*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jan 14, 2011

பொங்கலோ பொங்கல்

                                                                   பாலுடன் பொங்கல் எங்கும் பொங்குக!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

பச்சரிசிப் பொங்கல் எங்கும் பொங்குக!
அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

நெய்மணக்கும் பொங்கல் எங்கும் பொங்குக!
மெய்மணக்கச் செய்யும் அன்பே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

மனங்கள் தோறும் என்றும் மகிழ்வே பொங்குக!
கணங்கள் தோறும் அங்கு கனிவே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

நாளும் பொழுதும் எங்கும் நலமே பொங்குக!
இல்லந் தோறும் என்றும் இன்பம் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

இது நான் எழுதினது அல்ல.காப்பி அடித்தது.சரி நான் சொல்வதாவது வட இந்தியாவில் நம்மூர் பொங்கலின் ஆனந்தத்தை துளியும் காண முடியாது.திருமணமாகி இங்க வந்த போது பொங்கலுக்கு ஊருக்கு போக இயலாததால் இங்கயே இருந்து நொந்துபோனதை மறக்க முடியாது.நம்மூரில் தீபாவளி கொண்டாடாதவர்கள் கூட பொங்கலை விடமாட்டார்கள்.இனிமையான தமிழ் பண்டிகை.ஊரே பரபரப்பான ஆனந்தத்தில் இருக்கும்.போகியிலேர்ந்து கன்னிப் பொங்கல் வரை அமர்க்களமாக இருக்குமனு எல்லோருக்கும் தெரியும்.அப்பா அம்மாவுடன் கொண்டாடியதை மறக்க முடியாது.வட இந்தியா  வந்த முதல் பொங்கலன்று குக்கரில் எங்க வீட்டு பொங்கல் விசிலாக வருவதற்கு முன் நான் பொங்கி பொங்கி அழுது இப்படியொரு ஊருக்கு அழைச்சிட்டு வந்த கணவருக்கும் பொங்கலிட்டு,பிறகு கணவரின் சமாதானத்திலும் பெற்றோரின் மொபைல் வழி சமாதானத்திலும் முதல் பொங்கல் குக்கரில் வைத்ததை மறக்க  முடியாது.இங்கு மகர சங்கராந்தினு பெண்கள் ஸ்நானனம் செய்துட்டு இருக்கும் அணிகலன்களை அணிந்து கொண்டு சூர்ய பகவானுக்கு பூஜை செய்வதோடு சரி.பஞ்சாபியர் லோஹ்ரின்னு  மகர் சங்கராந்திக்கு முதல் நாள் கொண்டாடுறாங்க.


போன வருடம் இடை இடையே  விடுமுறையில் வராமல் அடுத்த பொங்கலுக்கு கட்டாயம் நம்ம வீட்டுக்கு வந்திடும்மானு  சொன்ன அம்மா  இந்த வருடம்  இல்லாமல் போனதால் குக்கரில் பொங்கலிட கூட மனம் வலிக்கிறது.(ஆனாலும்  பொங்கல் செய்துதானே ஆகனும்) மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தாலும் கொண்டாடுபவர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லவே இந்த பதிவு. தமிழ்நாட்டிலிருந்து பொங்கல் கொண்டாடுபவர்கள்  புண்யம் செய்தவர்கள்.எல்லோருக்கும்  பொங்கல் வாழ்த்துக்கள்.


2 comments:

raji said...

பொங்கல் வாழ்துக்களுக்கு நன்றி,
அம்மா அம்மாதான்.அவருக்கு நிகர் வேறெவருமில்லை,இருப்பினும்
தாங்கள் தங்கள் குழந்தையின்(களின்) முகத்தில் அம்மாவைக் கண்டு
மனதை தேற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
உங்கள் குழந்தைக்கு(களுக்கு) நீங்கள் அம்மா அல்லவா

ஆச்சி ஸ்ரீதர் said...

சரிங்க.அப்படிதான் மனதை தேற்ற வேண்டியுள்ளது.நன்றிங்க .