*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 11, 2012

இதுதான் காதலா?

அம்மா! உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னதே இல்லை,
அப்பா !உங்களை பிடிக்கும்னு சொன்னதே இல்லை,
உடன் பிறந்தோரை பிடிச்சிருக்குன்னு சொன்னதே இல்லை,
பிடித்த ஆசிரியர்களிடமும் உங்களை பிடிச்சிருக்குன்னு சொல்லவே இல்லை,
நட்புகளிடமும் உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னதே இல்லை,
பிடித்த சுற்றத்தாரிடமும் உங்களை ரொம்ப பிடிக்கும்னு சொன்னதே இல்லை,
இவர்களில் யாரும் என்னை பிடிச்சிருக்குன்னும் சொன்னதே இல்லை!
இவர்களுக்கு என்னை மட்டும்தான் பிடிக்க வேண்டுமென்ற 
எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. 

முழுமையான என் நேசத்தை 
உன்னிடம் வெளிப்படுத்தாமலே !
சொல்லாமலே!

என்னை விரும்புவதாக சொல்ல வேண்டும்
உனக்கு என்னை மட்டுமே பிடிக்க வேண்டும்,
எதிர்பார்த்து தவிக்கின்றேன்!
இதுதான் காதலா?




11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆமாம். இது தான் காதல்.

நம்மை மட்டுமே விரும்ப வேண்டும். நம்மிடம் மட்டுமே அன்பு செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வன்றி சார்.

பால கணேஷ் said...

தான் நேசிக்கும் உயிர் தன்னை மட்டுமே நினைக்க வேண்டும், தன்னையே சுற்றிவர வேண்டும் என்ற உயரிய எதிர்பார்ப்புடையதே உன்னதமான காதல்! அழகான வார்த்தைகளால் படம் பிடித்துக் காட்டி அசத்திட்டீங்க அம்மணி!

சித்தாரா மகேஷ். said...

உங்கள் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்.வாழ்த்துக்கள்.காதல் என்பது பற்றி எல்லோர்க்கும் குளப்பம் இருப்பது உண்மைதான்.

ஹேமா said...

ம்...இதுதான் உண்மை.காதலின் சக்தியே இதுதான் ஆச்சி!

கீதமஞ்சரி said...

ஆமாம், ஆமாம். இதுதான் காதல். எதில் விட்டுக்கொடுத்தல் இருந்தாலும் இந்தக் காதலில் மட்டும் பொஸஸிவ்னஸ் எந்த ரூபத்திலாவது தலையெடுத்துவிடும். அழகா சொல்லியிருக்கீங்க ஆச்சி.

Avargal Unmaigal said...

இதுதான் காதலா? ஆமாங்க இதுதான் காதலுங்க.....அருமையான காதலுங்க உங்க காதல்

ஆச்சி ஸ்ரீதர் said...

@கணேஷ்
தங்களின் புரிதலுக்கும் இனிமையான கருத்திற்கும் நன்றிகள் சார்

@சித்தாரா மகேஷ்
காதலுக்கு வரைமுறை சொல்லிவிட முடியாது என்றாலும் எல்லோர்க்கும் பொருந்தும் வகையிலும் திருமணத்திற்கு முன்னோ,பின்னோ இப்படியொன்றை அனுபவிக்காமல் யாராலும் இருந்திருக்க முடியாது என்றேண்ணியும் படைத்துள்ளேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஹேமா
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வுடன் நன்றி சகோதரி,

@கீதமஞ்சரி
பொசசிவ்னஸ் இல்லையெனில் ஏது காதல்?
பொசசிவ்னஸ்ம் அளவோடு வேண்டும்.
ஈகோவும் இல்லாமல் போக வேண்டும்.
நன்றிங்க.

@அவர்கள் உண்மைகள்
வாங்க,உங்களுக்கு தெரியாததா...தங்களின் கருத்திற்கு மிக்க நன்றிங்க .

ADHI VENKAT said...

ஆமாம். இந்த எதிர்பார்ப்பு தான் காதலாக இருக்கும்...

ஆச்சி ஸ்ரீதர் said...

அதுவேதான்,கருத்திற்கு நன்றி ஆதி.