
1781ஆம் ஆண்டு அயோத்தியில் பிறந்த கன்சியாம் என்ற சிறுவன் தன் 3 வயதிற்குள் அனைத்து வேத,புராண,உபநிஷதங்கள்,தர்ம சாஸ்திரங்களையும் கற்று தேர்ந்தவராகியுள்ளார்.தனது 11 வது வயதில் மேலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு துறவறம் கொண்டு பாத யாத்திரை புறப்பட்டுள்ளார்.பல புண்ணிய ஸ்தலங்களுக்கும் பாத யாத்திரை சென்ற நிலையில் தனது 17 வது வயதில் நீலகண்ட வர்ணி என அழைக்கப்பட்டுள்ளார்.
ஜீவ,ஐஸ்வர்ய,மாய,பிரம்ம,பரபிரம்மம் என்பதனின் அர்த்தம் தேடி புறப்பட்டவருக்கு குஜராத் மாநிலம் லாஜ் என்ற இடத்தில் ராமாநந்த ஸ்வாமி என்பவரால் நடத்தப்பட்ட ஆஸ்ரமத்தில் பதில் கிடைத்ததாய் உணர்ந்தார்.
ராமாநந்த ஸ்வாமியால் சஹஜானந்த ஸ்வாமி என அழைக்கப்பட்டுள்ளார் .21 வது வயதில் அந்த ஆஸ்ரமத்தின் தலமை பொறுப்பு ஏற்றுள்ளார். ராமாநந்த ஸ்வாமியின் இறப்பிற்கு பின் சஹஜானந்த ஸ்வாமி நாரயணரின் மாகாமந்திரங்களை உபதேசித்தும்,வழிநடத்தியும் வந்துள்ளார்.அதற்கு பிறகு சஹஜானந்த ஸ்வாமி பகவான் ஸ்வாமி நாரயணன் என்று அழைக்கப்பட்டுள்ளார்.இவர் 1830 ஆம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளதாக குறிப்படப்பட்டுள்ளது.

பகவான் ஸ்வாமி நாரயணரின் சீடராக,போதனைகளை பரப்பி,ஆன்மீக தொண்டாற்றும் முதல் குருவாக அக்ஷர்பிரம்மா குணதிதாநந்தா வாழ்ந்துள்ளார்.இரண்டாம் குருவாக பக்த்ஜி மஹராஜ் என்பவரும்,மூன்றாம் குருவாக சாஸ்த்ரிஜி மஹராஜ் என்பவரும் வாழ்ந்துள்ளனர்.இந்த மூன்றாம் குரு Bochasanvasi Aksharpurushottam Swaminarayan Sanstha (BAPS) என்ற அறக்கட்டளையை தோற்றுவித்து,ஐ.நா.சபையின் அங்கீகாரத்துடன் நடத்திவந்துள்ளார்.நான்காம் குருவான யோகி மஹராஜ் இந்த அறக்கட்டளையை கிழக்கு ஆப்பிரிக்கா,இங்கிலாந்து வரை நடத்திச் சென்று ஸ்வாமி நாரயணருக்காக லண்டன்,சிகாகோ போன்ற ஒன்பது நாடுகளில் கோவில்களும் எழுப்பியுள்ளார்.ஐந்தாம் குருவான பிரமுக் ஸ்வாமி மஹராஜ் தற்போழுது வாழ்ந்து வருகிறார்.இவரே தில்லியில் ஸ்வாமி நாரய்ணன் அக்ஷர்தாம் கோவில் தோன்ற காரணமும் பொறுப்புமாகும்.
தில்லி அக்ஷர்தாம் தோன்றுவதற்கு முன்னதாகவே குஜராத் காந்திநகரிலும் ஒரு அக்ஷர்தாம் கோவில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.இங்கு ஒரு முறை குண்டு வெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
அக்ஷர்தாமின் நிர்வாக பொறுப்பு வகிக்கும் baps 900 மையங்கள்,700 சாதுக்கள்,55000 தன்னார்வத் தொண்டர்கள்,10 லட்சம் பக்தர்கள் மூலம் ஆன்மீகம்,கல்வி,மருத்துவம்,சுற்றுச்சூழல்,கலாச்சாரம் போன்ற 160 க்கும் மேற்பட்ட துறைகளில் மனித வள மேம்பாட்டிற்காக பாடுபடுகிறது.
தாஜ்மஹாலை பார்த்தவர்கள் அக்ஷர்தாமை பார்வையிட வந்தால் நிச்சியம் அவர்கள் மனதில் தாஜ்மஹால் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடும்.அக்ஷர்தாமை முதலில் பார்த்துவிட்டு இரண்டாவதாக தாஜ்மஹாலை பார்ப்பவர்களுக்கு தாஜ்மஹால் நிச்சயம் பிரமிப்பாக இருக்காது.இது என் கருத்து.
வாருங்கள்!!!
நாம் இப்போழுது தில்லி அக்ஷர்தாமிற்குள் செல்வோம்.
நுழைவுக் கட்டணம் கிடையாது.செல்ஃபோன்,கேமிரா,எதாவது எலக்ட்ரானிக் சாதனங்கள் அனுமதியில்லை.மது அருந்தியுள்ளவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.புகைப்பிடித்தல்,பாக்கு போடுதல் கூடாது.நாம் கையில் வைத்திருக்கும் பொருட்களை க்ளாக் ரூமில் கொடுத்துவிட்டு அங்கிருக்கும் கேமராவில் நம் முகத்தை பதிவு செய்ய வேண்டும்.திருப்பதி பகவானை தரிசிக்க ஹாலில் காத்திருப்பது போல காத்திருக்க வேண்டும்.அவ்வளவு கூட்டமிருக்கும். வாகன நிருத்தங்களை பார்க்கும்போது வாகன தயாரிப்பு கம்பெனியில் கூட இத்தனை வாகனங்களை ஒரே சமயத்தில் பார்த்திருக்க முடியாது.ஆண்,பெண்களுக்கு தனித்தனியே தீவிர பரிசோதனை செய்கிறார்கள்.
மக்களுக்கு ஒரு வாயில் மட்டுமே நுழைவுவாயிலாக உள்ளது.கோவிலுக்குள் நுழைந்தவுடன் பத்து வாயில்கள் நம்மை வரவேற்கும்.பத்து திசைகளின் நல்லவைகள் நம்மை வந்து சேரட்டும் எனும் வேதசாரத்தை பிரதிபலிக்கிறது. பகவானுக்கும் பக்தனுக்கும் பிணைப்பை விளக்கும் மொத்தம் 208 சிற்பங்கள் உள்ளன.
அடுத்து மயூர வாயில் எனப்படுகிறது.இந்த வரவேற்பு வாயிலில் கண்ணைக் கவரும் மயில் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன.869 மயில் சிற்பங்கள் உள்ளனவாம்.
மயூர வாயிலைக் கடந்தவுடன் பகவான் ஸ்வாமிநாரயணின் அவதரிப்பை நினைவுகூறும் வகையில் அவரின் திருவடி 16 ரேகைகளுடனும்,நாற்புரங்களிலும் புனித சங்குகள் பாதங்களை சதா அபிஷேகம் செய்யும்வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. 
<><><><><><><><><><><>
![]() |
மஹாலயம் |

சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த சிம்மாசனத்தில் ஸ்ரீ லெஷ்மிநாரயணர்,கிருஷ்ணன்,ராதா,ராமன்,சீதா,சிவ பார்வதி பளிங்குச் சிலைகளாக காட்சியளிக்கின்றனர்.



24 கேசவாதி மூர்த்திகள்,பளிங்குத் தூண்களில் பளிச்சிடும் சாதுக்கள்,தூண்களின் உச்சியில் 500 பரமஹம்சர்களின் சிலைகள்,65 அடி உயர லீலா மண்டபம்,பக்த மண்டபம்,ஸ்ம்ருதி மண்டபம்,பரமஹம்ச மண்டபம்,ஸ்வாமி நாரயணனின் லீலைகளை விளக்கும் சிற்பங்கள் கொண்ட கனஷ்யாம் மண்டபம்,நீலகண்ட மண்டபம்,ஸஹஜானந்த மண்டபங்கள் உள்ளன.,ஸ்வாமி நாரயணனின் குங்கும பாதச்சுவடு,மாலை,பாதுகை,உடுத்திய உடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
<><><><><><><><><><><>
![]() |
கஜேந்திர பீடம் |
மண்டோவர்
மஹாலயத்தின் மனோகரமான வெளிச்சுவர் மண்டோவர் எனப்படுகிறது.611 அடி நீளம்,25 அடி உயரம் உள்ளது.பாரதத்தின் புண்ணிய புருஷர்கள்,ரிஷிகள்,ஆச்சார்யர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோரி்ன் சிற்பங்கள் மொத்தம் 4287 உள்ளதாம்.
நாரயண ஸரோவர்
மஹாலயத்தை மூன்று புரங்களாலும் சூழ்ந்துள்ளது.மானசரோவர் முதல் இந்தியாவின் சகல திசைகளிலும் உள்ள 151 புண்ணிய இடங்களிலிருந்து தருவிக்கப்பட்டு நாரயண சரவோராக உள்ளது.நான்கு பக்கங்களிலும் நீர் சொரியும் 108 கோமுகங்கள் பகவானின் 108 திவ்ய நாமத்தை நினைவுறுத்துகின்றன.


அபிஷேக மண்டபம்
பால யோகி நீலகண்ட வர்ணியின் விக்ரஹத்திற்கு பொது மக்கள் கட்டணம் செலுத்தி கங்கை நீரால் அபிஷேகிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
மதில் கோபுரம்
அக்ஷர்தாமைச் சுற்றி செம்பளிங்குக் கற்களால் ஈரடுக்கு மதில் கோபுரம் உள்ளது.3000 அடி நீளமும்,155 கோபுரங்களும்,1152 தூண்களும்,145 மாடங்களும் மலர்மாலை போல காட்சியளிக்கிறது.

இதய கமலம்
சீராக செதுக்கப்பட்ட புல்வெளியின் நடுவே எட்டு தாமரை இதழ்கள் வடிவில் அமைக்கப்பட்டு கோவிலின் வெளியே செல்லும் வாயிலாகவும் உள்ளது.ஒவ்வொரு இதழிலும் உலகில் தோன்றிய அவதாரபுருஷர்களின் இறை நம்பிக்கையும்,மனித நேயமும் பரிமளிக்கின்றன.சேக்ஸ்பியர் ,விவேகானந்தர் போன்றோர்களின் கருத்துகள் பதியப்பட்டுள்ளன.
கண்காட்சி அரங்கம்.
இங்கு கட்டணம் வசூளிக்கப்படுகிறது.முதலில் தன் கருமாவிற்கு தானே காரணம் என தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளும் சிலை விபரிக்கும்.
பிறகு ரோபோட்ரானிக், அனிமேட்ரானிக்ஸ்,ஸரெளண்ட் டயோரமா போன்ற அதி நவீன ஒலி ஒளி கண்காட்சி மூலம் ஸ்ரத்தை,அஹிம்சை,கருணை, அமைதி போன்ற நல்லறங்களும்,ஸ்வாமி நாரயணன் பற்றிய குறும்படங்களும் 50 நிமிடங்களில் அற்புதமாக விளக்கப்படுகின்றன.கண்காட்சி அரங்கம் முழுவதும் குளிர்சாதனம் பொருத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

15 நிமிட படகு சவாரி கண்காட்சி
இந்த சவாரி நம்மை 10,000 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்லும்.


3.பிரமாண்ட திரையரங்கம்

4.யக்ஞபுருஷ குண்டமும் இசை நீருற்றும் நடனமும்





உணவகம்
சிற்றுண்டி உள்ளது.அஜந்தாவின் கலைநயத்துடன் விசாலமான உணவகமும் உள்ளது.
விற்பனைக் கூடம்
ஆன்மீக புத்தகங்கள்,குறுந்தகடுகள்,நினைவுச் சின்னங்கள்,பரிசுப்பொருட்கள்,ஆயுர்வேத தயாரிப்புகள் பூஜை பொருட்கள் போன்றவைகள் உள்ளன.
விற்பனைக் கூடம்
ஆன்மீக புத்தகங்கள்,குறுந்தகடுகள்,நினைவுச் சின்னங்கள்,பரிசுப்பொருட்கள்,ஆயுர்வேத தயாரிப்புகள் பூஜை பொருட்கள் போன்றவைகள் உள்ளன.
தங்களுக்கு அவகாசமிருப்பின் பத்து நிமிட வீடியோ கிளிப்பிங்கில் அக்ஷர்தாமை பாருங்கள்
பாரத் உபவன் கலாச்சாரப் பூந்தோட்டம்.






அக்ஷர்தாமிற்கு வாரந்தோறும் திங்கட் கிழமை விடுமுறையாகும்.
15 comments:
வந்துட்டு சொல்லவே இல்லையேங்க..:(
விரிவான பதிவு.. அசத்தல்..
மிகவும் அழகழகான படங்களுடன் அசத்தலான மிகப்பெரிய பதிவு.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
Voted 1 to 2 in both Indli & Tamilmanam
vgk
Breath-taking!!!! Awesome photos...... மிகவும் ரசித்தேன் .
அருமையான புகைபடங்கள்.....
பிரம்மிப்பை ஏற்படுத்தியது
arumaiyaga erukiradhu
en kai pidithu akshardham kooti sendra ungaluku nandri
migavum arumai
அருமை.
இதில் பல அமைப்புகள், அலங்காரங்கள் இப்போ சமீபத்தில் செஞ்சது போல் இருக்கே!!!!!
நாங்க போய் வந்து நாலரை வருசமாச்சு.
சூப்பர், உண்மையிலேயே அசத்தலாக உள்ளது, படங்களும் பதிவும் அருமை, போட்டோக்கள் எல்லாம் நீங்கள் எடுத்ததா? இந்தியாவிலேயே எவ்வளவு இடங்கள் உள்ளது, ஆச்சரியமாக உள்ளது, பகிர்வுக்கு நன்றி அக்கா
முழு விவரங்களுடன் அருமையான பகிர்வு. புகைப்படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.
நல்ல பகிர்வு ஆச்சி. படங்கள் எல்லாமே அழகாக இருந்தது.
இன்னும் போய் பார்க்க நேரம் வரவில்லை.
@முத்துலெட்சுமி
வாங்க,கருத்துரைக்கு நன்றிங்க.
@வை.கோபலகிருஷ்ணன் சார்
மிக்க நன்றி சார்.
@சித்ரா
நன்றிங்க.
@ஆமினா
நன்றிங்க.
@செந்தில் குமார்
நன்றிங்க.
@துளசி கோபால்
மாற்றங்கள் இல்லங்க,புகைப்படத்தில் வித்தியாசமாக இருக்கலாம்.
நன்றிங்க.
@சுரேஷ்
நன்றி. புகைப்படம் எடுக்க வாசலில் கூட அனுமதியில்லை.இணையத்திலிருந்து எடுத்த படங்கள்னு குறிப்பிடாமல் போய்விட்டேன்.
ஆனால் கோவிலுக்குள் நிர்வாகமே கட்டணத்துடன் உடனடி புகைப்படம் ஒரு இடத்தில் வைத்து எடுக்கும் வசதி வைத்துள்ளது.அதிலும் அந்த மஹாலயத்தின் வெளிப்புற தோற்றம் மட்டுமே தெரிகிறது.
@வெங்கட் நாகராஜ்
மிக்க நன்றிங்க.
ஆதி
பரவாயில்லை.அருகில்தானே உள்ளது.
உடனே இந்த ஞாயிறு போறீங்க.கண்காட்சி ஹாலில் உங்க பொண்ணு எவ்ளோ சந்தோஷப்படுதுனு பாருங்க.
its veary execlant total viwes,god bless u ,am narayanaswamy jd.from chennai 26.cell.9840532536,e-mail;-nrnswamy343@gmail.com August252011@4.50am
@ J.D.Narayanaswamy
மிக்க நன்றிங்க.
miga arumayana padangal
Post a Comment