கணவர் யார்கிட்டயோ பேசிட்டுருக்காறு,
ஓ ! தனது நண்பர் வரப்போவதா சொல்லிட்டுருந்தாரே அவரா இவர்,
நண்பர் எப்ப வந்தாரு ?
எனது மூத்த மகள் அம்ருதா எதோ புத்தகத்தை எடுத்துட்டு வந்து என்னை எதோ கேக்குறா ,
எதுவும் வாலு பண்ணாத அங்கிளுடன் அப்பா பேசிட்டுருக்காரு,ஹோம் ஒர்க் என்னனு பாத்தியான்னு கேட்டுகிட்டே துணிகளை அயன் பண்றேன் ,
நம்மள கூட இன்ட்ரடுயூஸ் பண்ணாம இவ்ளோ நேரம் என்னத்த பேசுறாருன்னு தெரியல,
சரி நாமளே போய் அறிமுகமாகிப்போம்னு போறேன்,என்னால் இயல்பாய் நகர முடியல ,
பஸ்ஸில் எனக்கு முன்னாடி சீட்டில் தான் எனது கணவரும் அவரது நண்பரும் பேசிட்டுருக்காங்க !
ஓ !!அதான் என்னால் எளிமையாய் முன்னோக்கி போகமுடியல ,
ஜன்னலில் வேடிக்கை பார்த்துகிட்டே வரேன் ,
அட எங்கள் அருகிலிருக்கும் தெரிந்த பெண்மணி ஒருவர் காரில் போயிட்ருக்காங்க,
என்னுடன் இருந்த அம்ருதா எங்க காணும்,
அட கடவுளே !அயன் பண்ணிட்டுருந்தேனே !
இதோ ஒரு அயன் பண்ணிய சட்டை கிடக்கு ,எடுத்து பார்த்தால் அழுக்கு சட்டை ,ஒன்னுமே புரியலயே !! (உங்களுக்கும்தானே! )
அதற்குள்ளும் எதோ ஒரு ஸ்டாப்பிங் வருகிறது ,பஸ் ஸ்லோ ஆகிறது கணவர் இறங்க முற்படுகையில் என்னையும் அழைக்கிறார் ,
அவசரமாக எழுந்திருக்கும்போது பார்க்கிறேன் ,நைட்டிஅணிந்திருக்கிறேன் ,
அய்யோ என்னது இது?நான் எப்படி இப்படி வந்தேன் ?,
கஷ்டபட்டு ,அசிங்கப்படுகிட்டே இறங்குறேன்,போனில் பேசிகிட்டே என் கணவர் மட்டும் என்னை எதிர்பார்த்து நிற்கிறார்,
எனில் என் பிள்ளைகள் எங்கே?கணவரின் நண்பரையும் காணும்?
நைட்டி அணிந்திருப்பதால் பஸ்ஸின் கடைசிப்படியை விட்டு இறங்க தயங்குகிறேன்,
வர்றதனு வா இல்லைனா அப்படியே திரும்பி போறியா என்கிறார்,
அடப்பாவி மனுசா இந்த கோலத்தில் நான் எங்க எப்படி போவேன் !
அச்சசோ !எனது ரெண்டாவது மகளை தொட்டிலில் தூங்கப்போட்டுருந்தேனே,
இது என்னது வேளாங்கன்னி ரோடு போல தெரியுது ,
நான் வட இந்தியாவிலிருக்கும் என் விட்டீலல இருந்தேன்,
அய்யோ என் குழந்தை தொட்டியிலிருந்து கீழ விழுந்துடுவாளே !
ஒன்னும் புரியாமல் விழித்து , விழித்து பார்க்கிறேன் ,
கைகளை நகர்த்த முடியவில்லை மரத்துப்போயிருந்தது ,
மிகுந்த முயற்சியில் விழித்துப்பார்த்தால் எனது கைகள் லேப்டாப்பில்தான் இருக்கிறது ,
சுற்றி ஒரு முறை பார்த்தேன் ,என் அருகே குழந்தை தொட்டிலில் அயர்ந்து தூங்கிககொண்டிருக்கிறாள் ...அப்பாடான்னு பெருமூச்சு வந்துச்சு,
அப்பா நானும் வட இந்தியா வீட்டில்தான் குழந்தையுடன் இருக்கிறேன்,
கணவர் டூட்டிக்கும்,அம்ருதா ஸ்கூலுக்கும் சென்றிருப்பது நினைவிற்கு வந்தது.
அட ச்சே !!! இப்ப நிகழ்ந்ததுலாம் கனவா !!!!!!!!!!!!!!!
வீட்டிற்கும் வீட்டு மக்களுக்கும் வேலை பார்த்துட்டு நேரத்தை பிடுங்கி கணினி பார்க்க அமர்ந்த நேரத்தில் இப்படியொரு கனவு வந்திருக்கென்றால் அதற்கு என் கடின உழைப்பே காரணம் *
(ஹி ....ஹி ....ஹி .... இதை படிச்சவங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கம்பேனி பொறுப்பல்ல @@@@@@@)
![]() |
பெயிண்டில் நானே வரைந்தது யாரும் பழிக்கப் பிடாது' |
அப்பா இதை பதிவாக்குவதற்குள் எனக்கு அடுத்த தூக்கம் வராப்பள ........