு//

இதை படித்து விட்டு சிரித்தேன்

//கடவுள் இல்லை. போகட்டும் !கடவுள் இருக்கிறார்.ஆகட்டும் ! கடவுள் நான்தான். ஒழியட்டும் !ஒவ்வொரு உயிரும் கடவுளாய்வாழட்டும்!உருவமும்,மொழியும் அற்றவர் !!கடவுள்.!!//


இதை படித்து விட்டு சிந்தித்தேன்

ADHI VENKAT said...

உங்க மகள் போலவே என் மகளும் ஏதாவது கேட்பாள். நானும் சொல்லி சமாளிப்பேன். நல்ல பகிர்வு.

ஆச்சி ஸ்ரீதர் said...

ஜெய்லானி அவர்களுக்கு நன்றி,ஆமாம்,சரிதான்.

ராஜி அவர்களுக்கு நன்றி, உங்களது சிரிப்பில் எனது பங்கில் மகிழ்கிறேன்.

ஆதி அவர்களுக்கு நன்றி, குழந்தைங்க கவனிப்பு திறனும்,கேள்வி கேப்பதும் அதிகமாகிவிட்டது.

Angel said...

"கடவுள் நான்தான். ஒழியட்டும் "
idhu enakku romba pidiccha line.

very nice.

ஆச்சி ஸ்ரீதர் said...

THANU U ANGELIN

ம.தி.சுதா said...

வித்தியாசமாய் மனதை தொட்டீர்கள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

ஆச்சி ஸ்ரீதர் said...

ம.தி.சுதா அவர்களுக்கு நன்றி,

தொடர் வருகையை விரும்பும் சகோதரி.

ம.தி.சுதா said...

மன்னிக்கணும் சகோதரம் வாரம் 2 தடவை தான் என் இணையப் பயணம்...

என்னோட தளமுகவரி கீழே இருக்கு.. தங்களை பின்தொடர்ந்து போகிறேன் முடிந்தால் என்னையும் தொடருங்கள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

Unknown said...

உங்கள் குழந்தையின் கேள்வி சரிதான்.
ஆனால் நம் தெயவத்திற்கு தமிழ் மட்டும் தான் தெரியும் என்று நம் மனதில் பதிந்திருக்கிறது. இது தான் காரணம்.

ஆச்சி ஸ்ரீதர் said...

பாரத் பாரதி அவர்களுக்கு நன்றி,
தங்கள் வருகையிலும் மகிழ்கிறேன் நன்றி,தங்கள் கருத்தும் சரியே.

MUTHU said...

All Notes are "Copyrights" or "Copy Write" !!!

Good, keep it up...

MUTHU said...

Extremely sorry, Any of my Comments hurt you please forgive. Just Take a Sportive...

Sorry for Once again.

All articles Very Nice also way of publishing also good.

Thanks for your all articles. keep it UP.

suvanappiriyan said...

//மொழியும் அற்றவர்//

உலகின் மூல மொழிகளான(நம் தமிழையும் சேர்த்து) அனைத்து மொழிகளையும் இறைவனே மனிதர்களுக்கு அறிவித்தான் என்று குர்ஆனும் பைபிளும் சொல்கிறது. இந்து வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கலாம். நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக இறைவனால் உருவாக்கப்பட்டவையே அத்தனை மொழிகளும் என்ற முடிவுக்கு வந்தால் குழப்பம் வராது.