*வணக்கம் வருகைக்கு நன்றி*

Sep 23, 2012

உன்னைப் போல் ஒருவன்

அன்புடன் வந்தாய்
ஆவலுடன் அரவணைத்தேன்
இடித்தாலும்
ஈ என்று இலித்தாலும்
உரசினாலும் தேய்த்தாலும்
ஊ என்று அலரினாலும்
எத்தனை விதவிதமாக
என்னென்ன செய்தாலும்,
’ஏய்’ என்றுகூட குரலிட மாட்டாய்
”ஐ” பிரமாதம்
”ஒ” என்றாலும்
”ஓ”என்றாலும்
மெளனமாய் இருப்பாய்!
கற்றலின் தொடக்கத்தில்
மற்றவரின் வாயும் வயிறும்
எரிந்த போதும்,கோபத்தில்
போட்டு உடைத்த போதும்
உன்னை விட்டு எங்கு போவேன்
என்று கவிழ்ந்திருப்பாயே!
என் முனகல்களையும்
பொறுத்திருப்பாயே!
என் அன்பு
”கடாயே”
உழைத்து உழைத்து
தேய்ந்து போனதில்
உன்னைப் போல் ஒருவன்
வந்தாலும்,உன்னைப்
பிரிய மனமில்லை.


(ஹி...ஹி...எப்புடி)13 comments:

எல் கே said...

நான்கூட உன்காதுக்காரருக்கு எழுதி இருக்கீங்கன்னு பார்த்தா :)))

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா!

கடைசியில் கடாயைப் பற்றியா? ;)))))

நான் ஏதோ ’கடா’வைப்பற்றி ஓர் ’பசு’ ஏக்கத்துடன் எழுதியக் கவிதையோ என எண்ணியே படிச்சிட்டு வந்தேன்.

ஹி..ஹி..ஹி..ஹி..ஹி..

நல்லாவே குறும்பாய் எழுதி இருக்கீங்க.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

அன்புடன் VGK

பால கணேஷ் said...

எ்பபூடியா... சூப்பருங்கோ...

கோவை2தில்லி said...

நானும் என்னமோ என்று படிச்சிட்டு வந்தேன்....கடாய்....:)))

சூப்பர்......

angelin said...

ஹா !!ஹா :)) அ ஆ இ ஈ வரிசையில் கடாய் பற்றின கவிதை சூப்பர் !!

///கற்றலின் தொடக்கத்தில்
மற்றவரின் வாயும் வயிறும்
எரிந்த போதும்,///


அவ்வவ் நீங்களும் சமைத்ததை மத்தவங்களுக்கு மட்டும் டேஸ்ட் அண்ட் டெஸ்ட் செய்ய கொடுத்தீங்களா ??:))))

Ramani said...

தலைப்பும் அதற்கான விளக்கமாய் அமைந்த பதிவும்
மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 3

Avargal Unmaigal said...

புதிய அரிச்சுவடி மிக நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

thirumathi bs sridhar said...

சற்றே ஏமாற்ற மகிழ்ச்சியில் இருக்கிங்களா?
அப்படியே பின்னுட்டமிட்டமைக்கு
அனைவருக்கும் நன்றிகள்.
ரமணி சார்,வாங்க,வாங்க.
//அவ்வவ் நீங்களும் சமைத்ததை மத்தவங்களுக்கு மட்டும் டேஸ்ட் அண்ட் டெஸ்ட் செய்ய கொடுத்தீங்களா ??:))))//
ஆமாம் ஏஞ்சலின் இன்னமும் அவ்வப்போது நடக்குதே.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்குங்க...

நன்றிங்க...

thirumathi bs sridhar said...

வாங்க சார்,நன்றிகள்,

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்றைய 07.10.2012 வலைச்சரத்தில், தங்கள் பதிவுகளில் சில அடையாளம் காணப்பட்டு, அருமையாகப் புகழ்ந்து பேசப்பட்டுள்ளன.

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_7.html

மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்
VGK

thirumathi bs sridhar said...

தெரியப்படுத்தியமைக்கு நன்றிகள் சார்