*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jan 5, 2011

தேசிய மொழி

எனக்கு தாய் மொழி தமிழ்.நம் தாய் மொழி பெயரை சொல்லும் போதே வேறு மொழியில் இல்லாத சிறப்பம்சமான 'ழ்',அமைந்துருப்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது இருப்பது ' ஹிந்தி' என்று எல்லோருக்கும் தெரியும். நான் எந்த மொழியிலும் புலமை பெற்றவள் இல்லைனும், தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்திலும்,தமிழ் ஆர்வம் கொண்டவர்களும் ஹிந்தி மொழியை எதிர்ப்பவர்களும்,பள்ளி கல்லூரி பாடங்கள்,கடைகள்,திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் தான் வைக்கனும்னு தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களே கெஞ்சி கூத்தாடுவதையும்,என்னென்னவோ கேள்விப்பட்டிருப்போம் தமிழை பாதுகாக்க.தமிழ் மொழியில்தான் ப்ளாக் எழுதனம்னு எந்த சட்டமும் இல்லை,அப்படியிருந்தும் இத்ததனை பிளாக்குகளும், பிளாக்கரகளும் உருவானது கூட சத்தமில்லா தமிழ் மொழி பராமரிப்புதான்.

இதெல்லாம் ஒருபக்கமிருக்கட்டும்,நம்மில் பலர் ழ்,ல்,ள்,ர்,ற் மற்றும் சில எழுத்தக்களை சரியாக உச்சரிப்பது கிடையாது,அதாவது பரவாயில்லை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதையாக,செந்தமிழ்,அந்தந்த மாவட்ட தமிழெல்லாம் சற்றே காணாமல் போகுதுன்னு சொன்னால் எத்தனை பேர் அடிக்க வருவாங்கன்னு தெரியல,சென்னையில் பரவியிருக்கும் 'இன்னா வீட்டாண்ட பாத்துகினு போனியா? ,எப்டி கீரனு,', ஒரு பாசை உருவானதற்கு எந்த சங்கம் காரணம்னு தெரியல.இத்தனை மட்டும் தெரிந்தவராய் கணவரின் வேலை வாய்ப்பில் வ.இந்தியாவிற்கு வந்து ஹிந்தி கத்துக்க வேண்டிய சூழ்நிலையில் தான் மேலும் என் தாய் மொழியான தமிழ் மொழியைப் பற்றி யோசிக்க வைத்தது. எனக்குத் தெரிந்த வித்தியாசங்களை சொல்லவே இந்த பதிவு.

நாங்க குடியிருக்கும் பகுதி ஒரு பாரத விலாஸ் போல,ஒவ்வொரு மாநிலத்தவரும் இருக்கிறார்கள்.ஒற்றுமை உண்டானுலாம் கேக்க கூடாது.இங்கு தென்பகுதியான தமிழ்,ஆந்திரா,கேரளா,கன்னட மாநிலத்தவரும்,வட பகுதியில் மராட்டி, குஜராத், காஷ்மீர்,உத்த்திர பிரதேசம்,மத்திய பிரதேசம்,ஒரிசா,பஞ்சாப்,பீகார்,ராஜஸ்த்தான் மாநிலத்தவரும் வாழ்கிறோம். நாமும் வட இந்தியர்களும் ஒரே நூற்றாண்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது நாம் தமிழ் பேசும்போது எத்தனை ஆங்கில வார்த்தைகளை தமிழாகவே நினைத்து உபயோகிக்கிறோம்,இவர்கள் எப்படி தன் தாய் மொழியை உபயோகிக்கிறாங்கனு.

ஆரம்பத்தில் ஹிந்தி கொஞ்சம் கூட புரியாத போது,மற்றவர்கள் பேசுவதை என்னால் கவனிக்க கூட முடியாது,அவர்கள் பேசினாலே என் காதில் கட,முட,பட,டட.னு சத்தம் கேட்டு தலை வலியே வந்திடும்.இத்தனை ஆண்டுகள் ஆகியும் மொபைல் கஸ்டமர் கேரிடம் பேசினால் கூட அவர் என்ன சொல்கிறார்னு புரிந்து கொள்ள முடியாதளவுக்குத்தான் எனக்கு ஹிந்தி தெரியும்.ஆங்கிலம் என்னைப் போன்றவருக்கு டிரன்சலடிங் மொழியாக பயன்படத்தான் செய்கிறது.இங்கு நான் தெரிந்து கொண்டது

பஞ்சாப்பினர் - பஞ்சாபி
ஹர்யனாவில்    -  ஹர்யான்வி
மகாராஷ்ட்டினர் -   மாராட்டி
குஜராத்தினர்  - குஜராத்தி
பீகாரில்      -   பீகாரி
ஒரிசாவில் - ஒரிய
ராஜஸ்த்தானில்    - ராஜஸ்த்தானி
காஷ்மீர்        -   காஷ்மீரி 
மேற்கு வங்கத்தில் -  பெங்காலி


மொழிகள் பேசப்பட்டாலும்,பொது மொழியாக ஆங்கிலம் இருந்தால் கூட இவர்களுக்கு இரண்டாம் மொழியாக ஹிந்தி தான் இருக்கிறது.சமஸ்கிருதமும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பிலேர்ந்து தொடங்கி,பத்தாம் வகுப்பில் ஆப்சனல் மொழியாக உள்ளது.தமிழர்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழி பொதுவாக உள்ளதானு கேட்டால் ஆங்கிலத்தை சொல்லுவோம். மேலும் தமிழகத்தில் கன்யாகுமரி தமிழ்,கோயமுத்த்தூர் தமிழ்,மதுரை தமிழ்,திருநெல்வேலி தமிழ்,தஞ்சாவூர் தமிழ் போல அந்தந்த மொழியினர் ஹிந்தி பேசும்போது ஸ்லங் வேறுபடுகிறது.அவரவர் மொழியினர்,மாநிலத்தவர்,ஊர்க்காரர் என்றால் ஒரு பாசம் வரத்தான் செய்யும்,அதைத்தவிர இங்கு யாரும் மொழிக்காக போராட்டங்கள் நிகழ்த்துவதாக தெரியவில்லை. இங்கு ஆங்கிலத்தை ஆங்கிறேசுனு சொல்றாங்க,மேலும் ஆங்கிலத்தில் பேசுவதை வெறுப்பார்கள்னு சொல்வதை விட மற்ற மொழியை கலந்து பேசுவதில் விருப்பமில்லாதவர்கள் .புரபசனலாக பேசும்போதும்,புரிய வைக்க அவசியப்படும்போதும்,சில பீட்டர் பார்ட்டிகளும்தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.
            நாம் எத்தனை ஆங்கில வார்த்தைகளை தமிழாகவே உபயோகிக்கிறோம் பாருங்கள் , லாக் செய்,டோர்,சேரில் (நாற்காலி )உக்கார்,டைம் என்ன,வாட்ச் கட்டிவிட்டியா,பஸ்,பஸ்டான்ட்,சிக்னல்,ட்ராபிக்,டேட்,டே(சண்டே,மண்டே.......),நைட்,கலர்ஸ்,கூல்ட்ரிங்க்ஸ்,ஸ்பூன்,ரவுன்ட்,புக்,பேப்பர்,இன்க்,பாட்டில்,ஷு,சாக்ஸ்,சைடு(அந்த பக்கம்,இந்த பக்கம்),ஸ்க்ரு ட்ரைவர்,கட்டிங் ப்ளேயர்,கேரி பேக்,மார்கெட்,கேரட்,காலி ப்ளவர்,வெயிட்டா இருக்கு,  கரக்டா சொல்லு ,டைரெக்டா போ,ஓகே ,தேங்க்ஸ்,ஸ்சூர் இப்படி பல வார்த்தைகளை படித்தவர் முதல் படிக்காதவர் கூட உபயோகப்படுத்துகிறோம்,ஆனால் நான் மேல் சொன்ன எல்லா வார்த்தைகளையும் தங்கள் மொழியான ஹிந்தியில்தான் பேசுகிறார்கள்.எத்தனை பெரிய பதவியிலிருப்போரும்,பெரிய படிப்பு படித்தோரும் தங்கள் மொழியை சுத்தமாகவும்,ஆங்கிலம் கலக்காமலும் பேசுகிறார்கள் இதை ஹிந்தி தெரிந்தவர்கள் சரின்னு ஒத்துப்பாங்கன்னு நினைக்கிறேன்.
                மேலும் தமிழில் உள்ள உச்சரிப்புகளை விட ஹிந்தியில் உச்சரிப்புக்கு தகுந்தவாறு க,க்க,கஹ, க்கஹ என்பதும் அது போல ச வரிசையில் நான்கு விதம் ,ட வரிசையில் நான்கு விதம் , த வரிசையில் நான்கு விதம் ,ப வரிசையில் நான்கு விதம் மற்ற சில உச்சரிப்புகளுக்கு எழுத்துக்களும்,அந்தந்த உயிர்மெய்யெழுத்துக்களுக்கு குறில்,நெடிலுமாக உச்சரிப்புக்கு தகுந்த அர்த்தங்களும் மாறுபடுகிறது.எனவே இவர்கள் நம்மை விட சரியாகவே உச்சரித்து பேசுகிறார்கள்னு நான் நினைக்கிறேன்.
                  நம் தமிழை கற்றுக்கொள்பவர் கைகளுக்கும் கை என்று எழுதுவார்,உச்சரிப்பார்.தங்க நகை,,ஆன்மிம்,வுள்,கட்டிம் , வண்டி என்று எழுத சொல்லி உச்சரிக்க சொன்னால் எப்படி உச்சரிப்பார்,எழுதுவது ஒன்று உச்சரிப்பது ஒன்றாகத்தானிருக்கும்.எனவே நம் தேசிய மொழி சிறந்ததானு வாதிடவில்லை, கற்றுக்கொள்வதில் தவறில்லை.புலமை பெற்றவர்கள்,தமிழ் ஆர்வலர்கள் சண்டைக்கு வந்துவிட வேண்டாம்.
                                                                                        மேலும் அக்கம் பக்கத்தில் பழகுபவர்கள்,விற்பனையாளர்கள்,போக்குவரத்தில் சிலர் சில சந்தர்ப்பங்களில் சிலர் ஹிந்தியில் தீதி (அக்கா),பையா(அண்ணன்,தம்பி) என்பதில்லாமல் பாயீ(சகோதரன்), பெஹன் ஜி (சகோதரி ) னு சொல்லும்போதும்,தன் மகனை/மகளை ஒத்த வயதுள்ளோரையோ/பாசத்தில் அழைக்கும்போதோ bhetti (மகள்),bhettaa மகன் என்றழைக்கும் போது நம்ம தமிழிலும் சகோதரி ,மகனே,மகளேன்னு கூப்பிட்டால் நல்லாயிருக்குமே,பழைய திரைப்படங்களில்தான் இப்படி பேசுவதை கேட்டிருக்கிறோம்,இப்போ மவனே உன்னைய கவனிச்சுக்கிறேன்,மகளே உனக்கு இருக்குடின்னு மட்டுமே புழக்கத்தில் உள்ளது.வணக்கத்திற்கு பதிலாக குட் மானிங் ,ஹாய் சொல்வதும்தான் இப்போ பெருகியுள்ளது.ஆனால் இங்கு இப்போதும் குட் மானிங் ,ஹாய் களை விட நமஸ்த்தே,நமஸ்த்தே ஜி னு சொல்லுவதைத்தான் அதிகம் காண முடிகிறது, குழந்தைகள் கூட நமஸ்த்தே சொல்லும்போது ஆசையாக இருக்கும்.குழந்தைகள் தங்கள் பெற்றோரை அம்மா ஜி,பாப்பா(அப்பா) ஜி னு கூப்பிடும்போது எவ்ளோ நல்லாயிருக்கும் தெரியுமா?

ஹிந்தி பேசும்போது அப்படியே தமிழில் மொழி பெயர்த்தால் பழைய திரைப்படங்களில் பேசும் சுத்த தமிழே கிடைக்கும்.அவர்கள் பேசும்போது ஜி,ஜி னு சொல்லுவது தமிழில் "அவர்களே" , "ங்க"என்பதாகும் { மரியாதை நிமித்தமாக அதாவது சரிங்க,வாங்க,ஆமாங்க,மற்றும் உதாரணமாக அம்மா அவர்களே ,ஆசிரியர் அவர்களே }அப்படிப் பார்த்தால் எனக்குத் தெரிந்து கோயமுத்தூர் பாசையில்தான் வார்த்தைக்கு வார்த்தை மரியாதையாக ஆமானுங்க,ஏனுங்க,சொல்லி போட்டனுங்க,செஞ்சிடுவேனுங்கனு பேசுவதாக கேள்விப்பட்டிருக்கேன். ஒருவேளை ஹிந்திக்காரர்களில் யாராவது இப்போ இருக்கும் ஹிந்தி சுத்த ஹிந்தியல்ல,இதற்கு முன் இன்னும் சுந்தர ஹிந்தியாக இருந்ததுன்னு சொல்றாங்களோனு எனக்குத் தெரியாது.அவரவர் மொழியை சுத்தமாக பேசினால் நல்லது.












12 comments:

Unknown said...

மிகச்சிறப்பான கட்டுரை .. தமிழை நாம் எல்லோரும் தவறாகத்தான் பேசிவருகிறோம் .. தொடர்ந்து தங்களின் வாழ்வியல் பயண அனுபவங்களையும், வாழ்விட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...

ஆச்சி ஸ்ரீதர் said...

தங்களின் ஆதரவிற்கு நன்றிங்க.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு தோழி. தமிழை பெரும்பாலானோர் பிழை இல்லாமல் பேசுவதுமில்லை. எழுதுவதுமில்லை. ஹிந்தி சிறு வயதில் படித்திருந்தும் கூட தில்லி வந்த புதிதில் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள சிரமப்பட்டேன். இப்போது பரவாயில்லை.

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றிங்க.தமிழர் பண்பாட்டில் சிறந்ததே வீட்டுக்கு வந்தவர்களை(பிடிக்கலைனால் கூட) முக மலர்ச்சியுடன் வாங்கனு அழைப்பதுதான்.உங்க பிளாக்கிற்கு வந்தவர்களையும் வாங்கனு அழைக்கும் விதம் சிறப்புக்குரியது

Angel said...

enakku tamil font illai . pls forgive me.
idhu arumaiyana padhivu.

ஜெய்லானி said...

தமிழின் அருமை தமிழ்நாட்டை விட்டு வெளியே போகும் போதுதான் தெரிகிறது... அதுவரை நமக்கு அதோட பெருமை புரிவதில்லை :-))

சரியா சொல்லி இருக்கீங்க :-))

ஜெய்லானி said...

தமிழின் அருமை தமிழ்நாட்டை விட்டு வெளியே போகும் போதுதான் தெரிகிறது... அதுவரை நமக்கு அதோட பெருமை புரிவதில்லை :-))

சரியா சொல்லி இருக்கீங்க :-))

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
ஆச்சி ஸ்ரீதர் said...

ஜெய்லானி அவர்களுக்கு நன்றி.&சாரி என் பதிவில் பின்னூட்டமிட பல முறை கிளிக் செய்ய வேண்டியுள்ளது.சில நேரம் உடனே பதிவாகிறது.என்ன செய்யனும்னு தெரியல.&தொடர்பில் இணைந்தமைக்கும் தங்களுக்கும் ராஜி அவர்களுக்கும் நன்றி

ஜெய்லானி said...

இது கூகிள் சர்வர் பிராப்ளமா இருக்குமுனு தோனுது ..நான் போட்ட கமெண்ட் ஹேங்க் ஆனதால் திரும்ப கிளிக்கினேன்..அதுவே மூனுதடவை ரி போஸ்ட் ஆகிடுச்சி .. :-))

சுதர்ஷன் said...

நன்றாக இருக்கிறது ... நீங்கள் கூறியது சரி ...ஆனால் யாழ்ப்பாண தமிழில் எம் உச்சரிப்பில் ல ள சரியாக உச்சரிப்பார்கள் .... பேச்சு வழக்கு கொஞ்சம் வேறுபட்டாலும் உச்சரிப்பு சுத்தமானது :-)))))

ஆச்சி ஸ்ரீதர் said...

சுதர்சன் அவர்களுக்கு நன்றி. இலங்கை தமிழர்கள் பேசும் தமிழ் தமிழ்நாட்டு தமிழை விட சரியாக பேசுகிறார்கள்,உச்சரிக்கிறார்கள் என்றுதான் தொலைகாட்சியிலும்,வானொலியிலுமிருந்தும் உணருகிறேன்.