*வணக்கம் வருகைக்கு நன்றி*

Nov 21, 2011

மழலைகள் உலகம் மகத்தானது

மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடர் பதிவிற்கு  திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்கள் அழைத்ததனை அன்புடன் ஏற்று இந்த பதிவினை தொடங்குகிறேன்.தற்சமயம் இந்த வாய்ப்பு கிடைத்தமையில் கூடுதலாக மகிழ்கிறேன்.
                


ஜவர்ஹலால் நேரு அவர்களின் பிறந்தாநாள் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டாலும் அங்காங்கு குழந்தைகள் தினம் கொண்டாடினாலும்,குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தாலும் குழந்தைகளாக இருக்கும்போது அந்த தினத்தின் விபரங்கள் புரிவதில்லை.எதோ வாழ்த்து  சொல்கிறார்காள்,கொண்டாடுகிறார்கள் என்பது மட்டுமே அவர்களுக்கு புரியும்.  குழந்தை பருவத்தை கடந்திருக்கும்  தருணத்தில்தான் இந்த
தினத்தின் விபரங்கள் புரியவருகிறது  என்பது என் கருத்து .         


                     
பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் தினம் என்பது விடுமுறை நாட்களில் ஒரு நாளாகிறது.பல பள்ளிகளி்லும்,எதாவது பொதுச்சேவை நிலையங்கள்,நிறுவனங்கள்,ஏதோ ஓரிடத்தில்  குழந்தைகள் தினம் சாதரணமாகவோ கலைநிகழ்ச்சிகளுடனோ கொண்டாடப்படும் பகுதியில் நிச்சயம் ஒரு இடத்தில் என்றுமே குப்பை பொறுக்கும் பிள்ளையோ,கடைகளில் வேலை பார்க்கும் பிள்ளையோ,வீட்டு வேலை பார்க்கும் பிள்ளைகள் இப்படியொன்று எங்கோ நடைபெறுவது தெரியாமல் அவர்களின் வயிற்று பிழைப்பிற்கான வேலைகளை அன்றும்  பார்த்துக்கொண்டிருப்பார்கள்.நான் குழந்தைகள் தினத்திற்கு எதிரி இல்லை.இரு பக்கமும் வேடிக்கை பார்க்கும் சராசரி.
 

குழந்தை பிறந்தவுடன் பெற்றவருக்கும் குழந்தை மீது அன்பு கொண்டோருக்கும் தினம் தினம் கொண்டாட்டம்தான்.அன்றாட வாழ்வின் இயல்பில் தினம் தினம் கொண்டாட்டம் என்பது பல வடிவங்கள் பெறும்,அதில் குழந்தையின் மீதான அன்பின் வெளிப்பாடும் அரவணைப்பும் தாயிடம் மட்டுமே தனித்துவமாக பளிச்சிடும்.நான் சொல்வது அடிப்படைத் தேவைகள் நிரம்பிய குடும்பத்தின் குழந்தைகளுக்கு மட்டுமே.அடிப்படைத் தேவைகள் இல்லாத குடும்பத்தில் குழந்தை பிறந்துவிட்டால் பேணி வளர்ப்போரின் பாடு திண்டாட்டமாவது பரிதாபம்.ஆனால் அங்கும் தாயின் அன்பும் அரவணைப்பும் பளிச்சிடும்.


குழந்தை மட்டும் பிறந்து வளர்வதில்லை.கருவிற்கு காரணமானவர்களுக்கு தாய் தந்ததையாக ப்ரமோசன்,இவர்களது உறவுகளுக்கும் தாத்தா,பாட்டி,மாமா,சித்தி இப்படியான ப்ரமோசன் மட்டுமல்ல நீங்கள் எவ்வளவு பெரிய படிப்பாளியாகவும். சிந்தனைவாதியாகவும், பக்குவப்பட்டவர்களாக   இருந்தாலும் ஒரு குழந்தை பேச ஆரம்பிக்கும்போதும்,யோசிக்க ஆரம்பிக்கும்போதும் கேள்விகள் கேக்கும்போதும் இதுவரை யாரும் சொல்லித்தராத,அறிந்திராத பாடங்களை செல்லமாக கற்க முடியும்.


குழந்தைப் பருவம்வரை யார் அன்புகாட்டுகிறார்களோ,யாருடன் வளர்கிறார்களோ அவர்கள்தான் அந்த குழந்தைக்கு அடிப்படை முன்னோடியாக இருப்பார்கள்.குழந்தை பருவத்தைக் கடந்து  வீட்டாரைத் தவிர  ஊரையும்  உலகத்தையும் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போதும், சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் மாறுபடும்போதும் அவர்களின் முன்னோடிகளும் மாறுபடலாம். எனினும் அடிப்படை முன்னோடிகளைப் பொருத்தே வருங்கால முன்னோடிகளை தேர்ந்தெடுப்பார்கள் பிள்ளைகள்.


காதல் கண்ணாடி போன்றது.நாம் எப்படி இருக்கிறமோ அப்படிதான் கண்ணாடி பிரதிபலிக்கும் என்று எங்கோ படித்துள்ளேன்.கண்ணாடியை எப்படிலாம் கவனத்தில் கொள்கிறமோ கையாள்கிறோமோ அந்தளவிற்குதான் காதலும்.கவனக்குறைவாலும்,முறையற்ற கையாளும் திறனாலும்   கண்ணாடிக்கு கீறல் விழலாம்,பிரதிபலிக்காமலும் போகலாம்.சுக்கு நூறாக உடைந்தும் போகலாம்.இந்த உதாரணம் குழந்தைக்கும் பொருத்தமானதென்று நினைக்கிறேன்.


என் கவனத்தில் உள்ள சில பெற்றோர்களை மனதில் கொண்டு
கண்ணாடி = குழந்தை
உதாரணத்தை வேறு விதமாகவும் சொல்ல விரும்புகிறேன்.


அதீத ஆர்வத்தில் அதிக கவனத்தினாலும் கண்ணாடிக்கு கீறல் விழலாம்,பிரதிபலிக்காமலும் போகலாம்.கண்ணாடி குழந்தையாக இருக்கும்பட்சத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.


இளம் வயதில் சிக்கலான சூழ்நிலையில், ஒரு விசியத்திற்காக சக வயதுடையோர் யோசிப்பதும்,முடிவெடுப்பதும்  ஒன்றாகத்தானிருக்கும்.அதே விசியத்தில் நம்மைவிட வயது  மூத்தோரின்  அனுகுமுறையில், வித்தியாசம் அதிகமாகத்தானிருக்கும் என்று ஒரு சகோதரி எனக்கு அறிவுரைத்திருக்கிறார்.


இந்த உதாரணத்தை குழந்தைகளுக்கு பொருத்தினால்


இப்படியும்
நடந்திடமால்
நாம்தான்
பாத்துக்கனும்
2 வயது குழந்தை,மற்றொரு 2 வயது குழந்தையுடன் விளையாடும்போது பெரிதாக மாற்றங்களை பார்க்க முடியாது.அதே 2 வயது குழந்தை,3 அல்லது 4 வயது குழந்தையுடன் விளையாடும்போது அதன் சிந்திக்கும் திறனில்,பழக்க வழக்கங்களில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும்.வயதில் மூத்த குழந்தைக்கும் நாந்தான் இந்த வாண்டுக்கு தலைமை(பாஸ்) அல்லது வழிகாட்டி அல்லது நாந்தான் பாத்துக்கணும்,அல்லது என் அரவணைப்பிற்குறிய குழந்தை இப்படி தன்னை நிலைநிறுத்தும் பழக்கம் வரலாம்.இதற்கு நமது வழிகாட்டலும் அவசியம்.

சிறு சுயபுராணம்:


குழந்தைகளை தேவையில்லாமல் திட்டுபவர்களை,அடிப்பவர்களை பார்த்தபோது,ச்சே குழந்தையிடம் கனிவு காட்டாமல் இப்படி நடந்துகொள்கிறார்களே,இந்த இடத்தில் நானிருந்திருந்தால் அந்த குழந்தைக்கு புரிய வைத்திருப்பேன்,அன்பு காட்டியிருப்பேன் என்று நினைத்ததுண்டு.அதே சமயம் என் தோழி ஒருவர் சொல்வார்,சிரித்து மகிழ்வதும்,சொல்வதைக் கேப்பதும்தான் குழந்தை.பிடிவாதம் பிடிக்கும் குழந்தை,கட்டுப்படுத்தமுடியாமல் அழும் குழந்தைகளை பளாரென்று அரைந்திடனும் என்பார்.கனிவு காட்டல் சரிபட்டு வராது என்பார்.


எனக்கென்று குழந்தை பிறந்தபோது ,குழந்தை குறும்புகள் செய்யும் சில நேரங்களில் பொருமை இழந்துவிடுவேன்,அன்று நினைத்தது நடைமுறைக்கு ஒத்துவராது போலிருக்கே என்று நினைத்ததுண்டு.


அதே தோழிக்கு குழந்தை பிறந்து வளர்ந்த நிலையில் ஓரிரு முறையே அவர் மகள் செய்யும் சேட்டைகளை பார்த்தபோது என் குழந்தை பரவாயில்லை போலருக்கேனு நினைக்க வைத்தது.மற்றபடி ஃபோனில் குழந்தை பற்றி பேசும்போதும் அன்று அப்படி பேசிய தோழி தன் மகளை தங்கத் தட்டில் வைத்து தாங்காத குறைதான்.மறந்து கூட தன் மகளை கடிந்துகொள்வதில்லை.மகளை கவனிப்பதிலும்,புரியவைப்பதிலும் இவ்வளவு பொறுமையும் பக்குவமும் என் தோழிக்கு எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை.





நான் மகளை கவனிக்காமல் இருக்கும் நேரத்தில் மகளின் கவனக்குறைவால் பல பொருட்களை உடைத்துவிடுவாள்.வீணாக்கிவிடுவாள்.கண்டிப்பும்,புரியவைத்தலும் பொறுமையிழந்து சில நேரத்தில் அடித்துவிடுவேன்.பிறகு இருவரும் சமாதாணம் ஆகிவிடுவோம்.சமீபத்தில் என்னிடம் சாத்துபடி வாங்கிய மகள் அழுகையை அடக்கிக்கொண்டு பாவமாக பார்த்தில் மனமுருகி மேலும் அடிக்காமல் போய்விட்டேன்.

சில மணி நேரத்திற்கு பிறகு இனி இப்படிலாம் செய்யாத,தங்க பிள்ளைய அம்மா அடிச்சிடேன்,பிள்ள பாவம்னு அருகில் அழைத்து சொல்லிக்கொண்டிருக்கிறேன்,நான் எதிர்பார்க்காத வகையில் “பரவாயில்லம்மா,இனிமே இப்படி செய்யமாட்டேன் நீ அழறியான்னு” என்னை கேட்டாளே!என்னை பவ்யமாக பார்த்தாளே!என் மகளின் மன வளர்ச்சியை என்னால் நம்ப முடியவில்லை,என்னை யாரோ பளார்,பளார்ன்னு அறைந்தது போலாயிற்று.

கற்றுக் கொள்வதிலும்,கவனிப்பதிலும் நம்மைவிட குழந்தைகளுக்கு சக்தி அதிகமுண்டு. மழலைகள் உலகம் மகத்தானது என்பதில் மாற்று இல்லை.மகத்தானவர்களாகவும்,மற்ற வகையினராகவும் மாற்றுவதிலும் வழிநடத்துவதிலும் நமக்கு முழு பொறுப்பு உண்டு.

மேலும் மகத்தான தகவல்களுடன் இந்த தொடர் பதிவினை தொடர 

திருமதி.ராஜி
திருமதி.ஆதி
திருமதி.ஏஞ்சலின்

அவர்களுக்கு அன்புடன் அழைப்பு தெரிவிக்கிறேன்.

34 comments:

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க..

ஆச்சி ஸ்ரீதர் said...

@அமைதிச்சாரல்
வாங்க,முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றிங்க.

பால கணேஷ் said...

அனுபவம் சார்ந்து அழகாய் எழுதியுயள்ளீர்கள். அதைவிடவும் அதிகமாக நீங்கள் வைத்திருக்கும் படங்கள்... ஒவ்வொன்றும் கண்ணை ஈர்த்தன. அருமை... அருமை...

raji said...

//குழந்தைப் பருவம்வரை யார் அன்புகாட்டுகிறார்களோ,யாருடன் வளர்கிறார்களோ அவர்கள்தான் அந்த குழந்தைக்கு அடிப்படை முன்னோடியாக இருப்பார்கள்.குழந்தை பருவத்தைக் கடந்து வீட்டாரைத் தவிர ஊரையும் உலகத்தையும் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போதும், சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் மாறுபடும்போதும் அவர்களின் முன்னோடிகளும் மாறுபடலாம். எனினும் அடிப்படை முன்னோடிகளைப் பொருத்தே வருங்கால முன்னோடிகளை தேர்ந்தெடுப்பார்கள் பிள்ளைகள்.//

இதுவரை நான் யோசித்துப் பார்த்திராத ஒரு பகுதி.பதிவு அருமை.

என்னையும் தொடர அழைத்தமைக்கு நன்றி.தொடர்கிறேன்

Angel said...

விரிவான பின்னூட்டங்களுடன் பிறகு வருகிறேன்
வெகு விரைவில் தொடர் பதிவை எழுதுகிறேன் .நன்றி

ADHI VENKAT said...

சொல்லிய கருத்துகள் அருமை. நல்லா எழுதியிருக்கீங்கப்பா. பாப்பா படம் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு.

என்னையும் அழைத்ததற்கு நன்றி. விரைவில் பதிவிட முயற்சி செய்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Tamilmanam 2
INDLI : 2
Udance: 3

Good Post. Very Nice.
vgk

ஆச்சி ஸ்ரீதர் said...

@கணேஷ்
வாருங்கள் சார்.தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள்.

@ராஜி
நன்றி.
நீங்க சிந்திக்காதது எதுவுமில்லை.கோணங்கள் மாறுபட்டிருக்கலாம்.தங்களின் பதிவிற்கு காத்திருக்கிறேன்.

@ஏஞ்சலின்
ஓய்வு நேரத்தில் வாருங்கள்.தொடர் பதிவினை தொடருஙகள்.

@ஆதி
கருத்தில் மகிழ்கிறேன்.தொடர் பதிவிற்கு காத்திருக்கிறோம்.

@வை.கோபாலகிருஷ்ணன் சார்
வருகை,வாக்கு,கருத்திற்கு எனது நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

கற்றுக் கொள்வதிலும்,கவனிப்பதிலும் நம்மைவிட குழந்தைகளுக்கு சக்தி அதிகமுண்டு. மழலைகள் உலகம் மகத்தானது என்பதில் மாற்று இல்லை.மகத்தானவர்களாகவும்,மற்ற வகையினராகவும் மாற்றுவதிலும் வழிநடத்துவதிலும் நமக்கு முழு பொறுப்பு உண்டு.

Very nice and informative..
Thank you for sharing..

Unknown said...

குழந்தைய வளார்க்க ஒருபுதுவிதமான பரிமாணம் தந்திருக்கீங்க, மைண்ட்ல வச்சுக்குறேன்

ஆச்சி ஸ்ரீதர் said...

@இராஜராஜேஸ்வரி
இந்த பதிவிற்கு வாய்ப்பு தந்த உங்களுக்கு என்றும் என் நன்றிகள்.

@சுரேஷ்
வாங்க,ரொம்ப நாள் கழித்து என் பதிவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.இந்த பதிவு குழந்தை வளர்ப்பிற்கு ஒரு துளிதான்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு... தொடர் பதிவு நன்றாக இருந்தது ஆச்சி....

raji said...

தங்கள் அழைப்பிற்கிணங்கி என் வலையில் தொடர்பதிவு போட்டிருக்கிறேன்.வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்
வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றிங்க.

@ராஜி
நல்லது.இதோ வருகிறேன்.

கீதமஞ்சரி said...

நல்ல செய்திகளை நயமாக வழங்கியுள்ளீர்கள். ஆனால் மகளை அடித்த கணம் எனக்கும் மனம் வலித்தது உண்மை. குழந்தைகள் பற்றிய தொடர்பதிவை இன்று பதிவிட்டுள்ளேன். என் அனுபவத்தையும் பாருங்களேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கீதா
நன்றிங்க,

அடித்துவிட்டு வருந்துவேன்.சில நேரம் வாண்டு பன்னும் வாலு அப்படி.என்னையே மாற்றிடும்.

வருகிறேன்,உங்கள் பதிவிற்கு.

Angel said...

//அந்த தினத்தின் விபரங்கள் புரிவதில்லை.எதோ வாழ்த்து சொல்கிறார்காள்,கொண்டாடுகிறார்கள் //

உண்மைதான் ஆச்சி .

Angel said...

//வேலை பார்க்கும் பிள்ளைகள் இப்படியொன்று எங்கோ நடைபெறுவது தெரியாமல் அவர்களின் வயிற்று பிழைப்பிற்கான வேலைகளை அன்றும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்//

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு போராட்ட கூட்டத்தில் ஒரு சிறுவன் தேநீர் விற்றுகொண்டிருந்தானாம் ஒரு பதிவில் படித்தேன்

Angel said...

//குழந்தை பேச ஆரம்பிக்கும்போதும்,யோசிக்க ஆரம்பிக்கும்போதும் கேள்விகள் கேக்கும்போதும் இதுவரை யாரும் சொல்லித்தராத,அறிந்திராத பாடங்களை செல்லமாக கற்க முடியும்.//
நூற்றுக்கு நூறு உண்மை பிள்ளைகள் நமக்கு ஆசான் .நானே நிறைய கற்றுகொண்டிருக்கிறேன் என் மகளிடமிருந்து

Angel said...

//இந்த உதாரணம் குழந்தைக்கும் பொருத்தமானதென்று நினைக்கிறேன்.//

இதனை மனதில் கொண்டுதான் நான் அந்த இளவயது மேதை பற்றி எழுதினேன்

Angel said...

//என் மகளின் மன வளர்ச்சியை என்னால் நம்ப முடியவில்லை,என்னை யாரோ பளார்,பளார்ன்னு அறைந்தது போலாயிற்று.//
அந்த நேரத்தில் நமக்கே நம் மேல் ஒரு வெறுப்பு வரும் பாருங்க .நான் நிறைய தரம் என்னை மானசீகமாக அறைந்திருக்கிறேன்.

Angel said...

//.மகத்தானவர்களாகவும்,மற்ற வகையினராகவும் மாற்றுவதிலும் வழிநடத்துவதிலும் நமக்கு முழு பொறுப்பு உண்டு.//


மிக அருமையான வார்த்தைகள் .ஒவ்வொரு வரியும் உங்கள் பதிவில் மேற்கோள் காட்டும்படி எழுதியிருக்கீங்க .அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்

Angel said...

எவ்வளவு முயன்றும் தமிழ் 10 இல் இணைக்க முடியவிலலை.முந்தைய பதிவும் அப்படிதான் .ஒரே தலைப்பு ரிப்பீட் ஆவதனாலா??

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஏஞ்சலின்

என் பதிவின் கருத்துக்கள் உங்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டதை உங்கள் கருத்துக்கள் தெரிவிக்கிறது.குழந்தைகளுக்கு நாமும் பாடமாக இருக்க வேண்டும்.அவர்களும் நமக்கு நிறைய பாடங்களை கற்றுத் தந்துவிடுகின்றனர்.


தமிழ் 10 லோகோ மாற்றப்பட்டுள்ளது.அதை நான் மாற்றிக்கவில்லை.அதனால்தான் வேலை செய்யாமல் இருந்திருக்கும்.விரைவில் மாற்றுகிறேன்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ரெத்னவேல் சார்
வாங்க சார்.கருத்திற்கு நன்றிகள்.

Senthil Kumar.T.N said...

romba arumaiyana karuthukal
vaalthukal
sila vishayangal yosika vachadhu
sila vishayangal purinjikitan
padangalum arumai
padhivu thodara vaalthukal

Anonymous said...

அழகா எழுதியிருக்கீங்க...வாழ்த்துக்கள்

ஆச்சி ஸ்ரீதர் said...

@செந்தில் குமார்
வருகை தந்தமைக்கும்,கருத்துப் பகிர்விற்கும் நன்றிகள்

@ரெவரி
முதல் வருகையென நினைக்கிறேன்.வருகை தந்து கருத்திட்டு ஃபாளோயர்சில் இணைந்தமைக்கு நன்றிகள்.

Jaleela Kamal said...

அனுபவபதிவு மிக அருமை. மழலை உலகம் மிகவும் மகத்தானது தான். ஓவ்வொருத்தர் பதிவையும் படிக்கிறென்.

சிவகுமாரன் said...

அனுபவசாலியின் படைப்பு . அருமை.

ஆச்சி ஸ்ரீதர் said...

@jaleela kamal

வாங்க சகோதரி,வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.உங்கள் பதிவையும் எதிர்பார்க்கிறோம்.

@சிவகுமாரன்.
கருத்திற்கு நன்றி.நேரமிருக்கும்போது உங்கள் கவிதை நடையில் இந்த தொடர் பதிவை நீங்களும் தொடருங்கள்.பின்னூட்டத்தில் அழைப்பு விடுத்தலுக்கு மன்னிக்கவும்.மிகச் சிறப்பான கவிதை கருத்துப் பதிவு எங்களுக்கு கிடைக்குமே.

rajamelaiyur said...

அழகா குழந்தைகள் பற்றி எழுதியுள்ளிர்கள் .. நன்றி
இன்று ..

பல்சுவை வலைதளம் விருது

ஆச்சி ஸ்ரீதர் said...

@ராஜபாட்டை ராஜா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.