*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 20, 2011

வட மாநிலத்தவரின் சமையலகம்

பொதுவாக வட இந்தியர்கள் நம் அளவிற்கு எண்ணை,புளி,காரம் சேர்ப்பதில்லை.மற்ற எண்ணைகளை விட அதிகம் கடுகு எண்ணையைதான்  உபயோகிக்கிறார்கள்,இங்கு கடுகு எண்ணை மலிவாகவே கிடைக்கிறது, புளி எந்த ஒரு உணவிலும் சேர்ப்பதே இல்லை,புளிப்பு தேவை என்றால் எலுமிச்சம் பழச்சாரைதான் உபயோக்கிறாங்க,காரத்திற்கு மிளகு,மிளகாய் என்றாலும் காரத்தின் சாரம் குறைவுதான்.இஞ்சி,பூண்டு அதிகம் சேர்க்கிறார்கள்.தேங்காவும் சேர்ப்பதில்லை.

நம் பகுதியில் சாம்பார் பொடி(குழம்பு மிளகாய் பொடி ) இல்லாத வீடு இருக்காது,ரெடிமேட் பொடி வந்துவிட்டாலும் இன்னமும் பெரும்பாலான வீடுகளில் மிளகாய்,மல்லி அவரவர் விருப்பத்திற்கும் சுவைக்கும் ஏற்ப பொருட்களை சேர்த்து வெயிலில் காய வைத்து மில்களில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்வோம்.இங்கு அப்படி ஒரு மிளாகாய் பொடியும் இல்லை,அரைப்பதற்கு மெஷினும் இல்லை,வெறும்  கோதுமை,கடலை  மாவு தயார் செய்ய மட்டுமே அரவை இயந்திரங்கள் உபயோகப் படுத்துகின்றன.மிளகாய்ப் பொடி,மல்லிப் பொடி தனித்தனியாகவும்,கரம் மசாலா அதிகமாகவும்  உபயோகிக்கிறார்கள்.   
மூன்று வேலையும் ரொட்டி (சப்பாத்தி) சாப்பிடுபவர்களும் உண்டு,கூடவே சாஸ்திரத்திற்கு கொஞ்சம் சாதம் சாப்பிடுபவர்களும் உண்டு.காலை,மாலை ரொட்டி,மதியம் சாதம் சாப்பிடுபவர்களும் உண்டு.ரொட்டிக்கு மாவு பிசையும் போது,பாத்திரத்தின் வடிவம் எந்த அளவினாலும் சரி,மாவின் அளவு அதிகமோ,குறைவோ துளி கூட சிந்தாமல் பிசைந்து மிருதுவாக ரொட்டி இடுவதில் வல்லவர்கள் .சிலர் ரொட்டி  இடும்  குழவியை உபயோகிக்காமல்  கையிலே தட்டி தவாவில் ரொட்டி சுடுவதுண்டு,தவா இல்லாமல் நேரடியாக நெருப்பில் வாட்டி இடுவதும் உண்டு.ஆன்னால் இந்த வகையில் மிருதுவாய் எதிர் பார்க்க முடியாது.  நாம் தயிர் சாதம்,தக்காளி சாதம்,புளி சாதம்,பொங்கல்னு சாத வகைகள் செய்வது போல ரொட்டி சாப்பிடும் இவர்கள் ரொட்டியில் பல வகை செய்கிறார்கள்.நமது வெஜிடபிள் ரைஸ் போல,வெஜிடபிள் ரொட்டி செய்வதற்கு தயாராக உள்ளது.பெரும்பாலும் மாவு பிசைய படத்தில் உள்ளது போன்ற தட்டையே(தாம்பாளத்தை)உபயோகிக்கிறார்கள்.உருளைக் கிழங்கு வாய்வு என்று நம்மில் பலர் ஒதுக்குவோம்,இவர்களின் உயிர் பிரதானமாய் உருளைக்கிழங்குதான் உபயோகிக்கிறார்கள்.எந்த காய்களும் எண்ணை விட்டு முறுக முறுக வறுத்து,பொறித்து செய்வதில்லை.
 நம்ம இட்லி,தோசை,சாம்பார் பற்றி தெரியாதவர்களும் உண்டு,தெரிந்தவர்களுக்கு,ருசி அறிந்தவர்களுக்கு அதன் மீது விருப்பமும் உண்டு.அப்படி சுவைத்த பீகாரைச்  சேர்ந்த சகோதரி ஒருவர் பல நாட்களாக தனது சமயலறைக்கு வந்து சாம்பார் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்,மற்றவர் வீட்டு சமையலறையில் சமைக்க சங்கடப்பட்ட நான் ஒரு நாள் துணிந்து சென்றேன்,என் வீட்டு  சாம்பார் பொடி,புளியுடன்.
குக்கரில் சாதம் வைத்துவிடுகிறேன்,அதன் பின் சாம்பார் வைக்க துவுங்கு என்று சொல்லியவர்,குக்கரில் அரிசி,நீர்  போட்டு  தயாரானவர் ஸ்டவ்வில் குக்கரை வைத்தவுடன் சில வினாடிகள் எதோ பிரார்த்தனை செய்தார்,ஆச்சர்யமாக இருந்தது,என்ன பிரார்த்தனை என்று கேட்டபோது “சமையல் செய்யத் துவங்கும் போது  படைத்த பிரம்மா,அன்ன பூரணி,அக்னி பகவானை வழிபட்டுவிட்டுதான் துவுங்குவேன்,இது எங்கள் மரபு வழி பழக்கம்” என்றார்.நல்ல பழக்கம் என்று சொல்லி சாம்பார் வைக்கத் துவங்கினேன்,எங்க வீட்டு மிளகாய் பொடி சேர்ப்பதில் பிரச்சனை இல்லை,ஆனால்  புளி சேர்க்க அந்த பெண் ஒற்றுக்கொள்ளவே இல்லை,கொஞ்சம் புளி சேர்த்தால்தான் நல்லாயிருக்கும்னு வலுக்கட்டாயமாக சேர்த்தேன்,கொதியல் வந்து விட்டது,அடுத்து அடுப்பை நிறுத்த வேண்டியதுதான் பாக்கி,அதற்குமுன் வழக்கம்போல நான் கரண்டியில் கொஞ்சம் சாம்பார் எடுத்து உள்ளங்கையில் ஒரு துளி விட்டு சுவை சரிபார்க்க சென்ற என்னை வேகமாக தடுத்தார்.எச்சில் செய்கிறோம் என நினைத்து தடுக்கிராறோ என விழித்த வண்ணம் ‘சாரி’என்றேன்.
அதற்கு அவர் “பரவாயில்லை,எங்களுக்கு உணவு பரிமாறும் முன் சுவை சரி பார்க்கும் பழக்கம் இல்லை” என்றார்.மேலும் “சமைக்கும் போது சரியாக சமைக்க வேண்டும்,சாப்பிடும்  போதுதான் சுவைக்க வேண்டும்.சமையல் என்பது நாம் படைப்பது(சமைப்பது)உண்பதற்கு முன் சந்தேகித்து சுவை சரி செய்தால் “நீ மற்றவரிடமும்,மற்றவர் உன்னிடமும் பாசமுடையவராகவும்,நம்பிக்கை உடையவராகவும் இருக்க முடியாது “என்று கடவுள் சாபம் தருவாராம்” என்றார்.
உங்க வீட்டுக்கு வந்து இன்று நல்ல ,நல்ல பாடம் கற்றுக் கொண்டேன் என்று சொல்லி சாம்பார் எப்படி இருக்கோ என்ற சந்தேகமுடன்  விடை பெற்றேன்.அந்த சகோதரி ஒரு மணிநேரத்தில் என் வீட்டிற்கு வந்து தன் கணவர்,கொழுந்தனார்,பிள்ளைகள் எல்லோரும் மிக சுவையாக இருக்குன்னு பாராட்டினார்கள்,எனக்கும் பிடிச்சிருக்கு, நான் இன்று கவனித்ததை வைத்து அடுத்தமுறை நானே  சாம்பார் செய்து உங்க வீட்டுக்கு எடுத்து வர்றேன்னு சொல்லிவிட்டுப்  போனார்.அனால் புளி மட்டும் சேர்க்க மாட்டேன் என்றார்.
நம்மில் சிலருக்கு உணவு சமைத்த பின் சிறிது காக்கைக்கு வைத்து விட்டு உணவு பரிமாறும் பழக்கமிருக்கும்.அந்த சகோதரி தினமும் எத்தனை   வேலை  ரொட்டி செய்தாலும் பிசைந்து வைத்திருக்கும் மாவில் ஒரு சின்ன உருண்டை எடுத்து ஸ்டவ்வின் மீது ஒரு கார்னரில் வைத்திருப்பார்.ரொட்டிகள் செய்து முடித்தபின் அந்த உருண்டை காக்கைக்கு வைக்கப் படுவாதாக நினைத்து வீட்டு குப்பைத் தொட்டியிலே போடுவார்.(காகத்தை அழைத்து போடும் வசதி இருக்கும் பகுதியில் இல்லை.)
சீசனில் மலிவாக கிடைக்கும் முள்ளங்கி,கேரட்,குடை மிளகாய், போன்றவற்றில் ஊறுகாய் போட்டு வைத்துக் கொள்கிறார்கள்.முள்ளங்கியை பச்சையாக சாப்பிடுபவர்கள் அதிகம்.வெந்தியக் கீரையை காய வைத்து டப்பாவில் போட்டு வைத்துருகிறார்கள்.உலர்ந்த கீரையை ரொட்டியிலோ,சப்ஜியிலோ சேர்த்துக் கொள்கிறார்கள்.வீட்டிலே நெய் தயாரிப்பதில் கில்லாடிகள்.நிறைய எளிய இனிப்பு வகைகளும் வீட்டிலயே செய்வார்கள்.                             

20 comments:

பொன் மாலை பொழுது said...

நல்ல அனுபவம்.வட நாட்டவர்கள் அதிகம் செண்டிமெண்ட்ஸ் பார்ப்பார்கள். மூட நம்பிக்கைகள் மிக அதிகம். நீங்கள் அவர்களை பற்றி விவரித்த அத்தனையும் நானும் அனுபவித்ததுண்டுதான். நல்ல அனுபவம் .

மதுரை சரவணன் said...

vada naattavar parri samayal muulam nalla pakirvu.. vaalththukkal

எல் கே said...

மிளகாய் காரம் உடலுக்கு சூடு. மிளகுக் காரம் உடலுக்கு நல்லது :)

Unknown said...

வித்தியாசமான அனுபவம்:-) செண்டிமெண்ட்ஸ் அவங்களுக்கு ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போல இருக்கே...

Unknown said...

இவ்வளவு உன்னிப்பாக வட இந்தியரைப்பற்றி சொல்லுவதைப்பார்க்கும் போது ஒன்று நீங்கள் வடை இந்தியாவில் இருக்க வேண்டும் அல்லது வட இந்தியர் உங்கள் வீட்டின் அருகே இருக்க வேண்டும். ஆனால் நான் முதலில் சொன்னதுதான் சாத்தியம். ஏனென்றால் அவர்கள் நம் ஊரில் பிறரிடம் அதிகம் பழகுவது குறைவு. சாதி எல்லாம் அதிகம் பார்ப்பதே அதற்க்கு காரணம். அவர்கள அதிகமாக உயர் ஜாதிகளாக இருப்பார்கள். அசைவம் சாப்பிடுவர்கள் குறைவு.

வெங்கட் நாகராஜ் said...

வட இந்தியர்களின் பல பழக்கங்கள் நம்மிலிருந்து மாறுபட்டவை! மூன்று வேளையும் ரொட்டியின் வகைகளை சாப்பிடுவது அவர்களுக்கு இயல்பு!

நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

இன்டலி தளத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் .

என் நட்பு வட்டத்தில் இணைந்தோருக்கும் நன்றிகள் .

சுக்கு மாணிக்கம் அவர்களுக்கு, முதல் வருகைக்கும்,சாட்சியாக கருத்திட்டமைக்கும் நன்றி,.
ஆமாங்க,தொட்டதற்கும் சாஸ்திரம் பாக்கிறாங்க,

மதுரை சரவணன் அவர்களுக்கு நன்றி.
எல்.கே அவர்களுக்கு நன்றி,
பால் பொருட்களான தயிர்,நெய், நிறைய சேர்த்துக்கிறாங்க.


நன்றி சரேஷ்.
ஒரு மறக்க முடியாத முடியாத நிகழ்வை கேளுங்க,
ஒரு முறை இட்லி செய்து கொடுத்த போது,முதன் முதலாக பக்கத்து வீட்டு சகோதரி இதை எப்படி இத்தனை மிருதுவாக ஒரே வடிவத்தில் செய்றீங்கனு கேட்டபோது இட்லி பாத்திரத்தை எடுத்து காமித்தவுடன் அந்த பெண்ணுக்கு வினோதமான பாத்திரமாக பட்டது,இட்லி தட்டை திருப்பி திருப்பி பார்த்தவர் இந்த பாத்திரம் உங்க ஊர்ல செயறாங்களா?இது என்ன போர் வீரர்கள் சண்டைக்கு உபயோகிக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னவுடன் என்னால் சிரிப்பை கட்டு படுத்த முடியவில்லை.அம்மாம் போர் வீரர்களிடமிருந்துதான் வாங்கிட்டு வந்தேன்னு கிண்டலடித்து,பிறகு எங்க ஊர்ல எல்லா வீட்டிலும் இந்த பாத்திரம் இருக்கும் இட்லி செய்வோம்,இதற்கான மாவு இப்படி அரைப்போம்னு,சொன்னபோது,அவருக்கு ஒரே ஆச்சர்யம்,இந்த மாவு அரைக்கிற மெசினையுமா எல்லோரும் வாங்கி வச்சுருப்பாங்கனு கேட்டது எனக்கு இன்னும் சிரிப்புதான் வந்தது.


கே.ஆர்.விஜயன் அவர்களுக்கு, தங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.என் ப்ரோபைளை நீங்கள் பார்க்கவில்லைன்னு நினைக்கிறேன்,நான் தற்பொழுது ஹரியானாவில்தான் வசிக்கிறேன்.மேலும் வட இந்தியர்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை.


வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வட மாநிலத்தவர் பற்றி அதிகம் தெரிந்த
தங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

raji said...

ஹாய் ஆச்சி!

நல்ல பதிவு.நாங்கள்
கூட எங்கள் வீட்டில் குக்கர் அடுப்பு மூட்டும் முன்
ஒரு நிமுடம் அன்னபூரணியை தியானிக்கும்
வழக்கமுண்டு

அய்யோடா சாமி!புளி தக்காளி மிளகாய் லாம்
இல்லாம நமக்கு சாப்பிடவே தெரியதுடாப்பா!

வலது ஆள்காட்டி விரலில் அடிபட்டிருப்பாதால்
இடது கையால் பின்னூட்டம் போடுவதால்
தாமதாகவே போட்டுக் கொண்டுள்ளென்.
அதான் ஒரு வாரமா பதிவு கூட இல்லை பாருங்க
(என்னது?இதான் சாக்குனு எல்லாருமா
எஞ்சாய் பண்றீங்களா?இருக்கட்டும்.கை நல்லானதும் கவனிச்சுடறேன்,ஓக்கே?)

Angel said...
This comment has been removed by the author.
Angel said...

arumaiyana padhivu .
avargal chilli powder serpathu kidaiyadhu aanal sappadu red colouril irukkum, tomato paste serpathaal.
thanks for sharing

ஆச்சி ஸ்ரீதர் said...

ராஜி அவர்களுக்கு,

விரலில் என்னாச்சு?எதோ பர்சனலி பிசினு நினைத்தேன்.இதுக்குதான் அதிகமா பதிவு போடக் கூடாது,திர்ஷ்டி பட்டுவிட்டது.சரி ஒன்னும் அவசரமில்ல,உங்க இடத்தை யாரும் பிடிக்க முடியாது,குணமானவுடன் பொறுமையா வாங்க .

சாரி ஏஞ்சலின்

நான் தெரியாமல் டெலிடை கிளிக்கிடேன் .அது உங்க கமன்ட்னு நினைக்கிறேன்.நீங்களும் சமைக்கும்போது கடவுளை வணங்குவேன்னு சொல்லியிருந்தீர்கள்னு நினைக்கிறேன்.
எல்லோரும் ரொம்ப நல்ல பிள்ளையாதான் இருக்கீங்க.வருகைக்கு நன்றி

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு ஆச்சி. வட இந்தியர்கள் மூன்று வேளையும் சப்பாத்தி சாப்பிட்டாலும் சப்பாத்திக்கு மூன்று, நான்கு வித சைட்டிஷ் செய்வார்கள். இங்கயும் இட்லி தட்டுகள் விற்கிறார்கள். இங்கு கிடைக்கும் நல்ல திக்கான பாலால் நானும் வீட்டில் தான் வெண்ணை எடுத்து நெய் காய்ச்சுவேன். வெளியில் வாங்குவதே இல்லை. எங்கள் வீட்டிலும் சமைக்கும் போது சுவைத்து பார்க்கும் பழக்கம் இல்லை.

Angel said...

no .its my fault .i accidentally deleted that comment .i am very confidant about my cooking .thats why i pray before cooking and serving the food.(en samaiyalai sapidaravanga nalla irukkanume adhukkuthaan)

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றி ஆதி,

நீங்கள் எல்லாம் கிடைக்கும் நல்ல பகுதியில் இருக்கீங்க போல,வாழ்த்துக்கள்,ஏற்கனவே ஒரு பதிவில் கருவப்பிலை,வாழை த்தண்டுலாம் அருகில் சந்தையில் கிடைப்பதாக சொல்லியிருந்தீர்கள்.நாங்க இருக்கும் ஊர் பகுதியின் கடைசியில் ஒரு கேரளக் கடை உள்ளது.அந்த கடைக்கும் பர்டிகுளர் டைம் கிடையாது,அதைவிட்டால் எங்க பகுதியிலிருந்து கரோல்பாக் செல்ல இரண்டு மணி நேரம் ஆகும்,கரோல்பாக் வந்தால்தான் உண்டு,அதை விட்டால் நம்ம ஆர்.கே.புரம்.மற்றபடி நல்ல வெஜிடபில்ஸ்ளாம் பக்கத்திலே கிடைக்கும்.நெய் எடுப்பதை பார்த்துருகிறேன்,ஆனால் எனக்கு அந்த அளவிற்கு பொருமை கிடையாது,ஆதி நீங்க அச்சி பச்சி.

நன்றி ஏஞ்சலின்.

நான்தான் தவறுதாலா கிளிக்கிட்டேனு நினைத்தேன்.
ஒ!சமைக்கும் முன் சாமி கும்பிடுவது இதுக்குதானா?,ஓகே ,ஓகே.

goma said...

எனக்கு ஏன் இந்த ருசி பார்க்கும் பழக்கம் இல்லையென்ரு இப்பொழுதல்லவா தெரிகிறது.
அறியாமலேயே நான் கடை பிடித்து வந்த பாடம்

GKP Pillay said...

Best wishes...........very interesting.i think its a healthy way to express urself & share with the friends..Its a first time for me to entering this friends circle.nice sharing,knowing more information from this article...best of luck....Loving friend -->>GKP

ஆச்சி ஸ்ரீதர் said...

GOMA அவர்களுக்கு நன்றி,வரவில் மகிழ்கிறேன்.

GKP PILLAI நன்றி,
இவர் என் அன்புத் தோழி,எங்களது நட்பின் வயது பத்து வருடம் இவர்,எனக்கு உதவி,உறுதுணையுமாய் இருக்கிறவர்.(என் வண்டவாளம் தெரிந்தவர்)

Senthil Kumar.T.N said...

hai parameshwari
konjam lata padichan
ennanga bayangarama kalakuringa
congrats
keep going

ஹுஸைனம்மா said...

வலைச்சரம் வழி வந்தேன். நல்ல அநுபவப் பதிவுங்க.

சமைத்ததை டேஸ்ட் பார்க்காமல் இருக்கீறதுக்குச் சொன்ன காரணம் நியாயமானதா இருக்கு!!

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு