*வணக்கம் வருகைக்கு நன்றி*

Oct 19, 2012

மரண வாக்குமூலம்

போலிசார் :   உனக்கு எப்படி ஏரோப்லேனில் அனுமதி கொடுத்தாங்க?

அவர்:                என் எஜமானின் முயற்சிங்க

போலிசார் :   ஏரோப்லேனில் கொடுத்த அறிவுரைகளை பின்பற்றினாயா?

அவர்:                       எல்லோரையும் போலவே பெல்ட் போட்டுகிட்டேன்,
       
                                   காதில்  பஞ்சும்    வைத்துக்கிட்டேன்.முதல் முறையா 

                            போறேனுல, எனக்கும் ஆசையும் ஜாக்கிரதை உணர்ச்சியும்  

                               அதிகாமாவே இருந்துச்சு.

போலிசார் :       யாராவது சந்தேகிக்கும்படி இருந்தார்களா?

அவர்:                    இல்லங்க,சிலர் படிச்சிட்ருந்தாங்க,சிலர்

                            தூங்கினாங்க,பயணிகளுக்கு வேண்டியதை பணிப்பெண்கள்

                               நல்லபடியா கவனிச்சிக்கிட்டாங்க ஆனா...
...

போலிசார் :         என்ன ஆனா?

  அவர் :                 சிலர் ஏர்ஹோஸ்டசை சைட்டடிச்சாங்க

போலிசார் :         ச்சே,....

அவர்:               சும்மா இருக்கும் நேரத்தில் அந்த பொண்ணுங்க மேக்கப்    
                               போட்டதையும் என் கண்ணால பாத்தேன்.

போலிசார் :      அட,,,அதை விடு , இந்த பைலட்.....

அவர்:                அவர நினைச்சுதான் எனக்கு ரொம்ப வருத்தம்

                            எல்லோரும் ஜாலியா வந்தாங்க,அவருதான் ரொம்ப சின்சியரா    

                              ஏரோப்லேனை ஆப்ரேட் பண்ணிட்டிருந்தாரு.

போலிசார் : நீ எப்படி பார்த்த ?அங்க போனியா?

அவர்:               என்னால ஒரு இடத்துல எப்படி சும்மா உக்காந்திருக்க முடியும்?

                            அதான் அங்க ஒரு ரவுண்ட் போயிட்டு வந்தேன்.

போலிசார் : சரி,இந்த விமான விபத்து எப்படி நடந்துச்சு?விபத்துக்கு முன்

                             என்னதான்  நடந்துச்சு?

அவர்:                   நாந்தான் பைலட் மேல பரிதாபபட்டு இந்த டிரைவிங்கை என்னால செய்ய முடியாதா,நீங்க பயணிகள் போல என்ஜாய் பன்னுங்கனு சொல்லிப்பார்த்தேன்,அவர் நகரவேயில்ல.எங்களுக்குள் நடந்த வாக்கு வாதத்திலும் கைகலப்பினாலும் இந்த விபத்து ஏற்பட்டது.

குதிப்பதும் தாவுவதும் எனக்கு பழக்கம்,மனிதர்களைப் போல டபக்குனு விழுந்து சாகாமா எதோ இந்தளவுக்காவது தப்பிச்சேன்.

                                           வாக்குமூலம் கொடுத்தவர் இவர்தான்.
                                                   படம்  கூகுளில் எடுத்தேன்



குறிப்பு:எனக்கு மெயிலில் வந்த நகைச்சுவை கதையில் பைலட் ஏர்ஹொஸ்ட்டசை சைட் அடிச்ச நேரத்தில் குரங்கு விமானத்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது என்பதை இப்படி மாத்திபுட்டேன்.
பரவாயில்லையா ,நல்லாருக்கா??????????. 

21 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயோ... சாமீ...! கலக்கிட்டீங்க...!

நன்றி...
tm1

Admin said...

ஹா..ஹா..ஹா.. நல்லா இருந்தது சகோ.!

ஆச்சி ஸ்ரீதர் said...

வாங்க

திண்டுக்கல் தனபாலன்

அப்துல் பாஷித்

இத்தனை விரைவில் பின்னுட்டம் அளித்ததில் உற்சாகமாகிறேன் .ரசித்தமைக்கு நன்றிகள்

வெங்கட் நாகராஜ் said...

ஏற்கனவே சிலருக்கு விமானம் என்றால் பயம்... :)

நல்ல கலாட்டா தான் போங்க!

Anonymous said...

ஹா..ஹா...

Avargal Unmaigal said...

நகைச்சுவை நன்றாக இருக்கிறது

ttpian said...

kurankaip paarththaal...athu namba ma...mo...si..kup polo irukkulla?

வை.கோபாலகிருஷ்ணன் said...

சூப்பரா இருக்கு ! ;))))))

சூப்பரா இருக்குன்னு சொன்னது அந்தத் தப்பி வந்த குரங்கை அல்ல......

கற்பனை செய்த ஏர்ஹோஸ்டஸ்களை மட்டுமே.......................

அவர்களின் ஆன்மா மட்டும் ஸாந்தி அடைய பிரார்த்திப்போம்.

நல்ல படைப்பு.
நகைச்சுவையாக உள்ளது.
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.

பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள்.

அன்புடன்
VGK

பால கணேஷ் said...

உங்களின் கற்பனை வளம் அபாரம். ரசித்துச் சிரிக்க வைத்தது. அருமைங்க.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்
@ரெவெரி
@பழனி கந்தசாமி
@அவர்கள் உண்மைகள்
@ttpian
@வை.கோபால கிருஷ்ணன் சார்
@பால கணேஷ் சார்

வருகை தந்து ரசித்து கருத்திட்டதில் மிக்க மகிழ்ச்சி,அனைவருக்கும் என் நன்றிகள்.மற்ற பதிவுகளுக்கு சென்று படிக்க நேரம் ஒதுக்க முடியாததில் வருந்துகிறேன்.

சசிகலா said...

நல்லாவே சிரித்தோம்ங்க. சிறப்பான எழுத்து நடை.

தங்கள் நலம் அறிய ஆவல்.

Unknown said...

அய்யோ ராமா....!இந்த ஆச்சி இம்சை தாங்க முடியலியே !

வை.கோபாலகிருஷ்ணன் said...

//போலிசார் :
நீ எப்படி பார்த்த ?அங்க போனியா?

அவர்:
என்னால ஒரு இடத்துல எப்படி சும்மா உக்காந்திருக்க முடியும்?

அதான் அங்க ஒரு ரவுண்ட் போயிட்டு வந்தேன்.//

இன்று மீண்டும் இந்தப்பதிவினை என் மேலிடத்திற்காகப் படித்துக்காட்டினேன்.

மேற்படி இடம் வந்ததும் குபீரெனச் சிரித்தேன்.

ஒரு கட்டிலில் இருந்து மற்றொரு கட்டிலுக்குத் தாவினேன்.

பின்னால் ஏதோ வால் முளைத்தது போன்ற பிரமை ஏற்பட்டது.

நல்ல நகைச்சுவை. சுவாரஸ்யமாக இருந்தது. கடைசிவரை நல்ல சஸ்பென்ஸ் தான். பாராட்டுக்கள்.

அன்புடன்
VGK

ஆச்சி ஸ்ரீதர் said...

வாங்க சசி கலா
நன்றிகள்

வா நாராயணா வா . இப்பதான வந்திருக்க

@வை.கோபால கிருஷ்ணன் சார்

உங்க பின்னுட்டத்தைப் பார்த்தும்.
எனக்கும் செம சிரிப்புதான் போங்க.
டேஷ்போர்டில் குரங்கு போட்டோவ பார்த்து யாராவது கண்டுபிடிச்சுடுவாங்களோன்னு நினைச்சேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//@வை.கோபால கிருஷ்ணன் சார்

//உங்க பின்னுட்டத்தைப் பார்த்தும்.
எனக்கும் செம சிரிப்புதான் போங்க.//

மிக்க மகிழ்ச்சி

//டேஷ்போர்டில் குரங்கு போட்டோவ பார்த்து யாராவது கண்டுபிடிச்சுடுவாங்களோன்னு நினைச்சேன். //

நான் என் டேஷ்போர்டு பக்கமே போவதை நிறுத்திவிட்டேன்.

நீங்கள் மெயில் + லிங்க் கொடுத்ததால் மட்டுமே வந்தேன். அதனால் அது குரங்கு என்பது எனக்குக் கடைசியில் தான் தெரிய வந்தது.

மெயில்+லிங்க் கொடுப்பவர்களுக்கு மட்டுமே செல்கிறேன். அதுவும் தினமும் முடியாமல் உள்ளது.

எனக்கு Happy Mood வேண்டும்

மின் தடை இல்லாமல் இருக்க வேண்டும்.

நெட் கிடைக்க வேண்டும்

மேலிட குறுக்கீடுகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

தினமும் சிலரும், வாரத்திற்கு 2-3 வீதம் சிலரும் பதிவிடுகிறார்கள். மெயில் தகவலும் வருகின்றன.
மேலே உள்ள தொல்லைகளால் அவர்கள் பதிவுகள் பக்கமும் செல்ல முடிவது இல்லை.

உங்களைப்போல எப்போதவது பதிவு கொடுத்து, மெயிலும் கொடுத்து, மேலே சொன்ன விஷயங்களும் எனக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே போவதுண்டு / கருத்துக்கூறுவது உண்டு.

இது தங்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமாக கொடுக்கப்பட்டுள்ள தகவல் ஆகும்.

அன்புடன்
VGK

ADHI VENKAT said...

நல்லாத் தான் இருக்கு.....

மின்னஞ்சலில் வந்ததை சூப்பரா போட்டுட்டீங்க.

ஆச்சி ஸ்ரீதர் said...

ஓகே சார்.

&

வாங்க ஆதி.ரசித்தமைக்கு நன்றி.

உஷா அன்பரசு said...

இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவு பகிர்ந்துள்ளேன்
வருக!
http://blogintamil.blogspot.in/

Unknown said...

இங்க தான் சஸ்பென்ஸ் உடைந்தது. நல்ல கற்பனை, நல்ல நகைச்சுவை.

வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

வாக்குமூலம் கொடுத்தவர் இவர்தான்.

நல்லா கொடுத்தார் வாக்குமூலம் ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

27.12.2012 அன்று வலைச்சரத்தில் இந்த தங்களின் பதிவு பற்றி திருமதி உஷா அன்பரசு என்பவர்களால் பாராட்டிப் பேசப்பட்டுள்ளது.

மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள். VGK