*வணக்கம் வருகைக்கு நன்றி*

Oct 8, 2012

கொன்று குவித்திடுவோம்



எவ்வழி வந்தீர்கள் அந்நியர்களே!
தரை வழியா,வான் வழியா?
காற்றா,நீரா? எவ்வழி?
எங்கள் உலகத்தில்
உங்கெளுக்கென ஒரு உலகமா?
மனித வாழ்வை
வேடிக்கைப்  பார்க்க
அவன் தலை மீதே
அமரலாமா?அல்லது
தலைகளை கொய்ய முடியாமல்
தலை மீது ஊர்ந்து குடித்தனமாக
கூத்தடிக்கின்றீர்களா?
சிறியவர்கள் முதல்
பெரியவர்கள் வரை
பாகுபாடற்று சொறியவைத்து
சாதனையா படைக்கின்றீர்கள்?
கூந்தலை பேணாமல் போனதால்
உள் நுழைந்த உங்களுக்கு
பேண் ”((பேன்))
என்ற பெயர் வந்ததோ?
பாவ,புன்யம்,பார்க்காமல்
கொல்லி ஸாம்ப்பு ஸ்நானமும்
தங்களுக்கான சீப்பால் இழுத்தும்
தங்களை கொன்று குவிக்காமல்
விடமாட்டோம்.................!!!
சட்ட மறுப்போ தண்டனையோ
கொலையாளிக்கு இல்லை,
வந்ததும் வாழ்ந்ததும்
ஓசையற்றதில்
உங்கள் ஆயுள் ஓசையுடன்
நிறைவடைகின்றது.
ஆத்மா சாந்தி அடையட்டும்.
                                     (முற்று)






16 comments:

Admin said...

ஹா...ஹா...ஹா.. இப்படியெல்லாம் கவிதை எழுத முடியுமா?

:) :) :)

நன்றாக இருந்தது சகோ.!

பால கணேஷ் said...

வல்லவளுக்குப் புல்லும் ஆயுதம்பாங்க. கவிதைக் காரிகளுக்கு பேன்கூட ஆயுதமாகிடுதே. இப்படி ஒரு சப்ஜெக்டை நிச்சயமா நான் எதிர்பாக்கலை. ரொம்பவே ரசிச்சேன். அருமைங்க.

அம்பாளடியாள் said...

ஹா ...ஹா ....ஹா ...கவிஞரே உங்களை என்ன சொல்லிப்
பாராட்டுவது ?...!!!!! சுதந்திரக் கொலை இதை எப்படித்தான்
திட்டமிட்டீர்கள் ?......கடித் தொல்லையால் வந்த அரிய
கவிதை முல்லையோ !!!!!.........:)))))
கேள்விக் கணைகளின் வீச்சுத் தாங்க முடியாமல்
இந்நேரம் தாவி இருப்பார்கள் அடுத்தவர் தலைகளுக்கே
ஓடிப் பிடித்து அழித்து விடுங்கள் அந்த நாசகாரரை.....
ம்ம்ம்ம் யார் என்று நினைத்தீர்கள் இவரை :))))).........

அம்பாளடியாள் said...

அருமையான கவிதை உரு .இப்படியும் எழுத முடியுமா !!!!.....
வாழ்த்துக்கள் சகோதரரே மேலும் அசத்துங்கள் .
மிக்க நன்றி பகிர்வுக்கு .

இராஜராஜேஸ்வரி said...

கூந்தலை பேணாமல் போனதால்
உள் நுழைந்த உங்களுக்கு
“பேண் ” என்ற பெயர் வந்ததோ?

ரொம்பத்தொல்லையோ !

ADHI VENKAT said...

பேனுக்காக கவிதை படைத்த உங்களை இவ்வுலகம் பேணி காக்கட்டும்...:))

Angel said...

//எவ்வழி வந்தீர்கள் அந்நியர்களே! தரை வழியா,வான் வழியா? //

head-on collision :))


ஆஆ :)) வொய் ? திஸ் ? கொலை :))
ஹா :) அதுங்க தொல்லை லண்டன்ல கூட இருக்குப்பா ..இங்கே பார்மசில
பேன் சீப்பு பார்த்திருக்கேன் ,,,, ஒரு பிள்ளைக்கு வகுப்பில் இருந்தாலும் முழு வகுப்புக்கும் letter அனுப்புவாங்க பள்ளியில் .

Angel said...

இங்கிலாந்தில் பல வித மக்கள் இருப்பதால் இங்கே ஊர்பவர் ...ஊர் ..பவர் சகஜம் :)) நான் ஜெர்மனில இருந்தப்போ ஒரு லேடி என்னை கேட்டாங்க ..
""சில ஆசியர்கள் தலையில் ஸ்மால் அனிமல்ஸ் இருக்குமாமே ??""
அவ்வவ் அவங்க சொல்றது இந்த பேன்கலதான்:))

வெங்கட் நாகராஜ் said...

பேன் கவிதை.....

ரசித்தேன்.....

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படி அசத்துடீங்க... எதிர்ப்பார்க்கவேயில்லை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கூந்தலை பேணாமல் போனதால்
உள் நுழைந்த உங்களுக்கு
“பேண் ” என்ற பெயர் வந்ததோ?//

தலையாயப் பிரச்சனையைப்பற்றிய
தலை சிறந்த கவிதை.

பேன் என்பதே சரியான சொல்.
பேண் என்று எழுதியுள்ளது தவறு.

ஒருவேளை பெரிய சைஸ் பேனோ?
அதனால் மூன்று சுழி போட்டீர்களோ?

பெரிய தொல்லைங்க......

உங்களைச்சொல்லவில்லை.....

அந்தப்பேன்களைத் தான் ! ;)

Anonymous said...

ஒரு மாற்றமான கவிதை இது .. அருமை .

ஆச்சி ஸ்ரீதர் said...

@அப்தூல் பாஷித்,
@பால கணேஷ்,
@அம்பாலடியாள்
@இராஜராஜேஸ்வரி
@ஆதி
@ஏஞ்சலின்
@வெங்கட் நாகராஜ்
@திண்டுக்கல் தனபாலன்
@வை.கோபாலகிருஷ்ணன் சார்,
அடைப்பு குறிக்குள் "பேன்" என்று மாற்றியுள்ளேன் சார்.

@இக்பால் செல்வன்

வருகை தந்து ரசித்து,பாராட்டி தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றிகள்,

இனி உங்கள் வாழ்வில் .பேன் பற்றின பேச்சு வந்தால்,இந்த கவிதை பற்றின நினைப்பு வந்தால் அதுவும் ஒரு சந்தோஷம்தான்

Unknown said...

அருமை

cheena (சீனா) said...

அன்பின் திருமதி ஸ்ரீதர் - நல்லதொரு நகைச்சுவைக் கவிதை - பேன் பெயர்க் காரணம் அருமையிலும் அருமை. கவிதை நன்று நல்வாழ்த்துகள் - வலைச்ச்ரம் வழியாக வந்தேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

Unknown said...

கவிதை அருமை!