*வணக்கம் வருகைக்கு நன்றி*

Oct 15, 2011

வாழ்க்கை

மனிதனாக பிறந்துவிட்டோம்.வாழும் மற்றும் வளரும் சூழ்நிலையில் பல வித மனிதர்களுடனும்,நட்புகளுடனும், உறவினர்களுடனும் வாழ்க்கைப் பயணம் செல்லுகிறது.புதிரான வாழ்க்கைப் படகில் துடுப்புகளாக  நாமும் நம்மால் இயன்றதை செய்து வாழ்நாளெனும் நீர் நிலையை கடந்து வருகிறோம்.எண்ணங்களை எதிர்பார்ப்புகளை மீறி அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது யாரும் அறியா நியதி.

நாம் நல்ல எண்ணங்களுடன் பயணம் மேற்கொண்டாலும் முன்போ,பின்போ,அருகிலோ எப்படிப்பட்டவர் வருகிறார் என்பது நமக்குத் தெரியாது.பழகிப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.அங்கனம் மதிப்பும்,அன்பும் வழங்கப்படும்போது அதனையே கிடைக்கப்பெறுவோம்.மாறாக மிதிக்கப்பட்டால் அனுபவப் பாடமாக கற்றுக்கொள்வோம்.நம்மிடமிருந்து கசப்பான அனுபவத்தை மற்றவருக்கு தர நாம் காரணமாக இருக்க வேண்டாம்.

நமது தேவைகள் நிறைவேற நமது சக்திக்கு உட்பட்டு வாழ்ந்தாழும், முயற்சித்தாலும் கிடைக்கப்பெறுவோம்.முடியாதபட்சத்தில் கிடைப்பதை ஏற்கிறோம் அல்லது தவிற்க்கிறோம்.நம் வாழ்க்கை பயணத்தில் நாமே ஆசிரியர்,அனுபவங்களே பாடம்.வாழ்நாட்கள் என்ற நீர்நிலையில் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை என்னும் படகு சவாரியில் சுழல் வருமா,சுனாமி வருமா என்பதை அறிய வாய்ப்பில்லை.

அனைத்து சூழ்நிலைகளிலும் அன்பாகவும்,விட்டுக்கொடுத்தும் வாழ்தலும்   சாத்தியமில்லை. மனிதனுக்குரிய பண்புகளோடு  வாழ்வோம். தீயவைகளை விடுத்து நல்லனவற்றை கற்போம்.வாழ்வின் முடிவே கற்றது போதாது என்ற குறையுடன்தான் நிறைவடையப்போகிறது.

20 comments:

angelin said...

.மாறாக மிதிக்கப்பட்டால் அனுபவப் பாடமாக கற்றுக்கொள்வோம்.நம்மிடமிருந்து கசப்பான அனுபவத்தை மற்றவருக்கு தர நாம் காரணமாக இருக்க வேண்டாம்.//

வாழ்க்கை பற்றி நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மையே ஆச்சி .
இதை படித்தபின் எனக்கிருந்த ஒரு சிறு குழப்பம் நீங்கியது .என்னை பொருத்தமட்டில் சரியான நேரத்தில் படித்த ஒரு பதிவு .மிக்க நன்றி .

Kousalya said...

யதார்த்தமாக சொன்னாலும் அருமையாக சொல்லிடீங்க...

மனதில் வைத்துகொள்கிறேன். நன்றி

வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

.வாழ்வின் முடிவே கற்றது போதாது என்ற குறையுடன்தான் நிறைவடையப்போகிறது

கற்றது கைம்மண்ணளவு.
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் 3 and இண்ட்லி 3

படித்து விட்டு மீண்டும் வருவேன் vgk

Lakshmi said...

அன்பாகவும்,விட்டுக்கொடுத்தும் வாழ்தலும் சாத்தியமில்லை. மனிதனுக்குரிய பண்புகளோடு வாழ்வோம்.


வாழ்க்கைபற்றி நல்லா சொல்லி இருக்கீங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இராஜராஜேஸ்வரி said...
வாழ்வின் முடிவே கற்றது போதாது என்ற குறையுடன்தான் நிறைவடையப்போகிறது

கற்றது கைம்மண்ணளவு.
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

அதே அதே !!

//எண்ணங்களை எதிர்பார்ப்புகளை மீறி அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது யாரும் அறியா நியதி.//

உண்மையை உண்மையாய்ச் சொல்லியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு....

thirumathi bs sridhar said...

@ஏஞ்சலின்
எதோ மன உலைச்சலில் உள்ளீர்களா?
//என்னை பொருத்தமட்டில் சரியான நேரத்தில் படித்த ஒரு பதிவு//
எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு.வருகைக்கு நன்றி.

@kousalya
நல்லது,வாழ்த்திற்கு நன்றிகள்.

thirumathi bs sridhar said...

@இராஜராஜேஸ்வரி
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்.

@lakshmi
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகளம்மா.

thirumathi bs sridhar said...

@கோபலகிருஷ்ணன் சார்
வருகை தந்து வாக்களிப்பிற்கும்,கருத்தளிப்பிற்கும் நன்றிகள்.

@வெங்கட் நாகராஜ்
மிக்க நன்றி

KParthasarathi said...

ரத்ன சுருக்கமா வாழ்க்கையை எப்படி மேற்கொள்ளவேண்டும் என்பதை மிக அழகாகவும் சற்று யதார்த்தனத்துடன் கூறி இருக்கிறீர்கள்

கீதா said...

வாழ்க்கைப் பாடத்தை மிகவும் எளிமையாகவும் அருமைய்காவும் கற்றுக்கொடுத்துள்ளீர்கள்.

//வாழ்வின் முடிவே கற்றது போதாது என்ற குறையுடன்தான் நிறைவடையப்போகிறது.//

இந்த வரிகள் மிகவும் நன்று. பாராட்டுக்கள் ஆச்சி.

சாகம்பரி said...

கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் வாழ்க்கைப்பாடம் ஆகிறது. உங்களின் பகிர்வு - பதிவு மிக நன்று.

thirumathi bs sridhar said...

@kparthasarathi
மிக்க நன்றி.

@கீதா
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

@சாகம்பரி
நிச்சியமாக.மிக்க நன்றி.

raji said...

வாழ்க்கைப் பாடம் அருமையா சொல்லிருக்கீங்க.ஏஞ்சலின் சொன்னா மாதிரி இது நிறைய பேருக்கு உதவும் ஆச்சி.அவங்க வெளிப்படையா சொல்லிருக்காங்க.சொல்லாம பயனடைஞ்சவங்களும் இருக்கலாம்.பகிர்விற்கு நன்றி

வேங்கட ஸ்ரீனிவாசன் said...

//நம்மிடமிருந்து கசப்பான அனுபவத்தை மற்றவருக்கு தர நாம் காரணமாக இருக்க வேண்டாம்.//
இது தான் முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டியது. ஆனாலும், சில நேரங்களில சில விஷயங்கள் நம் கை மீறி போய் விடத் தான் செய்கிறது. சுயகட்டுபாடுதான் இதற்கு இருக்கும் ஒரே தீர்வாக இருக்க முடியும்.
"We should not get carried over by the situation."

நல்ல கருத்துகள்.

thirumathi bs sridhar said...

@ராஜி

மகிழ்ச்சி .நன்றிகள்.

@வேங்கட சீனிவாசன்

ஆமாம்.நன்றிகள்

♔ம.தி.சுதா♔ said...

///////முடியாதபட்சத்தில் கிடைப்பதை ஏற்கிறோம் அல்லது தவிற்க்கிறோம்./////

பட்டுணர்ந்த வரிகளாய் இருக்கிறது...

உணர்வு வரிகள்..

சித்தாரா மகேஷ். said...

வாழ்க்கையை நன்கு உணர்ந்து கூறியிருக்கிறீர்கள்.அரிய கருத்துக்களுக்கு நன்றி.
வாழ்க்கையென்பது நம் கையில் இல்லை.கிடைத்த வாழ்க்கையை மனநிறைவோடு வாழ்வோம்.மற்றவர்க்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாது வாழ்வோம்.

தேடிப் பெற்ற சிதறல்கள்.
?

thirumathi bs sridhar said...

@ ம.தி.சுதா
@ சித்தாரா மகேஷ்

உணர்ந்ததைத்தான் சொல்ல விரும்பினேன்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி