*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 13, 2011

காதல்


 காதலர் தினம் கொண்டாடுபவர் ஒரு பக்கம்,
காதலர் தினத்தை எதிர்ப்பவர் மறு பக்கம்,
                  இவர்களுக்கு இடையே
காதல் என்னவென்று ஆராயும் விடலைகள்,
காதலில் விழுந்துவிட்ட விட்டில் பூச்சிகள்,
ஒரு தலைக் காதல்கள்,
உண்மை காதல்கள்,
தெய்வீகக் காதல்கள்,
கானல் நீர் காதல்கள்,
கவுரவக் காதல்கள்,
பெருமையான  காதல்கள்,
டேட்டிங் காதல்கள்,
முடியாத  காதல்கள்,
முறியடிக்கப்பட்ட காதல்கள்,
கள்ளக் காதல்கள்,   
ஏமாற்றப்படும் காதலிகள்,
ஏமாற்றப்படும் காதலன்கள் ,
காதலென்ற  பெயரில் வரம்பு மீறல்கள்,
காதலிக்கப் படாதவர்கள்,
காதலுக்காக ஏங்குபவர்கள்,
நட்பை காதலாக்கியவர்கள்,
காதலை நட்பாக்கியவர்கள்,  
திருமணத்தில் முடியும் காதல்,
திருமணத்தில் முடியாத காதல்,
திருமணத்திற்கு முன்னும்
பின்னும் காதல்
ஒன்றுதான்,
வித்தியாசம்தான் நூறு !!!  
காதலர் தினத்தைக் கொண்டாடினால் கொண்டாடு,
எதிர்ப்பு தெரிவித்து போராடினால் போராடு ,
நான் போறேன் என் வேலைய பாக்க
அப்பதான் கிடைக்கும் எனக்கு
ஒரு வேலை சோறு,
எம்பாடு  பெரும்பாடு:
என் காதல் என்
தொழிலோடு :

10 comments:

raji said...

//என் காதல் என்
தொழிலோடு//


மிக சரியான கருத்து

தொழிலோடு காதல் கொண்டால்
மட்டுமே வாழ்க்கையின் மேல் காதல் இருக்கும்

Angel said...

fantastic

எல் கே said...

குட். அப்புறம் போட போக்குல ஒரு விஷயம். இந்த 14 ஆம் தேதி நம்ம ஊர்ல மட்டும்தான் காதலர் தினம். அமெரிக்கவில், ஈரோப்ல எல்லாம் தங்கலின் அன்பை வெளிப்படுத்தும் தினம். அது யார வேண்டுமானாலும் இருக்கலாம், சக நண்பர்கள், பள்ளிகூட ஆசிரியர்கள் ,அப்பா,அம்மா,தங்கை,அண்ணன் என்று தங்களின் அன்பை வெளிப்படுத்து நாள். நம்ம ஆளுங்க அரைகுறையா காப்பி அடிச்சிட்டு காதல்னு காமக்களியாட்டம் நடத்தறாங்க

அன்புடன் நான் said...

என் காதல் என்
தொழிலோடு ://

அப்படின்னா நீங்க காதலை ஆதரிக்கல அப்படிதானே!

நான் இன்றைய காதலை வெறுக்கிறேன்.
எல்லாம் மானங்கெட்ட தனமா இருக்குங்க .... அதுல ஒரு நேர்மை புனிதம் எதுவும் இல்ல.
உங்க கருத்து கவிதைக்கு என் பாராட்டுக்கள்.

அன்புடன் நான் said...

திரு எல் கே கருத்தும் சரியானதே....

எல் கே said...

//நான் இன்றைய காதலை வெறுக்கிறேன்.
எல்லாம் மானங்கெட்ட தனமா இருக்குங்க //

inniku kaathail illa nanbaa. verum kaamam(lust)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நான் போறேன் என் வேலைய பாக்க; அப்பதான் கிடைக்கும் எனக்கு ஒரு வேலை சோறு, எம்பாடு பெரும்பாடு: என் காதல் என் தொழிலோடு //

நல்ல வரிகள்.பதிவுக்குப் பாராட்டுகள்.

”செய்யும் தொழிலே தெய்வம்; அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்”
என்ற கருத்தைப் பிரதிபலித்துள்ளது உங்களின் இந்தக் கவிதை.

ஆனால் இந்த காதல் பற்றிய உண்மைகள் ஒவ்வொருவருக்கும் புரிவதற்குள், காலம் கடந்து விடுகிறது. பட்டால் தான் எதுவுமே பளிச்சென புரிகிறது.

ADHI VENKAT said...

காதல் பற்றிய லிஸ்ட் நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

ராஜி அவர்களுக்கு நன்றி.
செய்யும் தொழில் தான் தக்க பலன் பெறலாம்.
அதில் மற்றவர்களையும் சந்தோஷப் படுத்தலாமே தவிர
துன்ப படுத்திட முடியாது.

thanku angelin.

சி .கருணாகரசு அவர்களுக்கு,
தங்கள் முதல் வருகைக்கும் & கருத்திற்கும் நன்றி.நான் காதலுக்கு எதிராளி அல்ல.தமது உல்லாசத்துக்கு காதல் போர்வை போர்த்திக் கொள்பவர்களால் ,எங்கயோ இருக்கும் சில உண்மைக காதல்களை அடையாளம் காண முடியவில்லை.

எல்.கே அவர்களுக்கு நன்றி.
நீங்கள் சொல்வது உண்மைதான்,உள் நாட்டில் வட இந்திய பகுதிகளில் கொண்டாடப்படும் ராக்கி பண்டிகை சகோதரத்துவத்தை உணர்த்தும் தினம்,காதலர் தினம் அளவிற்கு பிரபலமாக இல்லை.எல்லோரும் சகோதரம் ஆவது சாத்தியமில்லை என்றாலும்,காதலென்ற பெயரில் ஊரை ஏமாற்றாமல் இருக்கலாம்

வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றி.
மனிதனுக்கான உணர்வத்தனையும் இருந்தாலும் அன்றாடம் கூலிக்கு வேலை பார்த்தால்தான் உணவு என்றிருக்கும் அடித்தட்டு மக்களுக்கு காதலை பற்றி எப்படி சிந்திக்க முடியும்.அப்படியே அவர்களுக்கு காதல் வந்துவிட்டால் மற்றவர்களை விட ஆழமானதாகதாநிருக்கும்.

ஆச்சி ஸ்ரீதர் said...

ஆதி அவர்களுக்கு நன்றி,