*வணக்கம் வருகைக்கு நன்றி*

Dec 8, 2011

இந்திய கலைப்பொருட்களின் பெருமை சொல்லும் இந்திய அரசால் நடத்தப்படும் கண்காட்சியகம்

தில்லியில் ஜன்பத் என்ற இடத்தில் ஜவகர் வியாபர் பவன் என்ற முகவரியில் சென்டரல் காட்டேஜ் இண்டஸ்டரிஸ் எம்போரியம் உள்ளது.இங்கு நம் இந்தியர்களின் பெருமையை பறைசாற்றும் கைவினைப்பொருட்களும்,கலைநயம் மிக்க பொருட்களும் காட்சிக்கு உள்ளது.பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த பொருட்கள் முதல் தற்போழுதுள்ள பொருட்கள் வரை காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ளது.


1948 ஆம் ஆண்டு முதல் நம் இந்திய அரசாலே நடத்தப்படும் இந்த காட்சியத்திற்கு விடுமுறை கிடையாது.நுழைவு கட்டணமும் கிடையாது.ஆனால் பொருட்களின் விலையிலும் மலிவு இல்லை(இதை முக்கியமாக சொல்ல வேண்டுமே).ஆனால் விலை கொடுத்தாலும் கிடைக்காத சில அரிய பொருட்களை காணும்போது,தேடி அலையாமல் ஒரே இடத்தில் கிடைக்கும்போது விலை இப்படித்தானிருக்குமென தோன்றியது.இந்த காட்சியகம் கானாட் ப்ளேஸிற்கு அருகில்தான் உள்ளது.

இந்திய சுற்றுப்பயணம் வருபவர்கள் தில்லியில் இந்த இடத்திற்கு வந்தாலே இந்தியாவின் அனைத்து மாநில கலைநுணுக்கங்களையும் தெரிந்துகொள்ளலாம். விரும்பியதை விலை கொடுத்தும் பெறலாம்.அனைத்து இந்திய சிறப்பான ஓவியங்கள், ஆடைகள்,அலங்காரப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், சில மூலிகை பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், புத்தகங்களும் இடம்பெற்றுள்ளது. சிற்றுண்டிக்கான வசதியும் உள்ளது.
நுழைவுவாயில்
 ஆள் உயரத்திலிருக்கும் இந்த நடராஜர் சிலையை கடந்துதான் உள்ளே செல்ல வேண்டும்.இவரும் விற்பனைக்குதான்.விலை பதினாறு லட்சத்து நாற்பதாயிரத்து சொச்சம்.வாசலில் இதை பார்த்தவுடனே திரும்பி வீட்டுக்கு போய்டலாம்னு எனக்கு தோனுச்சு.என்னதான் மேலும் இருக்குன்னு பாத்துட்டு வருவோம்னு உள்நுழைந்தோம்.கடந்த ஞாயிற்றுக் கிழமை 4/12/2011 அன்றுதான் சென்றோம்.சுற்றிப்பார்க்க இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரம் தேவைப்பட்டது.ஆனால் அங்கு வருகை தந்திருந்தவர்களில் பத்து இந்தியர்கள் கூட இல்லை.அதிக வெளிநாட்டினரே வந்திருந்தனர்.நமது கலைநயத்தை ஒன்றுவிடாமல் ஃபோட்டோ எடுத்தபடியும்,நிறைய பொருட்களை வாங்கிக்கொண்டும் இருந்தனர்.

ஒவ்வொரு பிரிவிலும் நாம் வாங்கும் பொருள்களுக்கு கணினி பில்லின் காப்பி கொடுக்கப்பட்டது.ஒரிஜனல் பில்லும், பொருளும் டெலிவரி பிரிவில் அவர்களே சேர்த்துவிடுகின்றனர்.நாம் கண்காட்சியகத்திலிருந்து வெளியே செல்லும்போது காப்பி பில்லும்,பணமும் கொடுத்துவிட்டு ஒரிஜனல் பில்லுடன் பொருளைப் பெற்று வெளியேறலாம்.பார்சல் அனுப்ப வேண்டுமெனிலும் அவர்களே அதற்குத் தகுந்தாற்போல பேக்கிங் செய்து தருகிறார்கள்.

பழங்காலத்து கதவுகள்,அணிகலன்கள்,கோவில்களில் காவல் தெய்வங்களாக இரு பக்கமும் பெரிய சிலைகள் இருக்குமே,அப்படியான சிலைகள்,பெரிய பல கடவுள் சிலைகள் ,இவற்றிலும் வெவ்வேறு மூலப்பொருளகளால் செய்யப்பட்ட வடிவ விதங்கள்,பழங்காலத்து மட்பாண்டங்கள்,பழங்காலத்தில் நோய்வாய்பட்டவர்கள் இறக்காமல் நீண்டநாள் அவதிப்படுபவர்களை பெரிய மண்பானையில் உள்ளே வைத்து மூடிவிடுவார்களே!அத்தகைய பானைகளும் இருந்தன.

  

பித்தளை அண்டா, குண்டாக்கள், பித்தளை, வெள்ளி, தங்க பாத்திரங்கள், பித்தளை பொருட்களின் மீது தங்க கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ள பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள், ஆபரணங்கள், நவரெத்தினங்கள், பல வகை மரத்தினாலான பொருட்கள்,பீங்கான்,பிளாட்டினம்,மார்பிள் மற்றும் பலவகை கற்களால் செய்யப்பட்ட அனைத்தும் பல்வேறு மாநிலங்களுகான கலைத்திறன்களுடன் காணப்பட்டது.தங்க,வெள்ளி நாணயங்களும் விற்பனைக்கு இருந்தன.

அன்று அங்கு ஒரு கிராம் தங்கத்தின் விலை 2820 ரூபாயாக இருந்தது.ஆடைகள்,கம்பளிகள்,சால்கள்,பட்டு மற்றும் ரெடிமேட் உடைகளின் விலைகள் அந்தந்த மாநிலத்திற்கே சென்று வாங்கும் போக்குவரத்து செலவையும் சேர்த்து பில் போட்டிருக்கிறார்கள் என்று நினைக்க வைத்தது.பெரிய மற்றும் சிறிய பொருட்களின் கலை நயமும், வண்ணமும் வியக்கும்படிதான் இருந்தது. இங்குள்ள பொருட்களை இணையத்தின் வழியே ஆன்லைனிலும் விலை கொடுத்து வாங்கலாம். 


தலையனை உறை







.


பல வெளிநாட்டினரும் மற்றும் சிலரும் இங்கு வந்திருகின்றனராம்.கீழே உள்ள படங்கள் இணையத்தில் கிடைத்தது.

26 comments:

ஆச்சி ஸ்ரீதர் said...

படங்களை இணைப்பதில் சொதப்பலாகிவிட்டது.எனவே சில மணி நேரங்களுக்கு முன் பதிவிட்டதை மீண்டும் பதிவிட்டுள்ளேன்.

வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களின் கருத்துரை

மிக அழகான படங்களுடன் கூடிய அசத்தலான பதிவு.

பாராட்டுக்கள். vgk

ம.தி.சுதா அவர்களின் கருத்துரை

////1948 ஆம் ஆண்டு முதல் நம் இந்திய அரசாலே நடத்தப்படும் இந்த காட்சியத்திற்கு விடுமுறை கிடையாது////

அங்கே வேலை செய்பவர்களுக்கு கிடைக்கும் தானேங்க..

அருமையான தகவலுடன் கூடிய பகிர்வு...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)

நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record

சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்


2011/12/7 ♔ம.தி.சுதா♔


♔ம.தி.சுதா♔has left a new comment on your post "இந்திய கலைப்பொருட்களின் பெருமை சொல்லும் இந்திய அரச...":

////1948 ஆம் ஆண்டு முதல் நம் இந்திய அரசாலே நடத்தப்படும் இந்த காட்சியத்திற்கு விடுமுறை கிடையாது////

அங்கே வேலை செய்பவர்களுக்கு கிடைக்கும் தானேங்க..

அருமையான தகவலுடன் கூடிய பகிர்வு...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)
Posted by ♔ம.தி.சுதா♔ to ஆச்சி ஆச்சி at December 7, 2011 9:41 PM

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம்: 2 இண்ட்லி: 2

சொதப்பியதும் நல்லதே. மீண்டும் வர முடிந்தது. மீண்டும் வோட் போட முடிந்தது. கலைப்பொருட்கள் யாவுமே ரொம்ப அழகாகக் காட்டியுள்ளீர்கள்.

அந்த தொந்திப்பிள்ளையார் பொம்மைகள் அழகாக உள்ளன. கைவேலையால் செய்துள்ள யானையும் ஜோர்.

சொதப்பல் இல்லாமல் படங்களை இணைக்க ஒரு முறை கோவைத் தங்கத்திடம் போய்ப் பயிற்சி எடுத்து வாருங்கள்.

அன்புடன் vgk

கீதமஞ்சரி said...

கண்ணைக் கவரும் அழகழகான கலைநயத்துடன் உருவாக்கப்பட்டப் பொருட்கள் வியக்கவைக்கின்றன. விலையிலும்தான். வாங்க முடிந்தவர்கள் வாங்கி இந்தக் கலைஞர்களை ஊக்குவிக்கலாம். வாங்க முடியாதவர்கள் கண்குளிரப் பார்த்து மகிழலாம். படங்களுடனான பகிர்வுக்கு நன்றி ஆச்சி.

துளசி கோபால் said...

அருமை!!!!

உங்கள் பதிவும் & படங்களும் அருமை!

ஆசை இருந்தாலும் காசைப்பார்த்தால் கொஞ்சம் பின்வாங்கத்தான் வேணும்!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
அருமையான படத்தொகுப்பு.
நன்றி அம்மா.

பால கணேஷ் said...

அழகிய கலை வேலைப்பாடுகள் கண்ணைப் பறிக்கின்றன. படங்கள் அத்தனையும் அழகு. (நீங்களே எடுத்ததா? பாராட்டுக்கள்!) டெல்லி வந்தால் வாங்கலாம் என குறித்து வைத்துக் கொண்டேன். இப்போதைக்கு படம் பார்த்து பெருமூச்சு விட்டுக்கறேன்... பகிர்ந்ததுக்கு மிக்க நன்றிங்க...

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு ஆச்சி. படங்கள் அத்தனையும் அழகு. நான் இன்னும் இந்த இடத்திற்கு சென்றதில்லை.நேரமிருக்கும் போது சென்று பார்க்கிறேன்.

கனாட் ப்ளேஸ் வந்துட்டு அங்கிருந்து ஒரு 15 நிமிட தூரத்தில் எங்கள் வீடு. தகவலே சொல்லாததால் டூக்கா...
கட்டி....

Angel said...

படங்களும் பதிவும் அருமையாக இருக்குங்க .
சென்ற வாரம் ஆலயத்தில் ஒரு பிரிட்டிஷ் தம்பதியரை சந்தித்தேன் .வயது இருவருக்கும் எழபதிருக்கும்.ஒரே டெல்லி புராணம் .அவர்கள் பேச்சு முழுதுமே அங்கத்தைய சாப்பாடு மற்றும் கைவினை பொருட்கள் பற்றி தான் இருந்தது .எப்பவாது சமயம் வாய்த்தால் வட இந்திய டூர் செல்லனும்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு..... நிறைய முறை சென்றிருக்கிறேன் - சில பரிசுப் பொருட்கள் வாங்க! - சற்றே விலை அதிகம் என்றாலும் நல்ல பொருட்கள் கிடைக்கும்....

raji said...

சூப்பர் பதிவு ஆச்சி.படங்களெல்லாம் பாக்கவே அற்புதமா இருக்கு.ஆனா நீங்க அந்த நடராஜர் சிலை விலை சொன்னதும் எனக்கு மயக்கமே வந்துடுச்சு.வெறுமே பார்த்து ரசிக்கலாம்.ஆனா அதுக்கே அழகாருக்கு.பகிர்விற்கு நன்றி

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன் சார்

நீங்க முதலில் போட்ட வாக்கை வேஸ்ட் பன்னிட்டேன்.மீண்டும் வருகை தந்து கருத்திட்டு வாக்களித்துள்ளமைக்கு நன்றிகள்.உங்களுக்கு தொந்தி பிள்ளையார் ஏன் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்.


@ம.தி.சுதா
வாங்க,ரொம்ப நாளுக்கு பிறகு வந்துருக்கீங்க.நன்றி.

//அங்கே வேலை செய்பவர்களுக்கு கிடைக்கும் தானேங்க..//

நல்ல கேள்வி.வேளையாட்களுக்கு விடுமுறைக்கு எதாவது மாற்று வழி இருக்கலாம்.விசாரிக்கவில்லை.விடுமுறை இல்லாத வேலைக்கு யாரு வருவாங்க.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கீதா
ஆமாங்க.ஆனாலும் அந்த கலைஞர்கள் இந்த விலைக்கு தந்திருக்கமாட்டார்கள்னு நினைக்கிறேன்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

@துளசி கோபால்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
//ஆசை இருந்தாலும் காசைப்பார்த்தால் கொஞ்சம் பின்வாங்கத்தான் வேணும்!//
சரியா சொல்லிட்டீங்க.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ரெத்னவேல் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

@கணேஷ்

நன்றி சார்,தில்லிக்கு வருகை தரும்போது இங்கேயும் வந்திடுங்கள்.
சில படங்கள் இணையத்திலிருந்து எடுத்ததுதான்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஆதி

பக்கத்திலதானே,சென்று வாருங்கள்.
&கோவிச்சுக்காதிங்க.கானாட் ப்ளேசிற்கு பக்கத்திலதானு இந்த எம்போரியம் இருக்குனு அங்க போனபோதுதான் தெரிஞ்சுகிட்டேன்.இங்கதான் இருக்கீங்கனு கணவரிடம் சொல்லிக்கொண்டேதான் வந்தேன்,பதிவுகளில் உங்கள் குடும்பத்தாரின் ஃபோட்டோக்களை பாத்திருப்பதால் தென்படும் முகங்களில் ஒத்து போகிறதானு உத்து,உத்து பாத்துகிட்டே போனேன்.

@ஏஞ்சலின்
கட்டாயம் வாங்க,சாப்பாடு நல்லாருக்கும்னு சொன்னாங்களா?இந்த ஸ்டேட்மெண்டை நீங்க வரும்போது அனுபவித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்
வாங்க.துணைவியை விட்டுபுட்டு நீங்கமட்டும் இங்க வந்துருக்கீங்களா?

இங்கு நல்ல பொருள்கள் கிடைக்கின்றனதான்.ஆனாலும் பரிசுப்பொருட்கள் வாங்க இங்க வருவீங்களா?அம்மோ!

ஆச்சி ஸ்ரீதர் said...

@ராஜி
நன்றிங்க.20 இன்ச் சைஸ் இருக்கும் ஒரு கிராமம் போன்ற ஓவியம்.இரெண்டு லட்சத்தி சொச்சம் போட்டிருந்தது.

சாமி ரூம் கதவுகள் போல பல வேலைப்பாடுகளுடன் இருந்தது.விலை படிக்க தெரியாமல் ஒன்று,பத்து,நூறு,ஆயிரம்னு எண்ணிக்கொண்டிருந்தேன்.ஒரு கோடியே முப்பத்தி மூனு லடசித்தினு எத்தன ஆயிரமோனு கணவர் சொன்னவுடன் எனக்கு காதே அடைத்துவிட்டது.நிசமா சொன்னாரா,பொய்யா சொன்னாரானு தெரியல.

kaialavuman said...

ரொம்ப நாளைக்கு முன் சென்றது. மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றிகள்

ஆச்சி ஸ்ரீதர் said...

@வேங்கட சீனிவாசன்

வாங்க,வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிங்க.

சிவகுமாரன் said...

கண்காட்சிக்கு சென்ற திருப்தி கிடைத்தது. ( எப்படியும் எதையும் காசு கொடுத்து வானங்க போவதில்லை )

மிக்க நன்றி

ஆச்சி ஸ்ரீதர் said...

@சிவகுமாரன்
//கண்காட்சிக்கு சென்ற திருப்தி கிடைத்தது. ( எப்படியும் எதையும் காசு கொடுத்து வானங்க போவதில்லை )//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. ஞாபகார்த்தத்திற்காவது எதாவது வாங்கி வந்திடுவோம்னு தோனுமே.அப்படித்தான் நாங்களும் ஐந்து (விலை குறைவான)பொருட்களை வாங்கி வந்தோம்.

RAMA RAVI (RAMVI) said...

பதிவும் படங்களும் மிக அருமை.நன்றி பகிர்வுக்கு.

ஆச்சி ஸ்ரீதர் said...

வாங்க ராம்வி:
வருகைக்கும்.கருத்திற்கும்,
ஃபாளோயர்ஸில் இணைந்தமைக்கும் மிக்க நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

இந்திய கலைப்பொருட்களின் பெருமை சொல்லும் இந்திய அரசால் நடத்தப்படும் கண்காட்சியகம்"

கண்கவர் கண்காட்சியை கவர் பண்ணியிருக்கீங்களே! பாராட்டுக்கள்..

ஆச்சி ஸ்ரீதர் said...

@இராஜராஜேஸ்வரி

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மேடம்.

Suresh Subramanian said...

உங்கள் பதிவும் & படங்களும் அருமை!

please read my blog www.rishvan.com

ஆச்சி ஸ்ரீதர் said...

@rishvan

வாருங்கள் ரிஷ்வன்.நன்றி.வருகிறேன் உங்கள் தளத்திற்கு.