*வணக்கம் வருகைக்கு நன்றி*

Nov 18, 2011

கற்களாலான கலைமிகு தொகுப்புகளும்,வித்தியாசமான கலைவண்ணங்களும்@சண்டிகர்

இந்தியாவின் பஞ்சாப்,ஹரியானா மாநிலத்தின் தலைநகர்  சண்டிகர் மாநிலம்.சண்டிகர் தனி யூனியன் பிரதேசமாக உள்ளது.ஆங்காங்கு ப்ளாண்ட்(planned)சிட்டி,பிரில்லியண்ட் சிட்டி எனவும் எழுதப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது.வியாபாரப் பகுதிகளும்,சாலை போக்குவரத்தும் இந்தியாவில்தான் இருக்கிறோமா என்பதை சந்தேகப்படுத்தியது.எங்கும் சுத்தம்,சீரான கட்டிட அமைப்புகள்,நெரிசல் இல்லாத கடைகளின் கட்டிட அமைப்புகள்,இயற்கை அமைப்புகளுடன் அமைதியான சாலை போக்குவரத்து் இவைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நாங்கள் சென்றது ராக் பார்க்கை சுற்றி பார்ப்பதற்கு.எதோ ராக் பார்க்காம் என்றபடிதான் சென்றோம்.நுழைவுச் சீட்டு பெற்றோம்.நுழைவுவாயில்
 உள்நுழைந்தபோது ரெட்டை மூக்குத்திகள் பளபளக்க நுழைவுச்சீட்டை கிழித்து தந்தார் நம்மூர் முக சாயலில் அமர்ந்திருந்த  ஒரு  தென்னகப் பாட்டி. ”நீங்கள் தமிழா” என்றதும்,ஆமாம்  விருத்தாச்சாலம்தான் எனக்கு சொந்த ஊரு,இங்கதான் 20 வருடங்களுக்கு மேலா இருக்கிறோம்னு சொன்னார்.வரிசையில் போகவேண்டியிருந்ததால் பாட்டியின் அறிமுகம் நுழைவாயிலிலே முடிந்துவிட்டது.குகைக்குள் போவதுபோல இருந்ததால் சற்று பயமாகத்தான் இருந்தது. வித்தியாசமான பாறை அமைப்புகளில்  பாறைகளை தொட்டுப்பார்க்க கூட கைகளை நகர்த்தமுடியாத ஒத்தையடிப்பாதை,மிகக் குனிந்து செல்லும்படியான குகைகள், நுழைவாயில்கள் வித்தியாசமான சிற்பங்கள்,திடிரென தோன்றிய நீர்வீழ்ச்சிகளுடன் இயற்கை காட்சிகள் மனதிற்கு அமைதி,ஆச்சர்யம்,குதுகளிப்பை தந்தது.ஆனால் இங்கு எதுவும் இயற்கையானதல்ல,இயற்கை அமைப்பில் அனைத்தும் செயற்கையாக செய்யப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டபோது நம்ப முடியவில்லை.

இவைகளை விட பிரமாதங்கள் என்னவென்றால் இங்கு பல விலங்குகளின் உருவங்கள்,மனித பொம்மைகள்,சிலையாக செதுக்காமல் இயற்கை உருவ  வடிவமைப்பு பெற்ற கற்களின் தொகுப்புகள்,  உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களாலான உருவங்கள்,பானைகள்,உடைந்த செராமிக் டைல்ஸ்களால் வடிவமைக்கப்பட்ட உருவங்கள் பார்வையாளர்களை ஈர்த்தது.
  


இது மின்சார வாரியத்தினால உபயோகிக்கப்பட்டு
ஒதுக்கிவைத்தது சுவர்பதிப்பாக காட்சிதருகிறது.
  


உடைந்த கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மீன் தொட்டிகளின் காட்சிகளும் இருந்தன.இயற்கை உருவ கற்களின் தொகுப்புகளை இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்..

 நேக் சந்த் என்பவரின் முயற்சியிலும் ஆர்வத்திலும் உருவானதுதான் இந்த ராக் பார்க்.இவர் அரசாங்க அதிகாரியாக பணிபுரிந்தவராம்.இந்தியா சுதந்திரம் பெற்றபோது பாக்கிஸ்தானிலிருந்து சண்டிகருக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்.அப்போதே சண்டிகர் மாநிலம் சுவிச்சர்லாந்த் மற்றும் பிரான்சு கட்டிடக்கலைபடி வடிவமைக்கப்பட்டிருந்ததாம். அருகிலிருக்கும் மிகப்பெரிய ஏரிகளிலும்,நதிகளிலும் காணப்பட்ட அழகிய இயற்கையாகவே உருவம் பெற்றுள்ள கற்கள் நேக் சந்தை ஈர்த்துள்ளது.அவைகளை ஆர்வத்துடன் சேகரித்து காட்சிக்கு வைத்திருந்துருக்கிறார்.இங்குள்ள நீர்வீழ்ச்சிகளும் இவராலே வடிவமைக்கப்பட்டதாம்.

ஐம்பது வேலை  ஆட்களுடன் சுக்னா   ஏரிக்கு பக்கத்தில் இந்த ராக் பார்க்கை  வடிவமைத்துள்ளார். இந்த  காட்சியிடம் 30 ஏக்கர்   பரப்பளவு கொண்டதாம்.சண்டிகரின் மருத்துவமனை, உணவகம், மின்சாரவாரியம், பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களின்   நல்ல முழுமையான கழிவுப்பொருட்களை சேகரித்து விலங்கு மற்றும் மனித உருவ பொம்மைகள்  செய்ய பயன்படுத்தியிருக்கிறார்.சைக்கிளின் உதிரிபாகங்களாலான பொம்மைகள்  கூட சில இடங்களில் பார்த்த நினைவு உள்ளது.தாஜ்மகாலை அடுத்து இங்குதான் மக்களின் வருகை அதிகம் என  சொல்லப்படுகிறது. வெளிநாட்டிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் நாள்  ஒன்றுக்கு  தோராயமாக  ஐந்தாயிரம்  பேர் வருகைபுரிவதாக  கணக்கீடு உள்ளதாம். பஞ்சாப்  மாநிலம்  வந்தால்  இந்த ராக் பார்க்கை பார்க்க மறந்திட வேண்டாம்.

இரண்டு வருடங்களுக்கு முன் இங்கே சென்று வந்தோம்.நாங்கள் எடுத்த புகைப்படத்திலெல்லாம் எங்களின் முகமும் இருப்பதால் கூகிளிலிருந்தே படங்களை திரட்டியிருக்கிறேன்.

20 comments:

raji said...

சூப்பர் ஆச்சி!

இயற்கை உருவ கற்களின் தொகுப்பு அருமை.ரொம்ப வித்தியாசமா இருக்கு.பகிர்விற்கு நன்றி ஆச்சி!

raji said...

சூப்பர் ஆச்சி!

இயற்கை உருவ கற்களின் தொகுப்பும்
ராக் பார்க் பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் அருமை.பகிர்விற்கு நன்றி

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு ஆச்சி.

சில முறை சண்டிகருக்கு சென்று வந்துள்ள என் கணவர் சண்டிகர் பற்றியும் இந்த பார்க்கைப் பற்றியும் நிறைய சொல்லியுள்ளார்.

சென்று வர வேண்டும்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ராஜி
இரு முறை வருகைதந்து கருத்திட்டமைக்கு நன்றிகள்.

@ஆதி
நேரம் கிடைக்கும்போது சென்றுவாருங்கள்.வருகைக்கு நன்றி.

ஹ ர ணி said...

வலைப்பூவைத தேடும்போது அயல் மாநிலத்திலுள்ள தமிழர்களின் வலைப்பூவைத தேடுவதுவழக்கம். உங்கள் வலைப்பூ ஏமாற்றவில்லை. இந்தியனாக இருப்பதிலும் குறிப்பாக தமிழனாக இருப்பதிலும் உள்ள பெருமையை நிலைப்படுத்துகிறது. உறரியானா பற்றிய உங்கள் இந்தப் பதிவு கண்ணைக் கவரும் அற்புதமாய் அமைந்துவிட்டது. அவசியம் ஒருமுறையேனும் பார்க்கிற ஆர்வத்தை அனல்படுத்துகிறது. (எல்லோரா...ஒரிசா சூரியக்கோயில்.. இப்படி பல நினைவுகளோடு இதையும் பார்க்கவேண்டும் என்று)
அருமையாக இருக்கிறது.

ஹ ர ணி said...

உஙக்ளுக்காக ஒரு அம்மா பாடல்
எழுதித் தருகிறேன்.

அம்மாவுக்கு என்னைப் பிடிக்கும்
எனககும் அம்மா பிடிக்கும்
உருண்டை உருட்டி சோற்றை
உள்ளே வைத்து அமுக்குவாள்
கண்ணீர் வர அன்புகாட்டுவாள்..
கூப்பிடடு கூப்பிட்டு கொஞசுவாள்
சாப்பிடசாப்பிட ஊட்டுவாள்
எப்படி வளர்த்தாள்
எப்படி வளர்த்தாள்
எல்லாம் கொடுத்தாள்
எல்லாம் கொடுத்தாள்
இந்த உலகில் நானும்
அம்மாவாக அம்மாவாக
அம்மாவே ஆக்கி வைத்தாள்..
ஒற்றை சடையும் பின்னுவாள்
ரெட்டை சடையும் பின்னுவாள்
ஓயாமல் பூவும் வைப்பாள்
திருஷ்டி பொட்டு வைத்து
திரும்பித்திரும்பி பார்ப்பாள்
நினைக்க நினைக்க ஆனந்தம்
அம்மா எப்போதும் ஆனந்தம்

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஹரணி சார்

தங்கள் வருகையிலும்,கருத்திலும் மகிழ்கிறேன்.தங்களின் முதல் பின்னூட்டத்தை மீண்டும்,மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.மிக்க நன்றிகள்.

சுற்றுலா பட்டியலில் இந்த ராக்பார்க்கையும் கட்டாயம் வைத்துக்கொள்ளுங்கள்.

//உறரியானா//சுத்த தமிழில் இப்படிதான் எழுதனுமா சார்.இது புதிய தகவல் எனக்கு.பள்ளியில் தமிழ் ஆசிரியர் சில வார்த்தைகளை இப்படி சொல்லிக்கொடுத்தது நினைவிற்கு வந்தது.ஆனால் என்னென்னவென்று நினைவில்லை.

ருக்குமணி என்ற பெயரை உருக்குமணி என்று எழுதுவார்.இது மட்டும் நினைவில் உள்ளது.

அம்மாவிற்கான பாடலில் இரண்டாவது வரியிலே கண்ணீர் மறைத்துவிட்டது. கண்ணீருடனே படிக்க முடிந்தது சார்.உண்மையான நடைமுறை கருத்துக்கள் பொதிந்த பாடல்.இந்த விசியத்தில் மட்டும் இன்றும் என்னை பொய்யாகத் தேற்றி வைத்திருக்கிறேன்.

S.Muruganandam said...

அருமையான தொகுப்பு

இராஜராஜேஸ்வரி said...

உடைந்த கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மீன் தொட்டிகளின் காட்சிகளும் இருந்தன.இயற்கை உருவ கற்களின் தொகுப்புகளை/

very nice..

ஆச்சி ஸ்ரீதர் said...

@kailashi
@இராஜராஜேஸ்வரி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு... ராக் கார்டன் நான்கைந்து முறை சென்று நேரிலேயே பார்த்திருக்கிறேன்... சில கிலோமீட்டர் தொலைவில் பிஞ்சோர் கார்டன் என்ற ஒன்றும் இருக்கிறது. மற்றும் ரோஸ் கார்டன், ஏரி என அழகாய் இருக்கும்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

Tamilmanam : 2
Indli: 2
Udance: 4

Good Post. Pictures are excellent
vgk

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்
ஆமாங்க அதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்.ஆனால் ஏனோ எனக்கு ராக்பார்க்களவிற்கு ரோஸ்கார்டனை பதிவில் சொல்லனும்னு தோனல.மிகப் பெரிய தோட்டம்தான் அது.

ரோஸ் கார்டனுக்கு அடுத்து எதோ ஒரு பார்க் போனோம்.பேர் மறந்துடேன்.அங்க முதன் முதலில் ஓட்டகத்தில் ஒரு சவாரி(ஒரு சுற்று)போய்ட்டுவந்தோம்.போட்டிங் போனோம்.குழந்தைகளுக்கு பெரியவங்களுக்கு ராட்டின வகைகள்,விளையாட்டு வாகன வகைகளெல்லாம் சவாரி செய்தோம்.அது எந்த இடம்னு கணவரிடம் கேக்கனும்.நினைவில்லை.

Angel said...

இந்தியாவில் பிறந்து வளர்ந்தும் .இவ்வளவு அழகிய இடங்களை பார்க்காமல்
விட்டோமே என்று ஆதங்கமாக இருக்கு .எல்லாம் கைகூடி வந்தால் வாழ்நாளில் ஒருமுறையேனும் முழு இந்தியாவையும் சுற்றி பார்க்க வேண்டும் .அவ்வளவு அழகா இருக்கு உங்க பதிவும் படங்களும் .

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன் சார்
வாங்க,கருத்திற்கும் வாக்களிப்பிற்கும் நன்றி.

@ஏஞ்சலின்
என் பதிவு உங்கள் மனதில் இப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதில் மகிழ்ச்சி.கட்டாயம் இந்தியாவை சுற்றிப்பாருங்கள்.இன்னும் நிறைய பொக்கிசங்கள் எங்கெங்கோ நிரம்பிதான் உள்ளது இந்தியாவில்.எவ்வளவோ யாராலும் பாதுகாக்கமால் அழிந்துபோனவைகளும் அதிகம்.

ஆனால் உங்க பதிவில் நீங்க பதியும் விசியங்களும்,அந்நாட்டின் இடங்களும் நான் பார்க்கும்போது நேற்று சொன்ன குருவிதான் நான்.

raji said...

@ஹரணி

//இந்த உலகில் நானும்
அம்மாவாக அம்மாவாக
அம்மாவே ஆக்கி வைத்தாள்..//

இந்த வரிகள் என் கண்ணிலும் நீரை வரவழைத்தன

பகிர்விற்கு நன்றி

கீதமஞ்சரி said...

கண்ணுக்கு விருந்தளிக்கும் அழகழகான சிற்பங்கள். வீணாகும் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டு சுற்றுச் சூழலைக் காக்கும் அற்புத முயற்சிக்கு தலைவணங்குகிறேன். வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் பார்க்கவேண்டும். அழகான படங்களுடன் அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி ஆச்சி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கீதா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.வாய்ப்பு கிடைக்கும்போது வந்துவிடுங்கள்.

சாகம்பரி said...

Beautiful creativity. good presentation. Thanks for sharing.

ஆச்சி ஸ்ரீதர் said...

@சாகம்பரி
வாங்க,வாங்க.தங்கள் கருத்தில் மீண்டும் ஒருமுறை என் பதிவை படித்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.
நன்றி மேடம்