*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 20, 2016

இதுவும் பெண்ணியம்

சினிமா சம்பந்தப்பட்ட இணையதள
எழுத்துக்களினால் திரைப்படத்தில் பெயர்கள் போடும்போது வலைதளங்களுக்கு நன்றி என்று குறிப்பிடுவதை சமீப காலங்களில் பார்க்கின்றோம்.

தொலைக்காட்சிகளில் அரசியல் கட்சிகளின் கலந்துரையாடல் வாக்குவாதங்களில்  வலைதளங்களில் எழுதிட்டாங்க என்று ஒரு வார்த்தை சொல்வதை சமீப காலத்தில் கேட்க முடிகின்றது.

சமூகத்தின் நேர் நின்று உடனடியாக போராட சென்றுவிட போவதில்லை.அன்றாட நிகழ்வுகள்,கருத்துக்கள்  எண்ணங்கள்,விருப்ப வெறுப்புகள் அல்லது எதோ ஒரு துறை பற்றி பகிர்கின்றோம். பேரிடர் காலங்காலில் உதவிய கரங்களுக்கிடையே இணையம் மற்றும் இணையத் தொடர்பாளிகளின் கரங்கள் ஒன்றுபட்டு ஆங்காங்கே உதவியதைக் கண்டோம்.

எழுத்து வடிவில்  நம் கருத்தை பதிய வைத்தலில்  மற்றவர்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம்.மோசமான கருத்துக்கள், படங்கள் கண்முன்னே குவிந்து கிடந்தாலும் பதியப்படும் கருத்துக்களில் ஆண் பெண் பேதமில்லை என்றாலும் பழி விமர்சனங்களை எதிர்கொள்ளும் துணிவு சில  பெண்களுக்கு மட்டுமே உள்ளது.
 
அம்மாஞ்சிகள் பதிந்த கருத்துக்களையோ படங்களையோ நீக்கிவிட வற்புறுத்தினால் அதுவும்
சமூகக் களத்தில் போராடித்  தீர்வு கொண்டு வர முடியாதவர்கள் என்றாலும் ஆதிக்கவாதிகள் எனில் வீண் வம்பு எதற்கென்று கேட்டுத்தான் ஆக வேண்டிய நிலை பேர் பெற்ற பெண்களுக்கு உள்ளதை தெரிவிக்கின்றேன்.

அல்லது கண்டும் காணாமலே ஒதுங்கிருத்தலே உத்தமம் ஆகக்கடவதாகின்றது.

மாற்று கருத்துக்களை எதிர்க்க பெண்மையை அவமதிக்கும் வார்த்தைகளை உபயோகித்து இன்பம் காணும்  ஆண் பெண்களும் உலவுவதில் யார் மேல் குறை சொல்ல,...

doubt**மீடியாஸ் என்றால் அதில் வலைதளங்களும் அதில் பதியப்படும் கருத்துக்களும் அடங்குமா?8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

யோசிக்க வைக்கும் நல்ல பகிர்வு. சொல்லியுள்ளதெல்லாம் உண்மையும்கூட.

//.................. யார் மேல் குறை சொல்ல... // :)

கடைசியில் ஓர் சந்தேகக்கேள்வியும் கேட்டுள்ளீர்கள். வெரி குட். யாரேனும் சரியான பதில் கொடுத்தால் நானும் தெரிந்துகொள்வேம்.

பகிர்வுக்கு நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

என் பின்னூட்டத்தில் ஓர் கடைசி எழுத்து ‘ன்’ என்பதற்கு பதில் ‘ம்’ என அவசரத்தில் தவறாக விழுந்துள்ளது. எழுத்துப்பிழைக்கு வருந்துகிறேன்.

’யாரேனும் சரியான பதில் கொடுத்தால் நானும் தெரிந்துகொள்வேன்.’ என மாற்றிப் படிக்கவும்.

ஆச்சி ஸ்ரீதர் said...

தங்கள் வருகைகக்கும் கருத்திற்கும் நன்றிகள் வை.கோ சார்.

ஆச்சி ஸ்ரீதர் said...

தங்கள் வருகைகக்கும் கருத்திற்கும் நன்றிகள் வை.கோ சார்.

Angel said...

ம்ம் என்னத்தை சொல்ல :( பல நேரங்களில் சொல்ல வருவதை அப்படியே அடக்கி வைக்கிறேன் நானும் ..போராடும் குணம் வெகு சிலரிடமே இருக்கு அவர்களுக்கும் இந்த புரட்சிக்காரகள் ஏதேனும் பெயர் குறியீடு வைத்திருக்ககூடும் ..அருமையான பதிவு

கீதமஞ்சரி said...

நல்ல பகிர்வு ஆச்சி. பெண்கள் போகவேண்டிய தொலைவு வெகு அதிகம்..விரைந்து சென்றுவிட முடியாதபடிக்கு காலைக்கட்டிக்கொண்டு குடும்பம், சமூகம் என இன்னபிற தளைகள்... தேங்கிக்கிடக்காமல் மெல்ல மெல்லவாவது ஊர்ந்து இலக்குநோக்கி முன்னேறுவோம்.

ஆச்சி ஸ்ரீதர் said...

.

ஆச்சி ஸ்ரீதர் said...
This comment has been removed by the author.