*வணக்கம் வருகைக்கு நன்றி*

Oct 11, 2011

தனிமையே!

இரவில் தனியே நடமாடும்போது
பயமில்லை.எதோ பின்தொடர்வதாக
சந்தேகிக்கையில் சாத்தானக வருவது
 தனிமை.

நான் தனியே செல்லுகையில்
தனிமையில்லை.எதிரில் இருவர்
சுவாரசியமாக பேசி,மகிழ்ந்தபடி
வருகையில் என்னுடன் வருவது 
 தனிமை.

எதிபார்த்த அன்பு கிடைக்காதபோது
துணையாவது  தனிமை.

மகிழ்ச்சியில் தனிமை இல்லை,
அதனை பகிர உண்மையானவர்கள்
இல்லாதபோது மகிழ்ச்சியடைவது
தனிமை.

தனிமையில் அமைதி இல்லை.
அமைதியில் தனிமை இல்லை.

சந்தேகம்,ஒப்பிடுதல்,ஏக்கம்,எதிர்பார்ப்புடன்
பிறந்திருக்கும் தனி்மையே நீ
தனிமையாக இல்லை.

17 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இண்ட்லி 1 to 2 &
தமிழ்மணம் 1 to 2

தனிமையே என்று நினைக்காதீர்கள்.
வலைப்பூவில் நாங்கள் இவ்வளவு நபர்கள் நண்பர்களாக எதையும் பகிர்ந்து கொள்ளவே இருக்கிறோம்.

சமீபத்திய வலைச்சர ஆசிரியராகிய தங்களை இந்த வலைப்பூ என்ற எழுத்துலகம் என்றும் மறக்காது.
So not to be worried, Madam. vgk

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன் சார்

தங்களின் கருத்தில் மகிழ்கிறேன்.ஆனால் இந்த பதிவு பொதுவாக எழுதினேன்.இதில் உள்ள அனைத்தையும் நான் உட்பட எல்லோரும் ஒவ்வொரு சமயத்தில் உணர்ந்திருப்போம்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ரத்னவேல் சார் வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி.

சம்பத்குமார் said...

//மகிழ்ச்சியில் தனிமை இல்லை,
அதனை பகிர உண்மையானவர்கள்
இல்லாதபோது மகிழ்ச்சியடைவது
தனிமை.//

வரிகள் அனைத்தும் அருமை

நன்றியுடன்
சம்பத்குமார்
தமிழ் பேரண்ட்ஸ்

ADHI VENKAT said...

இன்றைய வலைச்சரத்தில் ”இது எங்க ஏரியா, உள்ள வாங்க!”

உங்கள் வலைப்பக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தபோது வந்து பாருங்கள்.

நட்புடன்

ஆதி வெங்கட்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை ஆச்சி... பகிர்வுக்கு நன்றி.

காந்தி பனங்கூர் said...

தனிமை நம்மை சில நேரங்களில் புரட்டிப்போட்டுவிடும். சிலருக்கு தனிமையே மருந்து. சிலருக்கு தனிமை தான் விஷம்.

அருமையான கவிதை.

ஆச்சி ஸ்ரீதர் said...

@சம்பத் குமார்
மிக்க நன்றி.

@ஆதி
நன்றி.வந்து பார்த்தேன்.

@வெங்கட் நாகராஜ்
மிக்க நன்றி.

@காந்தி பனங்கூர்
உண்மைதான்.வந்து கருத்திட்டமைக்கு நன்றி.

kaialavuman said...

தனிமை என்பதே ஒரு மாயை தானோ.
நாம் தனியாக இருக்கும் பொழுது நம் மனம் விழித்துக் கொண்டு நம்மை சில நேரம மகிழ்விக்கும்; பல நேரம் கலவரப் படுத்தும் இல்லையா.

நல்ல முயற்சி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வேங்கட ஸ்ரீனிவாசன்
வருகைக்கு நன்றி.
தனிமை ஞானியாகவும் ஆக்கும்,பைத்தியமாகவும் ஆக்கும்.மாயை என்பது சரியே

கீதமஞ்சரி said...

தனிமை ஆனந்தம் தருவதுண்டு, துயர் தருவதுண்டு. சார்ந்திருக்கும் சூழலே உணர்வின் பிரதிபலிப்பாய் அமைகிறது. தனிமையின் பரிணாமங்களைக் காட்டிய கவிதை அழகு.

ஜெய்லானி said...

தனிமையிலே இனிமை காண முடியுமா..? பாட்டுதான் நினைவுக்கு வருது :-)

நம்பிக்கைபாண்டியன் said...

தனிமை இனிமையானதுதான் இது போன்ற கவிதைகள் பிறப்பதால், நல்ல கவிதை!

Unknown said...

ஒரு நல்ல கவிதைக்கான களனை சுமாராக எழுதியிருக்கிறீர்கள்..

இன்னும் முயற்சி செய்யுங்கள்..

ஆச்சி ஸ்ரீதர் said...

@கீதா

நீங்கள் சொல்வதும் சரிதான்.மிக்க நன்றி,

@ஜெய்லானி

உங்களுக்கு ஒரே பாட்டுதான் போங்க.வருகைக்கு நன்றி.

@நம்பிக்கை பாண்டியன்

கவிதைக்கு பொய்யும், மெய்யும்,அனுபவமும் அழகே

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கே.ஆர்.பி.செந்தில்

ஆஹா! வாங்க:

உண்மையாக இன்னும் எழுத மனமிருந்தும் வார்த்தைகளை கையாட தெரியாமல் குறையாக பதிவிட்டதுதான் இந்த தனிமை.முயற்ச்சிக்கிறேன்

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

raji said...

வாவ்!க்ரேட் ஆச்சி! ரொம்ப வித்தியாசமான சிந்தனை