*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jan 5, 2012

என் வலைதளத்தின் முதல் வருட நிறைவு நாள்

இந்த வலைதளத்தினை எப்போது துவங்கினேன் என்பது நினைவில்லை. எனது முதல் பதி்வு தேசிய மொழி  . வெளியிட்ட நாள், கடந்த ஆண்டு 5/1/2011.இன்றோடு ஒரு வருடம் நிறைவாகிவிட்டது.பதிவுலகம் வந்ததற்கு முதல் காரணம் என் அம்மா என்று பலருக்கும் தெரிந்திருக்கும்.எனினும் பல பதிவர்களின் பதிவுகளை மனதில் கொண்டால் முதல் வருட நிறைவை பதியும் அளவிற்கு தகுதி பெற்றுள்ளேனா என்ற ஐயம் வருகிறது.இரண்டாம் காரணம் அதே சக பதிவர்களின் எழுத்துதான் என்னையும் எழுதத் தூண்டுகிறது.

நான் மிகச் சராசரியான தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த பெண் மட்டுமே.இலக்கண இலக்கியங்கள் பள்ளி படிப்பு வரைக்குமே.பள்ளி படிக்கும்போது தமிழுக்கு மட்டும் மன்றத் தேர்வு என்ற பெயரில் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பிற்காக  தேர்வு  நடைபெறும்.அதே வகுப்பின் தமிழ் புத்தகம் முழுதும் படித்து எழுத வேண்டும். எட்டாம் வகுப்பு படிக்கும்போது  100 க்கு 94 மதிப்பெண்கள் பெற்று நாகை  மாவட்டளவில் முதல் மதிப்பெண் பெற்றேன்.அதைத் தவிர இன்று தமிழில் வலைதளம் வைத்துள்ளேன் என்பதில் மகிழ்கிறேன். இன்றும் எழுதும்போது  எங்கெங்கு  க்,த்,ப்,சேர்க்க வேண்டுமென்பதிலும் தடுமாறுவேன்.


கடந்த வருடம் இதே தினத்தில் முதல் பதிவு தொடங்கி,மொத்தம் 80 பதிவுகள் வெளியிட்டுள்ளேன்.இந்த வருட இதே தேதியில் இந்தப் பதிவு இரண்டாவது பதிவாகிறது.இன்று வரை 82 பதிவாகிறது.என் பதிவிற்கு முதல் பின்னூட்டமிட்டவர் திரு கே.ஆர்.பி செந்தில் அவர்கள்.திரட்டிகளில் இணைக்கவும் உதவினார்.பின்னூட்டங்கள் என்னை மேம்படுத்த உதவும் என்றெண்ணி சிலருக்கு மெயில் அனுப்பினேன்.அவர்களில் ஒருவர் மட்டுமே என் வலைதளம் வந்து பின்னுட்டமிட்டார்.அவர் கோவை2தில்லி ஆதி அவர்கள்.அதற்கு பின் நான் வெளியிடும் பதிவு எனக்கே சிறந்ததாகப்படும்போது பிறருக்கு மெயில் அனுப்புவேன்.அப்போதெல்லாம் யாராவது பின்னூட்டமிட்டால் மிகவும் சந்தோசப்படுவேன். பதிவு சிறப்பாக இருப்பின் படிப்பவர்கள் தானே முன்வந்து பின்னூட்டமிடுவார்கள் என்பதையும் நாளடைவில் புரிந்துகொண்டேன்.


ஆனால் பல பதிவர்களின்  மிகச் சிறப்பான பதிவுகள்,பலருக்கும் சென்றடைய வேண்டிய பதிவுகள் படிப்பாரற்றும் கிடக்கிறது.பின்தொடர்வோர்கள் இல்லாமல் இருக்கிறது.பி்ன் தொடர்வோர்கள் அதிகம் இருந்தாலும் பின்னூட்டங்கள் இல்லாமல் இருக்கிறது.எல்லோராலும் அனைத்து பதிவர்களின் பதிவுகளையும் படிப்பது இயலாது என்றாலும் நட்பின் அடிப்படையில்,ஈர்ப்பான தலைப்புகளின் அடிப்படையில் ஒருசாராருக்கு சில காலம் பின்னூட்டங்கள் குவிவதும் நாளடைவில் அத்தகைய பதிவர்களுக்கும்  பின்னூட்டங்கள் குறைவதையும் காணும்போது பின்னூட்டங்களின் மீதிருந்த ஆவல் எனக்கு மறைந்தது.


என் எழுத்தின் குறைகளை,பதிவுகளின் எதிர் விமர்சனங்களை ஏற்கும் மனதுண்டு.ஆனால் வீம்புக்கு பின்னூட்டம் வரும்போது அதே வீச்சில்தான் பதில் சொல்ல வேண்டியுள்ளது.நம் எழுத்திற்கு நாமே ராஜா நாமே மந்திரி என்றாலும் தரத்தோடு இருக்க வேண்டும்.அந்தரங்க விசயங்களோ,அல்லது பாலியல் விசயங்களோ ஆண் பதிவர்கள் வெளியிடும்போது படிப்பவர்களின் தேர்வுகளாக மட்டும் உள்ளது.அதே விசயங்களை பெண் பதிவர்கள் சொல்லிவிட்டால் அந்த பெண்ணின் சுயமரியாதையும் கெடுகிறது.பின்னூட்டம் எழுதினால் கூட பதில் எப்படி வருமோ,மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று ஐயப்பட்டு படிக்காதது போல சென்றுவிடுவதே நமக்கு மரியாதை என்பதுதான் பல பெண் பதிவர்களின் நிலைமை.


தொடக்கத்தில் பின்தொடர்வோர் இணைப்பை  இணைக்காமல் இருந்தேன்.கற்றலும் கேட்டலும் ராஜி அவர்கள் பின் தொடர்வோர் இணைப்பை இணைக்கும்படி ஆலோசனை தந்திருந்ததால் அதற்கு பிறகு இணைத்தேன்.என் வலைதளத்தில் இன்று வரை 86 பின்தொடர்வோர்கள் இணைந்துள்ளனர்.என் கையில் பணம் சேர்ந்தால்கூட அப்படி ஒரு சந்தோசம் ஏற்ப்பட்டதில்லை,ஆனால் பின் தொடர்வோர்கள் அதிகரிக்கும்போது என் எழுத்தினால் சம்பாதித்த சொத்தாக பெரும் மகிழ்ச்சியடைவேன்.86 நபர்களுக்கும்  என்  நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


ஒரு பதிவிற்கு 10 ரூபாய் அல்ல 10 பைசா கூட கிடைக்காதுன்னு அனைவருக்கும் தெரியும் அப்படியிருந்தும் பதிவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறதே தவிர குறையவில்லை.பணியில் இருப்போரும் முன்வந்து எழுதிக்கொண்டுதான் இருக்கின்றனர்.காரணம் எழுத்தின் மீதுள்ள ஆர்வம்,தனக்குத் தெரிந்ததை,கற்பனைகளை,கருத்துக்களை பகிர்தலில் ஆர்வம்,தன் எழுத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்துதலில் ஆர்வம்,கிடைக்கும் நேரத்தை பதிவுகளை படிப்பதற்கும்,எழுதுவதற்கும் செலவளிக்கும் ஆர்வம் போன்றவைகள் அவரவர் திறன்களுக்கேற்ப வெளிப்படுகிறது.


பள்ளி,கல்லூரியில் படிக்கும்போது சில புரியாத,தெரியாத பாடங்களை தெரிந்தவர்களிடம் கேக்க நேரும்போது வேணுமென்றே சொல்லிக்கொடுக்காமல் அல்லது தெரிந்தாலும் எனக்குத் தெரியாதுன்னு சொன்ன நபர்கள் உண்டு.பணி செய்த இடத்தில் டெக்னிக்கலான விசயங்களை அவ்வளவு எளிதில் யாரும் யாருக்கும் உடனே கற்றுத் தந்துவிட மாட்டார்கள்.வசிக்கும் பகுதிகளில் சமையல் சந்தேகங்கள் அல்லது கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுக்கொடுங்கள் என்றபோது உடனே யாரும் முன்வந்திடவில்லை.இதுவரை பழகியதை மறந்து,முகதாட்சண்யம் பாக்காமல் ”எனக்குத் தெரியாது” அல்லது மலுப்பல் பதில்களை கேட்டிருக்கிறேன்.இதைவிட மோசமாக ஒரு பெண் வேணுமென்றே தவறாக சொல்லிக்கொடுத்துருக்கிறார்.இப்படிப்பட்டவர்கள் அதீத திறமைசாலிகளாக எனக்குத் தெரிவார்கள்.


தனக்கென பணி,குடும்பம் இருந்தாலும் நேரம் ஒதுக்கி பொது விசயங்கள்,தமிழ் புலமை மட்டுமின்றி கணினி மற்றும் பிற துறைகள் சம்பந்தமான டெக்னிக்கல் பதிவுகளை எத்தனைபேர் பதிவு செய்கிறார்கள்.தனக்குத் தெரிந்த சமையல் கலைகள்,கைவினைப் பொருட்களின் செய்முறைகள்,மருத்துவக் குறிப்புகள்,பல துறைகள் சார்பான பதிவுகள்,ஆலோசனைகள் எத்தனை பேர் பகிர்ந்துகொள்கின்றனர்.அவர்களுக்கெல்லாம் கூகிளார் சம்பளமா தருகிறார்.தனது வலைதளத்தில் பிரச்சனை,டெக்னிக்கலான சந்தேகம், என்றால் முகம் தெரியாத சக பதிவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவுவதையும்,வலைதள நட்பு சொந்த கஷ்டகாலத்தில் உதவுவதையும்  இங்குதான் பார்த்தேன்.


இப்படி ஒருபுறமிருக்க சிறுபிள்ளைத்தனமாக போட்டி பொறாமையில் பதிவிடுவது,மற்றவர் பதிவின் கருத்துக்களை தனது பெயரில் வெளியிடுவது(காப்பியடிப்பது),அவதூறு பதிவுகள்,பின்னூட்டங்கள்,சென்சார்  செய்ய ஆளில்லையா,ஒருவரும் எதிர்க்கவில்லயே,தன்னை விசித்திர சிந்தனைவாதியா காட்டிக்கிற பின்னூட்டவாதிகள்,பதிவர்கள், இதெல்லாம் படிக்கமாட்டாங்களா,எங்க போனாங்க அவங்களெல்லாம்  போன்றவைகளையும் சுற்றிக் காட்டுகிறது பதிவுலகம். அவரவர் விருப்பத்திற்கு, திறனுக்கேற்றார் போல பதிவுலகி்ல் உலாவுகிறோம்.


பொதுவாக வலைதளம் அதுவும் தமிழில் வைத்திருப்போருக்கு வெட்டி ஆசாமிகள் என்ற முத்திரையும் உண்டு.யாரும் கோபிக்க வேண்டாம்.கேள்விப்பட்டதை சொன்னேன்.போனாபோவுதுன்னு பின்னூட்டமிடுபவர்களையும் பின்னூட்டமிட்ட பாவத்துக்கு இதே போல பல வெட்டிகள் இருக்காங்கன்னு சிலர் கிண்டலடிக்கிறாங்கப்பா.!


சராசரியான குடும்ப வாழ்க்கை கொண்ட நான் வலைதளம் வைத்து பதிவுகள் வெளியிடுவதே எனக்கு பெரியவிசியம். கடந்த  வருடதில்  2011 அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 9ஆம் தேதிவரை வலைச்சர ஆசிரியாராகும் வாய்ப்பு கிடைத்திருந்ததில் என்னைவிட என் கணவருக்கு ஆச்சர்யம் (என் சுய விபரம் அவருக்குத்தானே தெரியும்).உன்னால் முடிந்தவரை நல்லபடியாக செய் என்று ஊக்கம் தந்தார்.இணையமும்,பதிவுகள் எழுதுவதும் உனக்கும்,குடும்ப வாழ்விற்கும் இடையூராகிவிடக் கூடாது,நல்ல வழியில்  உனது நேரத்தினை செலவிடுவதிலும்,அறிவுசார் விசயங்களை தெரிந்துகொள்வதிலும் என் எதிர்ப்பு இருக்காது என்பார் எனது கணவர்.அவருக்கு என்றென்றும் எனது நன்றிகள்.

 என் பதிவுகளை படிப்போருக்கும்,நிறை குறைகளை தெரிவிப்போருக்கும்,வாக்குகள் அளிப்போருக்கும்,ஊக்கம் தருபவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.நேரமிருக்கும்போது  தரமான பதிவுகளை வெளியிட முயல்வதோடு,மற்றவர் பதிவுகளையும் படிக்கவும் விரும்புகிறேன்.

28 comments:

Avargal Unmaigal said...

வாழ்த்துக்கள்....

Unknown said...

வாழ்த்துக்கள் சகோதரி...

தொடர்ந்து எழுதுங்கள்....

Anonymous said...

முதல் வருட நிறைவு...
மனம் நிறைந்த வாழ்த்துகள். இறை ஆருள் கிட்டட்டும்.
வேதா.இலங்காதிலகம்.

கீதமஞ்சரி said...

அழகான அலசல். பதிவுலகில் மட்டுமல்ல, எல்லா விஷயங்களிலும் நிறை குறைகள் உண்டுதானே... பதிவுலகம் பற்றி மிகச் சரியாகவே சொல்லியிருக்கீங்க.

இந்த ஒரு வருடத்தில் உங்கள் பதிவுகள் சிலவற்றைத்தான் நான் படித்திருக்கிறேன். படித்த பதிவுகள் பலவும் பயனுள்ளதாகவும், சாரம் கொண்டதாகவும் உள்ளது. எனவே தயக்கம் உடைத்து தொடர்ந்து பதிவுகளைத் தந்துகொண்டே இருங்க.

முதல் வருட நிறைவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஆச்சி.

(முதல் பத்தியில் வலைப்பூ ஆரம்பித்த வருடத்தை ஒருமுறை சரிபார்த்துக்கங்க.)

pudugaithendral said...

வலைப்பூவுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாட்டமா. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நம் மனதில் இருப்பதை சொல்லிக்கொள்ள ஒரு இடம். பத்திரிகைகளுக்கு அனுப்பி அதை அவர்கள் நிராகரித்துன்னு மன வேதனை படுவதை விட, நம் மனதில் பட்டதை நமக்கு விரும்பும் வகையில் பதிவா போட்டு சந்தோஷப்பட்டுக்கலாம்.

தொடர்ந்து எழுதுங்கள்

இராஜராஜேஸ்வரி said...

வலைதளத்தின் முதல் வருட நிறைவு நாள்" இனிய வாழ்த்துகள்..

ஆச்சி ஸ்ரீதர் said...

@அவர்கள் உண்மைகள்

உடன் வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்.

@கே.ஆர்.பி.செந்தில்
வாங்க,வாழ்த்திற்கு நன்றிகள்.

தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கோவைகவி

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

@கீதா
//பதிவுலகில் மட்டுமல்ல, எல்லா விஷயங்களிலும் நிறை குறைகள் உண்டுதானே//

இங்கு வந்து இங்கும் இப்படித்தானா என்று தெரிந்துகொண்டேன்.

தங்களின் கருத்தில் மகிழ்கிறேன்.மிக்க நன்றி.திருத்திவிட்டேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@புதுகைத் தென்றல்
சரியாக சொல்லியுள்ளீர்கள்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

@இராஜராஜேஸ்வரி
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

வாழ்த்துக்கள்.

உங்க சுய அலசல் மிக அருமை.பின்னூட்டங்களைப் பற்றி நான் மனதில் நினைத்துக்கொண்டிருப்பதை நீங்கள் சொல்லியிருக்கீங்க ஆச்சி. அருமை.

Angel said...

வாழ்த்துக்கள் ஆச்சி .பதிவுலகம் பற்றி அருமையாக அலசியிருக்கீங்க .
உங்க எழுத்துக்கள் வீரியமுள்ளவை .அரைகுறை தமிழ் எழுதும் நானே இப்பொழுதெல்லாம் சிறிதேனும் கவனமுடன் எழுதுகிறேன் என்றால் அதற்க்கு காரணம் நீங்கள்தான் .தொடர்ந்து எழுதுங்கள் .நாமக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்வோம் .

kaialavuman said...

வாழ்த்துகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@RAMVI
அப்படியா?வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

@ஏஞ்சலின்
ஒருவரை முன்வைத்து நல்ல செயல்பாடுகளில் ஈடுபடுவது இருவருக்கும் சந்தோஷமே.நீங்களும் அழகாகவே பதிவிடுகிறீர்கள்.ஊக்கமான கருத்துக்களுக்கு நன்றிங்க.

@வேங்கட ஸ்ரீனிவாசன்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க.

ஊரான் said...

மேலும் வளர வாழ்த்துகள்!

KParthasarathi said...

ஒரு வருஷத்தில் 80 பதிவுகள் மெச்சத்தக்க விஷயம்.கூடிய சீக்கிரம் 100 இலக்கை எட்டி எங்கள் எல்லோரையும் சந்தோஷத்தில் ஆழ்த்துங்கள். சாதாரண தமிழ் பரிச்சயம் என்று கூறிக்கொண்டு இவ்வளவு அழகாகவும் சுவைபடவும் எழுதுகிறீர்களே, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம்: 4
யூடான்ஸ்: 6
இன்ட்லி: 3

முதல் வருட நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

புத்தாண்டான 2012 இல் மிகப்பெரியதொரு பரிசு தங்களுக்கு இறைவனால் தரப்பட உள்ளது.

அட்வான்ஸ் வாழ்த்துகள்.

அன்புடன்
vgk

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஊரான்
வாங்க,நன்றிங்க

@கே.பார்த்தசாரதி
உங்கள் கருத்திற்கு நன்றிங்க,ஆறே மாதத்தில் 100 பதிவுகள் எழுதுறவங்களும் உள்ளனரே.எனினும் உங்கள் கருத்துக்களை ஊக்குவிப்பாக எடுத்துக்கொள்கிறேன்,.

@வை.கோபாலகிருஷ்ணன் சார்

மெயிலிலும் கருத்துக்களை அனுப்பியதில் மகிழ்கிறேன்.இக்கட்டான சூழ்நிலையிலும் வருகை தந்தமையில் மகிழ்கிறேன்.பதிவுலகம் உங்களைப் போன்றோரையும் அருகிலே தந்துவிடுவதில் என்னைப்போன்றோருக்கு பெருமிதமே.நன்றி சார்

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் ஆச்சி....

தொடர்ந்து எழுதுங்கள்.... நமக்குப் பிடிக்கும் வரை எழுதிக்கொண்டு தான் இருக்க வேண்டும்.....

சி.பி.செந்தில்குமார் said...

இனிய வாழ்த்துக்கள்

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்
@சி.பி.செந்தில் குமார்

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

முதல் பிறந்த நாளுக்கு இனிய நல்வாழ்த்துகள்..

அருமையான சுய அலசல்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@அமைதிச்சாரல்
வாங்க,வாழ்த்திலும் கருத்திலும் மகிழ்கிறேன்.நன்றி.

ADHI VENKAT said...

முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துகள் ஆச்சி. குளிரினால் ரொம்ப தாமதமா வந்திருக்கிறேன்.

இந்த வருடம் மிகச்சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஆதி
மிக்க நன்றி.வெயிலைவிட குளிர் பரவாயில்லை என்றாலும் தற்சமயம் குளிர் பயங்கரமாகவே உள்ளது.

ம.தி.சுதா said...

முதலில் பிந்திய வருகைக்கு மன்னிக்கணுமுங்க...

ஃஃஃஃபொதுவாக வலைதளம் அதுவும் தமிழில் வைத்திருப்போருக்கு வெட்டி ஆசாமிகள் என்ற முத்திரையும் உண்டுஃஃஃஃ

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் ஏதோ ஒன்றை சாதிக்கலாம் என்ற நம்பிக்கை தாராளமாகவே இருக்கிறது சாதித்துக் காட்டுவோம் வாழ்த்துக்கள் தொடருங்கள் அக்கா...

ஆச்சி ஸ்ரீதர் said...

@ம.தி.சுதா
மன்னிப்பு அவசியமில்லை சகோதரரே!சாதிப்போம்,சாதிக்க முயற்சிப்போம்.நன்றி.

Unknown said...

தங்கள் வலையின் முதல் வருட
நிறைவுக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்!
முதல் முறை வந்திருக்கிறேன்!
இனி தொடர்வேன்
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

ஆச்சி ஸ்ரீதர் said...

@புலவர்.சா.ராமாநுசம்

வணக்கம்
தங்கள் முதல் வருகையிலும்,ஃபாளோயர்சில் இணைந்து தொடர்வேன் என்று கருத்திட்டமையிலும் மகிழ்கிறேன்.
தங்களின் பின்னூட்டங்கள் என்னை மெறுகேற்றும்.நன்றி.