*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 1, 2013

குளிர்,குளிர்...குளிரு....


நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்  காணும் திரைப்படத்தில்  வரும் ஒரு வசனம் “ என்னது சிவாஜி செத்துட்டாரா!!!!!! “ என்பது போல நாட்டில என்னென்னமோ நடக்கும்போது வட மாநிலங்களில் குளிர் ஆரம்பித்து சில மாதங்கள் ஆனாலும் இந்த குளிரின் அட்டகாசம் இன்னும் குறையவில்லை .” என்னது குளிரா!!!! ” அதுதான் வருடந்தோறும் வருமே என்பார்கள்.இப்பதான் 2012 பிறந்தது போலவும் வெயில் அதிகம் இருந்தாலும் குளிர்தான் அதிகம் நினைவில் நிற்கின்றது.அதற்குள் 2012 முடிந்து 2013 ம் பிறந்துவிட்டது,முதல் மாதமும் மாயமாய் முடிந்துவிட்டது.

 இந்த குளிரு இருக்கே குளிரு,,,,அது மட்டும் மாயமாகாமல் மீண்டும் மீண்டும் மூடுபனியில் ரெண்டு வீட்டிற்கு பிறகு மூன்றாவது வீட்டை மறைத்துவிடுகின்றது,ரெண்டு லைட்டு மிதந்து வரும்,அருகில் வந்தவுடன்தான் அது பேருந்தா ,காரா,லாரியா என்று கண்டுபிடிக்கலாம்.லைட்டுகள் அசையாமல் சற்றே உயரத்தில் வரிசையாக தெரிந்தால் அது கட்டாயம் போஸ்ட்மரம்தான்.

சினிமாவில் வரும் வானுலகத்தில் அணிகலன்களுடன் பகவான்கள், தேவர்கள் காட்சி தருவது  போல பூலோகத்தில்  குளிருக்கான பாதுகாப்பு உடைகளில் முகம் அல்லது கண்கள் மட்டும் தெரியும் பேய்கள் போல ...இல்லை இல்லை முகமூடி கொள்ளைக்காரர்கள் போல  காட்சி தருகின்றோம்.காலை 10,11 மணிக்கு மேல் வெயில் வருகையில் தலைப்பாக்கள் முகமூடிகளுக்கு  விடுப்பு.சீனாவில் 4 மீட்டர் தூரத்திற்கு கடலே உறைந்திருப்பதை தொலைக்காட்சியில் பார்த்தபோது இங்கு நிலவும் குளிருக்கு பெரிய கும்பிடு போடனும்.

சாக்ஸ்,கைகளில் கிளவுஸ்,2 அல்லது 3 ஸ்வட்டர் ,மப்ளர்,ஜர்கின்,ஜாக்கெட் ,கோட்,சால்வை என்று  பெரியவர்களும் குழந்தைகளும் குளிருக்கான பாதுகாப்பு ஆடைகளுடன் வீட்டிலும்,வெளியிலும்,பள்ளி கல்லூரிக்கு சென்றாலும் ,ஒரு சமயம் குளிரை நேசிச்சாலும் தண்ணீரைச்  சார்ந்த வேலைகளில் தண்டனை அனுபவிப்பது போலத்தான் செய்ய வேண்டியுள்ளது.5 டிகிரிக்கு கீழே வெப்பநிலை வந்தபோது பாத்திரம் விளக்க,துணிகள் துவைக்க (வாசிங்மெசினிலும்) சுடு தண்ணீர் உபயோகிக்க வேண்டியுள்ளது

 குளிருக்கான பாதுகாப்பு ஆடைகள் அதிகம் இல்லாமல் தண்ணீர் சுட வைக்க ஹீட்டர் இல்லை, வசிக்கும் இடத்தை தேவையான போது இதமாக வைத்துக்கொள்ள ரூம் ஹீட்டர் இல்லாமல் சாலையோர குப்பைகளை சேகரித்து சாலையோரத்திலே தீ மூட்டி குளிரை தனித்துக்கொண்டு டென்டுகளிலும்,குடிசைகளிலும்,பாலங்களுக்கு அடியில் வசிப்பவர்களையும் , அவர்களின் குழந்தைகளின் நிலைமையும் பார்க்க வருத்தமாக இருந்தாலும் குளிரை பொருட்படுத்தாமல் அவர்கள்  இயல்பாக அன்றாட வேலைகளில் ஈடுபடுவது பெரும் ஆச்சர்யம்.

காய் கனிகளின் விலை குறைவதும் புதிய காய் கனிகள் வருவதும் ஆறுதல்.குளிர்காலத்தில் இங்கு வேர்கடலையின் வரவும் விற்பனையும் அதிகம்.ஆனால் எங்கும் பச்சைக் கடலை கிடைப்பதில்லை.அவித்த வேர்கடலையின் ருசி அறிந்திராதவர்கள் இம்மக்கள்.கடலை மிட்டாய் சதுர,உருண்டை வடிவில் பார்த்திருப்போம்,
.இங்கு தட்டையாக வட்ட வடிவ கடலை மிட்டாய் பாருங்கள்.இதற்கு கஜக் என்று பெயர்.ஒரு கஜக் 175 கிராமிலிருந்து 200 கிராம் வரை இருக்கும்.


இங்குள்ள பெண்கள் குளிர்காலங்களில் ஸ்வெட்டர் முனைவதில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள்.கணிதத்தில் ஃபார்முலா வைத்து டெரிவேசன்ஸ் கொண்டுவருவது போல பல டிசைன்களை போட்டுப்பார்த்து ஸ்வட்டர்,தோப்பாக்கள் வடிவில் கொண்டுவருவது கண்டு நான் வியப்படைவேன்.ஹேன்ட் மேடா ரெடி மெடா என்று கண்டுபிடிக்க முடியாது. 

குழந்தைகளும் வயதானவர்களும் குளிரில்  அதிகம் பாதிக்கப்படுவதால்  மருத்துவர்கள்  பிசியாக இருக்கின்றார்கள்.பல பேசண்டுகள் பேசண்டிற்கு துணை வந்த்திருப்பவர்கள் ,நர்ஸ்கள் ,முகத்தில் ஒரு இன்ச் மேக்கப் குறையாமல் மருத்துவமனையில் காட்சி தருகின்றனர்.குளிரினால் பட்டுப்போன மரங்கள் 


கடந்த திங்கள் கிழமை மார்க்கெட்டிற்கு நடந்து  செல்லும்போது இந்த காட்சியை கிளிக்கினேன்.சாலையில் இடது வலது பக்கம் வாகனங்கள் செல்லும் நடுவே சின்ன பிளாட் ஃ பார்ம் இருக்குமே அங்க சேர் போட்டு அமர்ந்திருக்கின்றார் இந்த சாமியார் (பாபா).ட்ராபிக் போலிஸ் பிறகு விரட்டிவிட்டாரா என்னவென்று தெரியவில்லை.இவர் இங்கு அமர்ந்திருப்பது வெயிலுக்கா / வசூலுக்கா என்பது தெரியவில்லை.எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வார்கள்  " கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவனை தூக்கி மடியில் வை " என்று.இவரைப் பார்த்தவுடன் அந்த பழமொழி ஏனோ நினைவிற்கு வந்தது. குளிருக்கு  எதோ புது காய் வந்திருக்கென்று விசாரித்தால் தோல் உரித்து நறுக்கிய கரும்புத் துண்டுகள்.கிலோ 50 ரூபாய் என்றார்கள்.ரொம்ப சந்தோஷம் ,பல்லுக்கு கொஞ்சம்  வேலை இல்லைன்னு வாங்கினோம் .*மீண்டும் சந்திப்போம் *

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

யம்மாடி... படங்கள் பார்த்தாலே குளிருது...

முடிவில் கருப்புத் துண்டுகளா அது...?!!!

மதுரை அழகு said...

கரும்பு வியாபாரம் இப்படியெல்லாம் நடக்குதா? Photos chill!

Unknown said...

ஹா..ஹா.. இங்க அவன் அவன் வெயிலுல கஷ்டப்படுரான்... அங்க என்னடான்னா....ம்ம்ம்ம்... அருமை.. நடைமுறை நிகழ்வுகளை படிக்கும் போது நானும் அங்கு இருப்பது போல உணர்வு..மிக்க நன்றி.. தொடரட்டும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

குளிருக்கு அந்த வேர்க்கடலையை ஒரு மூட்டை வாங்கி,வறுத்து சூடாக சாப்பிட்டால் ஜோராக இருக்குமே.

அதில் மேல் தோலியை உடைத்து உடைத்து சாப்பிடும்போது, உழைத்து சாப்பிடுவது போல ஒரு திருப்தியும் இருக்கும்.

கடலைமிட்டாய் ரெளண்டாக தோசை/அடை போல இங்கு எங்கள் ஊருக்கும் வந்து ரொம்ப நாள் ஆச்ச்சுங்க.

>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பூலோகத்தில் குளிருக்கான பாதுகாப்பு உடைகளில் முகம் அல்லது கண்கள் மட்டும் தெரியும் பேய்கள் போல ... இல்லை இல்லை முகமூடி கொள்ளைக்காரர்கள் போல காட்சி தருகின்றோம்.//

ஆஹா, அதில் நீங்கள் தோன்றுவதை படம் பிடித்துக்காட்டியிருக்கக்கூடாதா?

//காலை 10,11 மணிக்கு மேல் வெயில் வருகையில் தலைப்பாக்கள் முகமூடிகளுக்கு விடுப்பு//

அச்சச்சோ! அதுவரை நம் அருகே நிற்பது ஆணா, பெண்ணா, பேயா, கொள்ளைக் காரர்களான்னே கண்டுபிடிக்க முடியாதுங்களே !

ஆனால் அதுவும் ஒரு ஜாலியாத்தான் இருக்கும்!

குளிரடிக்குதே கிட்ட வா கிட்ட வா ன்னு ஜாலியாப்பாட்டுப்பாடுக்கினே இருப்பீங்கோ.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வார்கள் " கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவனை தூக்கி மடியில் வை"//

[அது கிழவனை அல்ல.
மடியிலே அல்ல.]

ஆஹா, அது எங்கள் ஊரில் இப்படிச்சொல்லுவாங்கோ:

“கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும். கிழவியைத்தூக்கி மனையிலே வை”

அதாவது முஹூர்த்த நேரம் நெருங்கி விட்டது.

கல்யாணப்பெண்ணைக் காணவில்லை. காதலனுடன் ஓடி இருப்பாள் போல.

அதனால் கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும்.

கிழவியைத்தூக்கி மனையிலே வை.

கிழவரைக்கூப்பிட்டு தாலி கட்டச்சொல்லு.

[அறுபதாம், எண்பதாம் கல்யாணம் போல]

விருந்து ஆறும் முன் சாப்பிட வேண்டும் என்று அவசரப் படுத்தினார்களாம்.

அவரவர்கள் கவலை அவரவர்களுக்கு.

உங்கள் கவலை குளிருக்கு.

நல்ல பதிவு. பாராட்டுக்கள், வாழ்த்துகள். நன்றிகள்.

Avargal Unmaigal said...

///வெயில் அதிகம் இருந்தாலும் குளிர்தான் அதிகம் நினைவில் நிற்கின்றது//


உண்மைதான் சந்தோசமான நாட்கள் அதிகம் இருந்தாலும் கஷ்டப்படும் சில நாட்கள்தான் அதிகம் நினைவில் நிற்கின்றது

ஆச்சி ஸ்ரீதர் said...

mbmnj,nb,n,kn,nmk,njk,mjbmnmm nmbnm jjhghjybmjbnjmkhjkjkm nmmm

* நன்றி தனபாலன் சார். அது கரும்பு சார் கரும்பு

*வாங்க மதுரை அழகு : மதுரை பக்கம் இந்த வியாபார நுட்பத்தை அறிமுகப்படுத்துங்க.

*சுப்பு ரமணி : நன்றி,எல்லாம் அக்கரைக்கு இக்கரை பச்சைதான் .

*வை.கோபாலகிருஷ்ணன் சார்
கடலை எவ்வளவு சாப்பிட்டாலும் ருசிதான்.உங்க ஊருக்கும் இந்த கஜக் வந்துட்டா ????சொல்லவேயில்ல ....நல்லது.

//அதில் நீங்கள் தோன்றுவதை படம் பிடித்துக்காட்டியிருக்கக்கூடாதா? //

ஏதும் அட்டாக் வந்துட்டா மாமி என்னை உதைக்க வந்திடுவாங்க.ஏன் இந்த வம்பு.

// " கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவனை தூக்கி மடியில் வை"//

விசேஷ வீட்டில் எல்லோரும் பரபரப்பாக அவரவர் வேளையில் ஈடுபட்டிருக்கையில் குசும்பு கிழவர் ஒருவர் தள்ளாத நிலையில் இருக்கும் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று கடிந்து கொண்டாராம்.அதுக்குதான் அங்கு யாரோ ஒருவர் கிடக்கும் வேலையெல்லாம் கிடக்கட்டும் அந்த கிழவரை தூக்கி மடியில் வைத்து கவனி என்றாராம்.

அதுபோல அந்த சாமியார் தன்னை யாரும் கவனிக்கலனு நடுரோட்டில் அமர்ந்திருக்கிரார்னு நினைத்து குறிப்பிட்டேன்.

நீங்கள் சொன்ன கதையும் நல்லாருக்கு.

மிக்க நன்றிகள் சார்.


*அவர்கள் உண்மைகள் :
ஆமாங்க,வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

கஜக் - அது எள்ளு மிட்டாய்...

வேர்க்கடலை மிட்டாய் - பெயர் - “மும்ஃபளி பட்டி!”

நல்ல குளிர் - எஞ்சாய் மாடி! :)

ஆச்சி ஸ்ரீதர் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சொல்வதற்கு முன் குளிரை என்ஜாய் சொல்லிருக்கிங்களே அதனால் ரொம்ப டென்சனாகிட்டேனு சொல்லிக்கிறேன் .ஒருவாரம் அல்லது பத்துநாள்னா என்ஜாய் பண்ணலாம் ......

எங்கள் பகுதியில் வெல்லம் கலந்து செய்திருக்கும் எள் ,வேர்கடலை மிட்டாய்களை கஜக் என்றே சொல்றாங்க.

KParthasarathi said...

நன்றாக எழுதி உள்ளீர்கள்.
என்னுடைய டில்லி நாட்களை கண்முன் நிறுத்திவிட்டீர்கள்.நன்றி

RAMA RAVI (RAMVI) said...

குளிரில் நடுங்கிக்கொண்டே படித்தேன். பதிவும், படங்களும் உங்க குளிர்கால வாழ்க்கையை சிறப்பாக விளக்கின.

இராஜராஜேஸ்வரி said...

தோல் உரித்து நறுக்கிய கரும்புத் துண்டுகள்.கவர்கின்றன கண்களை ..

குளிரைப்படித்ததும் குளிரால் நடுங்கிற மாதிரி இருக்கிறது ...

குளிர் நேரத்தில்
ஆஸ்திரேலியா சென்றும் ,
ஊட்டி சென்றும் நடுங்கியது நினைத்தாலே சிரமம்...

குழந்தைகளை வைத்து
சமாளிப்பது சிரமம் ..

ஆச்சி ஸ்ரீதர் said...

வாங்க பார்த்தசாரதி ,கருத்துப்பதிவிற்கு நன்றிகள்.

@ராம்வி
பெங்களுர்விலும் க்ளைமேட் ஜோரா இருக்குமே,.இங்கு பத்தாததிற்கு ரெண்டு நாளா மழை பெய்கின்றது.

@இராஜரஜேஸ்வரி
நன்றி மேடம்,ஆஸ்திரேலியா பனிய அள்ளில போடுவாங்க ,அதுக்கு எங்க ஊர் தேவலாம் போங்க .

ADHI VENKAT said...

சாரிப்பா...ரொம்ப லேட்டாக வந்திருக்கேன்.

குளிர் ஆரம்பிக்கும் போது நன்றாக இருக்கும். அதுக்கப்புறம் தான் தாங்காது....யம்மாடி என்ன குளிர். காய்கறிகளும், பழங்களும், பனீரும், வேர்க்க்டலையும், எள்ளு மிட்டாயும் என பிரமாதமாக இருக்கும் தில்லி என் கண் முன்னே தோன்றுகிறது.

போன வருஷம் கூட நான் ஸ்வெட்டர், ஸ்கார்ஃப், கிளவுஸ், சாக்ஸ் போக மூன்று கம்பளி போர்த்திக் கொண்டு தூங்கியிருக்கேன்.....

ஸ்வெட்டர் பின்னும் அழகை பார்த்து தான் நான் தில்லி வந்த இரண்டாவது குளிரில் கற்றுக் கொண்டு எனக்கு ஒரு ஸ்வெட்டர் போட்டுக் கொண்டேன். சென்ற வருடம் ரோஷ்ணிக்கு ஒரு மஃப்ளர் பின்னிக் கொண்டிருந்தேன். முடிக்கும் தருவாயில் ஏதோ சிக்கலாகி விட அப்படியே நின்று விட்டது....

ஆலங்கட்டி மழை இப்ப சமீபத்தில் வந்ததே...அதை நிஜமாகவே நான் மிஸ் பண்ணினேன்.

இந்த வருடம் கடுங்குளிரிலிருந்து தப்பித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்...

கவியாழி said...

சென்னையிலும் இப்போ குளிர் அதிகமாய் உள்ளது

Ranjani Narayanan said...

'நடு நடு'ங்கிகிட்டே படிச்சேன். அப்ப்பா!
போடோவுலேயே குளிரு தெரியுதே!

பத்ரிநாத் குளிர் நினைவுக்கு வந்தது.

நறுக்கி வைத்த கரும்புத் துண்டங்கள் நாவில் நீர் ஊற வைத்தன.

குளிர் பதிவுக்கு பாராட்டுக்கள்!

ஆச்சி ஸ்ரீதர் said...

@muthal varukaikkum karuthirkum nanri kannadhasan avarkale.but ingu romba mosam.


@ranjani narayanana

varukaikkum karutthirkum nanri madam

Anonymous said...

வணக்கம்
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/07/3_25.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-