- எத்தனைக்கு அன்பு செலுத்துகிறோமோ,அத்தனைக்கும் சார்ந்திருக்கிறோம் நம் அன்புக்குரியவரும் நம்மைச் சார்ந்திருக்க வேண்டுமென எதிர் பார்க்கிறோம்
- காதல் இன்னதென்று அறிய மாட்டோம்.அதன் அடையாளங்களான சந்தோசம்,வலி,பயம்,கவலை இவற்றை அறிவோம்.
- காதல் இயல்பானது,காலையில் உதிக்கும் சூரியன் போல .
- காதல் மெய்ப்பொருள்.தியானம் மெய்ப்பொருளின் அழகு.
- காதல் துயரத்தின் முடிவு.எங்கே துன்பங்கள் விலகிப் போகிறதோ,துயரங்கள் விடை பெறுகிறதோ அங்கே காதல் இருக்கிறது.
- காதலுக்காக ஏங்குங்கள் ,ஏங்காமல் காதல் இல்லை.
- காதல் என்பது ஒட்டுமொத்த நேசிப்பு.கருணையின் மறு வடிவம்.
- புலன்களால் உணர்வது ஒரு சிந்தனை.அது காதலாகாது.
- கற்பனை,எண்ணம்,பற்றுதல்,புறக்கணிப்பு எல்லாம் வெறும் புகைச்சுருள்கள்,புகை இல்லாத போது காதல் கொழுந்து விட்டு எரியும்.
- உள்நோக்கமும்,நிர்பந்தங்கள் அற்றதுமான காதல் நிலைக்கும்.
இந்த காதல் வாசகங்களுக்கு சொந்தமானவர் திரு.ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
இவருடைய புத்தகத்திலிருந்துதான் இந்த காதல் வாசகங்களை சேகரித்தேன்.
இவர் சொல்லாத விசியங்கள் இல்லை.அதில் காதலும் ஒன்று.
4 comments:
நான் ஜே கே கொஞ்சம் வாசித்திருக்கிறேன்
என்றாலும் இது நான் அறியாத,படிக்காத
அவரது பல சிந்தனைகளுள் ஒன்று
பகிர்வுக்கு நன்றி
thanks for sharing(i tried to install tamil font ,i repeatedly get a error msg saying my system doesnt support ,blah,blah)dont mistake me for writing in english.
பகிர்வுக்கு நன்றி.
ராஜி அவர்களுக்கு நன்றி.
no proplem,thanks angelin.
ஆதி அவர்களுக்கு நன்றி
Post a Comment