*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 13, 2013

சற்று முன் நிகழ்ந்தது

கணவர் யார்கிட்டயோ பேசிட்டுருக்காறு,

ஓ ! தனது நண்பர் வரப்போவதா சொல்லிட்டுருந்தாரே அவரா இவர்,

நண்பர் எப்ப வந்தாரு ?

எனது மூத்த மகள் அம்ருதா எதோ புத்தகத்தை எடுத்துட்டு வந்து என்னை எதோ கேக்குறா ,

எதுவும் வாலு பண்ணாத அங்கிளுடன் அப்பா பேசிட்டுருக்காரு,ஹோம் ஒர்க் என்னனு பாத்தியான்னு கேட்டுகிட்டே துணிகளை அயன் பண்றேன் ,

நம்மள கூட இன்ட்ரடுயூஸ் பண்ணாம இவ்ளோ நேரம் என்னத்த பேசுறாருன்னு தெரியல,

சரி நாமளே போய் அறிமுகமாகிப்போம்னு போறேன்,என்னால் இயல்பாய் நகர முடியல ,

பஸ்ஸில் எனக்கு முன்னாடி சீட்டில் தான் எனது கணவரும் அவரது நண்பரும்  பேசிட்டுருக்காங்க !

ஓ !!அதான் என்னால் எளிமையாய் முன்னோக்கி போகமுடியல ,

ஜன்னலில் வேடிக்கை பார்த்துகிட்டே வரேன் ,

அட எங்கள் அருகிலிருக்கும் தெரிந்த பெண்மணி ஒருவர் காரில் போயிட்ருக்காங்க,

என்னுடன் இருந்த அம்ருதா எங்க காணும்,

அட கடவுளே !அயன் பண்ணிட்டுருந்தேனே !

இதோ ஒரு அயன் பண்ணிய சட்டை கிடக்கு ,எடுத்து பார்த்தால் அழுக்கு சட்டை ,ஒன்னுமே புரியலயே !!    (உங்களுக்கும்தானே! )

அதற்குள்ளும் எதோ ஒரு ஸ்டாப்பிங் வருகிறது ,பஸ் ஸ்லோ ஆகிறது கணவர் இறங்க  முற்படுகையில் என்னையும் அழைக்கிறார் ,

அவசரமாக எழுந்திருக்கும்போது பார்க்கிறேன் ,நைட்டிஅணிந்திருக்கிறேன் ,

அய்யோ என்னது இது?நான் எப்படி இப்படி வந்தேன் ?,

கஷ்டபட்டு ,அசிங்கப்படுகிட்டே இறங்குறேன்,போனில் பேசிகிட்டே என் கணவர் மட்டும் என்னை எதிர்பார்த்து நிற்கிறார்,

எனில் என் பிள்ளைகள் எங்கே?கணவரின் நண்பரையும் காணும்?

நைட்டி அணிந்திருப்பதால் பஸ்ஸின் கடைசிப்படியை விட்டு இறங்க தயங்குகிறேன்,

வர்றதனு வா இல்லைனா அப்படியே திரும்பி போறியா  என்கிறார்,

அடப்பாவி மனுசா இந்த கோலத்தில் நான் எங்க எப்படி போவேன் !

அச்சசோ !எனது ரெண்டாவது மகளை தொட்டிலில் தூங்கப்போட்டுருந்தேனே,

இது என்னது வேளாங்கன்னி ரோடு போல தெரியுது  ,

நான் வட இந்தியாவிலிருக்கும் என் விட்டீலல இருந்தேன்,

அய்யோ  என் குழந்தை தொட்டியிலிருந்து கீழ விழுந்துடுவாளே !

ஒன்னும் புரியாமல் விழித்து  , விழித்து  பார்க்கிறேன் ,

கைகளை நகர்த்த முடியவில்லை மரத்துப்போயிருந்தது ,

மிகுந்த முயற்சியில் விழித்துப்பார்த்தால் எனது கைகள் லேப்டாப்பில்தான் இருக்கிறது ,

சுற்றி ஒரு முறை பார்த்தேன் ,என் அருகே  குழந்தை தொட்டிலில் அயர்ந்து தூங்கிககொண்டிருக்கிறாள் ...அப்பாடான்னு பெருமூச்சு வந்துச்சு,

அப்பா நானும்  வட இந்தியா வீட்டில்தான் குழந்தையுடன் இருக்கிறேன்,

கணவர்  டூட்டிக்கும்,அம்ருதா ஸ்கூலுக்கும் சென்றிருப்பது நினைவிற்கு வந்தது.

அட ச்சே !!! இப்ப நிகழ்ந்ததுலாம் கனவா !!!!!!!!!!!!!!!

வீட்டிற்கும் வீட்டு மக்களுக்கும் வேலை பார்த்துட்டு நேரத்தை பிடுங்கி கணினி பார்க்க அமர்ந்த நேரத்தில் இப்படியொரு கனவு வந்திருக்கென்றால் அதற்கு என் கடின உழைப்பே காரணம் *

(ஹி ....ஹி ....ஹி ....   இதை படிச்சவங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கம்பேனி  பொறுப்பல்ல @@@@@@@)
பெயிண்டில் நானே வரைந்தது  யாரும் பழிக்கப்  பிடாது'அப்பா இதை  பதிவாக்குவதற்குள் எனக்கு அடுத்த தூக்கம் வராப்பள  ........ 20 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான பகற்கனவு. நீங்கள் சரியான ஜாலியான அதிர்ஷ்டசாலியான தூங்க மூஞ்சி. பொறாமையாக உள்ளது.

இனிய “விஜ்ய” வருஷ தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்தப்புத்தாண்டில் நிறைய நேரம் நிம்மதியாகத் தூங்கி மேலும் பல கனவுகள் காண என் அன்பான வாழ்த்துகள்.

பிறரின் பொக்கிஷ்மான பதிவுகளுக்கும் வரவேண்டியது இல்லை.

நிம்மதியாக எப்போதும் ஜாலியாகத் தூங்கக்கடவது.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... கனவா...? தங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள்...

படத்திலும் கனவா....?

Subbu Ramani said...

வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது யாரோ ”செம சுப்பர் போஸ்டிங் வருது படிக்க ரெடியா இருங்க” கூறியது போல் பிரமை... என்னடா தமிழ் வருடத்தின் கடைசி நாள் காலையில்லேயே நமக்கு இப்படி ஒரு சோதனையா...? என்று நினைத்த போது தான் ”சற்று முன் நிகழ்ந்தது” கண்ணில் பட்டது.... படித்துக்கொண்டே பஸ்ஸிலிருந்து இறங்கி நடுரோட்டில் நடந்துக்கொண்டிருந்தேன்... என்னால் பெரிய டிராபிக் ஜாமே ஏற்பட்டு பெரிய பிரச்சனை ஆயிருச்சு.. தீடீரென்று முழித்துவிட்டேன்.. நல்லவேளை நான் என் லேப்டாப் முன் தான் இருக்கிறேன்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை... அப்பாடா....

கவியாழி கண்ணதாசன் said...

கம்ப்யூட்டர் கனவோ?

Avargal Unmaigal said...

என்னடா தமிழ்படம் மாதிரி இருக்குன்னுபார்த்தேன் அப்புறம்தான் தெரிந்தது அது கனவு என்று...அடடா இப்படி கூட பதிவு போடலாம் என்று சொல்லிதந்த நீங்கள்தான் எனது குரு இன்று முதல்..

s suresh said...

இதெல்லாம் கனவுன்னு நாலாவது வரியிலேயே தெரிஞ்சிடுச்சு! இதையும் சுவாரஸ்யமா பதிவாக்கிய உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்! இனியதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

பெயிண்டிக் சூப்பராக உள்ளது. நிஜமாலும் சொல்றேன். பழிக்கவில்லை. நம்புங்கோ, ப்ளீஸ்.

கீதமஞ்சரி said...

ஆச்சி, உங்க கனவில்தான் எத்தனை விதமான உணர்வுகள்! அம்ரிதாவை வீட்டுப்பாடம் செய்யவைக்கணும், துணிகளை அயன் பண்ணனும் என்கிற கடமை உணர்வுகள், நைட்டியோடு பயணிக்கிறோமே என்கிற கூச்ச உணர்வு, கணவர் அதைப் புரிஞ்சுக்கலையேங்கிற கோபம், நண்பரிடம் அறிமுகப்படுத்தலையேங்கிற ஆதங்கம், சொந்த ஊருக்குப் போகவிரும்பும் ஆழ்மன ஆசை எல்லாம் சேர்ந்த உணர்வுக்கலவை! மிகவும் ரசனையான அனுபவம்தான். கனவையும் சுவாரசியமாச் சொன்னதற்குப் பாராட்டுகள்.

பால கணேஷ் said...

இப்படி வித்தியாசமான இடங்கள்ல வித்தியாசமான உடைகள்ல கனவு வர்றது சகஜம்தான். ஆனா ஒரே கனவுல இவ்வளவு டிஃபரன்ட்டான ஃபீலிங்ஸ் வந்து நான் பாத்ததேயில்ல... சூப்பரா கனவு காணறீங்க..!

poovizi said...

என்னா ??????? தொடர் கனவு யப்பா....... இந்தமிழ்நாட்டு இயக்குனர்களுக்கு கண்ணே தெரிய மாட் டேங்குதுங்க உங்கள மிஸ் பண்றாங்க அருமை படமோ படம் முயற்சி திருவினையாகும்

கீதமஞ்சரி said...

சொல்லமறந்திட்டேனே... பெயிண்டில் வரைந்த படம் அருமை. மருதுவின் கோட்டோவியத்தை நினைவுபடுத்துகிறது. பாராட்டுகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லாத்தான் பகல் கனவு கண்டீங்க! :)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Ranjani Narayanan said...

கனவிலும் கனணி....?

இனிய விஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

thirumathi bs sridhar said...

@வை .கோபாலகிருஷ்ணன் சார்

தூங்கு முஞ்சினு சொல்லிபுட்டிங்களா !!!உங்க பதிவுக்கு மட்டுமல்ல அனைவரது பதிவுக்கும் அப்புறம் போவோம்னு தள்ளினேனா தென் அவ்ளோதான் ,அதுக்குதான் கண்ட கனவை கையோடு எழுதிட்டேன் ,படம் நல்லாருக்கா ,,,நன்றி,நன்றி சார் .


@தனபாலன்

ஆஹா !,நன்றிகள் சார்.
பதிவை படம் போட்டு விளக்கமளித்துருக்கேன் சார்.


@சுப்பு ரமணி

எப்பா ! உங்க கனவு என் கனவை மிஞ்சிட்டு போங்க **
நன்றிகள்

@கவியாழி கண்ணதாசன்

ஆமா சார் கம்ப்யூட்டர் பார்த்ததால் வந்த கனவு,வருகைக்கு நன்றி

@அவர்கள் உண்மைகள்

ஹா ...ஹா ..குருவா ! சிஷ்யரே இனி இந்த ஐடியாவை வைத்து தாக்க ஆரமிச்சுடுவிங்களா !!நடத்துங்க , நடத்துங்க

@சுரேஷ்

அப்படியெல்லாம் இல்லை சார்.நன்றிகள் சார்.

@கீதமஞ்சரி

மனநல மருத்துவர் போல சொல்லிவிட்டிர்கள்.

//வர்றதனு வா இல்லைனா அப்படியே திரும்பி போறியா//
இந்த டையலாகை நான்தான் சொல்லிருப்பேனாம் - வீட்டில் கிண்டல்,

மருதுவா ?கோட்டோவியமா?
ஒன்னும் தெரியலங்க ,ஆனா தந்த பாராட்டை வாங்கிக்குறேன் ,
நன்றிங்க .

@பாலகணேஷ்
ஆமா சார்,இப்படித்தான் பல கனவு வரும்,மறந்து போய்டுவேன்னு மரத்துப்போன கையேடு கடகடன்னு டைப்பிடேன் (ஒரு மணி நேரமா ) .நன்றிகள் சார்.

@பூவிழி

என்னைய வச்சு காமிடி ,கீமடி பன்னலையே ,வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றிங்க,


@வெங்கட் நாகராஜ்

ஆமாங்க !இனி கனவையும் பதிவாக்கிடலாம் போலருக்கு.


@ரஞ்சனி நாராயணன்

கணினி பார்க்க அமர்ந்த நேரத்தில் வந்த கனவு மேடம்அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ,வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.கோவை2தில்லி said...

பகல் கனவா!!!

நான் காலையில் எழுந்திருக்கும் முன்பு கனவிலிருந்து மீண்டு வருவேன். பரபரத்துக் கொண்டே ஐயோ! ஸ்கூல் இருக்கே! வேலைகள் கிடக்கேன்னு!

இது என்ன பகல் கனவு இப்படி....:))

கனவையும் பதிவாக்கிடலாம்னு தோணியிருக்கே, பாராட்டுகள்...:)

angelin said...

நீங்களே வரைந்த படம் சூப்பர் ..ஆனா அதில் கண்கள் இமைகள் நல்ல தூக்கத்தில் மூடி இருக்கிறார் போல அல்லவா இருக்கணும் :))
அனுபவியுங்கள் தூக்கத்தை :))
உங்களுக்காச்சும் இப்படி கனவு வருகிறது ..எனக்கு ஸ்கூல் டேஸ்ல கிளாஸ் ரூமில் பரீட்சை ஹால் கனவு ..அதுவும் மாத்ஸ் எக்சாமுக்கு சயன்ஸ் பேப்பர் படிச்சிட்டு போற மாதிரி கனவா வரும் :))

..நிறைய கனவு காணுங்கள் நல்லா தூங்குங்க :))
அடுத்த கனவில் நாங்க யாரும் வரோமான்னும் சொல்லுங்க :))

இராஜராஜேஸ்வரி said...

பரபரப்பான கனவுகள்...!

yathavan nambi said...

அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (04/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/4.html#comment-form
திருமதி. ஆச்சி என்கிற
பரமேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்:
ஆச்சி ஆச்சி
http://aatchi.blogspot.in/2013/04/blog-post.html
சற்றுமுன் நிகழ்ந்தது !

http://aatchi.blogspot.in/2012/12/blog-post.html
முப்பருவங்களும் உன் பிறப்பினிலே

http://aatchi.blogspot.in/2012/10/blog-post_19.html
மரண வாக்குமூலம்

http://aatchi.blogspot.in/2011/03/blog-post_15.html
கள்வர்களின் மனசாட்சியை களவாடியது யார்?
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

mageswari balachandran said...

வணக்கம் தோழி, இது என் முதல் வருகை, வலைச்சரம் கண்டு வந்தேன். அருமையான பதிவு, ஆனா அந்த செம கலக்கல், நெசமாத்தேன் சொல்றேன். நல்லா கனவு காணுங்கள். நேரம் கிடைக்குமானால் என் பக்கம் வாருங்கள்.நன்றி தோழி. தொடர்வோம்.

பூந்தளிர் said...

வலைச்சர அறிமுகம் பார்த்து வந்தேன் கல கலப்பான பகல் கனவுதான்