தினமும் அதே வழியில் பஸ்ஸில் பயணிக்கும்போது சாலையின் இரு புறத்திலும் பெரும்பாலான கடைகளும்,அங்கிருக்கும் மனிதர்களின் முகமும் பதிந்துவிடும்.ஆனால் அவர்களுக்கு நம்மை தெரிந்திருக்காது.ஒரே நேரத்தில் ஒரே பஸ்ஸில் பயணம் செய்யும்போது நான் கல்லூரிக்கு செல்வது போல பல மாணவ,மாணவிகள் கல்லூரிக்கும்,பள்ளிக்கும் வழக்கமாக அதே பஸ்ஸில் வரும்போதும்,உத்யோகத்தில் இருக்கும் நபர்களும் அதே பஸ்ஸில் வரும்போதும் முகங்கள் ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சையமாகும்.
பரிச்சையமாகி என்ன புண்யம்?சிலரை பாக்கும்போது நம்ம பஸ்ஸில் வருபவர்ன்னு மைண்ட் வாய்ஸ் அறிமுகம் தரும்,கொஞ்சம் நல்லவங்களா இருந்தால் நம்முடன் வருபவர்களிடம் “ஏய் அவங்க நல்ல டைப்“னு சொல்லிக்கலாம்,இல்லைன்னா அது ஒரு கொரங்குன்னும் சொல்லிக்கலாம்.எங்கையாவது வழியில் பார்த்தால் சின்ன புன்னகைக்கு கூலி கொடுக்கனும்,இல்ல சிலரின் வழிசல பார்த்து நம்முடன் வருபவர் ஏன் இப்படி பட்டவங்ககிட்டலாம் பேச்சு வச்சுக்கிறன்னு கேக்கும் அளவிற்கு இருக்கும்.அதனால நாமே தெரியாத மாதிரி போயிடனும்.இதனால் இன்னொரு வியாதியும் வரும்.யாரபாத்தாலும் எங்கையோ பார்த்த மாதிரியே தோனுவதுதான் அந்த வியாதி.
நான் சென்ற பஸ்ஸில் வழக்கமாக வரும் மனிதர்களில் அவ்வப்போது காய் வியாபார மூட்டை வரும்,சில நாட்களில் பூக்கூடை வரும் ஆனால் தினமும் டிக்கெட் எடுக்காம ஒருத்தர் வருவார்,வந்து நம்மகிட்டயே காசு கேப்பார்,அவர்தாங்க பிச்சக்காரர்.யாராவது நடத்துனரான்னு யோசிச்சிங்களா?அதுக்கு நான் பொறுப்பில்லை.இப்படி சொல்ல வச்சதே ஒரு நடத்துனர்தான்.
நாகையின் மெயின் பஸ்டாண்டை இன்னமும் எல்லோரும் பெரிய பஸ்டாண்டுனுதான் சொல்வாங்க. நாகூர் செல்லும் வழியில்தான் எங்க கல்லூரி.எங்க ஊரிலிருந்து வரும் பஸ்கள் அந்த பெரிய பஸ்டாண்டு வந்து சற்று நேரம் நிக்கும் அதற்கு பிறகுதான் பஸ் கிளம்பும்.அப்போ அங்க தினமும் கண்ணு தெரியாத ஒரு பிச்சைக்காரு எம்.ஜி.ஆர் பாட்டுகள பாடிகிட்டு பஸ்ஸுக்குள் வருவார்,அவர போனா போவுதுன்னு விட்டுவிடுவாங்க.அவ்வப்போது வேற்று பிச்சைக்காரர்கள் வரும்போது நடத்துனர் அல்லது ஓட்டுனரால் சற்று விரட்டப்படுவார். ஒரு நாள் வேற ஒரு பிச்சைக்காரர் வந்தபோதுதான் நடத்துனர் சொன்னார் “ போய்யா இப்பதான் நான் எடுத்துட்டு வந்தேன்,அடுத்து நீ போ” என்றார்.இந்த வசனத்தை எப்படி மறக்க முடியும்.அந்த பிச்சைக்காரர் எதையும் காதுல வாங்கல,பஸ்ஸிற்குள் ஒரு ரவுண்ட் போயிட்டுதான் வந்தார்.
பார்வையற்ற மற்றும் பார்வையுள்ள பிச்சைக்காரருக்கும் வித்யாசம் என்னவெனில் இதே பஸ்ஸில்தான் நாமும் தினமும் வருகிறோம்னு பார்வையற்றவருக்கு தெரியாது.பார்வையுள்ள பிச்சைக்காரர்கள் இதுங்களும் தினமும் வருதுங்கன்னு நம்மகிட்ட நிக்காமல் போய்டுவாங்க. ஆனால் பார்வையற்றவர் எப்படி தினமும் அதே நேரத்திற்கு அதே பஸ்ஸிற்குள் வருகிறார்ன்னு ஆச்சர்யமா இருக்கும்.
நாம தினமும் அதே பஸ்ஸில் போறதால சிலரை நமக்குத் தெரியும்,நம்மூரார் ஒருத்தர் திடீர்னு அந்த பஸ்ல வர்றார்னு வச்சுகங்க,தினமும் பே...பே..ன்னு போனாலும் அன்னைக்குன்னு பாத்துதான் அந்த தின பஸ் பயணிகிட்ட பேசும் சூழ்நிலையோ,அல்லது புன்னகைக்கும்படியோ வரும்.உடனே ந்யூஸ் பிபிசி வழியா ஊருக்குள்ள புகுந்திடும்.இந்தருப்பா இந்நாரு பொண்ணு அந்த பஸ்சுல யார்கிட்டயோ பேசுது,டன்,டன்,.டன்ன்ன்ன்ன்...........
இதனாலையே படு உஷாரா இருப்பேன்,இருந்தாலும் ஊருக்கெல்லாம் செய்தி சொல்லும் பல்லி தவள பானைக்குள்ள விழுந்து தத்தளிக்கும்மா,நாம சும்மாயிருந்தாலும் நம்ம சுத்திருக்கிறவங்க சும்மா இருக்கமாட்டாங்க என்பதையும் அனுபவச்சிருக்கேன்.ஆனாலும் ஒரு சந்தேகம் சில இளைஞர்களும்,இளைங்கிகளும் தன்னை தனியா காமிச்சிக்க பேசுவாங்களே பேச்சு,விடுவாங்களே பந்தா இதெல்லாம் யாரு எப்ப கத்துக்கொடுத்தாங்கன்னே தெரியாது.அவங்களுக்கு அது சந்தோசமாதான் இருக்கும்,பயணிக்கும் சக பயணிகள் சிலர் இவர்களின் நடவடிக்கைகளை பாக்கும்போது தான்பிள்ள என்னாகும்மோன்னு பயப்டுறாங்களோ இல்லையோ இந்த அல்டாப்புகளை பார்த்து முனங்குவதோடு இல்லாமல் பெத்தவங்களையும் சேத்து திட்டுவாங்க. இதப்பத்திலாம் யோசிச்சிட்டிருக்க அந்த யுவன் யுவதிகளுக்கு ஏது அவகாசம்,காதில் விழுந்தாலும் அந்த சோசிலிசவாதிகளுக்கு வேற வேலையில்ல,சொன்னா சொல்லிட்டு போகட்டும்.டேக் இட் ஈசி........ங்றவங்க காதுல சங்கூதினாலும் கேக்காது.
ஒரு நாள் என் தோழிகளுக்கும் சேர்த்து டிக்கெட் எடுப்பதாக இருந்தேன்,மொத்த டிக்கெட் பைசாவை கூட்டி கணக்கு பார்க்க அழுப்பு,அதனால் நடத்துனர் அருகில் வந்ததும் இறங்குமிடத்தை சொல்லி 3 டிக்கெட் எவ்ளதுன்னு கேட்டேன்.நடத்துனர் இந்தா இவ்ளதுன்னு தன் ரெண்டு கைகளையும் விரிச்சு காட்டினார்.சிரிப்பும் கோபமா வந்தாலும் கம்முன்னு நின்னேன்,அப்றம் அவரே எவ்ளோ பைசான்னு சொல்லிட்டாரு.டிக்கெட் எடுத்தாச்சு.என்னவோ இதுவும் இன்னமும் நினைவிருக்கு.
பணம் ( நோ காசு) கையில வச்சிருந்தாலே அநிச்சை செயலா அந்த பணத்தை சுருட்டி சிகரெட் மாதிரி வச்சுக்குவேன்,இப்படி செய்யாதன்னு என் பெற்றோர் என்னை எத்தனையோ வாட்டி திட்டிருக்காங்க,நானும் செய்யக் கூடாதுன்னு நினைப்பேன்,என்னை மறந்து மறுபடியும் சுருட்டி வச்சுக்குவேன்.ஒரு நாள் பஸ்ஸில் பத்துரூபாயை அப்படி என்னையறியாமலே சுருட்டி வச்சிருந்திருக்கேன்,நடத்துனர் அருகில் வரவும் அப்படியே சுருட்டிய பணத்தை கொடுத்துட்டேன் போல,இவ்ளோதான் சுருட்ட முடியுமான்னு கோபமா கேட்டாரு,பிறகுதான் நானே கவனிச்சேன் அவர் சுருட்டிய பணத்தை விரிச்சு மடிச்சு விரலுக்கு இடையில் வச்சிகிட்டுருந்தாரு.இந்த பழக்கத்தை விடுன்னு அம்மா அப்பா சொன்னபோதுலாம் உரைக்காத எனக்கு அந்த நிகழ்விற்கு பின் பணம் கையில் வச்சிருந்தால் சுருட்டாமல் இருக்க ரொம்பவே கவனமா இருந்தேன்.நாளடைவில் சுத்தமாக அந்த பழக்கம் என்னிடம் மறைந்துபோனது.
23 comments:
Nice Post, Good experience
//இந்தருப்பா இந்நாரு பொண்ணு அந்த பஸ்சுல யார்கிட்டயோ பேசுது,டன்,டன்,.டன்ன்ன்ன்ன்...........//
அடப்பாவமே!!கஷ்டம்தான் போங்க!!
//இந்த பழக்கத்தை விடுன்னு அம்மா அப்பா சொன்னபோதுலாம் உரைக்காத எனக்கு அந்த நிகழ்விற்கு பின் பணம் கையில் வச்சிருந்தால் சுருட்டாமல் இருக்க ரொம்பவே கவனமா இருந்தேன்.//
சில சமயம் சில விஷயங்கள் வேறு யாராவது சொன்னாத்தான் உரைக்கும். நிறைய பேருக்கு இந்த அனுபவம் (என்னையும் சேர்த்து)இருக்கும், ஆச்சி.
பேருந்து நினைவுகள் மறக்க முடியாததாக சுவாரசியமாக இருக்கு.தொடருங்க!
//ஆனால் பார்வையற்றவர் எப்படி தினமும் அதே நேரத்திற்கு அதே பஸ்ஸிற்குள் வருகிறார்ன்னு ஆச்சர்யமா இருக்கும்.//
நான் ஒரு முறை நேரில் பார்த்தது .இங்கே பார்வையற்ற ஒரு பெண் குச்சியை போன்ற நீள மெட்டல் ஸ்டிக்கை தட்டிக்கொண்டே வேகமாக நடந்து சென்றார் ஒரு இடத்தில நின்று முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பி முகர்ந்தார் பின்பு அங்கு முன்னேயிருந்த கடைக்குள் நுழைந்தார் .அவர் சென்ற இடம் fresh vegetables விற்கும் கடை .ஆச்சர்யப்பட்டு போனேன் வாசனையை வைத்தே கடையை கண்டுக்கொண்டாரே என்று நானும் இன்னும் சிலரும் ஆவென ஸ்தம்பித்து நின்றோம்
பேருந்து நினைவுகள் மறக்க முடியாததான் ஆச்சி .
//.உடனே ந்யூஸ் பிபிசி வழியா ஊருக்குள்ள புகுந்திடும்.இந்தருப்பா இந்நாரு பொண்ணு //
.நான் ட்ரெயின் போயிடும் என்ற அவசரத்தில் ரெயல்வே லைன க்ராஸ் செஞ்சேன் அத கூட ஒரு பிபிசி எங்கம்மாகிட்ட போட்டுகொடுத்து நான் நல்லா வாங்கி கட்டின அனுபவமும் உண்டு
பேருந்து அனுபவம் தொடரட்டும்...நிறைய பேருக்கு பணம் சுருட்ற பழக்கம் உண்டு போல ...-:)
@இரவு வானம்
வாங்க,ரொம்ப நாளைக்கு பிறகு வந்துள்ளீர்கள்,நன்றி
@ராம்வி
ஆமாங்க,அதுலாம் ரொம்ப கஷ்டம்.
சில விசயங்கள் அப்படித்தான் உரிமை உடையவர்கள் சொல்லும்போது லேசாத்தான் உரைக்குது.
@ஏஞ்சலின்
நீங்கள் சொல்லும் விசயம் வியப்பாக உள்ளது.
பிபிசி எங்கும் எதிலும் உள்ளதுங்க.
@ரெவெரி
அய்யய்யோ!எந்த சுருட்டல சொல்றீங்களோ தெரியலயே சகோ!
ரசிச்சேங்க :)
//ஒரு நாள் பஸ்ஸில் பத்துரூபாயை அப்படி என்னையறியாமலே சுருட்டி வச்சிருந்திருக்கேன்,நடத்துனர் அருகில் வரவும் அப்படியே சுருட்டிய பணத்தை கொடுத்துட்டேன் போல,இவ்ளோதான் சுருட்ட முடியுமான்னு கோபமா கேட்டாரு//
அரசியலிலே அவனவன் கோடிகோடியா சுருட்டுவதாகச் சொல்லப்படுகிறது. நீங்க 10 ரூபாயை அதுவும் உங்களின் பத்து ரூபாயை ஒரே சுருட்டா சுருட்டி இருக்கீங்க; அதுக்குப்போய் இப்படி feel பண்ண வெச்சுட்டாங்களே.
சூப்பரா எழுதுறீங்க உங்க பஸ் அனுபவங்களை. எனக்கும் இதுபோல நிறைய அனுபவங்கள் உண்டு. எழுதத் தான் நேரம் சரியாக அமைய மாட்டேங்குது. எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும் தானே!
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். vgk
@முத்துலெஷ்மி
வாங்க,மகிழ்கிறேன் நன்றி.
@வை.கோபாலகிருஷ்ணன் சார்
உங்களின் அனுபவங்கள் மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும்,நேரமிருக்கும்போது தொடருங்கள்.பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சார்.
We all go thru this experiences in school / college days I guess.. you took us there by your post..:)
அந்த கண்டக்டர் சொன்னது செம! என்ன... அவர் எடுக்கறது அதிகாரப் பிச்சை! அவ்வளவுதான்... பார்வையற்ற ஒருத்தர் கடையில இருந்துக்கிட்டு கரெக்டா நான் தர்ற பத்து ரூபாக்கு சில்லறை தந்ததை பாத்து வியந்திருக்கேங்க.
நீங்க சுருட்டு பார்ட்டியா...? (ரூபாயிலங்க) எங்க வீட்டம்மா நான் சட்டையக் கழட்டி வெச்சுட்டுத் தூங்கினா பணத்தைச் சுருட்டற பார்ட்டி! ஹும்...!
@அப்பாவி தங்கமணி
வாங்க,நன்றிங்க,அந்த கால நினைவுகளை கொஞ்சம் அசைபோடுவோம்.
@கணேஷ்
பார்வையற்றவர்களின் செயல்கள் வியப்பில் ஆழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றன சார்.
வீட்டம்மா கேக்கும்போது மறுபேச்சு சொல்லாம பணம் கொடுத்துடுங்கள்
ரசித்தமைக்கு நன்றி சார்
அப்போவெல்லாம் இப்படித்தான், பெண்பிள்ளைகள் பயந்து பயந்து நடக்கணும். ரோட்டில் நின்று யாரோடயும் ஒரு வார்த்தை பேசக்கூடாது. யாரும் நம்மளப் பாத்து சிரிக்கக் கூடாது. என்னவொரு கட்டுப்பாடு. இன்னைக்கு என் பெண்கிட்ட சொன்னா நம்பமாட்டேங்கிறா. என்ன பண்றது? காலம் மாறிப்போச்சி.
உங்களுடைய அனுபவம் அப்படியே கூடவே அழைச்சிகிட்டுப் போவுது. அதிலும் கண்டக்டர், பிச்சைக்காரரிடம் சொன்னது நல்ல நகைச்சுவைதான்.
வலிவலம் தேசிகரா? ஒரு சந்தேகம்தான். எனக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்னுடைய நெருங்கிய சொந்தத்துக்கு (அதான், என் கணவர் ;)) சொந்தம்.
ஆச்சி! நம்ம பணத்தை நாமே சுருட்டின தப்பே இல்ல.அடுத்தவங்க பணத்தைதான நாம சுருட்டக் கூடாது? ஹி...ஹி...
பேருந்து நினைவுகள் சுவாரசியமாக இருக்கு....
@கீதமஞ்சரி
இப்பவும் பல ஊர்களில் இப்படித்தான்,ஆனால் மாறியிருப்பது யுவன்,யுவதிகளின் அச்சம்தான்,யாரு பாத்தல் என்ன,பாக்காட்டி நமக்கென்னனு இருக்கிறார்கள்.
வலிவலம் தேசிகர் பக்கத்தில் உள்ள a.d.j.தருமாம்பாள் பாலிடெக்னிக்கில்தான் நான் படித்தேன்.வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்.
@ராஜி
வாங்க,
என் அப்பா கொடுத்த பணத்தைதான் கையில் சுருட்டினேன்ப்பா..
நன்றி.
@ஆதி
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
@கீதமஞ்சரி
இப்பவும் பல ஊர்களில் இப்படித்தான்,ஆனால் மாறியிருப்பது யுவன்,யுவதிகளின் அச்சம்தான்,யாரு பாத்தல் என்ன,பாக்காட்டி நமக்கென்னனு இருக்கிறார்கள்.
வலிவலம் தேசிகர் பக்கத்தில் உள்ள a.d.j.தருமாம்பாள் பாலிடெக்னிக்கில்தான் நான் படித்தேன்.வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்.
@ராஜி
வாங்க,
என் அப்பா கொடுத்த பணத்தைதான் கையில் சுருட்டினேன்ப்பா..
நன்றி.
@ஆதி
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
பஸ்ஸில் ஓடி வந்து ஏறினீங்களோ?
என்னைய வாங்கன்னு கூப்பிட்டதுக்கு ஏன் இம்புட்டு மூச்சு வாங்கியிருக்கு?
கிட்டத்தட்ட ஒரு அஞ்சாறு லைன் நுழைக்கலாம் போலருக்கே? :-))
நல்ல அனுபவங்கள் :-)) . சிலர்கிட்டே பேசாமல் சும்மா இருந்தாலும் சிடுமூஞ்சிங்கிற பேரும் வரும் .கொஞ்சம் பேசினாலும் வாயாடிங்கிற பேரும் ..பேலன்ஸ் செய்வது கஷ்டம்.
நான் எல்லாத்துக்கும் ஒரு மாதிரியா தலையாட்டி வைப்பேன் ஒரு புன்னகையோட...அது ஆமாவா , இல்லையான்னு எதிரிபார்ட்டிகள் குழம்புகிட்டே இருக்கும் போது எஸ்கேப்ப்ப்ப்ப் :-))))
@ராஜி
எல்லாம் கீபோர்டின் லீலைகள்,எப்படியோ மீண்டும் வரவச்டோம்ல
@ஜெய்லானி
வாங்க சகோ,அப்படித்தான் இருக்கனும்.நன்றி.
தமிழ்மணம் 3 இன்ட்லி 3
[யுடான்ஸில் எனக்கே தெரியாமல் என் வோட் பதிவாகிவிட்டது என்று சொல்லுகிறது. அந்த சிஸ்டமும் ஏதோ வழுவட்டையாகி விட்டது போலிருக்கு.]
Post a Comment