இந்த பதிவு பெண்கள் அனைவருக்கும் அல்ல. பொது மக்களில் ஒருவளாய் மனதில் தோன்றுவதை பதிய விரும்புகிறேன்.வயிற்றெரிச்சலுடனும் துவங்குகிறேன்.
சுதந்திரம் தருவதற்கு நமக்கான சுதந்திரத்தையும்,உரிமையையும் யாரும் பிடுங்கி வைத்துக்கொள்ளவில்லை,.நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றாலும் நம் சக்திக்கும்,சமுதாய மரியாதைக்கும் உட்பட்டு இப்படித்தான் இருக்க வேண்டுமென சில நல்ல கட்டுப்பாடுகளும்,குணங்களும்,பழக்க வழக்கங்களும் தமக்குத்தானே தோன்றுமெனில்,வகுத்துக்கொள்ள முடியுமெனில் அவன் நிச்சயம் மனிதனாக இருப்பான்..ஆனால் உன் சுதந்திரம் அடுத்தவரை பாதிக்காமல் இருக்கும் வரை,உன்னை அடுத்தவர்கள் கேவலமாக நினைக்காதவரை எப்படி வேண்டுமானாலும் வாழ்வதும் நம் சுதந்திரம்தான்.
தற்போதைய சில பெண்களின் ஆடை நாகரீகம் பற்றியதுதான் இந்த பதிவு.
இரண்டு வயதிலிருந்து பத்து வயது பெண் குழந்தைகள் அரைக்கை சட்டை,அரை/முழுப்பாவாடை அணிந்து வந்தால் பார்க்க நன்றாகவே இருக்கும்.அதே குழந்தை 15 வயதுக்கு மேல் அரைப்பாவாடை அணிந்திருந்தால் அவளின் பெற்றோர்க்கு குழந்தையாகவே தெரியலாம்.மற்றவரின் கண்களுக்கு?...
அதே பெற்றோர் அழகாகதான் இருக்கிறது.இதை அணிந்து கொண்டு வெளியில் செல்ல வேண்டாம்,முழு உடையோ முக்கால் உடையோ அணிந்து செல் என்று சொல்பவர் சிறந்த பெற்றோர்.தனக்கே கூச்சம்,வித்தியாசம் தெரியவில்லை என்றாலும் பெற்றோர் இப்படி சொல்வதைக் கேட்டாவது எது அழகு,எது நாகரீகம் என்று புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும்.யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை,என் இஷ்டம்தான் என்றால் அவர்களை ஒன்னும் சொல்ல முடியாது.
சட்டை அரைக்கையோ அரைப்பாவாடையோ ஆபாசாமில்லாமல் ஆடைகளை அணிய வேண்டும்.ஆபாசமான ஆடைகள் அணிவது என்ற வார்த்தையே பெண்களுக்குதான்.ஆண்கள் இந்த உடை அணிந்துள்ளதால் ஆபாசமாகத் தெரிகிறான் என்று யாருக்கும் இதுவரை தோன்றிருக்காது.
பாவடை தாவணி அழகுதான்.ஆனால் சுடிதாரில் இருக்கும் பாதுகாப்பு தாவணி அணிவதில் இல்லைதான்.பாவாடை தாவணி மலையேறிப்போய் இப்போ சுடிதாரையும் தாண்டி ஜீன்ஸ் அணியும் காலத்தில் இருக்கிறோம்.
எல்லோர்க்கும் தான் அழகாக இருக்க வேண்டுமென்ற உணர்விருக்கும்.எதை அணிந்தாலும் பார்ப்பவர்கள் ‘ ட்ரசையும்,ஆளையும் பாரு’ என்றோ,சபலத்தை தூண்டுமளவிற்கோ ஆடை அணிய வேண்டாம்.உடுத்திருப்பதை பார்த்தவுடன் கையெடுத்து கும்பிட வேண்டாம்,எதோ தெரியுதேனு பார்க்க வைக்க வேண்டாம். துப்பட்டா போடாத எல்லா பெண்களுமோ,கைப்பகுதி இல்லாமல் அணிந்திருக்கும் எல்லா பெண்களுமோ ஆபாசமாகத் தோன்றுவதில்லை.உடல் வாகைப் பொறுத்தும்,அணியும் உடையைப் பொறுத்தும் விகாரமும் ஆபாசமும் தெரிகிறது.
ஆடை குறைப்பு இல்லாமலும், அங்கங்களை உடை போர்த்தி கவர்ச்சியாக காட்டாமலும் ஒரு பெண்ணால் ஒரு ஆணை கவரமுடியும் .திருமணம் ஆகாத மற்றும் திருமணமான சில பெண்கள் மற்றவர்கள் பார்வையை ஈர்க்க அல்ல ஈர்க்க வைக்கவே அணிந்து கொள்கிறார்கள்.எனக்கு என்ன சந்தேகமெனில் இப்படிப்பட்ட பெண்கள் யாரோ ஒரு பெற்றோர்க்கு மகளாகவோ,சகோதரியாகவோ,மனைவியாகவோதானே இருப்பார்கள்.அப்படியிருந்தும் பார்வைகள் சலனப்படுமளவிற்கு ஆடை அணிபவர்களை கேட்க ஆளில்லையா?அல்லது கேட்பார் யாருமில்லையா?அப்படியா சுதந்திரம் முத்திப்போய்விட்டது.அல்லது இதற்கு பேர்தான் தண்ணி தெளிச்சு விட்டாச்சு என்பதா?
ஏற இறங்க பார்க்க வைக்கும் ஒரு பெண்ணை அந்த நிமிடம் ஒரு ஆண் பார்க்கலாம்.இப்படி நம் மகளை யாரும் பார்த்துவிடக் கூடாதுனு ஒரு அப்பாவிற்கு தோன்றுமே,நம் சகோதரியை இப்படி யாரும் பார்க்க கூடாதுனு சகோதரனுக்கு தோன்றுமே,தன் மனைவியை மற்றவர் ரசிக்க கூடாதென்று கணவனுக்குத் தோன்றுமே!!!!காமிப்பவர்கள் மேல் குற்றமா?பார்ப்பவர்கள் மேல் குற்றமா?
வட மாநிலங்களில் கேக்கவே வேண்டாம்.
பெற்றோருடனும்,சகோதரனுடனும்,கணவனுடனும் சில பெண்கள் இல்லை முக்காவாசி பெண்கள் மிக மாடன் ட்ரஸ்களும்,இருக்கமான உடைகளும் அணிந்து செல்வதைப் பார்க்கும்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஆணுக்கோ,பெண்ணுக்கோ ஒரு பிரச்சனையும் இல்லை.உன் பொண்ணுக்கு எந்த ட்ர்ஸ் வேணும்னாலும் போட்டு அழகுப்பாரு,உன் சகோதரியை எவன் பாத்தா எனக்கென்னா,உன் பொண்டாட்டி எப்படி இருந்தா எனக்கென்னா?என் பிள்ள கெட்டுடக்கூடாது,என் சகோதரன் மனது வீணாகிடக்கூடாது,என் கணவன் யாரையும் ரசித்திடக் கூடாது,என் பெற்றோர் தர்மசங்கடத்திற்கு ஆளாகிடக்கூடாதென்பது சராசரி பெண்களின் எண்ணமாகும்.
பஞ்சாமிர்த்த்தைப் பார்த்தவுடன் அறுவறுப்பு கொள்பவர் யாருமில்லை. பிடிக்காதவன் வேண்டுமானால் வாங்க மறுக்கலாம்.வழியில் போறவனை கூப்பிட்டு கொடுத்தால், பிடிக்காதவன் கையில் வாங்கி கீழே போடலாம்.பிடித்தவன்……..?
வெளிநாட்டு கலாச்சாரமே வேறு.இந்தியாவின் கலாச்சாரம்? இந்த ஆடை நாகரீகம் எதுவரை போகும்?
சமீபத்தில் ’துப்பட்டா போடாமல் இருப்பது ஏன்’ என்று ஒரு ஆண் பதிவரின் பதிவின் தலைப்பை பார்த்த்தும் அய்யய்யோ இப்படிப்பட்ட பெண்கள பத்தி ஆண் விமர்சிச்சு பதிவு எழுதி அதே போல கமண்ட்ஸ்களும் குவிந்து மானம் போகுமேனு நினைச்சு போய் பார்த்தேன்,நல்ல வேளை அதை தலைப்போடு நிறுத்திவிட்டு நல்ல கருத்துக்களை சொல்லியிருந்தார்.வேறு யாரும் இப்படிப்பட்ட பெண்கள் சம்மந்தமாக விமர்சித்திட வேண்டாமென எண்ணி இதை பதிந்துள்ளேன்.இந்த பதிவு சில பெண்களுக்காக இருந்தாலும்,யார் சொல்லியும் யாரும் கேட்கபோவதில்லை என்றாலும் பெண்ணுக்கு பெண் விட்டுகொடுக்க மனதில்லை.
ஒரு நாட்டிற்கு பெருமை பல விதங்களில் கி்டைத்தாலும்,அதனுள் அந்நாட்டு பெண்களும் அவர்களுக்கான சுதந்திரமும் அடங்குமென்று எதிலோ படித்த நினைவாக உள்ளது.