*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jan 29, 2011

எதை நினைத்து வேதனைப்பட ?

பணக்கார வீட்டு நாய்கள் கூட
விலையுயர்ந்த உணவு சாப்பிட,
ஒரு வேலை உணவிற்கு
தெரு நாயோடு சேர்ந்து குப்பைத்
தொட்டியை துழாவுவர் பற்றியா?
பொது இடங்களில் குப்பை
போடுபவர் பற்றியா?அல்லது
அந்த குப்பைகளை  பொறுக்கித்தான்
 (பெருக்கித்தான்) சம்பாதிப்பவர் பற்றியா?
உயர் கல்விக்கு சில ஆயிரங்கள் இல்லாமல்
போனதால் திசை மாறியவர் பற்றியா?
பிரிகேஜிக்கே பல ஆயிரங்கள்
கேட்போர் பற்றியா ?
பிள்ளைகள் இல்லாதோர் பற்றியா?
ஊதாரி பிள்ளைகள் பற்றியா?
பெருகி வரும் முதியோர் இல்லம் பற்றியா?
அதிலும் சேர முடியாமல் துன்புருவோர் பற்றியா?
வீடு இல்லாதோர் பற்றியா?
இலவசமாய் கிடைத்த அரசாங்க வீட்டையும்
வாடகைக்கு விட்டுவிட்டு  மீண்டும்
சாலையோர வாசியனவர் பற்றியா?
மாற்றுத் திறனாளிகள்பற்றியா?
அவர்களில் பலருக்கு ஆதரவு
கிடைக்காமல் போனது பற்றியா?
அவர்களில் சிலர் அந்த குறை
ஒன்றையே வைத்து தானம்
கேட்பது பற்றியா?
வர வேண்டிய தண்ணீர்
வராமளிருந்தாலும் அடித்து
பிடித்து விவசாயம் செய்பவன் பற்றியா?
அவன் அனுமதியின்றி அதிக லாபத்துக்கு
பங்கில்லாமல் விற்பவர்  பற்றியா?
தெய்வ தரிசனமாக வருகிற குடிநீர் 
லாரி முன் பல அவதாரமெடுத்து
கொண்டு போய் குடிப்போர் பற்றியா?
உணவகத்தில்  சாப்பிடும் போது
மினரல் குடிநீர் வாங்கிக் குடிப்பவர்
சாதா நீரைக் குடிக்கும் பக்கத்திலிருப்பவரை
ஏளனப் பார்வை பார்ப்பது பற்றியா?அல்லது
அடுத்துள்ளவர் சாப்பிட்ட எதோ ஒன்று
பல்லில் மாட்ட இடது கையால் மாட்டியதை
பிடுங்கி சரி செய்துவிட்டு உணவக நீரை
சப்  சப்னு பருகுவது பற்றியா?அல்லது
பன்னிரண்டு ரூபாய் தண்ணீரை 
இஷ்டப்பட்ட விலைக்கு விற்பவர் பற்றியா?
ஆசையாய் இனிப்பு வாங்கும்போது
இனிதான அலங்கரிப்பு அடுக்கல்  முன்
நிற்பவர் ஹச்சுனு தும்மிவிட்டது பற்றியா?
அல்லது இனி அதை வாங்கப் போகிறவர் பற்றியா?
நான் வாங்குவது சுத்தமானதா என்பது பற்றியா?
தன் வேலையை செய்ய லஞ்சம் கேட்பவர் பற்றியா?
வேலை ஆனால் சரினு ஒத்துக் கொள்பவர் பற்றியா?
நம்பிக்கை துரோகம் பற்றியா?துரோகத்துக்குள்ளானவர் பற்றியா?
புகழ் பெற்றோர் பற்றியா?கேலி செய்வோர் பற்றியா? 
உதவி செய்யாட்டாலும் உபத்திரம் செய்பவர் பற்றியா?
சரி இப்ப இது போதும்{ஒவ்வொரு வரி பற்றியும் ஒரு பதிவு போடலாம் போல இருக்கே}
வாழ்க்கை என்னவென்று வாழ கற்றுக்கொள்வதற்குள் வாழ்க்கையே முடிந்து விடும் என்று யாரோ சொன்னது சரிதான்.

7 comments:

raji said...

அம்மாடி!எவ்வளவு கவலைகள் பட்டு
வாழ வேண்டியதாக உள்ளது.உண்மைதான்

கவலைகளைப் பற்றி படித்ததும்
கலங்கும் மனது
கவலையாக கன்னத்தில் கை வைத்த குட்டியைக்
கண்டதும் லேசாகி விட்டது
எவ்வளவு கவலைகள் இருந்தாலும் இதுதான்
நம்மை வாழ வைக்கிறது

ஜெய்லானி said...

பொருத்தமான படம் :-))

கே.ஆர்.பி.செந்தில் said...

//வாழ்க்கை என்னவென்று வாழ கற்றுக்கொள்வதற்குள் வாழ்க்கையே முடிந்து விடும்//

நாம் வாழும் இந்த சமூகம் நமக்கு கொடுத்தவற்றை சரியாக உபயோகித்து, நம் சந்ததியினருக்கும் அதனை சரியாக கொண்டு போய் சேர்க்கவேண்டும். ஆனால் இங்கு சந்ததியினர் வாழ வழியில்லாமல் போகும்போது அதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியதும் நம் வாழ்வியல் கடமையே...

கோவை2தில்லி said...

இத்தனை கவலைகள் பற்றி படித்ததும் எனக்கு பெருங்கவலை ஏற்பட்டது. குட்டி பாப்பா அழகா கன்னத்தில் கை வைத்து இருப்பதை பார்த்ததும் போய் விட்டது.

thirumathi bs sridhar said...

வருகை தந்து கருத்துக்களை தெரிவித்த
@ராஜி,
@ஜெய்லானி,
@கே.அர்.பி .செந்தில்,மற்றும் @ஆதி
ஆகியோருக்கு எனது நன்றிகள்

தமிழ்த்தோட்டம் said...

எத்தனை கவலைகள்..

கவலைகள் இருந்தால் தான் வாழ்க்கை பூர்த்தி ஆகும்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

goma said...

என்னடா பொல்லாத வாழ்க்கை...