*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 12, 2012

எல்லாம் சகஜமப்பா !!!

அடப்பாவமே ! வீட்ல எல்லோரும் எங்க போனாங்களோ தெரியலேயே,

இதான் பெரியவங்களுக்கும் குழந்தைக்கும் உள்ள வித்யாசம்.
இவரப் பாருங்க,வரும் போதே தலையனையோட வந்திருக்காரு.....

இதுக்கு காரணம் என்னவாயிருக்கும்னு யோசிங்க,
                                       









                                          
அதுங்களுக்கு பிடிச்ச வாழைப்பழம் இப்படி ஆகிட்டேன்னுதான் அப்படியொரு போசு......

ஒரு விழா கூட்டத்திற்கே மலர் கொத்து கொடுக்கிறாங்க போல  



மாடல் அழகி பொம்மைகள்ன்னா நினைக்கிறிங்க,.........
எல்லாம் மவுசுப்பா மவுசு.
அதாங்க கணினிக்கு உபயோகிப்போமே அந்த மவுஸ்.



உங்களால முடிஞ்சா இந்த குழந்தையின் அழுகையை நிறுத்துங்க.
உங்களால முடியாதுன்னு நான் சொல்றேன்.
ஏன்னா இது பொம்மை.....  பொம்மை.......
வேணும்னா நல்லா பாருங்க.

குழந்தைன்னு ஏமாந்தவங்கள பாத்து சிரிக்காத! வாய மூடுங்றேன்  
கேக்க மாட்டிங்கிதே,

இருந்தாலும் இருக்கலாம்.


அலாக்கா மேலோடு துக்கிட்டாங்கன்னா என்ன பண்றது?
யாராவது அந்த கம்பியையும் தட்டி சேத்து எடுத்துகிட்டு போனாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை.

கலிகாலம்......போனா போவுது பசி தீர்ந்தால் சரி.

இதுதான் நவீன சமையலா? 


மத்த செல்லப் பிராணிகள் போல வாக்கிங் போகனும்னு ஆசைப்பட்ட மீனின்
ஆசையை நிறைவேற்றிய இவர் வாழ்க.மீனும் வெளி உலகம்னா என்னான்னு இப்பதான் பாக்குது.


என்னன்னு புரியுதா?பில்டிங்கை ஒட்டியவாறு வெளிப்புறத்தில் குளம்.( நீச்சல் தொட்டி).உள்ள இருப்பது மீன் இல்ல.மனுஷன்தான்.வேற என்னென்ன இப்படி அந்தரத்தில் வரப்போகுதோ....


ரொம்ப அவசியம்.

மோசமான ஆண்டிங்களா இருக்கிறாங்களே!எல்லாம் பொறாமைதான்.
காதலர் தினத்தை எதிர்க்கிறாங்களாம்!!!  

15 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அவர்களுக்கு அது “ரொம்ப அவசியம்”ன்னு தோணுதோ என்னவோ!

நீங்க ஏங்க அவசியமில்லேன்னு நினைக்கிறீங்க?

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாழைப்பழத்தில் எலி முகம்.ரொம்ப டாப் A1 பிக்சர்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாப் படங்களும் நீங்க எழுதியுள்ள கமெண்ட்ஸ் களும் வெகு அருமை.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன்

//நீங்க ஏங்க அவசியமில்லேன்னு நினைக்கிறீங்க?//

அதுக்குன்னு இம்மாம் பெரிய பாம்பை கழுத்துல மாட்டிகிட்டா....


தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றிகள் சார்.

பால கணேஷ் said...

எங்கம்மா புடிக்கறீங்க இந்த மாதிரி ரசிக்க வெக்கிற படங்களெல்லாம்... அந்த ரகசியத்தைச் சொன்னா, நானும் ஒரு பதிவு தேத்துவேன்ல... அந்த குழந்தை பொம்மையும், அதைப் பாத்து சிரிக்கிற ஆந்தையும் ரொம்பவே சூப்பர் போங்கோ..!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல படங்கள்.... நல்ல கமெண்ட்ஸ்... :)

இராஜராஜேஸ்வரி said...

படங்களெல்லாம் ரசிக்கவைக்கின்றன்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அதுக்குன்னு இம்மாம் பெரிய பாம்பை கழுத்துல மாட்டிகிட்டா.....//

ஓஹோ ... நீங்க பாம்பைச் சொன்னீஙகளா;

‘ரொம்ப அவசியம்னு!’

அவங்களுக்கு தங்கள் கழுத்தைச்சுத்தி பாம்பு இருக்குன்னு தெரியாதுங்க பாவம்.

அவங்க தான் வேறு ஏதோ வேலையிலேயே மெய்மறந்து ரொம்ப பிஸியாக இருக்காங்களே!

எல் கே said...

படங்களும் உங்க கமெண்ட்களும் நச்

ஆச்சி ஸ்ரீதர் said...

@கணேஷ்

நட்பு வட்டத்தில் எப்பவாது இப்படியான மெயில் வரும்,நாம் எதாவது இணையத்தில் பாக்கும்போது இப்படியான படங்களை பாக்க நேரிடும்,இவைகளில் நல்லவற்றை சேகரித்து இப்படி பதிவாக்கிட வேண்டியதுதான்.

தாங்கள் ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சார்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

ஆச்சி ஸ்ரீதர் said...

@இராஜராஜேஸ்வரி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன் சார்

அடடா!எனக்கு அந்த பாம்புதான் தெரியுது சார்.
மீண்டும் வருகைக்கு நன்றி சார்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@எல்.கே
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

ADHI VENKAT said...

படங்களும், கமெண்ட்டுகளும் ரொம்பவே நல்லாயிருக்குங்க....