*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 10, 2012

நம் பல் பிரச்சனை மருத்துவர்களுக்கு பலே!,பலே!



உடலின் பாகங்கள் அனைத்தும் நலமுடன் இருப்பது அவசியமானதுதான்.நலம் குறையும்போது மருத்துவர்களை நாடுகின்றோம்.அனைத்து மருத்துவர்களும் பணம் சம்பாதிக்க மட்டுமே பணியாற்றுகிறார்கள் என்று சொல்லிவிட இயலாது. மருத்துவர்களும், மருத்துவமுறைகளும் பெருகிவிட்டதற்கு இணையாக நோய்களும் பெருகிவிட்டன. ஒரு சில அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இலவசமாக  நமக்கு நல்லபடியாக வைத்தியம் பார்க்கப்படுகின்றது.


 பல் நலக்குறைவும்,அதற்கு மருத்துவர்கள் வசூலிக்கும் பணமும் என்னை பாதித்ததில் மருத்துவர்களிடம் வாதிடுவதற்கு பதிலாக பதிவிடுகிறேன்.தற்பொழுது 20 ரூபாய் ,50 ரூபாய் மருத்துவக் கட்டணம் வசூலித்ததெல்லாம் மலையேறிப்போய் குறைந்த கட்டணம் 100ரூபாய் முதல் 600 ரூபாய் வரை உள்ளது.


 தெரிந்த சகோதரி ஒருவருக்கு லேசான தெத்துப்பற்கள் இருந்தது.பல் மருத்துவரிடம் சென்று பற்களை சமப்படுத்தும் கிளிப் அணிந்திருந்தார்.அதன் விலை 8000 ரூபாய் என்றதும் பகீரென்று இருந்தது.அதே மாவட்டத்தில் இதே அளவு பல் கிளிப்பிற்கு 3000 ரூபாய்தான் மற்றொரு மருத்துவர் வசூலிக்கிறார்.தரம் வேறுபாடு இருக்குமா என்பதுபற்றி  தெரியவில்லை.  

நகரங்களில் மற்றும் நவீன மருத்துவமனைகளில் கட்டணங்கள் எழுதப்படாத சட்டமாகவே உள்ளது.நான் தற்பொழுது வசிக்கும் பகுதியில் பல் மருத்துவத்திற்கு வசூலிக்கும் பணத்திற்கு எல்லா பற்களையும் கழற்றி வைத்துவிடலாம்னு தோன்றுகிறது.ஒருவர் தன் பற்களில் காரைப்பிடித்திருப்பதை சுத்தம் செய்ய சென்றிருக்கின்றார்.மருத்தவர் கட்டணம் தனி,காரை நீக்கம் செய்ய ஒரு பல்லுக்கு 200 ரூபாய் வீதம் 3 பற்களை ரூ600க்கு சுத்தம் செய்து வந்துள்ளார்.மாத்திரை,பேஸ்ட் என்று அது தனி விவகாரம்.


பல் வேர் சிகிச்சை ஒரு வாரத்தில் செய்திடலாம்.ஆனால் வசூலிக்கும் பணத்திற்கு வேலை காட்ட 10 அல்லது 15 நாட்கள் வரை அலையவைக்கின்றனர்.

பல் வேர் சிகிச்சை செய்து பொருத்தப்பட்ட பல் விழுந்துவிட்டால் மீண்டும் ஒரு பசையின் மூலம்தான் ஒட்டவேண்டும்,அந்த பசைக்கு ரூ150 செலுத்தவேண்டும். 

பற்குழி அடைக்க ஒரு பல்லிற்கு ரூ250 முதல் ரூ400 வரை வசூலிக்கப்படுகிறது,மருத்துவர் கட்டணமும்  செலுத்த வேண்டும்.

சமீபத்தில் 50 வயதிருக்கும் ஒரு பெண்மணி  கீழ்த்தாடை பற்களில் பிரச்சனை என்று வைத்தியம் செய்ய சிறிய பல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துள்ளார்.நான் கொடுத்த மருந்துகளை சரியாக உபயோகிக்கவில்லை,கிருமி அடுத்த பல்லிற்கு பரவிவிட்டது,நீங்கள் உங்கள் பற்களை சரியாக பராமரிக்கவில்லை என்று சொல்லி அந்த மருத்துவர் அந்த வைத்தியம்,இந்த வைத்தியமெல்லாம் பார்த்தும் அந்த பெண்ணிற்கு கீழ் பற்கள் அனைத்தும்  வலியெடுக்கத் துவங்கி,கீழ் பற்கள் முழுவதும் நீக்கப்பட்டுவிட்டு செயற்கைப்பற்கள் பொருத்தியாகிவிட்டது.இருப்பினும் விரும்பிய நேரத்தில் விரும்பிய உணவை சாப்பிட முடியவில்லை என்று வருந்துவார்.ஆன செலவு 60,000 ரூபாய் என்றால் நம்பமுடியுமா?உண்மைதான்.வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைந்தது இல்லாமல் வலி,மன வேதனை,வீடு,கணவன்,பிள்ளைகளை கவனிக்க முடியாமல் போனதில் தவித்துப்போனார்.

பல் வேர் சிகிச்சை, பற்களை வெண்மையாக்குவது, சீரமைப்பது,செயற்கைப் பற்கள்  இவைகளுக்கு எக்ஸ்ரே இப்படி பல நவீன முறைகளுக்கும் மருத்துவர்,மருத்துவமனைகளின் தரத்தைப்பொறுத்து கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது. இது அனைத்து நோய்களுக்கும் பொருந்தும். உண்மையில் இந்த கட்டணங்கள் இந்த மருத்துவமுறைக்கு தகுமா?அல்லது மக்களை ஏமாற்றுகிறார்களா என்று தெரியவில்லை.கேட்டால் உங்களை நாங்கள் அழைக்கவில்லை,எங்கு உங்களுக்கு சரி வருமோ அங்கு செல்லுங்கள் என்று பதில் வருகிறது.அதனால்தான் சிலர் இந்த செலவுகளுக்கு பயந்து அரசு மருத்துவமனை அல்லது நம் சொல் கேக்கும் தனியார் மருத்துவரிடம் சென்று இந்த பல்லை பிடுங்கிவிடுங்கள் என்று சொல்லி ஒரு நாள் வேலையாக முடித்துவிடுகின்றனர்.

எதுவும் நல்லபடியாக இருக்கும் வரை,இயங்கும் வரை அதன் அருமை நமக்கு விளங்குவதில்லை.பல் மட்டுமல்ல உடல் முழுவதையும் இயன்றவரை பேணிக்காப்போம்.முடியாமல் போகும்பட்சத்தில் கடவுள் மேல் பாரத்தை வைக்க முடியாது,கடவுளின் தூதர்களான மருத்துவர்களைத்தான் சரணம்  அடைய வேண்டியுள்ளது.

14 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பல பற்றி நான் எழுதியுள்ள கீழ்க்கணட பதிவுகளைப் படியுங்களேன்.

சிரித்து சிரித்தே பல் சுளுக்கிக்கொள்ளும்.

http://gopu1949.blogspot.in/2011/01/1.html
பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா! பகுதி 1 to 8

gopu1949.blogspot.in/2011/02/blog-post_06.html
அவன் போட்ட கணக்கு ஒரே பகுதி

வை.கோபாலகிருஷ்ணன் said...

பொதுவாக ஆஸ்பத்திரிகள் பற்றிய அனுபவம் நகைச்சுவையாகப் பார்க்க்
என் வாய் விட்டுச்சிரித்தால் படியுங்கோ
இதோ இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_6123.html

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன் சார்

வருகைக்கு நன்றி சார்.தங்களின் இந்த பதிவுகளை படித்து ரசித்திருக்கிறேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ரெத்னவேல்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்

வை.கோபாலகிருஷ்ணன் said...

thirumathi bs sridhar said...
//@வை.கோபாலகிருஷ்ணன் சார்

வருகைக்கு நன்றி சார்.தங்களின் இந்த பதிவுகளை படித்து ரசித்திருக்கிறேன்.//

என் பதிவுகளைப் படித்து ரசித்தால் போதுமா?

பின்னூட்டம் தர வேண்டாமா?

அப்போது தானே நீங்கள் படித்தீர்க்ளா இல்லையா என்று எனக்குத் தெரியும்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு... பல பல் மருத்துவர்கள், அதிலும் தில்லியில் உள்ள பல் மருத்துவர்கள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்....

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன் சார்

வந்து செக்பன்றேன்.

@வெங்கட் நாகராஜ்
தங்களின் உறுதியான கருத்துப் பதிவிற்கு நன்றி.வசதி இல்லாதவர்களுக்கும் வியாதிகள் வருகிறது,இது போன்ற மருத்துவர்களுக்கு பணம் மட்டுமே வேண்டியதாக உள்ளது.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. இங்குள்ள என் தோழிகள் மருத்துவரிடம் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்த பின்னும் அவதிப்படுவதாக சொல்லக் கேட்டிருக்கிறேன்.....

சேவை மனப்பான்மை குறைந்து பணம் சம்பாதிப்பது தானே மருத்துவர்களின் குறிக்கோளாகி விட்டது..... ஒரு சிலர் இதில் விதி விலக்கு......

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஆதி

இன்று இதே நிலமைதான் பல மக்களுக்கும்.கருத்திற்கு நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

//பல் மட்டுமல்ல உடல் முழுவதையும் இயன்றவரை பேணிக்காப்போம்.முடியாமல் போகும்பட்சத்தில் கடவுள் மேல் பாரத்தை வைக்க முடியாது,கடவுளின் தூதர்களான மருத்துவர்களைத்தான் சரணம் அடைய வேண்டியுள்ளது.//
இப்படி சரணம் அடையும் பொழுது நமக்கு நல்லது நடந்தால் சரி,
ஆனால், ஆச்சி, இப்பொது எல்லாத்துக்கும் பணம்தான்.சரியான வைத்தியம் கிடைப்பதே கஷ்டமாக இருக்கே?
உடல் நலம் பேணுவது பற்றி நல்ல பதிவு.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ராம்வி

குணமடைந்தால் சரி,உயிர் பிழைச்சால் போதும்னு மருத்துவர்கள் சொல்வதைத்தானே கேக்க வேண்டியுள்ளது.உயிரை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வேடிக்கைத்தானே பார்க்க முடிகிறது.நல்லது நடந்தால் இருவருக்கும் நன்மையே!கருத்திற்கு நன்றி.

கீதமஞ்சரி said...

பல் மருத்துவர்களிடம் செல்வதென்றாலே பலருக்கும் அலர்ஜிதான். சொத்தையுடன் சொத்தையே அல்லவா பிடுங்கிவிடுகிறார்கள். கூடுமானவரை உடல் ஆரோக்கியத்தைப் பேணினாலே பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். நல்லதொரு பதிவு ஆச்சி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கீதமஞ்சரி
தங்களின் கருத்து சரியானதே!கருத்திற்கு நன்றி.

Robin said...

சிறு நகரங்களில் பல் மருத்துவர்கள் (ஒரு சிலரைத் தவிர) அதிக கட்டணம் வசூலிப்பதில்லை. தினமும் காலை இரவு இரண்டு வேளைகள் பல் துலக்கினாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.